Tuesday, 27 December 2016

மதுரை செல்லம்பட்டி ஒன்றியம் பாண்டியநகர் கிளையில் ஆதித்தமிழர் பேரவை மாணவர் அணியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு "கல்வியிலும் - வேலை வாய்ப்பிலும் அருந்ததியர் இட ஒதுக்கீடு" விழிப்புணர்வு கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது

கடந்த 23.12.2016 அன்று செல்லம்பட்டி ஒன்றியம் நடுமுதலைக்குளம் கிளையில்
ஆதித்தமிழர் பேரவையின் மாணவ - மாணவிகளுக்கு இதே தலைப்பில் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது அதனை தொடர்ந்து நேற்று 28.12.16 செல்லம்பட்டி ஒன்றியம் பாண்டியநகர் கிளையில் கல்வியிலும் - வேலை வாய்ப்பிலும் அருந்ததியர் இட ஒதுக்கீடு என்ற தலைப்பில் ஆதித்தமிழர் பேரவையின் மாணவ - மாணவிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாணவ மாணவிகளிடையே கல்வி நிறுவனங்களில் சாதி ரீதியாக நமக்கு தொந்தரவு செய்பவர்களை நாம் எப்படி எதிர்கொள்வது ,மேலும் கல்வி வேலைவாய்ப்புகளில் அருந்ததியர்களை கிடைத்த 3 % உள் இட ஒதுக்கீட்டின் பயன்பாடுகள் அதை நாம் பயன்படுத்தி கொள்ளும் முறைகள் மற்றும் அதை சக அருந்தத்திய மாணவர்களிடேயே கொண்டு சென்று அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து நீண்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாணவ மாணவிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.பின்னர் மாணவ மாணவிகளின் பிரச்சனைகள் ,மற்றும் அவர்களின் எதிர்கால விரும்பிய கல்வி கற்கும் வாய்ப்புகளை எப்படி அமைப்பது என்றும் கல்வி நிலையங்களில் ஏற்படும் சிரமங்களுக்கு அவர்களுக்கு தேவையான உதவிகள் ஆதித்தமிழர் பேரவை செய்யும் வழிமுறைகள் என்பது போன்ற பல்வேறு மிகையா திட்டங்கள் வகுக்கப்பட்டது.

இவ்விழிப்புணர்வு கருத்தரங்கத்திற்கு
ஒன்றியச் செயலாளர்
பி.அறிவழகன் தலைமை தாங்கினார்
கிளைச்செயலாளர்
ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்
ஒன்றிய நிதிச் செயலாளர்
தமிழழகன் மானவர்களுக்கு வழி காட்டுதல் உரை நிகழ்த்தினார் .
இக்கருதரங்கத்தில் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்




ஆதித்தமிழர் பேரவையின் "மாநில சிறப்பு செயற்குழுக் கூட்டம்" அறிவிப்பு

அன்பார்ந்த ஆதித்தமிழர் பேரவையின் மாநில மாவட்ட நிர்வாகிகளே, வணக்கம்!
எதிர்வரும் 7.1.2017 அன்று மாநில சிறப்பு செயற்குழுக் கூட்டம் கோவையில் உள்ள பேரவையின் தலைமை அலுவலகமான ஆதித்தமிழன் அரங்கத்தில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் அனைத்து மாநில நிர்வாகிகளும், அனைத்து மாவட்ட செயலாளர்களும், தலைவர்களும், அணிகளின் நிர்வாகிகளும் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும்.

7.1.2017 சனிக்கிழமை சரியாக பிற்பகல் 2.30 மணிக்கு கூட்டம் தொடங்கும்.

முன்னதாக காலை 10 மணியளவில் மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறும். எனவே மாநிலக் குழு உறுப்பினர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்று கூட்டத்தின் நோக்கத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் என தலைமைக்குழுவின் சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி
_______
ஆதித்தமிழர் பேரவை
தலைமக்காக
பொதுச்செயலாளர்
ஆ.நாகராசன்.
27.12.20





சிவகாசி ஏழாயிரம்பண்ணை நாராயணபுரம் RR - பட்டாசு கம்பெனியில் கோர தீவிபத்து களத்தில் ஆதித்தமிழர் பேரவை

சிவகாசி ஏழாயிரம்பண்ணை நாராயணபுரம் RR - பட்டாசு கம்பெனியில் கோர தீவிபத்து
8 பேர் பலி
8 பேரும் அருந்ததிய சமூகத்தை சார்ந்தவர்கள்
-----------
ஆதித்தமிழர் பேரவை விருதுநகர் மாவட்டச்செயலாளர் அண்ணன் பூவை ஈஸ்வரன் தலைமையில்
பேரவை தோழர்கள் களத்தில்
---------
இறந்த நபர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 4,20,000
பெற்று கொடுத்தனர்




நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியத்தில் அனைத்து
ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆதித்தமிழர் பேரவை நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் - 5.1.17
காலை 10 மணி
இடம் அண்ணா சிலை அருகில் (மோகனூர்)



ஆதித்தமிழர் பேரவை நாமக்கல் மேற்கு மாவட்ட செயற்குழு நடைபெற்றது

ஆதித்தமிழர் பேரவை நாமக்கல் மேற்கு மாவட்ட செயற்குழு மாவட்டச்செயலாளர் ந.சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. இச்செயற்குழுவில் தோழர்கள் பல்வேறு கட்சியிலிருந்து விலகி தங்களை பேரவையில் இணைத்துக்கொண்டனர்.

சேலம் மேற்கு மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் தோட்டக்காடு கிளை கொடியேற்றுவிழா இன்று நடைபெற்றது


ஆதித்தமிழர் பேரவை சேலம் மேற்கு மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் தோட்டக்காடு பகுதி கொடியேற்றுவிழா மாநில இளைஞர் அணி துனை செயலாளர் வீரசிவா ,மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் சோமு , துனைசெயலலர் மதேஸ்,வீரசரவணன், ஜெயபால் ,அஜித், கிருஸ்ணன், மற்றும் பேரவை தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்





புரட்சியாளர் யேசுவிற்கு ஆதித்தமிழர்களின் வீரவணக்கம்!

திசம்பர்.25
'"""""""""""""”""
புரட்சியாளர் யேசுவிற்கு
ஆதித்தமிழர்களின் வீரவணக்கம்!

உலககில் தோன்றிய முதல் புரட்சியாளரே!
தொண்டர் படை கட்டி தொண்டூழியம் செய்தவரே!!

தொட்டால் தீட்டு என்ற மண்ணில்
தொழுநோயாளிகளை தொட்டு மருத்துவம் செய்து
மனிதநேயத்தை விதைத்தவரே!

கல்வியை மறுத்த கயவர்களை எதிர்த்து
கடைக்கோடியில் தள்ளப்பட்ட மக்களை
கனிவுடன் அரவணைத்து
கல்வி கண்களை திறக்க காரணமானவரே!

அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராய் படைகட்டி
மக்களை மீட்க "சபை" என்ற சங்கம் நடத்தியவரே!

முன்னணியினரை "போதகராக" அறிவித்து
சபையை முன்னெடுத்து சென்று
மக்களை விழிப்பூட்டியவரே!

போதகரை காப்பாற்ற "தசமபாகம்" என்ற பெயரில்
சந்தாமுறையை உருவாக்கியவரே!!

உலகத்தில் தோன்றிய
முதல் புரட்சியாளரும் நீயே!

மக்களை அமைப்பாக்கும் முறையை
அறிமுகம் செய்தவரும் நீயே!!

மக்களை திரட்டி"ஜெபக்கூட்டம்"என்ற பெயரில்
போராட கற்றுத்தந்தவரே!

மொத்தத்தில்...
புலபுவது கேவலம்!
புறப்படு போர்க்களம்!!
என
மக்கள் இயக்கங்களுக்கு வழிகாட்டிய
முதல் புரட்சியாளரும் நீதான்,
மரணத்தை முத்தமிட்டு
மக்கள் மனதில் நிறைந்தவரும் நீதான்,

இப்படி..
மக்களை அமைப்பாக்கி மறுமலர்ச்சிக்கு
முற்பட்ட மகத்தான மனிதருக்கெல்லாம்
ஆதிக்க சக்தி தந்த பட்டமோ!
கிளர்ச்சிக்காரன், புரட்சிக்காரன்
கிடைத்த தண்டனையோ கொடுஞ்சிறை மரணம்.

போராளிகளை கொல்லத்தான் முடியும்!
வெல்ல முடியாது!!

புரட்சியாளரே உமக்கு
ஆதித்தமிழர்களின் வீரவணக்கம்.
____________________
நாகராசன்.பொ.செ.


தருமபுரி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் அருந்ததியர்களின் "அரசியல் அதிகார பகிர்வுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்" நடைபெற்றது


இன்று 24.12.2016 பிற்பகல் 1.மணியளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிருத்தி.. அருந்ததியர்களின்
"அரசியல் அதிகாரப்பகிர்வுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்"
சிறப்பாக நடைபெற்றது

இந்நிகழ்விற்கு மாவட்ட செயலாளர் சித்தார்தன் தலைமை தாங்கினார், பொதுச்செயலாளர் நாகராசன் அவர்கள் நிறைவுப் பேருரை நிகழ்த்தினார், பேரவையின் நிதிச்செயலாளர் ப.பெருமாவளன் கருத்துரை ஆற்றினார். மாநில இளைஞரணி செயலாளர் தமிழரசு உள்ளிட்ட தருமபுரி மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்தனர். கருத்தரங்கில் 30 க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 80 பேர்கள் கலந்துகொண்டனர்.



Indian Bank sc/st employees welfare association committee கூட்டத்தில், "தலித் வங்கி மேலாளர்கள் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்" என்ற தலைப்பில் தோழர் வழக்கறிஞர் கார்க்கி உரையாற்றினார்

இன்று கோவை RHR hotelல் நடைபெற்ற All Indian Bank sc/st employees welfare association committee கூட்டத்தில், ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தோழர் வழக்கறிஞர் கார்க்கி அவர்கள்

"தலித் வங்கி மேலாளர்கள் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்"

என்ற தலைப்பில் உரையாற்றினார்



தூத்துக்குடி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நடத்தி கருத்தரங்கத்தில் ஆதித்தமிழர் பேரவை மாநில அமைப்புச்செயலாளர் சோ.அருந்ததியரசு தலைமையில் பேரவையினர் கலந்து கொண்டார்


திசம்பர் - 23
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் " மாபெரும் கருத்தரங்கம்" நடைபெற்றது இக்கருத்தரங்கில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாநில அமைப்பு செயலாளர் தோழர் சோ.அருந்ததி அரசு சிறப்புரையாற்றினார் உடன் மாவட்ட செயலாளர் தோழர் கொளதமன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
ஆதித்தமிழர் பேரவை
தூத்துக்குடி மாவட்டம்