அண்மையச்செய்திகள்

Thursday 30 April 2020

"நடிகை ஜோதிகா" அவர்கள் மீது திட்டமிட்டு அவதூறுகளை பரப்பி வரும் "பிஜேபி" சங்பரிவார கும்பல்களை "ஆதித்தமிழர் பேரவை" வன்மையாக கண்டிக்கிறது

பிஜேபி மோடி அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே "நடிகை ஜோதிகா" அவர்கள் மீது திட்டமிட்டு அவதூறுகளை பரப்பி வரும் "பிஜேபி" சங்பரிவார கும்பல்களை
"ஆதித்தமிழர் பேரவை" வன்மையாக கண்டிக்கிறது...- அய்யா அதியமான் அறிக்கை


நடிகை ஜோதிகாவின் அக்கறையும்,
பார்ப்பனிய சங்கிகளின் அவதூறுகளும்.
ஆபாசங்களையும் அவதூறுகளையும் பரப்பும் பார்ப்பனிய சங்கி கும்பல்களின் திருவாய்கள் கொரானாவை விட கொடியது
ஆபாசமானது.
ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற
"JSW Movie Award 2020" நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஜோதிகா அவர்கள் தமிழக மக்களின் பொதுநலன் குறித்தும்,
அரசு மருத்துவமனை மற்றும் அரசு பள்ளியின் நிலை குறித்து வருத்ததோடு தெரிவித்திருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்களின் கல்வி சதவீதம் 90 % என அதிகரித்திருந்தாலும்
அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பும்,
அரசுப் பள்ளிகளின் தரமும் அதைப் பயன்படுத்தும் பொதுமக்களின் அலட்சியங்களாலும் மிகவும் பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை உணர்ந்த
"திருமதி ஜோதிகா" அவர்கள் தங்களது
அகரம் பவுண்டேசன் மூலம் சுமார் 3000 க்கும் மேற்ப்பட்ட கிராமப்புற மாணவர்களையும்
500 க்கும் மேற்ப்பட்ட ஏழை எளியவர்களுக்கு மருத்துவ உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் "JSW" திரைப்பட நிகழ்வில்
"கோவில்களுக்கு வழங்கும் நிதியைப் போல் பள்ளி, மருத்துவமனைக்கு வழங்கினால் சிறப்பாக இருக்கும்" என்று
சமூக அக்கறையோடு பேசி இருக்கிறார்
இந்த பேச்சை ஏற்க முடியாத பார்ப்பனிய அடிவருடிகள் இந்துக் கோவில்களை ஜோதிகா அவமதித்து விட்டதாக சொல்லி வழக்கம் போல அவதூறுகளை பரப்பி கொண்டும் திட்டமிட்டு திசை திருப்பும் வேலையையும் செய்து கொண்டு இருக்கின்றனர்.
ஊடகங்களை வைத்து மக்களை திசை திருப்பி விடுவதில் பார்ப்பணர்கள் கை தேர்ந்தவர்கள்
தலைநகர் தில்லியில் நடந்த தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்ட இசுலாமியர்கள் தான் திட்டமிட்டு கொரனாவை பரப்பினார்கள் என்று அவதூறுகளை பரப்பினார்கள்
ஜனநாயக சக்திகளின் தொடர் முயற்சியால் அவர்களின் அவதூறுகள் முறியடிக்கபட்டது
தற்போது ஜோதிகா மீது அவதூறுகளை தொடங்கி விட்டனர்
அவதூறு பரப்புவது திசை திருப்புவது சங்கிகளுக்கு ஒன்றும் புதிதல்ல..
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை தமிழகம் மட்டுமல்லாது
இந்தியா முழுவதும் பலகோடி பொதுமக்கள் வேலை இழந்து ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் பட்டினியால் உயிர் இழக்கக் கூடிய சூழ்நிலையில் இருக்கிறார்கள்
அவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கூட போடுவதற்கு வக்கற்ற இந்த பிஜேபி ஆர் எஸ் எஸ் சங்பரிவார கும்பல் அதையெல்லாம் பற்றி பேசுவதை விட்டு விட்டு நாடு தற்போது இருக்கும் நிலையில் நாட்டு மக்களை பாதுகாப்பதை விட்டுவிட்டு ஜோதிகா கோயில்களுக்கு எதிராக பேசி விட்டார் என்று தினந்தோறும் சமூக வலைதளங்களில் கதறிக் கொண்டு இருப்பது காழ்ப்புணர்ச்சியால் அல்ல இது திட்டமிட்ட செயல் ஆகும்
மத்திய அரசின் மீதும்
நாட்டின் பிரதமர் மோடியின் மீதும் மக்களுக்கு பெரும் அதிருப்தி தற்போது ஏற்பட்டு இருக்கிறது இந்த ஊரடங்கு நாட்களில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை மத்திய அரசு செய்து தருவதில் தவறிவிட்டது
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 68,000 கோடி கடனை தள்ளுபடி செய்கின்ற இந்த அரசு
கொரனா தொற்று நோயை குணப்படுத்த போதுமான மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்த வில்லை
நாட்டுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் கவனம் செலுத்த வில்லை
மக்களின் உயிரை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வில்லை.
மத்திய அரசு மக்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறது என்பதை இந்திய மக்கள் அனைவரும் உணர்ந்து மத்திய அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தினந்தோறும் குரல் எழுப்பிக் கொண்டு இருக்கிறார்கள்
மத்திய அரசின் மீது மக்களுக்கு இருக்கக்கூடிய வெறுப்புணர்வை திசை திருப்ப வேண்டும் என்று திட்டமிட்டு
பிஜேபி அரசு சங்பரிவாரக் கும்பல் தற்போது ஜோதிகா பேசிய கருத்தை பெரிதுபடுத்தி மக்களின் கவனத்தை திசை திருப்பி கொண்டு இருக்கிறார்கள்
நடிகை ஜோதிகா அவர்கள் கோவில்களுக்கு செலவு செய்யும் காணிக்கைகளை கல்விக்கூடங்களுக்கு மருத்துவமனைகளுக்கு செலவு செய்யுங்கள் என்று பேசி இருப்பது வரவேற்கத்தக்கது.
இந்த கருத்தை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு பொதுத்தளத்தில் சொல்லியிருக்கிறார் கோவில்களுக்கு செலுத்தும் காணிக்கைகளை குழந்தைகளின் கல்விக்கு செலுத்துங்கள் அது பலன் தரும் என்று உரக்கச் சொல்லி இருக்கிறார்
புரட்சியாளர் அம்பேத்கரின் கருத்தை ஜோதிகா அவர்கள் வழிமொழிந்து இருக்கிறார் என்பதுதான் உண்மை.
ஜோதிகாவை பற்றி பேசக்கூடிய சங்பரிவாரக் கும்பல்கள் புரட்சியாளர் அம்பேத்கர் பற்றி பேச முடியுமா பேசினால் எப்படிப்பட்ட விளைவுகள் உருவாகும் என்பதை சங்பரிவாரக் கும்பல்களுக்கு நன்றாக தெரியும் இருந்தும் நடிகை ஜோதிகா மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சியோடு அவதூறுகளை பரப்ப காரணம் அவர் கல்வி என்ற ஆயுதத்தை கையில் எடுக்க சொல்கிறார் கல்வி மறுக்கப்பட்ட ஏழை எளிய மாணவர்களுக்கு ஏறத்தாழ 3000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வியை கற்க உதவி செய்திருக்கிறார்.
நம்மைப் போன்ற ஏழை எளிய குழந்தைகள் கல்வி கற்பதே பார்ப்பணியத்திற்கு பிடிக்காத ஒன்றாகும்
ராஜாஜி எப்படி குலத்தொழில் திட்டத்தை கொண்டு வந்தாரோ அதே போலத்தான் நாம் அனைவரும் நம்முடைய குல தொழிலை மீண்டும் செய்ய வேண்டும் என்பதுதான் பிஜேபி சங்பரிவாரக் கும்பலின் திட்டம்.
"கல்வி கற்றால் காதினிலே ஈயத்தை காய்ச்சி ஊற்று"
என்கிற "மனு(அ)தர்ம" கூற்றிலே வந்தவர்களுக்கு தமிழக மக்களின் நலன் பற்றி எங்கே தெரியபோகிறது..
கல்வி மற்றும் மருத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து
நடிகை ஜோதிகா அவர்கள் பேசிய கருத்தை நாமும் வழு சேர்க்க வேண்டும்
இதுபோன்ற கருத்துக்களை மட்டும் தான் மக்கள் அங்கிகரிப்பார்கள் என்று பிஜேபி சங்பரிவாரங்களை உணர வைக்க வேண்டும்.
மத்திய மாநில அரசுகளின் அலட்சிய போக்கை தொடர்ந்து அம்பலபடுத்துவோம்
நடிகை ஜோதிகாவின் சமூக அக்கறைக்கு உடனிருப்போம்.
பார்ப்பனிய சங்கிகளின் அவதூறுகளை முறியடிப்போம்.!!
இரா.அதியமான்.
நிறுவனர் / தலைவர்.
ஆதித்தமிழர் பேரவை.
30-4-2020

No comments:

Post a Comment