அண்மையச்செய்திகள்

Tuesday, 15 November 2016

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் ஆதித்தமிழர் பேரவையின் ஆதரவு பெற்ற திமுக வேட்பாளர் Dr பா.சரவணன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம்.

13.11.16
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தோர்தல் திமுக வேட்பாளர் Dr பா.சரவணன் அவர்களுக்கு திமுக கூட்டணி கட்சியின் சார்பாக 94, வது வார்டுகளில் பிரட்சாரம் செய்தோம் பேரவையின் சார்பில் மாநில அமைப்புச்செயலாளர் து.ஜானகி, அவர்களும் மாநில இளைஞர் அணி இணைச்செயலாளர் இரா.செல்வம், மாநகர் மாவட்டச்செயலாள் க.சாமிகண்ணு, மாநகர் மாவட்டத்தலைவர் கி.செல்லப்பாண்டி, மற்றும் இரா.கௌரி, வெ.கி.சிங்கப்பாண்டி மற்றும் mmc காலனி, மேலவாசல் கிளை நிர்வாகிகள் 30.க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டோம்.



Monday, 7 November 2016

நவம்பர்.7 ரஷ்யபுரட்சி நாளை முன்னிறுத்தி சமூகநீதி இயக்கத்தின் சார்பில் விருது வழங்கும் விழாவில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் இரா.அதியமான் விருதுகள் வழங்கி கருத்துரை வழங்கினார்


நவம்பர்.7 ரஷ்யபுரட்சி நாளை முன்னிறுத்தி சமூகநீதி இயக்கத்தின் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது இதில் பேரவையின் நிறுவனர் *அய்யா அதியமான்* அவர்கள் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு, கலந்து கொண்டு கருத்துரையாற்றினார். இந்நிகழவில் எழுத்தாளர் வே.மதிமாறன், மதுரைவீரன் உண்மை வரலாற்று நூல் ஆசிரியர் குழந்தை ராயப்பன், காந்தி மக்கள் மன்றம் மகேஷ், எழுத்தாளர் சம்சுதீன், பொள்ளாச்சி, கா.சு.நாகராசன், எழுத்தாளர் திருமாவேலன், மாற்றுத்திறனாளி மாரியப்பன், காட்டாறு ஆசிரியர் தாமரை கண்ணன், பூலே.கல்வி மையம் குருசாமி, இளந்தமிழகம் செந்தில்குமார், சக்தி பறை இசைக் குழுவினர் உள்ளிட்டோர் விருதுகளைப் பெற்றனர்.

உடன்.. பேரவையின் பொதுச்செயலாளர் நாகராசன் து.பொ.செயலாளர் ஆனந்தன், தி.செ.கோபால், நாமக்கல்.சிவகுமார், தொண்டாமுத்தூர்.குரு. உள்ளிட்ட ஆதித்தமிழர் பேரவை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

ஆதித்தமிழர் பேரவை
தலைமைக்காக
பொதுச்செயலாளர்.
ஆ நாகராசன்
7.11.16









தமிழரசு தந்தையார் இறுதி நிகழ்வில் நிறுவனர் பங்கேற்பு

தமிழரசு தந்தையார் இறுதி நிகழ்வில் நிறுவனர் பங்கேற்பு
"""""""""""""""""""""""""""””""""""""""""
ஆதித்தமிழர் பேரவை மாநில இளைஞர் அணி செயலாளர் தோழர் நாமக்கல் தமிழரசு அவர்களின் தந்தை 75 அகவை நிறைந்த பெரியவர் ராமசாமி நேற்று 6.11.2016 இரவு உடல் நலக்குறைவால் காலமானார், அவரது உடலுக்கு
இன்று 7.11.2016 பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பிற்பகல் 1 மணிக்கு இறுதி அடக்கம் நடைபெறும். என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.





Sunday, 6 November 2016

அரவக்குறிச்சி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி அவர்களை ஆதரித்து அவரது வெற்றிக்கு உழைத்திட ஆதித்தமிழர் பேரவை செயல்வீரர்ளுக்கான ஆலோசனைக் கூட்டம் அரவக்குறிச்சி தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது.

அரவக்குறிச்சி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி அவர்களை ஆதரித்து அவரது வெற்றிக்கு உழைத்திட ஆதித்தமிழர் பேரவை செயல்வீரர்ளுக்கான ஆலோசனைக் கூட்டம் அரவக்குறிச்சி தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னால் அமைச்சர் எ.வ.வேலு அவர்களும் மாவட்ட செயலாளர் நன்னியூர்.ராஜேந்திரன் உள்ளிட்ட ஒன்றிய கழக நிர்வாகிகளும், பேரவையின் மேற்கு மாவட்ட செயலாளர் துரை.அமுதன், கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லையரசு, ஈரோடு மாவட்ட செயலாளர் வீரகோபால்,  திருப்பூர் மாவட்ட செயலாளர் அர்ஜுனன், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சரவணக்குமார், கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்ரமணி, திருச்சி ராசாத்தியம்மாள் மாநில நிர்வாகிகள் குயிலி, தமிழரசு உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், கூட்டத்தில் பேசிய நிறுவனர் அய்யா அதியமான் நாம் ஏன்? தி.மு.க வை ஆதரிக்கின்றோம் என்றும் கலைஞர் அவர்கள் நமக்கு வழங்கிய உரிமைகளையும் சாதனைகளையும் பட்டியலிட்டு பேசுனார். பொதுச்செயலாளர் நாகராசன் உடனிருந்தார்.

கடவூர் ஒன்றிய செயலாளர் மரு.சக்திவேல், பெ.மலர்கொடி ஆகியோரது வாழ்க்கை துணை நல சுயமரியாதை திருமணத்தை பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் நடத்தி வைத்து வாழ்க்கை வழிகாட்டுதல் உரை நிகழ்த்தினார்.

*சுயமரியாதை திருமாணம்*
""""""""""""""""""
இன்று 6.11.2016 ஆதித்தமிழர் பேரவை
கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றிய செயலாளர் மரு.சக்திவேல், பெ.மலர்கொடி ஆகியோரது வாழ்க்கை துணை நல சுயமரியாதை திருமணத்தை பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் நடத்தி வைத்து வாழ்க்கை வழிகாட்டுதல் உரை நிகழ்த்தினார்.

மிகவும் எளிய முறையில் சடங்கு சம்பிரதாயமற்ற சுயமரியாதை உறுதியேற்புடன் திருமணம் இனிதே நடந்தேரியது.

Saturday, 5 November 2016

ஆதித்தமிழர் பேரவை தருமபுரி மாவட்ட செய்றகுழு 4.11.16 அன்று நடைபெற்றது. இதில் முக்கிய பல தீர்மாணங்கள் நிறைவேற்றபட்டன.

ஆதித்தமிழர் பேரவை தருமபுரி மாவட்ட செய்றகுழு 4.11.16 அன்று நடைபெற்றது.
இதில் முக்கிய பல தீர்மாணங்கள் நிறைவேற்றபட்டன.

Thursday, 3 November 2016

தமிழகத்தில் தொடரும் சாதிவெறி ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து.. இன்று 3.10.2016 வியாழனன்று நடைபெற்ற தென்மண்டல IG அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது

தமிழகத்தில் தொடரும் சாதிவெறி ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து..
இன்று 3.10.2016 வியாழனன்று நடைபெற்ற தென்மண்டல IG அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டார்.
தோழர்கள் கொளத்தூர்.மணி, அரங்க.குணசேகரன், மீதா.பாண்டியன், நாகை.திருவள்ளுவன், விடுதலைவீரன், சரீப், பிரிசில்லாபண்டியன், ஆற்றலரசு, அப்துல்சமது மற்றும் எஸ்டிபிஐ, பி.எஸ்.பி, உள்ளிட்ட கட்சிகளின் பொறுப்பாளர்களும் தலைவர்களும் தொண்டர்களும் 500 க்கும் மேற்பட்டோர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆணவக்கொலைகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் ஐ.ஜி அலுவலகம் முற்றுகையிட முயன்ற அனைவரும் கைது செய்யப்பட்டு கே.புதூரில் உள்ள ஓர் தனியார் திருமணமண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். உடன் பொதுச்செயலாளர் நாகராசன் உட்பட பெறும் திரளாக பேரவை தோழர்கள் பங்கேற்றனர்.
______________
செய்திச் சுருக்கம்.
பொதுச்செயலாளர்.
3.10.2016 மதுரை.