அண்மையச்செய்திகள்

Monday, 8 May 2017

அம்பேத்கரும் - தொழிலாளர்களும் எழுச்சிக் கருத்தரங்கம்

அம்பேத்கரும் - தொழிலாளர்களும்
எழுச்சிக் கருத்தரங்கம்
""""""""""""""""""""""""
திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தின் சார்பில் 7.5.2017 அன்று கிளை திறப்பு மற்றும் அம்பேத்கர் காரல் மார்க்ஸ் பிறந்த நாளை முன்னிறுத்தி
அம்பேத்கரும் தொழிலாளர்களும் என்ற தலைப்பில் குஜிலியம்பாறை தனசக்கரவர்த்தி திருமண மண்டபத்தில் எழுச்சி கருத்தரங்கம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் விடுதலை தலைமை தாங்கினார், மாவட்ட தலைவர் சண்முகம், நிதிச்செயலாளர் அரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைப்புச் செயலாளர் சத்திரப்பட்டி முருகன் வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்வில் பேரவையின் தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொறுப்பாளர் ஞானசேகரன் கருத்துரை ஆற்றினர் நிறைவில் பொதுச்செயலாளர் நாகராசன் கருத்துப்பேருரை ஆற்றினார்.
துணைப் பொதுச்செயலாளர் நாமக்கல் சுப்பிரமணி, இளைஞர் அணி மாநில செயலாளார், தமிழரசு ஆகியோர் பங்கேற்றனர்.
மாவட்ட கொ.ப.செயலாளர் சாலமோன் நன்றி உரை ஆற்றினார்.
கரத்தரங்க நிகழ்வில் பேரவையின் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
_______
தகவல் தொகுப்பு
பொதுச்செயலாளர்
8.5.2017

















Tuesday, 4 April 2017

தொட்டியபட்டி மக்களுக்கு துப்பாக்கி வழங்கு! மக்களை சந்தித்த பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் ஆவேசம்!

தொட்டியபட்டி மக்களுக்கு துப்பாக்கி வழங்கு!
மக்களை சந்தித்த பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் ஆவேசம்!
"""""""""""""""""""""""""""""""""""""""""""
கடந்த 30.3.2017 அன்று விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தொட்டியபட்டி கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட கம்பளத்து நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த சாதிவெறியர்கள், திட்டமிட்டு ஒன்று திரண்டு 50 வீடுகளே உள்ள, அருந்ததியர் சமூக மக்களின் பகுதியில் புகுந்து வீடுகளுக்கு தீவைத்து, 10 க்கும் மேற்பட்டோரை தாக்குதல் நடத்தி கொங்காயம் ஏற்படுத்தி பெண்களை மானபங்கப் படுத்தி, உடமைகளை கொள்ளையடித்து, சாதிவெறியாட்டம் ஆடியுள்ளனர்.
இந்த சம்பவத்தையொட்டி 5.4.2017 இன்று நேரில் சென்று மக்களை சந்தித்த பேரவையின் தலைவர் அய்யா அதியமான் அவர்கள், அச்சத்தில் உறைந்து கிடந்த அருந்ததியர் மக்களின் முகத்தைப் பார்த்து காவல்துறை எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டது என்பதை சுட்டிக்காட்டி, இந்த சாதிவெறிக் காவல்துறையினால் இம்மக்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடைக்கப்போவதில்லை, மேலும் பாதிக்கப்பட்ட பிறகு வழங்கப்படும் நிவாரணம் மட்டும் தீர்வாகாக அமையாது எனவே இம்மக்களின் நிரந்தர பாதுகாப்பிற்கும் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள அருந்ததியர் மக்கள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தினார்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார்.

























Wednesday, 11 January 2017

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆர்.ஆர் பட்டாசு ஆலை விபத்தில் பலியான அருந்ததியர் சமூகத்தைச் எலுமிச்சங்காய்ப் பட்டியை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 8 பேரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆர்.ஆர் பட்டாசு ஆலை விபத்தில் பலியான அருந்ததியர் சமூகத்தைச் எலுமிச்சங்காய்ப் பட்டியை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 8 பேரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள்,

பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தாருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்,

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்,

அனைத்து ஆலைகளிலும் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்பட வேண்டும், என்பதோடு

ஜல்லிக்கட்டுக்கு பேரவையின் நிலைபாடு என்னவென்று கேட்ட தொலைக்காட்சி செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த நிறுவனர், ஜல்லிக்கட்டு என்பது ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களின் விளையாட்டு இதை ஆதரிக்கவில்லை என்று கூறினார்.

இதில் பேரவை பொதுச்செயலாளர் ஆ.நாகராசன், தலைமை நிலைய செயலாளர் ச.சு.ஆனந்தன், அமைப்பு செயலாளர் அருந்ததிஅரசு, மாநில இளைஞர் அணி செயலாளர், தமிழரசு, மாநில மகளிர் அணி பொருலாளர் பாண்டியம்மாள், விருதுநகர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், தலைவர் பச்சையப்பன், சின்னபாண்டியம்மாள், தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயாலாளர்கள் கவுதமன், நம்பிராஜ்பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் முத்துக்குமார், ஈரோடு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அழகுமணி,  சிவகங்கை மாவட்ட செயலாளர் பாலு, நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துவீரன், மேற்குமாவட்ட தலைவர் நாஞ்சில்.வளவன், உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
______
செய்திச்சுருக்கம்
ஆ.நாகராசன்
பொதுச்செயலாளர்,
ஆதித்தமிழர் பேரவை.
11.1.2017






















திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் ,NGO காலனி நேதாஜி நகர், எழில் நகர், வ ஊ சி நகர், பகுதிகளில் #ஆதித்தமிழன் மாத இதழ் மற்றும் ஆதித்தமிழன் நாட்காட்டி வழங்கப்பட்டது

 திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் ,NGO காலனி நேதாஜி நகர், எழில் நகர், வ ஊ சி நகர், பகுதிகளில் #ஆதித்தமிழன் மாத இதழ் மற்றும் ஆதித்தமிழன் நாட்காட்டி வழங்கப்பட்டது
---
தோழர்கள்
எழில் புத்தன்
செங்கை குயிலி
திருவீரன்