அண்மையச்செய்திகள்

Monday, 8 May 2017

7.5.2017 திண்டுக்கல் மேற்கு மாவட்டம், குஜிலியம்பாறை மற்றும் வேடச்சந்தூர் ஒன்றியங்களில் புதிய கிளைகள் திறப்பு நடைபெற்றது.

7.5.2017 திண்டுக்கல் மேற்கு மாவட்டம், குஜிலியம்பாறை மற்றும் வேடச்சந்தூர் ஒன்றியங்களில் புதிய கிளைகள் திறப்பு நடைபெற்றது.
""""""""""""""""""""
பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் வழிகாட்டுதலில் நேற்று 7.5.2017 திண்டுக்கல் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட குஜிலியம்பாறை மற்றும் வேடசந்தூர் ஒன்றியங்களில் புதிதாக 11 கிளைகள் திறக்கப்பட்டது. காலை 11.30 க்கு தந்தைபெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நிகழ்வு தொடங்கியது, இந் நிகழ்வில் பொதுச்செயலாளர் நாகராசன் மற்றும் தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன், துணைப் பொதுச்செயலாளர் நாமக்கல் சுப்பிரமணி, மாநில இளைஞரணி செயலாளர் திருச்செங்கோடு தமிழரசு ஆகியோர் பங்கேற்றோம். நிகழ்வு மாலை 6.00 மணிக்கு நிறைவுற்றது.

11 கிளைகளிலும் கொடியேற்றம், பெயர்பலகை திறப்பு நிகழ்வு மிகவும் நேர்த்தியாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது, நிகழ்விற்கு மாவட்ட செயலாளர் விடுதலை தலைமை வகித்தார், மாவட்ட தலைவர் சண்முகம் அவர்கள் முன்னிலை பொறுப்பேற்று அனைத்து கிளைகளையும் சிறப்பாக உருவாக்கி இருந்தார். நிகழ்வை அமைப்புச் செயலாளர் சத்திரபட்டி.முருகன் ஒருங்கிணைத்தார்.

வேடசந்தூர் ஒன்றியம் பொறுப்பாளர்கள்.
"''''"""'""""""""""""""""""""
செயலாளர் மணிவேல்,
தலைவர் பழனிச்சாமி,
நிதிச் செயலர் நாகராஜ்,
அமைப்பு செயலர் சக்திவேல்,
து.செயலர் ரவி,
து.தலைவர் விஜய்.

1.குடப்பம் காலனி கிளை,
******
பொறுப்பாளர்கள்.
ரவி, சரவணன், ஆறுமுகம், வீரமணி, சரத்குமார், சந்திரன்,

2.இந்திராகாலனி கிளை,
(ஆதித்தமிழன் நகர்)
*******
பொறுப்பாளர்கள்
விஜய், திருப்பதி, சூர்யா, சின்னமணி, சந்துரு,

3.அம்மாபட்டி கிளை
*******
பொறுப்பாளர்கள்
பழனிச்சாமி, முத்துராஜா, சரவணன், முருகன்,

4.வெல்லம்பட்டி கிளை
********
பொறுப்பாளர்கள்
ஆனந்தன், பிச்சை, அழகர்சாமி, செந்தில், நாகராஜ், கோபால்,

5.தங்கச்சியம்மாபட்டி கிளை
(அம்பேத்கர் நகர்)
*******
பொறுப்பாளர்கள்
சின்னச்சாமி, முருகன், சரவணன், முருகேசன், சுப்பாராஜ், ரவி, அஜித்.

குஜிலியம்பாறை ஒன்றியம்
பொறுப்பாளர்கள்
"""""""""""""""""""""""""""
செயலாளர், செல்வம்,
தலைவர், யோகராஜ்,
நிதிச் செயலர் நெருப்புத் தமிழன்,
அமைப்பு செயலர், சரத்
கொ.ப.செ, ஜெயராமன்,
து.செயலர், மோகனவேந்தன்,
து.தலைவர், ராமராஜ்.

6.பொம்மகவுண்டன் புதூர் கிளை
******
பொறுப்பாளர்கள்
செல்வம், ராமராஜ், கிருஸ்ணன், மாரியபன், ரங்கசாமி,

7.கருங்குளம் காலனி கிளை
*******
பொறுப்பாளர்கள்
காளிமுத்து, முனியாண்டி, ஜெயபால், சரவணன், முத்தன், பெருமாள், பாலன்.

8.உப்பிலியபட்டி கிளை
********
பொறுப்பாளர்கள்
பெருமாள், தேவராஜ், ராமராஜ், ராஜேந்திரன், ரேவதி, யுவராஜ், வடிவேல், வேலுச்சாமி.

9.தாத்கனூர் கிளை
*******
பொறுப்பாளர்கள்
பழனிச்சாமி, மாரிமுத்து, காளிமுத்து.

10.கூட்டக்காரன்பட்டி கிளை
*********
பொறுப்பாளர்கள்
சரத், கருப்புவேந்தன், சதீஷ், முருகேசன், மதுரைவீரன், குமரவேல், தங்கவேல், கார்த்திக், சிலம்பரசன்.

11.மொச்சக்காயனூர் கிளை
*********
பொறுப்பாளர்கள்
வாழகிரி, வீரப்பன், ராமசாமி, தங்கவேல்.

பங்கேற்ற வடமதுரை ஒன்றிய பொறுப்பாளர்கள்
""'""""""""""""""""""""""""
பொறுப்பாளர்கள்
செல்வம், தண்டப்பணி, முத்துவேல், நந்தகுமார், செல்வராஜ்.
________
தகவல் தொகுப்பு
பொதுச்செயலாளர்
8.5.2017






நெல்லை மாநகரில் மே 13!! ல் மக்கள் திரள் ஆர்பாட்டம்

நெல்லை மாநகரில் மே 13 ல் மக்கள் திரள் ஆர்பாட்டம்
* விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஒன்றியம் #தொட்டியபட்டியில்_அருந்ததியர் மக்கள் மீது திட்டமிட்டு சாதிய தாக்குதல்களை கண்டித்தும் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யப்படாததை கண்டித்தும், சேதப்படுத்தப்பட்ட வீடுகளை சீரமைத்து தராமல் அலட்சிய படுத்தி வரும் வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்தும் ....
* அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை ஆறு விழுக்காடாக உயர்த்த கோரி உயிர் தியாகம் செய்த போராளிகள் #பழநீலவேந்தன்_திருச்சி_இராணி_திருப்பூர்_மகேசுவரன் , ஆகியோர்களை சமூகநீதி போராளிகளாக அறிவிக்க வலியுறுத்தியும் ..
* மாதந்தோறும் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் விவசாயிகளுக்கு குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படுவதை போல் #துப்பரவு_பணியாளர்களுக்கும்_குறை_தீர்க்கும் கூட்டம் நடத்த வலியுறுத்தியும் ...
* தாமிரபரணி நதி நீரை பெப்சி , கோகோ கோலா போன்ற வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பதை #நிரந்தரமாக தடை செய்ய வலியுறுத்தியும்
#மக்கள்_திரள்_ஆர்ப்பாட்டம்
கண்டன நிறைவுரை
#நீலச்சட்டை_போராளிகளின்_தளபதி
ஆ.நாகராசன் - பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை
நெல்லை - கிழக்கு மாவட்டம்



அம்பேத்கரும் - தொழிலாளர்களும் எழுச்சிக் கருத்தரங்கம்

அம்பேத்கரும் - தொழிலாளர்களும்
எழுச்சிக் கருத்தரங்கம்
""""""""""""""""""""""""
திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தின் சார்பில் 7.5.2017 அன்று கிளை திறப்பு மற்றும் அம்பேத்கர் காரல் மார்க்ஸ் பிறந்த நாளை முன்னிறுத்தி
அம்பேத்கரும் தொழிலாளர்களும் என்ற தலைப்பில் குஜிலியம்பாறை தனசக்கரவர்த்தி திருமண மண்டபத்தில் எழுச்சி கருத்தரங்கம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் விடுதலை தலைமை தாங்கினார், மாவட்ட தலைவர் சண்முகம், நிதிச்செயலாளர் அரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைப்புச் செயலாளர் சத்திரப்பட்டி முருகன் வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்வில் பேரவையின் தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொறுப்பாளர் ஞானசேகரன் கருத்துரை ஆற்றினர் நிறைவில் பொதுச்செயலாளர் நாகராசன் கருத்துப்பேருரை ஆற்றினார்.
துணைப் பொதுச்செயலாளர் நாமக்கல் சுப்பிரமணி, இளைஞர் அணி மாநில செயலாளார், தமிழரசு ஆகியோர் பங்கேற்றனர்.
மாவட்ட கொ.ப.செயலாளர் சாலமோன் நன்றி உரை ஆற்றினார்.
கரத்தரங்க நிகழ்வில் பேரவையின் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
_______
தகவல் தொகுப்பு
பொதுச்செயலாளர்
8.5.2017

















Tuesday, 4 April 2017

தொட்டியபட்டி மக்களுக்கு துப்பாக்கி வழங்கு! மக்களை சந்தித்த பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் ஆவேசம்!

தொட்டியபட்டி மக்களுக்கு துப்பாக்கி வழங்கு!
மக்களை சந்தித்த பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் ஆவேசம்!
"""""""""""""""""""""""""""""""""""""""""""
கடந்த 30.3.2017 அன்று விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தொட்டியபட்டி கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட கம்பளத்து நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த சாதிவெறியர்கள், திட்டமிட்டு ஒன்று திரண்டு 50 வீடுகளே உள்ள, அருந்ததியர் சமூக மக்களின் பகுதியில் புகுந்து வீடுகளுக்கு தீவைத்து, 10 க்கும் மேற்பட்டோரை தாக்குதல் நடத்தி கொங்காயம் ஏற்படுத்தி பெண்களை மானபங்கப் படுத்தி, உடமைகளை கொள்ளையடித்து, சாதிவெறியாட்டம் ஆடியுள்ளனர்.
இந்த சம்பவத்தையொட்டி 5.4.2017 இன்று நேரில் சென்று மக்களை சந்தித்த பேரவையின் தலைவர் அய்யா அதியமான் அவர்கள், அச்சத்தில் உறைந்து கிடந்த அருந்ததியர் மக்களின் முகத்தைப் பார்த்து காவல்துறை எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டது என்பதை சுட்டிக்காட்டி, இந்த சாதிவெறிக் காவல்துறையினால் இம்மக்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடைக்கப்போவதில்லை, மேலும் பாதிக்கப்பட்ட பிறகு வழங்கப்படும் நிவாரணம் மட்டும் தீர்வாகாக அமையாது எனவே இம்மக்களின் நிரந்தர பாதுகாப்பிற்கும் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள அருந்ததியர் மக்கள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தினார்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார்.