அண்மையச்செய்திகள்

Monday, 15 May 2017

மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச்செயலாளர் வருகை தோழர்கள் வரவேற்பு


(13-5-2017) பேரவை நடத்தும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர்களின் அரசியல் முகவரி அய்யா அவர்களின் வழிகாட்டுதலின் படி நெல்லை பேரவையின் மாநகருக்கு வந்துள்ள பேரவையின் பொதுச்செயலாளர் அவர்களுக்கு நம்பிக்கை நகர் தோழர்கள் குட்டிபாய்.திருகுமரன்.தளபதி விஜய்.ஜோதி விஜய்.மதன்.தம்போ.சுந்தர்.அஜித்.ராஜ். ஆகிய தோழர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்



புரட்சியாளர் அம்பேத்கர் படம் வைத்து நிகழ்ச்சி நடத்த தடையை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டதிற்கு பேரவையினர்




13-5-2017 தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக இராமநாதபுரத்தில் பொது இடங்களில் புரட்சியாளர் அம்பேத்கர் படம் வைத்து நிகழ்ச்சி நடத்த தடையை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டதிற்கு பேரவையின் சார்பில் மாநில இளைஞரணி இணைச்செயலாளர் தோழர் இரா.செல்வம் அவர்கள்  கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார் உடன் இராமநாதபுரம் மாவட்டச்செயலாளர் சி.க. சிவக்குமார் மாவட்ட நிதிச்செயலாளர் ஆதிசங்கர் மாவட்ட அமைப்புச்செயலாளர் தேவராசு மாவட்ட துணைச்செயலாளர் நாக.முருகேசன் மாவட்ட துணைச்செயலாளர் உ.பூமிநாதன் இராமநாதபுரம் ஒன்றியச்செயலாளர் புவனேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர் .




Wednesday, 10 May 2017

நெல்லையில் அணுஉலை எதிர்ப்பு பொதுக்கூட்டம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் ஆதித்தமிழர் பேரவை



நாளை மறுநாள் (13-5-17) நெல்லை மாநகரில் நடக்கும் #அணுஉலை எதிர்ப்பு பொதுக்கூட்டம் பேரணி சம்பந்தமாக இன்று அய்யா சுப.#உதயகுமார் அவர்கள் தலைமையில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது...

ஆதித்தமிழர் பேரவை சார்பில் கு.கி கலைகண்ணன், குட்டிபாய் ,விஜய், மதன் ,அஜித், சுந்தர், தோழர்கள் கலந்து கொண்டனர்.



Monday, 8 May 2017

ஆதித்தமிழர் பேரவை தலைமை நிலையச் செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன் தலைமையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத் விரட்டி அடிப்பு

ஆதித்தமிழர் பேரவை தலைமை நிலையச் செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன் தலைமையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத் விரட்டி அடிப்பு
"""""'''"'''''""'"""""
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை 6 விழுக்காடாக உயர்த்த வலியுறுத்தி உயிர் ஈகம் செய்திட்ட போராளி மகேஸ்வரன் இல்லத்திற்கு வருகை தந்த இந்து மக்கள் கட்சி அர்ஜுன்சம்பத்தை ஆதித்தமிழர் பேரவை தலைமை நிலைய செயலாளர் தம்பி வழக்கறிஞர் ஆனந்தன் தலைமையில் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சோழன், உள்ளிட்ட வாவிபாளையம் கிளை நிர்வாகிகளும், மகேஸ்வரன் கும்பத்தாரும், அருந்ததியர் பொதுமக்களும் திரண்டெழுந்து
இட ஒதுக்கீட்டின் எதிரியே!
இந்துமத வெறியனே!
அர்ஜுன் சம்பத்தே!
ஆணவக் கொலைகளை ஊதிப் பெரிதாக்கும் ஆதிக்க சாதிகளின் கைக்கூலியே!
போராளி வீட்டிற்கு வராதே!
புரட்சி மண்ணை கலங்கப் படுத்தாதே!
என.. முழக்கமிட்டு காவல்துறையை கதிகலங்க வைத்து கருப்புக் கொடியேந்தி பெரியாரின் பேரன்களாக அம்பேத்கரின் வாரிசுகளாக அதியமானின் தம்பிகளாக ஆர்த்தெழுந்து
அர்ஜுன் சம்பத்தை விரட்டி அடித்த போராளிகளுக்கு வாழ்த்துக்கள் பல..
ஆர்.எஸ்.எஸ் எந்த வடிவில் வந்தாலும் அதை அடித்து நொருக்கும் நீலப்படை! என மீண்டும் நிரூபித்துக் காட்டிய கொள்கை வாதிகளை பாராட்டுவோம்! போராளிகளை ஊக்கப்படுத்துவோம்!
நீலவேந்தன் தம்பிகளாக பகுதிப் பொறுப்பாளர்களை வார்த்தெடுத்த போராளி மகேஸ்வரனின் மண், வீரம் செறிந்த மண். என்பதை நிரூபித்த வாவிபாளையம் கிளை நிர்வாகிகள் மூர்த்தி, குமார், மணி, மோகன்ராசு, ஜீவா ஆகியோரே! அடுத்த தலைமுறையின் தளபதிகள்.
இவர்கள் இருக்கும் வரை எந்த கொம்பாதிக் கொம்பனாலும் பெரியார் மண்ணை பிரிக்க முடியாது.
---நாகராசன்.



நீட் தேர்வை தடை செய்யக்கோரி மே 5ல் தேனியில் தபால் நிலையத்தை ஆதித்தமிழர் பேரவையினர முற்றுகையிட்டனர்

மே 5 இல் உலக பொருளாதார தந்தை கார்ல் மார்க்ஸ் பிறந்த நாளில் சமூக நீதிக்கு எதிரான தமிழகத்தில் கொண்டு வரும் நீட் தேர்வை தடை செய்ய கோரியும்
மத்திய அரசை கண்டித்து
தபால் நிலையம்
முற்றுகை போர் !
எழுது கோலை ஏந்துவோம் !
எளிய மக்களை உசுப்புவோம் !
தலைமை வே அருந்தமிழன்
முன்னிலை மு வீரவேந்தன் , வீரஆதவன்
ஆதித்தமிழர் பேரவை மாணவரணி
தேனி மாவட்டம்





அருந்ததியர் பழனிச்சாமி மர்ம மரணம் போராட்ட களத்தில் கோவை மாவட்ட ஆதித்தமிழர் பேரவை


""""""""""""""""""""""""""""”""""
கோவை சூலூர் அருகே மந்திரிபாளையத்தை சேர்ந்த அருந்தததியர் கூலித் தொழிலாளி பழனிச்சாமி கடந்த மே 1 அன்று வழக்கமாக வேலைக்கு சென்றவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார், செய்தி அறிந்த குடும்பத்தாரும் உறவினர்களும் இந்த மரணத்தில் சந்தேகம் இருக்கிறது, இது கொலைதான் என்றும் இந்த கொலையை முன் விரோதம் கொண்ட ஆதிக்க வகுப்பை சேர்ந்த சிலர்தான் செய்திருக்க வேண்டும் உடலில் பல இடங்களில் காயாங்கள் இருக்கிறது என்று உறுதியாக சொன்னதன் அடிப்படையில் பேரவை மாவட்ட செயலாளர் உக்கடம்.முருகன் அவர்கள் களதிற்கு சென்று போராட்டத்தில் இறங்கினார், சம்பவத்திற்கு உரிய நீதி கிடக்க வேண்டும் என்ற அடிப்படையில் தோழர் வெண்மணி, தோழர் பன்னீர் ஆகியோருக்கு தகவல் கொடுத்து போராட்டத்தை வலுப்படுத்தினார். போராட்டத்தின் இறுதியில் பழனிச்சாமி மரணத்திற்கு உரிய நீதி கிடைக்கும் என்று காவல் மற்றும் வருவாய் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
அடுத்தகட்ட போராட்டம் என்பது காவல் அதிகார்களின் நடவடிக்கையை பொறுத்தே மாறுபடும்.
4.5.2017



வெற்றிச்செய்தி...!


மதுரை மாவட்டம் T.கல்லுப்பட்டி ஒன்றிய சாப்டூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை & சத்யா என்ற காதலர்களை பிரிக்கநினைத்ததன் தொடர்ச்சியாக 16-7-2014 அன்று அண்ணாமலையின் அண்ணன் கருப்பசாமியை சாதிவெறியுடன் கொலைசெய்யும் என்னத்தோடு அரிவாளால் வெட்டிய செல்வத்தேவர் என்ற குற்றவாளியை 17 ஆண்டு்கள் சிறையில் அடைத்த மதுரை மாவட்ட நீதிபதி திரு ஆர்.சண்முகசுந்தரம் அவர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும், இந்த வழக்கில் என்னோடு உறுதியுடனும், அற்பனிப்புடன் உதவிய ஆதித்தமிழர் பேரவை தோழர்களுக்கும் நன்றி.