அண்மையச்செய்திகள்

Tuesday, 10 January 2017

பொதுக்கழிப்பிடம் கட்டி தர நிதி ஒதுக்கியும் கட்டி தராத கோவை மாநகராட்சியில் ஆதித்தமிழர் பேரவையினர் மலம் கழிக்கும் போராட்டம் .தற்போது நடத்தினர்.

பொதுக்கழிப்பிடம் கட்டி தர நிதி ஒதுக்கியும் கட்டி தராத கோவை மாநகராட்சியில் ஆதித்தமிழர் பேரவையினர் மலம் கழிக்கும் போராட்டம் .தற்போது நடத்தினர். 10.1.19
*******************************************************
உப்பிலியப்பன்திட்டு பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்டி தர நிதி ஒதுக்கி இரண்டு ஆண்டுகள் ஆகியும் கட்டித்தராத மாநகராட்சியை கண்டித்து தொடர் போராட்டங்களை கண்டுகொள்ளாத கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மலம் கழிக்கும் போராட்டம்.
************************************8
கோவை மாநகராட்சி 72 வது வார்டு உப்பிலியப்பன்திட்டு பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்டித்தர ரூபாய் இரண்டு லட்சம் டென்டர் எடுத்து இரண்டு ஆண்டுகளாகியும் கட்டித்தர நடவடிக்கை எடுக்காத மாநாகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆதித்தமிழர் பேரவையினர் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மலம் கழிக்கும் போராட்டத்தினை .இன்று நடத்தினர்.இப்போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் வழக்கறிஞர் மு.கார்க்கி தலைமையில் மலம் கழிக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆதித்தமிழர் பேரவை மு.அறிவரசு. சட்டக்கல்லூரி மாணவர்கள் பிரதாப். சிலம்பரசன். நடராஜ். சதீஸ். தோழர்கள் அல்போன்ஸ் உட்பட பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்
போராட்டத்தில் ஈடுபட்ட அணைத்து தோழர்களையும் கைது செய்து .நல்லாயன் சமூக கூடத்தில்.வைத்துள்ளது ..அங்கு மாநகராட்சிகள் கோரிக்கையை இன்னமும் நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட நகர்வு குறித்து கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது ....
*******************
சிறைக்கூடத்தை பள்ளியறையாக்குவோம்
தலைமுறையை விடுதலையாக்குவோம்
***************************
என்றும் சமூக நீதி போராளி அய்யா அதியமான் அவர்கள் வழியில்
ஆதித்தமிழர் பேரவை கோவை






Sunday, 8 January 2017

ஆதித்தமிழர் பேரவையின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம், நிறுவனர் 'அய்யா' அதியமான் தலைமையில் 7.1.2017 ல் நடைபெற்றது

ஆதித்தமிழர் பேரவையின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம், நிறுவனர் 'அய்யா' அதியமான் தலைமையில் 7.1.2017 பிற்பகல் 3.30 மணியளவில் கோவை ஆதித்தமிழன் அரங்கத்தில் தொடங்கி இரவு 8 மணிவரை நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் 70 கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் கூட்டத்தில் பேரவை நிறுவனர் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் அனைத்து மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
""""""""""""""""""""
தீர்மானம்.1)
ஆணாதிக்கம் நிறைந்த பார்ப்பனிய சமூகத்தில் தமிழகத்தின் முதலமைச்சராக ஒன்றுக்கு மேற்பட்ட முறை பொறுப்பில் இருந்து, தனக்கென தனித் தகுதியை வகுத்துக்கொண்டு தனிப்பெரும் தலைவராக தமிழகத்தை ஆட்சி செய்து வந்த மாண்புமிகு முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடந்த 5.12.2016 அன்று உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார், அவரது மறைவிற்கு இந்த செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுகிறது.
தீர்மானம்.2
திராவிட இயக்க வரலாற்றில் இன்றுவரை உறுதியான கொள்கை நிலைப்பாட்டோடு அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக செயலாற்றி வருகின்ற திராவிட முன்னேற்றக் கழகம், 6.க்கு மேற்பட்ட முறை ஆட்சியில் இருந்த போது, தந்தை பெரியாரின் கொள்கைத் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதில் உறுதியாக நின்று சமூகநீதிச் சிந்தனையோடு பல்வேறு கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி தமிழக அரசியல் வரலாற்றில் முத்திரை பதித்து வந்துள்ளது.
அப்படி முத்திரை பதித்து வந்துள்ள, தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், தற்போதைய தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், செயல்தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார்.
இந்த பொறுப்பு தளபதியாரின் அயராத உழைப்பிற்கும், அவர் செய்த தியாகங்களுக்கும் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு, இந்த வாய்ப்பின் அடிப்படையில் தற்போது திமுக வின் செயல்தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு தளபதியார் அவர்களுக்கு, தனது பாராட்டுதலையும், வாழ்த்துக்களையும் இந்த செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம்.3)
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் இழிவை தடை செய்து, இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டும், அதை மையமாகக் கொண்டு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல் தீர்ப்பை நடைமுறைப் படுத்தாமலும், கண்காணிப்புக் குழுக்களை அமைக்காமலும், காலம் தாழ்த்தும் தற்போதைய மத்திய மாநில அரசுகளின் அலட்சியப் போக்கால் கடந்த ஆண்டு 2016 .ல் 50 க்கு மேற்பட்ட தூய்மைப் பணி புரியும் தொழிலாளர்கள் மலக்குழியில் இறங்கி மரணமடைந்துள்ளனர், இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, தனிக்கவனம் செலுத்தி நிரந்தர தீர்வு காணவேண்டும் என மத்திய மாநில அரசுகளை இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம்.4)
தமிழகத்திற்கு வரவேண்டிய காவிரி நீர் பங்கீட்ட்டு உரிமையை நிலைநாட்டிட, காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து, தமிழகத்தில் நாளும் நாளும் நடந்தேறும் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளை தடுத்து நிறுத்திட வேண்டும் எனவும், இதுவரை மரணமடைந்தோரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் எனவும், இந்த செயற்குழு தமிழக அரசு வலியுறுத்துகிறது.
தீர்மானம்.5)
நாட்டின் உயர் மதிப்பு மிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்து கருப்புப் பண மற்றும் கள்ள நோட்டுப் பேர்வழிகளை தப்பிக்க விட்டு விட்டு, உழைக்கும் எளிய மக்களை பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கி நடுத்தெருவில் நிறுத்தி உள்ள மத்திய மோடி அரசை இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
தீர்மானம்.6)
தமிழகத்தில் தொடர்ந்து நடந்தேரும் சாதி ஆதிக்க ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்திட, தனிச்சட்டம் இயற்றி தீர்வு காண வேண்டும் என தமிழக அரசை இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.
மேற்கண்ட தீர்மானங்களோடு பொள்ளாச்சி வீரன் நன்றி கூற மாநில சிறப்பு செயற்குழு நிறைவடைந்தது.
_____________
ஆதித்தமிழர் பேரவை
பொதுச்செயலாளர்.
7.1.2017


Thursday, 5 January 2017

அருந்ததிய மக்கள் புத்தாண்டு கொண்டாடுவதா ? என ஆங்கில புத்தாண்டு கொண்டாடிய அருந்ததிய மக்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய தேவர் சாதி வெறியர்கள் ----- களத்தில் ஆதித்தமிழர் பேரவை


மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம் அகத்தாபட்டியில் ஆங்கிலபுத்தாண்டு அன்று அருந்ததியர்கள் புத்தாண்டு கொண்டாடுவதா என்று சாதிவெறியோடு இளைஞர்களை தாக்கிய தேவர் சமூகத்தை சேர்ந்த சாதிவெறியன் மலையரசன்,காளிதாஸ் இவர்களுடன் மூன்று சாதிவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு உடனடியாக மூன்று நபர்கள் வண்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய வைத்தனர் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள்
*************
களத்தில்
மாவட்டசெயலாளர் ஆதவன்.
தலைவர் பாரதிதாசன்.
துணைச்செயலாளர் செழியன்.
துணைதலைவர் தலித்ராஜா.
இளைஞரணிசெயலாளர் சாக்கியரசு
ஒன்றியசெயலாளர் காளிமுத்து
மற்றும் பகுதி மக்களுடன் களத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் .....




நாமக்கல் கிழக்கு மாவட்டம் மோகனூர் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மோகனூர் அண்ணாசிலை அருகில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தற்போது நடைபெற்று வருகிறது .

நாமக்கல் கிழக்கு மாவட்டம் மோகனூர் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மோகனூர் அண்ணாசிலை அருகில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தற்போது நடைபெற்று வருகிறது .








Tuesday, 3 January 2017

கோவை உப்பிலிந்திட்டு,நஞ்சுண்டாபுரம் பகுதியில் 2 ஆண்டுக்கு முன்பு கழிப்பிடம்,பொதுவிளக்கு அமைத்து தருவதாக 10 லட்சம் ஒதுக்கப்பட்ட பணம். என்னவானது ?மாவட்ட ஆட்சியரிடம் ஆதித்தமிழர் பேரவையினர் மனு


கோவை மாநகராட்சி 75 வது வார்டு உப்பிலிந்திட்டு,நஞ்சுண்டாபுரம் பகுதியில் 2 ஆண்டுக்கு முன்பு கழிப்பிடம்,பொதுவிளக்கு அமைத்து தருவதாக 10 லட்சம் ஒதுக்கப்பட்ட பணம். என்ன என்னவாயிற்று என்ற கேள்வியோடு, பொது கழிப்பிடம் கட்டி தர நடவடிக்கைகள் எடுப்பதாக கூறி 2 ஆண்டுகள் ஆனபின்பும் நடவடிக்கைகள் எடுக்கதாதை கண்டித்து நேற்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஆதிததமிழர் பேரவை சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது


Monday, 2 January 2017

கரூர் ஈச்சம்பட்டி,வலையபட்டி,நச்சலூர்,ஆகிய பகுதிகளில் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் தோழர் ஜெய் பாபு அவர்கள் ஈடுபட்டார்

1/1/2017
ஆதித்தமிழர் பேரவை கரூர் கிழக்கு மாவட்டம் குளித்தலை ஒன்றியத்தில் புதியதாக பொறுப்பு ஏற்று கொண்ட தோழர் ஜெய்பாபு அவர்கள் ஈச்சம்பட்டி,வலையபட்டி,நச்சலூர்,ஆகிய பகுதிகளில் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார் இதன் போது ஆதித்தமிழர் பேரவையில் தங்களை இணைத்து கொண்ட குடும்பங்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது .







 .

கோவையில் அம்பேத்கர் படிப்பகம் திறப்பு விழாவில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் மு.அறிவரசு பங்கேற்று சிறப்புரை: ஆற்றினார்



புத்தாண்டன்று கோவை மாவட்டம் துடியலூர் அண்ணாகாலனி சித்திரை நகர் பகுதியில் இளையபாரதம் இயக்கம் நடத்திய விளையாட்டு விழா மற்றும் அம்பேத்கர் படிப்பகம் திறப்பு விழாவில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் அம்பேத்கர் சொல்லும், செயலும் என்ற தலைப்பில் தோழர். மு.அறிவரசு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பரிசுகள் வழங்கினார். அவருடன் தோழர்கள் ராமச்சந்திரன் மெய்யரசு ஆனந்த் வசந்தன் அல்போன்ஸ் மற்றும் ரங்கநாதன் பங்கேற்றனர். மற்றும் கவுண்டம் பாளையம் பகுதி தோழர்கள் தோழர் ஆனந்த் உட்பட பகுதி தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.