அண்மையச்செய்திகள்

Tuesday, 4 April 2017

தொட்டியபட்டி மக்களுக்கு துப்பாக்கி வழங்கு! மக்களை சந்தித்த பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் ஆவேசம்!

தொட்டியபட்டி மக்களுக்கு துப்பாக்கி வழங்கு!
மக்களை சந்தித்த பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் ஆவேசம்!
"""""""""""""""""""""""""""""""""""""""""""
கடந்த 30.3.2017 அன்று விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தொட்டியபட்டி கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட கம்பளத்து நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த சாதிவெறியர்கள், திட்டமிட்டு ஒன்று திரண்டு 50 வீடுகளே உள்ள, அருந்ததியர் சமூக மக்களின் பகுதியில் புகுந்து வீடுகளுக்கு தீவைத்து, 10 க்கும் மேற்பட்டோரை தாக்குதல் நடத்தி கொங்காயம் ஏற்படுத்தி பெண்களை மானபங்கப் படுத்தி, உடமைகளை கொள்ளையடித்து, சாதிவெறியாட்டம் ஆடியுள்ளனர்.
இந்த சம்பவத்தையொட்டி 5.4.2017 இன்று நேரில் சென்று மக்களை சந்தித்த பேரவையின் தலைவர் அய்யா அதியமான் அவர்கள், அச்சத்தில் உறைந்து கிடந்த அருந்ததியர் மக்களின் முகத்தைப் பார்த்து காவல்துறை எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டது என்பதை சுட்டிக்காட்டி, இந்த சாதிவெறிக் காவல்துறையினால் இம்மக்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடைக்கப்போவதில்லை, மேலும் பாதிக்கப்பட்ட பிறகு வழங்கப்படும் நிவாரணம் மட்டும் தீர்வாகாக அமையாது எனவே இம்மக்களின் நிரந்தர பாதுகாப்பிற்கும் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள அருந்ததியர் மக்கள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தினார்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார்.