அண்மையச்செய்திகள்

Monday 24 October 2016

மதுரையில் ஆதித்தமிழர் பேரவை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

மதுரையில் ஆதித்தமிழர் பேரவை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் முக்கிய பல முடிவுகள் எடுக்கப்பட்டன




Sunday 16 October 2016

ஆதித்தமிழர் பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம் 16.10.2016 தாராபுரம் பாலாஜி திருமணமண்டபத்தில் நடைபெற்றது,

ஆதித்தமிழர் பேரவை பொதுக்குழு 2016
""""""""""""""""""""""""""""""
ஆதித்தமிழர் பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம் 16.10.2016 இன்று தாராபுரம் பாலாஜி திருமணமண்டபத்தில் நடைபெற்றது, கூட்டத்திற்கு பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் தலைமை தாங்கினார், 2016 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை பொதுச்செயலாளரும், நிதிநிலை அறிக்கையை நிதிச்செயலாளரும் தாக்கல் செய்து உரையாற்றினர்.
பேரவையின் மாநில மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர். கூட்டமுடிவில் பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சிறப்புரை ஆற்றினார்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..
தீர்மானம்.1
""""""""""""""""
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் வாழும் கொங்கு கவுண்டர் சமூகத்திற்கு தி.மு.க ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட விவசாய நிலங்களுக்கான இலவச மின்சாரம் மற்றும் 20 ஆயிரம் கோடி விவசாயக்கடன் ரத்து போன்றவற்றின் காரணமாக பெரிய அளவில் பொருளாதார பலன் பெற்றதோடு,
பிற்படுத்தப்பட்டோருக்கான 30 விழுக்காடு இடஒதுக்கீட்டில் 70 சதமான இடஒதுக்கீட்டை முழுமையாக பயன்படுத்தி பலனடைபவர்கள் இவர்கள்தான், உதாரணமாக போக்குவரத்து துறையில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பதவிகள் 260.ல் 110 இடங்கள் கவுண்டர் சமூக வசமே உள்ளது. இதனால் பிற்பட்டோர் பட்டியலில் உள்ள ஏனைய சமூகம் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள பெரும்தொழில் நிறுவனங்கள் இவர்கள் வசமே உள்ளது. இதேபோன்று பெரும்பான்மை உழவு நிலங்கள் இவர்கள் வசமே உள்ளது, அரசு உயர்பதவிகளிலும், அரசியல் அதிகாரத்திலும் பெரும்பான்மையாக இவர்களே உள்ளனர்,
உதாரணமாக தமிழக அமைச்சரவையில் உள்ள 30 அமைச்சர்களில் 8 அமைச்சர்கள் இவர்களே உள்ளனர். இப்படி ஒவ்வொறு துறையாக ஆய்வு செய்தால் எல்லா இடங்களிலும் இவர்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது.
எனவே கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்திற்கு வழங்கப்பட்டு வரும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான இட ஒதுக்கீட்டுக் கோட்டாவை முழுமையாக ரத்து செய்து இதர பிற்பட்டோருக்கு கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும் என இந்த பொதுக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம்.2
""""""""""""""""
தமிழகத்தில் நாளும் நாளும் அதிகரித்து வரும் சாதி ஆதிக்க ஆணவப்படுகொலை என்பது,
2013 பெரம்பலூர்.பார்த்திபன் 2013 தருமபுரி.இளவரசன் 2015 சேலம்.கோகுல்ராஜ்
2016 உடுமலைப்பேட்டை.சங்கர்
2016 பழனி.சிவகுருநாதன் என இதுவரை 100 க்கும் மேற்பட்ட ஆணவப்படுகொலைகள் நடந்துள்ளது, இந்த வன்கொடுமை ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என பொதுக்குழு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.
மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி மண்டலம் வாரியாக காவல்துறை மண்டலத்தலைவர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்படும், அதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தீர்மானம்.3
"""""""""""""""""
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்பட்டு வரும் அருந்ததியர் மக்களுக்கான மூன்று விழுக்காடு இடஒதுக்கீட்டை தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கீடு செய்து நடைமுறைப் படுத்திட வேண்டும் என தமிழக அரசை இந்தப் பொதுக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இவண்..
பேரவை நிறுவனருக்காக
பொதுச்செயலாளர்
ஆ.நாகராசன்.
16.10.2016.





Friday 14 October 2016

கோவில்பட்டியில் கந்துவட்டி கும்பலின் அட்டூலியங்கள் களத்தில் ஆதித்தமிழர் பேரவை


#கோவில்பட்டியில்_கந்துவட்டி #கும்பலின்_அட்டூழியங்கள்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
கோவில்பட்டி நகராட்சியில் துப்பரவுபணியாளராக பணிபுரியம் #முருகன் என்பவரை வட்டி தொழில் செய்யும் ஆதிக்க சமூகத்தை சார்ந்த பெருமாள்பாண்டி என்ற சாதிவெறிபடித்த அயோக்கியன் முருகன் தன்னிடம் வட்டிக்கு பணம் வாங்கி திருப்பி செலுத்தவில்லை என கூறி கடந்த 9-10-2016 அன்று காலை 10மணியளவில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையகாவல் அதிகாரிகள் மற்றும் பெருமாள்பாண்டி ஆகியேர் அழைத்து கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர் .அங்குள்ள ஆய்வாளர் அவர்கள் உங்கள் கொடுக்கல் வாங்கள் பிரச்சனைய நீதிமன்றத்தின் மூலமாக தீர்த்துகொள்ளுங்கள்என கூறி அனுப்பிவிட்டனர்.
உடனே முருகன் வீட்டிற்கு வரும்வழியில் ஒரு சுமோவில் வந்து இறங்கிய பெருமாள்பண்டி மற்று அவனுடைய கூட்டாளிகள் முருகனை காரில் கடத்தி சென்று சாதியை சொல்லி இழிவாக பேசி
அடித்துள்ளனர் .உடனே தகவல் தெரிந்த #ஆதித்தமிழர்பேரவை தோழர் #மு.#உதயசூரியன்
முருகனை மருத்துவமணையில் சந்தித்தார்.
காவல் துறைக்கு தகவல் தெரிவித்து புகார் மனு அளிக்கப்பட்டது .ஆனாலும் காவல்துறை பெருமாள் பாண்டி மீது வழக்கு பதிவு செய்யாமல் வேடிக்கைபார்த்து கொண்டிருந்தன.உடனே இன்று 11-10-2016 ஆதித்தமிழர்பேரவை தோழர்கள்
மு.நம்பிராஜ்பாண்டியன்
மு.உதயசூரியன் ஆகியோர்
கோவில்பட்டி துணைகாவல்கண்காணிப்பாளர் #முருகவேல் அவர்களை சந்தித்து உடனடியாக வன்கொடுமை தடுப்புசட்டத்தின் வழக்கு பதிவு செய்யவேண்டும் என வாதிட்டு உடனே வழக்கு பதிவுசெய்யபட்டுள்ளது.ஆனால் சம்பந்தபட்ட நபர்களை காவல்துறை கைது செய்யவில்லை,அடுத்தகட்ட போராட்டகளத்திற்கு தோழர்கள் தயார் நிலையில்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து இன்று மதுரையில் அனைத்துகட்சி சார்பில் இரயில் மறியல் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து இன்று மதுரையில் அனைத்துகட்சி சார்பில் இரயில் மறியல் போரட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை யின் சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் கார்த்திக் தலைமையில் ஆதித்தமிழர் பேரவையினர் இரயில் மறியலில் 100க்கும் மேற்பட்ட பேரவை தோழர்கள் மற்றும் தோழமை அமைப்பு தோழர்கள் கைது



தென் மாவட்டத்தில் தொடர்ந்து நடக்கும் சாதி ஆணவப் படுகொலையை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை சார்பாக நெல்லை , தூத்துக்குடி மாவட்ட ஆலோசனை கூட்டம்

தென் மாவட்டத்தில் தொடர்ந்து நடக்கும் சாதி ஆணவப் படுகொலையை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை சார்பாக நெல்லை , தூத்துக்குடி மாவட்ட ஆலோசனை கூட்டம் தற்போது நெல்லை மாவட்டம் பாளை சமாதானபுரம் சமுதாய நலக்கூடத்தில் நடை பெற்றது


பெண் போலிஸ் ராமு அவர்களின் தற்கொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமு அவர்களின் உடலை வாங்க மறுத்து #DIG அலுவலகம் முற்றுகை

பெண் போலிஸ் ராமு அவர்களின் தற்கொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமு அவர்களின் உடலை வாங்க மறுத்து #DIG அலுவலகம் முற்றுகை

கலந்துகொண்ட பேரவை தோழர்கள்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
தோழர் #நெல்லைமாயா
மாநில துணைபொதுச்செயலாளர்

தோழர் #சோ.#அருந்ததிஅரசு
மாநில இளைஞர்அணி செயலாளர்

தோழர் #முத்துவீரன்
நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர்

தோழர் #கலிவருணன்
நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர்

தோழர் #நாஞ்சில்வளவன்
நெல்லை மேற்கு மாவட்ட தலைவர்

தோழர் #முத்துக்குமார்
மாவட்ட தலைவர் தூடி வடக்கு

தோழர் #பூவைஈஸ்வரன்
விருதுநகர் மாவட்ட செயலாளர்

தோழர் #மு.#உதயசூரியன்
மாவட்ட நிதிச்செயலாளர் தூடி வடக்கு

தோழர் #மு.#நம்பிராஜ்பாண்டியன்
மாவட்ட துணைச்செயலாளர் தூடி வடக்கு

தோழர் #சக்திவேல்விளதை ஒன்றியசெயலாளர் தூடி வடக்கு

தோழர் #தென்னரசு சங்கரங்கோவில்

மற்றும் பேரவை தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர் .



காவல்துறை அராஜகம்: வீரத்தாய் குயிலிக்கு வீரவணக்கம் செலுத்தவிடாமல் ஆதித்தமிழர்பேரவை உள்ளிட்ட அமைப்புகளை காவல்நிலையத்தில் தடுத்து வைப்பு....

காவல்துறை அராஜகம்: வீரத்தாய் குயிலிக்கு வீரவணக்கம் செலுத்தவிடாமல் ஆதித்தமிழர்பேரவை உள்ளிட்ட அமைப்புகளை காவல்நிலையத்தில் தடுத்து வைப்பு....

Monday 3 October 2016

கருர் மாவட்டம் கடவூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தோழர் சண்முகம் மனு தாக்கல் செய்தார்

கருர் மாவட்டம் கடவூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தோழர் சண்முகம் மனு தாக்கல் செய்தார். துரைஅமுதன். கருர்.

நெல்லை மாவட்டத்தில் 20வது வார்டில் திரு சு.திருகுமரன் வேட்புமனு தாக்கல் செய்தார்

நெல்லை மாவட்டத்தில் 20வது வார்டில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் போட்டியிட திரு சு.திருகுமரன் வேட்புமனு தாக்கல் செய்தார்

திருச்சி மாநகராட்சி 23 வது வார்டு செங்குளம் காலனியில் வெற்றி வேட்பாளர் தோழர் செங்கைகுயிலி அவர்கள் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்


இன்று காலையில் திருச்சி மாநகராட்சி 23 வது வார்டு செங்குளம் காலனியில் வெற்றி வேட்பாளர் தோழர் செங்கைகுயிலி அவர்கள் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
பிரச்சாரத்தை மாநில பொறியாளர் பேரவை செயலாளர் தோழர் எழில்புத்தன் தொடங்கி வைத்தார்.
திருச்சி தோழர்கள் கலந்து கொண்டு துண்டு பிரசுரம் வழங்கினர்.

திருச்சி மாநகராட்சி 23வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் செங்கைகுயிலி அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார்

30/09/2016,,
திருச்சி மாநகராட்சி 23வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ஆதித்தமிழர் பேரவையின் வெற்றி வேட்பாளராக களமிறங்கும் பேரவையின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் செங்கைகுயிலி அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார்.உடனிருந்த தோழர்கள் ராசாத்திஅம்மாள்,
எழில்புத்தன்
மணியரசு
திருவீரன்
மலர்மன்னன்
அறிவழகன்
மாரியம்மாள்
கிருசுணமூர்த்தி
அப்தார்
சுப்பம்மாள்
மற்றும்  பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

தர்மபுரி மாவட்ட இ.அ செயலாளர் அவர்களின் தாயார் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தர்மபுரி மாவட்ட இ.அ செயலாளர் அவர்களின் தாயார் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மதுரை 35வது வார்டு மாமன்ற உறுப்பினருக்கு மாநி மகளிரணிச்செயலாளர் ஜானகி அவர்கள் வேட்புமனு தாக்கல் செயதார்

மாநில மகளிரணி செயலாளர் ஜானகி அவர்கள் 35 வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்தார் உடன் துணை பொதுசெயலாளர் கபீர் நகர் கார்த்திக். மாவட்ட செயலாளர் ஆதவன்.மற்றும் நபர்கள்.