அண்மையச்செய்திகள்

Tuesday, 30 October 2018

கோவை மாநகராட்சி ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலரிடம் மனுகோவை மாநகராட்சிமாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தம் துப்புரவு பணியாளர்களுக்கு 2.மாத சம்பளத்தை தீபாவளி போனஸ்சகவும். அரசனை 62 ன் படியும் உயர்த்திய சம்பளத்தையும் உடனே வழங்குமாறும். கோவை மாநகராட்சி. நகர் நல அதிகாரி .Ch0 .சந்தித்து மணு கொடுக்கப்பட்டது. களத்தில்.

ஆதித்தமிழர் பேரவை பொது செயலாளர் கோவை ரவிக்குமார்.

பேரவை சார்பில். vh road மகேஷ்வரி மனிபராதி .சுப்பரமனி. ஆட்டோ வெள்ளிங்கிரி. தர்மராஜ்.பேரூர் ராஜேந்திரன்.

பேரவை தெழிற்சங்கம் சர்பாக. மாசானம். சரவணன். சொசைட்டி டிரைக்கடர் ரவி. சரத்குமார். சுரேஷ். வெள்ளிங்கிரி .மகளிர் தலைவி
சாந்தமணி. மஞ்சு. vh road ராமகிருஷ்ணன். மற்றும் பலர் கலந்து கொண்டா னர். .👍 ஜெய் பீம்


மதுரை தாதம்பட்டி ஊர் காலணி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை


மதுரை வடக்கு புறநகர் மாவட்ட செயலாளர் தோழர் ஆதவன் அவர்களின் தலைமையில் மதுரை தாதம்பட்டி ஊர் காலணி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தை ஆதித்தமிழர் பேரவையினர் இன்று முற்றுகையிட்டனர்.Monday, 29 October 2018

தருமபுரி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை செயற்குழு நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம் சார்பில் தர்மபுரி நகரத்தில் மாவட்ட செயற்குழு ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக பொதுச்செயலாளர் கோவை ரவிக்குமார் மாநில இளைஞரணி துணை செயலாளர் சிவா மாநில மாணவரணி செயலாளர் மாதேஷ் பங்கேற்று கருத்துரை வழங்கினர் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டது முருகன் உள்ளிட்ட சுமார் 30 தோழர்கள் பங்கேற்றனர்
தேனியில் அருந்ததியர் பெண் மர்மச்சாவு - களத்தில் ஆதித்தமிழர் பேரவை

தேனி மாவட்டம் ஆன்டிபட்டி வட்டம் லட்சுமிபுரம் மேற்கு தெரு அருந்ததியர் காலனி முருகன் மற்றும் குமுதா மகள் நாகலட்சுமி என்பவர் 26/10/2018 அன்று தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதனால் பாதிப்பு உள்ளான பெற்றோர் தனது மகள் தற்க்கொலை செய்ய வில்லை கொலை செய்யபட்டார் என்று மறுபடியும் பாதிக்கப்பட்ட பெறறோருடன்அருந்ததியர் அமைப்புகள்
ஆதித்தமிழர் பேரவை
துனை பொதுச்செயலாளர்
தோழர்... வீரபாண்டியன்,
அருந்ததியர் விடுதலை கூட்டமைப்பு தலைவர் M. விஜயன் மற்றும் பொதுச் செயலாளர் ச. வல்லரசு
வே. ராமர் மாநில செய்தி தொடர்பாளர்
மற்றும் தேன் சுடர் பெண்கள் அமைப்பு ஒருங்கினைந்து தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்கானிப்பார் அலுவலகம் முற்றுகை செய்து நாகலட்சுமி சாவு தற்கொலை அல்ல கொலை என்றும் அந்த கொலைக்கு கரணமான கணவன், மாமியார் மற்றும் மாமனார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மனு கொடுக்கப்பட்டது
தகவல் தொழில்நுட்ப பிரிவு
#ஆதித்தமிழர்_பேரவை தமிழ்நாடு
சேலம் மாநகர செயற்குழு நடைபெற்றது

அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டுப் போராளி வீரமங்கை ராணி வீரவணக்க நாளில் சேலம் சங்ககிரியில் நடக்கவிருக்கும் தனித்தொகுதிகளில் அருந்ததியர்களுக்கு சமூக நீதி மாவட்ட மாநாட்டை எழுச்சியாக நடத்துவது தொடர்பாக இன்று நடைபெற்ற சேலம் மாநகர செயற்குழுவில் ஆலோசனை நடத்தப்பட்டது..
சேலம் மாநகர செயலாளர் தோழர் உதயபிரகாஷ் அவர்களின் தலைமையில்
மாநகர தலைவர் தோழர் பிரபு அவர்களின் முன்னிலையில் செயற்குழு நடத்தப்பட்டது
மாநகர செயற்குழுவை மாணவரணி செயலாளர் தோழர் துரை.மாதேஸ் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்தார்
முன்னாள் இராணுவ வீரரும் மாநில இளைஞரணி துணை செயலாளர் தோழர் வீரசிவா அவர்களும் மாநில மாணவரணி இணைச் செயலாளர் தோழர் டாக்டர்.மு.சிலம்பரசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு நடைபெற்றது

ஆதித்தமிழர் பேரவை திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு நடைபெற்றது
வணக்கம், இன்று (28.10.2018) தாராபுரம் பயணியர் விடுதியில் ஆதித்தமிழர் பேரவையின் திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்க்குட்பட்ட தாராபுரம் ஒன்றியம், நகரம் ,ஒருங்கிணைந்து ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. கலந்து கொண்டவர்கள்: பொன், செல்வம் (மாவட்ட செயலாளர்) பெ, முத்துசாமி(மாவட்ட தலைவர்) மு, சரவணன் (மாவட்ட து தலைவர்) தி. முருகேசன். (மாவட்ட நிதி செயலாளர்) ப, ராசேந்திரன் (மாவட்ட இளைஞர் அணி செயலாளர்) சா. வசந்தா (மாவட்ட து தலைவர்) கு. வடிவேல் (மாவட்ட அமைப்பு செயலாளர்) ஆ. ஒண்டி வீரன் (மாவட்ட து தலைவர்) பழ ,செயராசு (தாராபுரம் நகர செயலாளர்) ஆ, சிவக்குமார் (மூலனூர் ஒன்றிய செயலாளர்) மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். தீர்மானங்கள்: (1) எதிர் வரும் நவம்பர் 17 அன்று செகுடந்தாளி முருகேசன் நினைவு நாள் வீரவணக்கம் செலுத்த திருப்பூர் தெற்கு மாவட்ட சார்பாக பத்து வாகனத்தில் கலந்து கொள்வது. (2) அணைத்து ஒன்றிய, நகரங்களில் பெயர்பலகை, கொடி கம்பம் அமைப்பது (3) மூன்று லட்சம் மக்கள் தொகை கொண்ட தாராபுரம் தனி தொகுதியில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும், போன்ற தீர்மானங்கள் இயற்றபட்டன. தோழமையுடன், பொன். செல்வம் மாவட்ட செயலாளர். (திருப்பூர் (தெ) மாவட்டம்நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது

சிறுமி ராகவி கொலையை கண்டித்து தேனியில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தேனியில் கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட சகோதரி ராகவியின் மரணத்திற்கு நீதி கோரி தலைவர் அய்யா அதியமான்அவர்கள் தலைமையில் தேனியில் மாபெரும் மக்கள் திரள் #ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .


அய்யாவின் உரையை காண இங்கு சொடுக்கவும்Thursday, 25 October 2018

அய்யா அதியமான் அவர்களின் வருகையை ஒட்டி தேனி மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டும் பணி தீவிரம்
தமிழினத் தலைவன்
#அய்யா #அதியமான் அவர்களின் வருகையை ஒட்டி தேனி மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டும் பணியில்

தகவல் தொழில்நுட்ப பிரிவு
#ஆதித்தமிழர்_பேரவை தமிழ்நாடுசேலம் ஆத்தூரில் பதிமூன்று வயது நிரம்பிய சிறுமி ராஜலட்சுமி - அய்யா அதியமான் கண்டனம்


சேலம் ஆத்தூரில் பதிமூன்று வயது நிரம்பிய சிறுமி ராஜலட்சுமியை கொடூரமாக கொன்றுள்ளான் ஒரு ஆதிக்க சாதியவாதி. கடந்த காலத்தில்
கயர்லாஞ்சி என்கிற கிராமத்தில் நடந்த படுகொலையை போல பட்டியலின மக்கள் மீது மீண்டும் ஒரு பயங்கரமான தாக்குதல், ஊடகங்களின் மௌனம் கண்டனத்துக்குரியது.. பேரவை இதை வன்மையாக கண்டிக்கிறது.
கடந்த மாதம் தேனியில் ராகவி என்கிற பதிமூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து ஆதிக்க சாதி மாணவனால் கொல்லப்பட்டாள்.

தேனி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் இதுபோன்ற 31 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அனைத்து ஆதிக்கசாதி குற்றவாளிகள் தொடர்ந்து தப்பித்து வருகின்றனர் பினாமி. அரசின் காவல்துறை உறுதியான எந்த கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து
வருகிறது. இதை ஆதித்தமிழர் பேரவை கண்டிக்கிறதுதோழர் பூமிநாதன் அவர்களுடைய தாயார் நாகம்மாள் அவர்கள் மறைவு - அய்யா அதியமான் இரங்கல்


*ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் தோழர் பூமிநாதன் அவர்களுடைய தாயார் நாகம்மாள் அவர்கள் மறைவு அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

பூமிநாதன் அவர்களுடைய தந்தை திரு உடையான் அவர்கள் கோயில் நுழைவு போராட்டத்தில் குடும்பத்துடன் பங்கேற்றது குறித்து அறிந்து, ஒரு வரலாற்று சிறப்புமிக்க குடும்பத்தில் நாகம்மாள் அவர்கள் இருந்துள்ளார்கள் என்பது அருந்ததியர்களுக்கு பெருமை வாய்ந்த ஒன்று.

திரு உடையான் அவர்கள் , ராமநாதபுரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பணியாற்றி உயிர் தியாகம் செய்த திரு இம்மானுவேல் சேகரன் அவர்களுடன் இராணுவத்தில் ஒன்றாக பணியாற்றியதுடன், அவர் செய்த போராட்டங்களில் பங்குபெற்ற வரலாறு மிகவும் போற்றுதலுக்கு உரியது.

இத்தகு சிறப்பு வாய்ந்த குடும்பத்தில் பிறந்த பூமிநாதன் அவர்கள் நமக்கு பேரவையில் செயலாளராக கிடைத்தது அரிதான ஒன்று.

தோழர் பூமிநாதன் அவர்களுக்கு பேரவையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.*

-அதியமான்


ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் பூமிநாதனின் தாயார் மரணம்

இரங்கல் செய்தி*
*ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் தோழர் பூமிநாதன் தாயார் மரணம்*
நாகம்மாள் வயது 94 இன்று அதிகாலை ராமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்
*மதிப்பிற்குரிய வீரத்தாய் நாகம்மாள் 70 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் கோயில் நுழைவு போராட்டத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அவரது கணவரும் பூமிநாதனின் தந்தை திரு உடையான் அவர்களுடன் 5 தலித் குடும்பங்கள் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர் ஐந்து குடும்பங்களில் ஒரு குடும்பம் வீரத்தாய் நாகம்மாள் திரு உடையான் குடும்பத்தினர்*
மேலும் *திரு உடையான் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மதிப்பிற்குரிய தியாகி இமானுவேல் சேகரனாரின் உற்ற நண்பராக இருவரும் ராணுவத்தில் ஒன்றாக பணியாற்றியவர்கள் அதனடிப்படையில் தியாகி இமானுவேல் சேகரனார் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் திரு உடையான் அவர்கள் பங்கேற்று உள்ளார்*
வரலாற்றுச் சிறப்புமிக்க *வீரத்தாய் நாகம்மாளின் மறைவிற்கு அய்யா அதியமான் சார்பிலும் தலைமைக்குழு சார்பிலும் செம்மார்ந்த வீரவணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன்*
பொதுச்செயலாளர் ஆதித்தமிழர் பேரவை

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தம் துப்புரவு பணியாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்க ஆட்சியரிடம் மனு

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தம் துப்புரவு பணியாளர்களுக்கு .... 2.மாதம் சம்பளமாக தீபாவளி போனஸ் தரகோரியும் அரசாணை 62 ன் படி உயர்த்திய சம்பளத்தை உடணே வழங்க வலியுறுத்தி ..உதவி ஆணையளர் யிடம். மணு கொடுக்கப்பட்டது. ....உடன் ஆதித்தமிழர் பேரவை பொது செயலாளர் கோவை ரவிக்குமார் மற்றும் மாநகர தலைவர் vh ரோடு மகேஷ்வரி. மாநகர செயலாளர் ஜோதி முத்துக்குமார். புறநகர் மாவட்ட செயலாளர் முனுசாமி பேருர் ராஜேந்திரன் .உக்கடம் ஆட்டோ வெள்ளிங்கிரி. பேரவை தெழிற்சங்கம் சர்பாக. vh road ராமகிருஷ்ணன் .சுப்பரமனி. மாசானம். சரவணன். சொசைட்டி டிரைக்கடர் ரவி. மருதசாலம்.

தகவல் தொழில்நுட்ப பிரிவு
#ஆதித்தமிழர்_பேரவை தமிழ்நாடுதிண்டுக்கல் மாவட்டம் முழுதும் வீரத்தாய் இராணி நினைவுநாள் சுவர் விளம்பரங்கள்

உள் இடஒதுக்கீடு போராளி
நெருப்புத்தமிழச்சி
#வீரதாய்_இராணி அவர்களின் நினைவு நாள் சுவர் விளம்பரம்.
ஆதித்தமிழர் பேரவை
திண்டுக்கல் மாவட்டம்.
தோழர் சுந்தரவல்லி அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம் -- ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான்

தோழர் சுந்தரவல்லி அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம் -- ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான்
தோழர் சுந்தரவள்ளி அவர்கள் மீது பிணையில் வெளி வரமுடியாத பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடுத்து இருக்கும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் .
தமிழக அரசு தன்னுடைய மக்கள் விரோதப் போக்கை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்..
தோழர் சுந்தரவல்லிக்கு ஆதரவாக குரல் கொடுப்போம்.

பேரவை மாநகர ஆதித்தமிழர் செயற்குழு கூட்டம் ஆதித்தமிழன் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது

பேரவை மாநகர ஆதித்தமிழர் செயற்குழு கூட்டம் ஆதித்தமிழன் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது


கோவை மாநகராட்சி ஆதித்தமிழர் பேரவை மாநகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது செயற்குழுவிற்கு மாநகர செயலாளர் மாசாணம் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக பொதுச் செயலாளர் கோவை ரவிக்குமார் கோவை மாநகர பேரவை செயலாளர் முத்துக்குமார் புறநகர வடக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜேந்திரன் கூட்டுறவு சங்க இயக்குனர் ரவி ஆகியோர் பங்கேற்றனர் இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி கோவை மாவட்டம் நகராட்சி பேரூராட்சி கிராம பஞ்சாயத்துகளில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு மாத சம்பளம் போனசாக வழங்க வேண்டும் தமிழக அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச கூலி சட்டத்தின் அடிப்படையில் அரசு ஆணை 62 அடி தினக்கூலி அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் கையால் மலம் அள்ளும் அவல நிலையை ஒழித்திட தமிழகம் முழுவதும் பாண்டி கூட் போன்ற நவீன எந்திரங்களை அனைத்து ஊராட்சிகளிலும் பயன்படுத்த வேண்டும் அதற்காக மாநில அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கோவை மாநகராட்சியில் நகர்புறத்தில் குடிசைப் பகுதிகளை அகற்றாமல் அதே பகுதியில் நவீன அடுக்குமாடி வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டது இதில் சுப்பிரமணி மணிபாரதி சாந்தாமணி சரத்குமார் தர்மராஜ் வெள்ளிங்கிரி புறநகர் மாவட்டம் சார்பில் மருதாசலம் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் தகவல் ஊடகப்பிரிவு ஆதித்தமிழர் பேரவை கோவை மாநகர் மாவட்டம்

திருப்பூரில் கல்வித்துறையை காவிமயமாக்கும் கல்வித்துறையை கண்டித்து தபெதிக முற்றுகை போராட்டம் - ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டனர்

திருப்பூரில் கல்வித்துறையை காவிமயமாக்கும் கல்வித்துறையை கண்டித்து தபெதிக முற்றுகை போராட்டம் - ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டனர்
கல்வித்துறையை காவிமயமாக்கும் கல்வித்துறையை கண்டித்து கல்வித்துறை அலுவலகத்தை தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது இம்முற்றுகை போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் வேந்தன் தலைமையில் தோழர்கள் கலந்து கொண்டனர் முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகினர்