அண்மையச்செய்திகள்

Wednesday, 11 January 2017

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆர்.ஆர் பட்டாசு ஆலை விபத்தில் பலியான அருந்ததியர் சமூகத்தைச் எலுமிச்சங்காய்ப் பட்டியை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 8 பேரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆர்.ஆர் பட்டாசு ஆலை விபத்தில் பலியான அருந்ததியர் சமூகத்தைச் எலுமிச்சங்காய்ப் பட்டியை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 8 பேரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள்,

பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தாருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்,

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்,

அனைத்து ஆலைகளிலும் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்பட வேண்டும், என்பதோடு

ஜல்லிக்கட்டுக்கு பேரவையின் நிலைபாடு என்னவென்று கேட்ட தொலைக்காட்சி செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த நிறுவனர், ஜல்லிக்கட்டு என்பது ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களின் விளையாட்டு இதை ஆதரிக்கவில்லை என்று கூறினார்.

இதில் பேரவை பொதுச்செயலாளர் ஆ.நாகராசன், தலைமை நிலைய செயலாளர் ச.சு.ஆனந்தன், அமைப்பு செயலாளர் அருந்ததிஅரசு, மாநில இளைஞர் அணி செயலாளர், தமிழரசு, மாநில மகளிர் அணி பொருலாளர் பாண்டியம்மாள், விருதுநகர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், தலைவர் பச்சையப்பன், சின்னபாண்டியம்மாள், தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயாலாளர்கள் கவுதமன், நம்பிராஜ்பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் முத்துக்குமார், ஈரோடு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அழகுமணி,  சிவகங்கை மாவட்ட செயலாளர் பாலு, நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துவீரன், மேற்குமாவட்ட தலைவர் நாஞ்சில்.வளவன், உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
______
செய்திச்சுருக்கம்
ஆ.நாகராசன்
பொதுச்செயலாளர்,
ஆதித்தமிழர் பேரவை.
11.1.2017


திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் ,NGO காலனி நேதாஜி நகர், எழில் நகர், வ ஊ சி நகர், பகுதிகளில் #ஆதித்தமிழன் மாத இதழ் மற்றும் ஆதித்தமிழன் நாட்காட்டி வழங்கப்பட்டது

 திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் ,NGO காலனி நேதாஜி நகர், எழில் நகர், வ ஊ சி நகர், பகுதிகளில் #ஆதித்தமிழன் மாத இதழ் மற்றும் ஆதித்தமிழன் நாட்காட்டி வழங்கப்பட்டது
---
தோழர்கள்
எழில் புத்தன்
செங்கை குயிலி
திருவீரன்இன்று 11.1.2017 விருதுநகர் சாத்தூரில் ஆதித்தமிழர்களின் அரசியல் முகவரி அய்யா அதியமான் அவர்கள்


விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகாவில் உள்ள நாராயணபுரம் R .R பயர் ஒர்க்ஸ் ல் நடந்த வெடிவிபத்தில் வெடி விபத்தில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் கூற வந்துள்ள ஆதித்தமிழர்களின் அரசியல் முகவரி அய்யா அதியமான் அவர்களை வரவேற்ற விருதுநகர் மாவட்ட பேரவை நிர்வாகிகள்கோவையில் ஆதித்தமிழர் பேரவை போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

ஆதித்தமிழர் பேரவை போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி:
******************************
நேற்று கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த மலம் கழிக்கும் போராட்டத்தின் எதிரொலியாக இன்று காலை மாநகராட்சி சார்பில் உடனடியாக தற்காலிக கழிப்பிடம் அமைக்க உப்பிலியப்பன்திட்டு பகுதியில் பொக்லைன் எந்திரம் கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. மேலும் நிரந்தர பொதுக்கழிப்பிடம் கட்டித்தர நிலம் தேர்வு செய்யப்பட்டு விரைவாக கட்டித்தரப்படும் என்றும் தண்ணீர்குழாய் இரண்டு நாட்களில் அமைத்து தரப்படும் என்றும் அதிகாரிகள் இன்று ஆய்வின் போது தெரிவித்தனர்.
தற்போது களத்தில் ஆதித்தமிழர் பேரவை களப்போராளி மு.அறிவரசு.
உடன் உப்பிலியப்பன்திட்டு தோழர்கள் மாதேஸ், வெள்ளிங்கிரி, சோமு, மற்றும் சஞ்சய்.Tuesday, 10 January 2017

தேனியில் போராளி சரவணன் நினைவு நாளில் "அரசியல் விழிப்புணவு கருத்தரங்கம்" சிறப்பாக நடைபெற்றது10.1.17தேனியில் போராளி சரவணன் நினைவு நாளில்
"அரசியல் விழிப்புணவு கருத்தரங்கம்"
ஆதித்தமிழர்களின் அரசியல் முகவரி
அய்யா அதியமான் அவர்களின் தலைமையில்
சிறப்பான முறையில் நடைபெற்றது முன்னதாக குறிஞ்சி நகர் பகுதியில் நீலச்செங்கொடியை அய்யா அதியமான் அவர்கள் ஏற்றி வைத்தார்
இக்கருதரங்கத்தில் ஏராளமான நீலச்சட்டை தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்


தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்தில் குதியில் ஆதித்தமிழன் மாத இதழ், காலண்டர், மற்றும் உறுப்பினர்கள் அட்டை வழங்கப்பட்டது


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏரல் பகுதியில் ஆதித்தமிழன் மாத இதழ், காலண்டர், மற்றும் உறுப்பினர்கள் அட்டை வழங்கப்பட்டது. உடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் தோழர் கொளதமன் ,மாநில அமைப்பு செயலாளர் தோழர் சோ.அருந்ததி அரசு , மாவட்ட இளைஞரணி தலைவர்
அன்பு செல்வன், ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஒன்றிய மாணவரணி செயலாளர் அருந்ததி முத்து ,மற்றும் பொருளாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆதித்தமிழர் பேரவை
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்.சேலம் மாவட்டற் எடப்பாடி வீரப்பம்பாளைம் பகுதி அருந்ததியர் மக்களுக்கு பட்டூ வழங்க கோரி ஆதித்தமிழர் பேரவையினர் கண்டன ஆர்பாட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை


சேலம் மாவட்டம் மேற்கு எடப்பாடி வீரப்பம்பாளையம் நகரம் அருந்ததியர் மக்கள் பட்டாவேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு .மாரிமுத்து மாவட்ட துணை தலைவர் தலைமையில் நடைபெற்றது.இதில் திரளான பேரவையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்றஉறுப்பினர் VC.ஆறுக்குட்டிMLA விடம் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து விளக்கமளித்தனர் பேரவையினர்


7-1--2017 அன்று கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்றஉறுப்பினர் VC.ஆறுக்குட்டிMLA அவர்கள் கோவை மாநகராட்சி 2வது வார்டு அண்ணாகாலனி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தருவது தொடர்பாக பகுதி முழுவதும் மேற்ப்பார்வையிட்டார். அவருடன் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் ரங்கநாதன், மற்றும் அல்போன்ஸ் அவர்கள் பகுதியில் மேலும் உள்ள அடிப்படை பிரச்சினைகளை MLA விடம் காண்பித்து விளக்கமளித்தனர். பகுதியிலுள்ள அடிப்படை வசதிகள் அணைத்தும் சரிசெய்து கொடுப்பதாக உறுதியளித்தார்.