அண்மையச்செய்திகள்

Wednesday, 27 July 2016

மனிதக்கழிவை மனிதனே அள்ளுவதை எதிர்த்துப் போராடிவரும் பெஸவாடா வில்சனுக்கு ராமன் மகசசே விருது, ஆதித்தமிழர் பேரவை நிறுவநர் 'அய்யா' அதியமான் பாராட்டு

மனிதக்கழிவை மனிதனே அள்ளுவதை எதிர்த்துப் போராடிவரும் பெஸவாடா வில்சனுக்கு ராமன் மகசசே விருது,
ஆதித்தமிழர் பேரவை நிறுவநர் 'அய்யா' அதியமான் பாராட்டு
""""""""""""""
இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெஸவாடா வில்சனுக்கு பிலிபைன்ஸ் நாட்டின் உயர்த்தி விருதான  ராமன் மகசசே விருது அந்நாட்டு  அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த பெஸவாடா வில்சன், மனிதக் கழிவை மனிதனே அள்ளும் முறைக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார்.‌ இதற்காக, சஃபாய் கர்மசாரி அந்தோலன் என்ற மனித உரிமை அமைப்பை உருவாக்கியுள்ள வில்சன், தலித் மக்களின் மேம்பாட்டிற்காக போராட்டங்களை நடத்தி வருகிறார்.
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் பிறந்தவரான பெஸவாடா வில்சனின் தந்தையும் சகோதரரும் உறவினர்கள் பலரும் துப்புரவுத் தொழிலாளர்களாக பணிபுரிந்தவர்கள். இளமைக்காலத்தில் விடுதியில் தங்கிப்படித்தபோது, பெஸவாடா வில்சனின் சாதியைக் குறிப்பிட்டு மனிதக்கழிவை அகற்றுபவர் என சக மாணவர்கள் கேலி செய்துள்ளனர்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பெஸவாடா வில்சனிடம் கேட்காமலேயே, அவரது விருப்பமான வேலை துப்புரவுத்தொழில் என அதிகாரிகள் எழுதியதாகவும் கூறப்படுகிறது. சாதி அடிப்படையில், தான் அடிமைப்படுத்தப்படுவதைக் கண்ட வில்சன், மனிதக் கழிவை மனிதனே அள்ளும் சமூக அவலத்தை இந்தியாவிலிருந்து அகற்ற 1986ஆம் ஆண்டு முதல் போராடி வருகிறார். அவரது இந்த சமூகநலப் பணிக்காக தற்போது, ராமன் மகசசே விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது
தோழர் பெஸவாடா வில்சன் அவர்களுக்கு ஆதித்தமிழர் பேரவை தனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.
Monday, 25 July 2016

ஆகஸ்ட் 20 - 2016 மாமன்னர் ஒண்டிவீரனார் நினைவு நாளில் கோவில்பட்டியில் ஆதித் தமிழர் பேரவையின் வீரவணக்க எழுச்சி பொதுக்கூட்டம்

ஆகஸ்ட் 20 - 2016  மாமன்னர் ஒண்டிவீரனார் நினைவு நாளில் கோவில்பட்டியில்  ஆதித் தமிழர் பேரவையின் வீரவணக்க எழுச்சி பொதுக்கூட்டம்

எழுச்சியுரை ஆற்றுகிறார்
சமூக நீதி போராளி
ஆதித் தமிழர்களின் வரலாற்றை மீட்டெடுத்த போராளி
அய்யா அதியமான் அவர்கள்
நீலப்புலிகளின் இராணுவ தளபதி எழுச்சி முழக்கமிடுகிறார்

ஆதித்தமிழினமே அலைகடலென திரண்டு வா

ஆதித்தமிழர் பேரவை
தமிழ்நாடுசூலை23 தாமிரபரணி மாஞ்சோலை 17போராளிகளுக்கு நெல்லை கிழக்கு மற்றும் மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்டம் சார்பாக வீரவணக்கம் செலுத்தப் பட்டது

சூலை23 தாமிரபரணி மாஞ்சோலை 17போராளிகளுக்கு நெல்லை கிழக்கு மற்றும் மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்டம் சார்பாக வீரவணக்கம் செலுத்தப் பட்டது
தூய்மை தொழிலாளர்களை சாக்கடைக்குள் எந்தவித பாதுகாப்பும் உபகரணமும் இன்றி இறக்கி கட்டாயபடுத்தி பணி செய்ய வைத்த பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆதித்தமிழர் பேரவையினர் அரைநிர்வாண ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வெண்ணந்தூர் பேரூராட்சியில் 18.07.2016 அன்று அண்ணாசிலை அருகில் தூய்மை தொழிலாளர்களை சாக்கடைக்குள் எந்தவித பாதுகாப்பும் உபகரணமும் இன்றி இறக்கி கட்டாயபடுத்தி பணி செய்ய வைத்த பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று (25.07.2016) வெண்ணந்தூரில் ஆதித்தமிழர் பேரவை அரைநிர்வாண ஆர்ப்பாட்டம்
இவண்
நாமக்கல் கிழக்கு மாவட்டம்
ஆதித்தமிழர் பேரவைசெல்வி மாயாவதியை இழிவுபடுத்திய பா.ஜ.க துணைத் தலைவர் தயாசங்கர் சிங்கை வன்கொடுமை தடுப்ச் சட்டத்தில் கைது செய்யவேண்டும் ,குஜராத் தலித்துகள் நடத்தும் தலித் போராட்டத்தை போல் தமிழகத்தில் நடத்துவோம் ----நிறுவனர் அதியமான் அறிக்கை

நிறுவனர் 'அய்யா' அதியமான் அறிக்கை
"""""""""""""""""
உபி.யின் முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான செல்வி மாயாவதியை இழிவுபடுத்திய பா.ஜ.க துணைத் தலைவர் தயாசங்கர் சிங்கின் சாதிவெறி, இந்துத்துவ வெறியாட்டத்தைக் ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.
"""""""""""""""""""""
செத்தமாடு ஒன்றின் தோலை அகற்றியதாகச் சொல்லி குஜராத் மாநில பசு பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த இந்து மதவெறியர்கள், நான்கு தலித்துகளை உணா என்ற இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்,
இதன் காரணமாக குஜராத் மாநிலம் முழுவதும் தலித் மக்கள் ஒன்று திரண்டு போராடி வருகின்றனர் அப் போராட்டத்தின் போது தலித்துகள் பலர் தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியும் செய்துள்ளனர், இதில் ஒருவர் உயிரிழந்தும் உள்ளார். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதையொட்டி குஜராத் மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப் பிரச்சனையை நாடாளுமன்றத்திலும் மாநிலங்களவையிலும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்,
இத் தாக்குதலைக் கண்டித்து மாநிலங்களவையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் செல்வி மாயாவதி தீவிரப்படுத்தி போராடி வருகிறார். இப் போராட்டங்களின் விளைவாக தலித்துகளைத் தாக்கிய ஒரு சிலரைக் கைது செய்தும், பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு இழப்பீட்டுத் தொகையை அறிவித்தும் குஜராத் மாநில பா.ஜ.க. அரசு கண்துடைப்பு நாடகம் நடத்திவருகிறது.
குஜராத்தில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைக் கண்டித்ததற்காக செல்வி மாயாவதி அவர்களை உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் தயாசங்கர் சிங் சாதிவெறியோடு சொல்ல நாக்கூசும் வார்த்தைகளால் இழிவுபடுத்தி பேசியிருப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது, இப்படி அவர் நடந்து கொண்ட ஈனச்செயலுக்கு வெறும் கட்சி பதவி நீக்கம் என்ற கண்துடைப்பு நாடகத்தை மட்டும் நடத்தாமல், தயாசங்கர் சிங்கை உடனடியாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு,
குஜராத் தலித் மக்களை கொடூரமாகத் தாக்கிய பசு பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட இந்து மதவெறி அமைப்புகளை தடை செய்து தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய பா.ஜ.க அரசை ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.
தலித் மக்களை பொதுஇடத்தில் வைத்து தக்கியவர்களை அதே இடத்தில் வைத்து அதேபோன்று தண்டிக்க வேண்டும், செத்த மாடுகளை அப்புறப்படுத்தும் வேலைகளை இனி பசு பாதுகாப்பு அமைப்பே செய்து கொள்ளட்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து குஜராத்தில் தலித் மக்கள் நடத்திவரும் போராட்டம், இந்தியா முழுவதும் வலுப்பெற்று விரிவடைந்து வருகிறது, இப்போராட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவை தனது முழு ஆதரவை தெரிவிப்பதோடு, தமிழகத்திலும் இதே போராட்டத்தை ஆதித்தமிழர் பேரவை முன்னெடுக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
இவண்
இரா.அதியமான்,
நிறுவனர்,
ஆதித்தமிழர் பேரவை.
ஆதித்தமிழர் பேரவை அலங்கை ஒன்றிய செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது

அலங்கை ஒன்றிய செயல்வீரா்கள். கூட்டத்திற்கு
வருகை புாிந்து
மாவட்ட நிா்வாகிகள்
சிறப்புரையாற்றினா்.
குறிப்பாக புதியதாக
பேரவையில் தன்னை இனைத்துகொன்ட
இஸ்லாம் மதத்தை சாா்ந்த அன்புசகோதாி ரம்ஜான்
அவா்களுக்கு.
அலங்கை ஒன்றிய
ஆதித்தமிழா்பேரவை
சாா்பாக நன்றியை
உாித்தாக்குகிறோம்.
மேலும் மாவட்ட தலைவா்
பாரதிதாசன்.
மாவட்ட செயலாளா்.
பா.ஆதவன்
மாவட்ட துனைசெயலாளா்
தோழா்.அன்புசெழியன்
மாவட்ட நிதி செயலாளா்.
தோழா்.மணிகன்டன்
அவா்களுக்கும்.
நன்றியை தொிவித்து கொள்கிறோம்.
சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்ட
மேற்கு ஒன்றிய செயலாளா்
தோழா். அதியவன்
அவா்களுக்கும்.
நன்றி.!! நன்றி!! நன்றி!!தோழர்,அருந்ததிமைந்தன் அவர்களின் வீரவணக்க இரங்கல் கூட்டம் அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

18.7.2016 அன்று
மாலை 6 மணியளவில் தோழர்,அருந்ததிமைந்தன் அவர்களின் வீரவணக்க இரங்கல் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது, இந்நிகழ்வில் பேரவையின் நிறுவனர் 'அய்யா'அதியமான் தலைமையேற்று அருந்ததிமைந்தன் அவர்களின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து இரங்கல் பேருரை நிகழ்த்தினார்.
பேரவையின் பொதுச்செயலாளர் நாகராசன், நிதிச்செயலாளர் பெருமாவளவன் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகளும், தோழமை இயக்க தோழர்களும் உரையாற்றினர் கூட்டத்தில் திரளாக பேரவை தோழர்கள் பங்கேற்றனர்.
 அய்யா அவர்களின் உரையை காண இங்கு சொடுக்கவும் 
READ நிறுவனத்தின் அலுவலகம்மற்றும் நீலவேந்தன் அரங்குகளை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் திறந்து வைத்தார்

17-7-16 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் READ நிறுவனத்தின் அலுவலகம் திறப்பு விழா மற்றும் நீலவேந்தன் அரங்கு திறப்பு விழா தோழர் கருப்புசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்வில் பேரவையின் நிறுவனர் 'அய்யா'அதியமான் அவர்கள் அரங்குகளை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்...

அய்யா அதியமான் அவர்களின் உரையை காண இங்கு சொடுக்கவும்