அண்மையச்செய்திகள்

Saturday, 30 January 2016

விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டில் பேரவையின் பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

30.1.2016
""""""""""""""""
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பேரூந்து நிலையத்தில்
திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டில் பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் ஆணக்கிணங்க பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.


  மாநாடு குறித்து அண்ணன் நாகராசன் அவர்களின் பதிவு

திருமாவிடம் கேள்வி கேட்பேன் வி.சி.க தொண்டர்
ஆவேசம்.
"""""""""""""
31.1.2016 இன்று காலை சரியாக 8.01 மணிக்கு சங்கராபுரத்தில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிகாமணி என்பவர் என்னிடம் 9566596058 என்ற எண்ணிலிருந்து தொடர்புகொண்டு 9 நிமிடம் 58 வினாடிகள் பேசினார்
அதனால் (30.1.2016) நேற்று நான் பேசிய உரையின் சுருக்கத்தை பதிவு செய்கிறேம்.
""""""""""""""""
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சி பேரூந்து நிலையத்தில் அமையப்பெற்றுள்ள கலையரங்கத்தில்
"மக்களைப் பிளவுபடுத்தும்" பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டை திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது, மாநாட்டு ஏற்பாடுகளை தோழர் அய்யனார் உள்ளிட்ட தோழர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர், அம்பேத்கர் பெரியார் படங்கள் பிரமாண்டமாக பொருத்தப்பட்டு மாநாட்டு மேடை கம்பீரமாக காட்சியளித்தது.

பிற்பகல் 2 மணிக்கு கருஞ்சட்டை தொண்டர்களின் அணிவகுப்புடன் மாலை 4 மணிக்கு சம்பூகன் கலைகுழுவின் சார்பில் தோழர் நாத்திகனின் புரட்சிகர பாடல்கள் முழங்க தொடங்கிய மாநாட்டில், தி.வி.க தலைவர் அண்ணன் கொளத்தூர்.மணி பொதுச்செயலாளர் தோழர் விடுதலை.ராசேந்திரன், மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் தோழர் அப்துல்சமது உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

இம் மாநாட்டில் பேரவையின் சார்பில் நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் ஆணைக்கிணங்க நான் கலந்து கொண்டு உரையாற்றினேன்.

உரையின் சுருக்கம்.
"""""""""""""""""""""""""""""
தமிழகம் முழுவதும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டை  திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. அப்படி முன்னெடுக்கும் அனைத்து மாநாட்டு மேடைகளிலும் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் அவர்களை அழைத்து உரையாற்ற வாய்ப்பளித்து அழகு பார்க்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்களுக்கு பேரவையின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் இருக்கக் கூடிய எல்லா அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் எதிர்வரும் 2016 சட்டப்பேரவை தேர்தலை கணக்குப்போட்டு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கக் கூடிய சூழலில் திராவிடர் விடுதலைக் கழகம் "மக்களைப் பிளவு படுத்தும்" பார்ப்பனியத்தை எதிர்த்து மாநாடுகளை நடத்திக் கொண்டிருக்கிறது, பெரியார் உயிரோடு இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ அதைத்தான் இன்று அண்ணன் கொளத்தூர்,மணி அவர்களும், தோழர் விடுதலை.ராசேந்திரன் அவர்களும் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

இந்த மாநாடு மக்களை பிளவு படுத்தும் பார்ப்பன மதவாத எதிப்பு மாநாடு, பார்ப்பனியம் என்பது ஏதே ஆதிக்க சாதியினரிடன் மட்டும்தான் இருக்கிறது என்று நினைக்க முடியாது அது அனைத்து சாதியினரின் மூளையிலும் காய்ப்பேரிக் கிடக்கிறது, நான் தென் தமிழகத்தைச் சார்ந்தவன், எனக்கு தெரிந்து 90 களில் இருந்து தொடர்ச்சியாக ஆதிக்க சாதிவெறியர்களால் நடத்தப்பட்ட வன்கொடுமை தாக்குதல்கள் யார்மீது நடந்தாலும், அது பள்ளர்கள் மீதா அல்லது பறையர்கள் மீதா என்று பகுத்துப் பார்க்கும் பாகுபாடு இன்றி அதை எதிர்த்து போராடிய அனைத்து போராட்ட களத்திலும் அருந்ததியர்கள் பள்ளர்களோடும், பறையர்களோடும் கரம் கோர்த்து நின்றிருக்கின்றோம், அப்போதெல்லாம் ஏற்படாத சாதி முரண்.

கலைஞர் ஆட்சியில் அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று விழுக்காடு உள் இடஒதுக்கீட்டு அறிவிப்புக்குப் பிறகு அருந்ததியர்களை எதிரியாக பார்க்கின்ற மனோநிலைக்கு பள்ளர்களையும் பறையர்களையும் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
மலம் அள்ளி இழிவை சுமப்பவன் கடைசிவரை இழிவைச் சுமந்தே சாகவேண்டும் என்ற எண்ணம் எந்த ஆதிக்க சாதிக்கும் ஏற்படவில்லை, மாறாக இவர்களுக்குத்தான் ஏற்பட்டுள்ளது. நேரடியாக டாக்டர்.கிருஷ்ணசாமியும், செ.கு.தமிழரசனும் எதிர்ப்பது, அருந்ததியர் மக்கள் மட்டுமல்ல அனைவருக்கும் நன்கு தெரியும்,

தனக்கு மேல் எவன் இருந்து கொண்டு ஒடுக்கினாலும் அதைப்பற்றி கவலைப்படாதவன், தான் ஒடுக்குவதற்கும், நசுக்குவதற்கும் ஒரு சாதி இருக்கிறதே என்ற மன நிறைவை பெறுகிறான், அந்த மன நிறைவுதான் பார்ப்பனியம். அதனடிப்படியில்தான் இவர்கள் எதிர்க்கிறார்கள்

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற மாற்று அரசியலுக்கான மக்கள் நலக் கூட்டணி நடத்திய மாநாட்டில் உரையாற்றிய திருமா அவர்கள், ஊழல் புற்றுக்குள் கட்டுவிரியனை விரட்டிவிட்டு கண்ணாடி விரியன் குடியேறப் பார்க்கிறது. மூன்றாவதாக நச்சுத்தன்மை கொண்ட நாகப்பாம்பும் குடியேறப் பார்க்கிறது என்று பல்வேறு உவமைகளை சுட்டிக்காட்டி எழுச்சியுரையாற்றினார்,

ஆனால் மாநாடு முடிந்த மறுநாளே கலைஞரிடமும், ஜெயலலிதாவிடமும் மன்னிப்பு கோரி ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கின்றார், சென்னையை தாக்கிய பேய்மழை பெரு வெள்ளத்தால் குவிந்து கிடந்த ஒரு லட்சம் மெட்ரிக் டன் குப்பைக் கழிவுகளை அகற்றுவதற்கு அடி மாடுகளைப் போல் அழைத்துச் செல்லப்பட்ட துப்புரவுப் பணியாளர்களின் அவலங்களைக் கண்டித்து தலைவர் அதியமான் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கையில்,

அந்த அவல நிலையைப் பற்றி கண்டிக்காவிட்டாலும் பரவாயில்லை, துப்புரவு பணியாளரின் எண்ணிக்கை போதவில்லையென்றால் அண்டை மாநிலங்களில் இருந்து துப்புரவுப் பணியாளர்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்று துப்புரவுத் தொழிலாளர்களை கடைச்சரக்கு போல் ஒப்பிட்டு பேசினார். இது எல்லா உடகங்களிலும் வந்தது, திருமாவின் அந்த பேச்சைக் கண்டித்து ஆதித்தமிழர் பேரவை தனது கண்டனங்களை பதிவு செய்தும், அதற்காக வருத்தம் தெரிவிக்காத இவர் கலைஞரிடமும், ஜெயலலிதாவிடமும் எந்த எதிர்ப்பும் இல்லாத போதே வலிந்து மன்னிப்புக் கேட்கின்றார் என்று சொன்னால், இதுதான் பார்ப்பனிய மனோநிலை

தனக்கு மேலானவர்கள் என்றால் அவர்கள் கோபப்படும் முன்பே வலிந்து மன்னிப்பு கேட்பதும், தனக்கு கீழானவர்கள் என்றால் இவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா என்கிற மனோநிலை தலைவர்களுக்கே இருக்கின்ற போது சாதாரண மக்களிடம் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

ஈழத்துக்காகவும், ஆற்று நீர் உரிமைகளுக்காகவும் ஆவேசக் குரல் கொடுக்கும் தமிழ்த்தேசியத் தலைவர்கள் துப்புரவு தொழிலாளர்களின் அவலங்களை எதிர்த்து குரல் எழுப்புவதில்லை. ஒருவேளை 20 லட்சம் சிங்களர்களின் வாக்கு தமிழகத்தில் இருக்குமானால் ஈழத்தைப் பற்றி இங்கு எவரும் பேச மாட்டார்கள்.

பெரியாரை வீழ்த்துவதற்காக இந்துத்துவ வாதிகளுக்கு ஆதரவாக இங்கு இருக்கும் தமிழ்த் தேசியவாதிகள் திராவிடத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் பெரியாரை எதிர்ப்பது, முருகனை முப்பாட்டனாக்குவதும் என்ற ஆபத்தான அரசியலை முன்னெடுத்து வருகிற சூழலில்.

பெரியாரின் கொள்கைப் பிடிப்பிலிருந்து விலகாமல் தமிழர் உரிமை மீட்புக் களத்தில் போராடுவதோடு  துப்புரவுப் பணியாளர்களும் தமிழர்களே என்ற உணர்வோடு அவர்களது அவலத்தைத் துடைக்கும் போராட்டக் களத்தில் ஆதித்தமிழர் பேரவையோடு இணைந்து நிற்கும் இயக்கமாக திராவிடர் விடுதலைக் கழகம் மட்டுமே இருக்கிறது, இதை பேரவை ஆருதலாக பார்க்கிறது அந்த வகையில் இந்த மாநாடு மட்டுமல்ல திராவிடர் விடுதலைக் கழகம் எடுக்கும்  எல்லாவித போராட்ட களங்களிலும் பேரவை உடனிருக்கும் என்று தலைவர் அதியமான் சார்பில் தெரிவித்து காலத்தின் அருமை கருதி எனது உரையை நிறைவு செய்கிறேன் நன்றி வணக்கம்.

மாநாட்டு நிறைவுக்குப் பின்
"""'''''''"''''''
எனக்கு பின்பு அண்ணன் கொளத்தூர்.மணி அவர்கள் நிறைவுரையாற்றி மாநாடு இரவு 9.30 க்கு நிறைவடைந்தது. வழக்கம் போல் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள கருஞ்சட்டை இளைஞர்கள் அண்ணன் கொளத்தூர்.மணி அவர்களை சூழ்ந்தது மட்டுமல்லாது. என்னிடமும் புகைப்படம் எடுத்துக்கொண்டு 20 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் எனது முகவரி அட்டையை கேட்டுப் பெற்றுக் கொண்டதோடு உங்கள் பேச்சு எங்களுக்கு புதுத்தெம்பை ஊட்டியது என்று சொல்லி எனது கரங்களைப்பற்றி மகிழ்ந்தனர் அப்படி கூடியவர்கள் கரடிச்சித்தூரை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல பறையர் இளைஞர்களும்தான். அப்போது எனக்கு அது வியப்பாக இருந்தாலும், காரணம் அவர்கள் இருக்குமிடம் திராவிடர் விடுதலைக் கழகம் என்று நினைத்து வியப்பிலிருந்து விலகினேன்.
__________
ஆ.நாகராசன்.
பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை
31.1.2016

Friday, 29 January 2016

ஈழத் தமிழருக்காய் இன்னுயிர் ஈந்த முத்துக்குமாரின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நூல் வெளியீடு ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் கலந்து கொண்டனர்.

ஈழத் தமிழருக்காய் இன்னுயிர் ஈந்த

முத்துக்குமாரின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நூல் வெளியீடு
முத்துக்குமார் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.

ஆதித்தமிழர் பேரவை சார்பில் நினைவேந்தல் உறையாற்றிய

மாநில இளைஞரணி செயலாளர்
தோழர் க. தமிழ் வேந்தன் அவர்கள் உரையாற்றினார்.
உடன் மாவட்ட செயலாளர்
சோ. அருந்ததி அரசு, மாவட்ட தலைவர் சாமி ஜெயகுமார், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ஆட்டோ ராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆ. பெரியசாமி, மாவட்ட துணைத் தலைவர் குரும்பூர் மாரியப்பன்,
மாவட்ட மாணவரணி செயலாளர் செ. சந்தனம் மற்றும் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆதித்தமிழர் பேரவை
தூத்துக்குடி மாவட்டம்.

கரும்புலி முத்துக்குமார் நினைவு நாள் ஆதித்தமிழர் பேரவை தூத்துக்குடி மாவட்டம் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சனவரி -28
கரும்புலி
முத்துக்குமார் நினைவு நாள்.
"""""""""""""""""""""""""""""""""""""""""
செத்தவர்களுக்காக
அழுபவர்கள்
பாரினில் பலரிருக்க!

அழுதவர்களுக்காக
செத்தவர்கள்
உம்மை போல் சிலரே!

முத்து நகர் தந்த
முத்துக்குமரனே!

உமக்கு
ஆதித்தமிழர்களின்
வீரவணக்கம்! . வீரவணக்கம்!!
என்ற முழக்கத்துடன்....
வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தலைமை :
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர்
தோழர் சோ. அருந்ததி அரசு அவர்கள்

மாநில சிறப்பு அழைப்பாளராக:
மாநில இளைஞரணி செயலாளர்
தோழர் க. தமிழ் வேந்தன் அவர்கள்
மற்றும் மானூர் ராஜா, சாமி ஜெயகுமார், ஆட்டோ ராஜ், பெரியசாமி, குரும்பூர் மாரியப்பன், செ. சந்தனம், அருந்ததிமுத்து, வைணவ பெருமாள், மற்றும் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆதித்தமிழர் பேரவை
தூத்துக்குடி மாவட்டம்.

Tuesday, 26 January 2016

ஆதித்தமிழர் பேரவை‬ நிறுவனர் அய்யா ‪ அதியமான்‬ அவர்களின் வழிகாட்டுதலின் படி ‪‎திருவண்ணாமலை‬ மாவட்ட தோழர்களை சந்தித்து பேரவை பற்றிய விழிப்புணர்வு செய்தனர்

ஆதித்தமிழர் பேரவை‬ நிறுவனர் அய்யா ‪ அதியமான்‬ அவர்களின் வழிகாட்டுதலின் படி  ‪‎திருவண்ணாமலை‬ மாவட்ட தோழர்களை சந்தித்து பேரவை பற்றிய விழிப்புணர்வு வழங்கிய போது

வேலூர் மாநகர மாவட்ட செயளாலர் ‪‎க செந்தில்_குமார்‬.
வடக்கு மாவட்ட செயளாலர் ‪இரா ராஜா கோபல்‬. மற்றும் திருவண்ணமலை மாவட்ட தோழர்கள்....

விரைவில் ஆதித்தமிழர் பேரவை திருவண்ணமலை மற்றும் புதுச்சேரியிலும்.


Monday, 25 January 2016

பிப்ரவரி 21 ல் ஈரோட்டில்தூய்மை தொழிலாளர் பேரவை நடத்தும் தூய்மை தொழிலாளர் மறுவாழ்வு மாநாடு

தூய்மை தொழிலாளர் பேரவை நடத்தும் தூய்மை தொழிலாளர் மறுவாழ்வு மாநாடு

பிப்ரவரி 21 ல் ஈரோட்டில். 

சிறப்புரை வழங்குகிறார் அய்யா அதியமான் அவர்கள்.

அழைக்கிறது தூய்மை தொழிலாளர் பேரவை


பிப்ரவரி 1ல் விருதுநகரில் ஆதித்தமிழர் பேரவை நடத்தும் மக்கள் உரிமை முழக்க ஆர்பாட்டம்.

பிப்ரவரி 1ல் விருதுநகரில் ஆதித்தமிழர் பேரவை நடத்தும் மக்கள் உரிமை முழக்க ஆர்பாட்டம்.

பேருரை வழங்குகிறார் அருந்தியர்களின் அரசியல் முகவரி அய்யா அதியமான் அவர்கள்.

அணிதிரள்வோம் நம் உரிமைகளை வென்றெடுப்போம்

ஊடகத் தீண்டாமை -ச.சு.ஆனந்தன் வழக்கறிஞர், ஆதித்தமிழர் பேரவை

ஊடகத் தீண்டாமை
"""""""""""""""
இந்திய சாதிய சமூகத்தில் கடையனுக்கு கடையனாய், ஒடுக்கப்பட்ட மக்களிலும் ஒடுக்கப்பட்ட மக்களாக வாழ்ந்துவரும் தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்டோரில் மூன்றில் ஒரு பங்காக இருக்கக்கூடிய அருந்ததிய மக்கள்.

கிராமப்புறங்களில் சக்கிலியர் என்றும், மாதாரி என்றும் அழைக்கப்படுவதோடு விவசாயக் கூலிகளாகவும், பண்ணையங்களில் அடிமைகளாகவும், இருப்பதோடு, நகர்ப்புறங்களில் பழைய செருப்பு தைப்பவர்களாக, தினக்கூலிகளாக, தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாகவும் வேலை செய்து வருகின்றனர்.

மாநகராட்சி, நகராட்சி, கிராம பஞ்சாயத்துகளில் துப்புரவுப் பணி செய்வதோடு மலக்குழியில் இறங்கி கழிவுகளை அகற்றுபவர்களாகவும், தனியார் விடுதிகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகளில், காவல்நிலையங்களில், துப்புரவு தொழிலிலும், மூன்று லட்சத்திற்கும் மேலான அருந்ததியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்படி ஈடுபட்டுவரும் அருந்ததியர்களை அந்த இழிவிலிருந்து மீட்டு அவர்களின் மாண்புக்காகவும், விடுதலைக்காகவும் கால்நூற்றாண்டு காலமாக போராடிவரும் ஆதித்தமிழர் பேரவையையும், அதன் தலைவர் அதியமான் அவர்களையும், சாதிய சமூகம் புறக்கணிப்பு செய்வது போல பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் வேண்டுமென்றே புறக்கணிப்பு செய்வதுதான் மிகவும் கொடுமையானது.

காவி உடை உடுத்தியவர்களையும்,  கலகத்தை மூட்டுபவர்களையும், கவனித்து கூப்பிட்டு விவாதம் நடத்தும் ஊடக தர்மம், மனிதக் கழிவை மனிதன் அகற்றும் அவலத்தை பற்றி பேசுவதற்கு வாய்ப்பளிக்க மறுக்கின்றது,

அப்படியே அழைத்து பேசுவது என்றாலும், சம்மந்தப்பட்டவர்களுக்காக போராடுபவர்களை விட்டுவிட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளையே அழைத்து பேசி தனது ஊடக தர்மத்தை நிலைநாட்டுகின்றது. இதுதான் ஊடக தர்மத்தின்  நேர்மையா?

சினிமாக்காரர்களின் தேர்தல் முடிவுகளுக்கு இருக்கும் முக்கியத்துவம், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக எழும் கருத்துக்கு இருக்கும் முக்கியத்துவம், மலக்குழியில் விழுந்து நச்சு வாயு தாக்கி மடியும் மனிதனின் உயிரிழப்புக்கு கொடுக்க மனமில்லாமல் போவது ஏன்?

துப்புரவு பணியாளர்கள் தீண்டத்தகாதவர்கள், என்பதால் அவர்களின் மாண்புக்காக போராடும் ஆதித்தமிழர் பேரவையும் அதன் தலைவர் அதியமானும் தீண்டத்தகாதவராகிப் போய் விட்டாரா?

அருந்ததியர் மக்களின் அரசியல் அடையாளம் ஆதித்தமிழர் பேரவை மட்டும்தான்! அவர்களுக்காக போராடும் ஒப்பற்ற தலைவர் அதியமான் மட்டும்தான்!! என்பதை புரிந்திருந்தும் NGO.க்களின் பிரதிநிதிகளைத்தான் அழைத்து பேசுவோம் என்று ஊடகங்கள் முடிவெடுத்தால்! அதை "ஊடகத் தீண்டாமை" என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது.
_______________
ச.சு.ஆனந்தன்
வழக்கறிஞர்,

கரூர்.கடவூர் ஒன்றியம்,தரகம்பட்டியில் ஆதித்தமிழர் பேரவையின் கொடிகம்பம் சேத படுத்தியதை கண்டித்து பேரவையினர் சாலை மறியல்

 24/1/2016 கரூர்.கடவூர் ஒன்றியம்,தரகம்பட்டியில் ஆதித்தமிழர் பேரவையின் கொடிக்கம்பத்தில் வெல்டிங் மூலம் வைக்கப்பட்டு இருந்த
பெயர் பலகையை சமூக விரோதிகள் உடைத்து எடுத்து சென்றுவிட்டனர்

இதனால் ஆத்திரம் அடைந்த கடவூர் ஒன்றிய சார்பில்
இதை கண்டித்தும், பெயர் பலகையை எடுத்து சென்றவரை கைது செய்ய கோரியும்

தரகம்பட்டியில் சாலை மறியல் செய்யப்பட்டு
12 தோழர்கள் கைது  ஆகினர்Sunday, 24 January 2016

சித்த மருத்துவ மாணவிகள் மூவர் தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்தி கல்லூரி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.

சித்த மருத்துவ மாணவிகள் மூவர் தற்கொலை
குறித்து நீதி விசாரணை நடத்தி கல்லூரி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.
"""""""""""""""""""""""""
விழுப்புரம் மாவட்டம் பங்காரம் கிராமத்திலுள்ள எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மோனிசா, சரண்யா, பிரியங்கா ஆகிய 3 மாணவிகள் நேற்று கல்லூரி அருகிலுள்ள கிணற்றில் ஒன்றாக குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்த துயரச்சம்பவம் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியின் பெற்றோர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவிகள் எடுத்த துயர முடிவின் காரணமாக அவர்களை இழந்து வாடும் குடுபத்தாருக்கு ஆதித்தமிழர் பேரவை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
அதேநேரத்தில் மூன்று மாணவிகள் ஒன்றாக தற்கொலை செய்துகொண்டதன் பின்னணி என்ன? என்பதை கண்டறிய உரிய நீதி விசாரணை மேற்கொண்டு எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
கல்லூரியில் சேரும்வரை ஆசைவார்த்தை காட்டி கவர்ச்சி விளம்பரங்கள் செய்து, லட்சக்கணக்கில் பணத்தை பெற்று, கட்டணக் கொள்ளையடிக்கும் தனியார் கல்லூரிகளை கட்டுப்படுத்த தவறிய அல்லது கண்டும் காணாது இருந்த தமிழக அரசின் மெத்தனப்போக்கே இந்த தற்கொலைக்கு காரணமாக அமைந்திருக்கின்றது.
மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளை கல்லூரி நிர்வாகம் அடிமைகளைப் போல நடத்தியுள்ளது, கல்லூரி வளாகத்திலுள்ள முள் மரங்களை வெட்ட வைப்பது, கழிப்பறைகளை சுத்தப்படுத்துவது, போன்ற வேலைகளை செய்யும்படி கட்டாயப் படுத்தியுள்ளது, எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் அடியாட்களைக் கொண்டு மிரட்டியுள்ளது. மாணவிகள் பலர் பாலியல் சீண்டல்களும் உள்ளாக்கபடுவது போன்ற எண்ணற்ற தகவல்கள்களை பாதிக்கப்பட்ட மணவர்கள் கூறியதாக பத்திரிக்கை மற்றும் தொலக்காட்சி ஊடகங்களின் மூலம் தெரிய வருகிறது.
இப்பேற்பட்ட கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில்தான் மூன்று மாணவிகளும், கட்டிய பணத்தைக் கூட தரவேண்டாம் சான்றிதழ்களை மட்டும் கொடுத்தால் போதும் என்று மண்றாடிக் கேட்டும் கல்லூரி நிர்வாகம் தரமறுத்து மாணவிகளை மிரட்டியிருக்க வேண்டும், அதன் காரணமாகவே தற்கொலை முடிவுக்கு மாணவிகள் வந்திருக்க வேண்டும்.
ஏனென்றால் இது சம்மந்தமாக பலமுறை தமிழக அரசிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவ துறைக்கும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் மனுக்களை கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வந்துள்ளனர்.
ஆக, மாணவர்கள் கொடுத்த புகாருக்கு அப்போதைக்கே அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த துயர சம்பவத்தை தவிற்திருக்கலாம், எனவே நடவடிக்கை எடுக்கத் தவறிய தமிழக அரசு தான் சரண்யா, பிரியங்கா, மோனிசா ஆகிய 3 மாணவிகளின் உயிரிழப்புக்கு பொறுப்பேற்க வேண்டும்.
இனிமேலும் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் மாணவிகளின் தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்தி அதற்கு காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்து. உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும்,
சித்த மருத்துவக் கல்லூரியின் உரிமத்தை ரத்து செய்து கல்லூரியை இழுத்து மூடி, அதில் படித்துவரும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் அரசு சித்தமருத்துவக் கல்லூரியில் இடம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்வதோடு,
அனைத்து தனியார் கல்லூரிகளிலும் உள்ள கட்டமைப்பு வசதிகள், கட்டண நிர்ணயம் போன்றவற்றை அரசு கண்காணித்து, இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என ஆதித்தமிழர் பேரவை தமிழக அரசை வலியுருத்திக் கேட்டுக்கொள்கிறது.
இவண்
இரா.அதியமான்,
நிறுவனர்,
ஆதித்தமிழர் பேரவை.
24.1.2016

தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சோ. அருந்ததி அரசு அவர்களின் தலைமையில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது

ஆதித்தமிழர் பேரவை
செயல்வீரர்கள் கூட்டம்
""""""""""""""""""""""""""""""""""""""""""
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சோ. அருந்ததி அரசு அவர்களின் தலைமையில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி செயலாளர்
ஆ. பெரியசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.
முன்னிலை மாவட்ட தலைவர் சாமி ஜெயகுமார், மாவட்ட துணை தலைவர் குரும்பூர் மாரியப்பன், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ஆட்டோ ராஜ், மாவட்ட அமைப்பு செயலாளர் ஜாண்,
மாவட்ட மாணவரணி செயலாளர் செ. சந்தனம், ரமேஷ் ஒன்றிய செயலாளர், வைணவ பெருமாள், கதிர்வேல், முனியாண்டி, முருகன், அருந்ததிமுத்து, மணிதுரை, மகாராஜா, உலகம்மாள், ராமஜெயம், மற்றும் ஒன்றிய, கிளை பொருப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆதித்தமிழர் பேரவை
தூத்துக்குடி மாவட்டம்Friday, 22 January 2016

30.1.16 அன்று விழுப்புரத்தில் அய்யா அதியமான் அவர்கள் கலந்து கொள்ளும் மக்களை பிளவு படுத்தும் பார்பன மதவாத எதிர்ப்பு மாநாடு

30.1.16 அன்று விழுப்புரத்தில் அய்யா அதியமான் அவர்கள் கலந்து கொள்ளும் மக்களை பிளவு படுத்தும் பார்பன மதவாத எதிர்ப்பு மாநாடு

Thursday, 21 January 2016

சேலத்திற்கு வந்தடைந்த பீம் யாத்ரா பயணத்திற்கு ஆதித்தமிழர்பேரவை சார்பாக சிறப்பான வரவேற்ப்பு கொடுக்கப்பட்டது பின்னர் தூய்மை பணியாளர்களுடன் கலந்துரையாடல் மற்றும் ஆர்பாட்டம் நடைபெற்றது

இந்தியா முழுவதும் சபாய்_கரம்ச்சாரி_அந்தோலன் சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பீம் யாத்திரா பயணத்தில் தற்ப்போது ஒமலூரில்
ஆதித்தமிழர்_பேரவை சேலம் மாவட்ட தோழர்கள் மாநில இளைஞர்அணி துணை செயலாளர் வீராசிவா,ராதாகிருஷ்ணன், இளங்கோவன்,,மதுரை தலித் ராஜா,, பழனிசாமி,, சங்ககிரி சோமு

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் தூய்மை தொழிலளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது அதில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் வீராசிவா மற்றும் ராதாகிருஷ்ணன், பழனிசாமி, இளங்கோவன்,, சங்ககிரி சோமு கலந்து கொண்டனர்.


Wednesday, 20 January 2016

ஈரோட்டிற்கு வந்தடைந்த பீம் யாத்ரா பயணத்திற்கு ஆதித்தமிழர்பேரவை சார்பாக சிறப்பான வரவேற்ப்பு கொடுக்கப்பட்டது பின்னர் ஆதரவு அமைப்புகளுடன் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபற்றது

இந்தியா முழுவதும் ‪ ‎சபாய் கரம்ச்சாரி அந்தோலன்‬ சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பீம் யாத்திரா பயணம்..
‪‎ஆதித்தமிழர் பேரவை‬ அய்யா ‪அதியமான்‬ அவர்களால் 14.1.2016.அன்று சென்னையில் துவக்கி வைக்கப்பட்ட "பீம் யாத்ரா" பயணம் ...
20.1.2016 காலை கோவை ‪‎காமராஜ்புரத்தில்‬ நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் சிறப்புரையில் யாத்ரா நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக .இரவு 6 மணியளவில் ஈரோட்டில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது இதில்  ‪ரீடு‬ நிறுவனம் சார்பாக தோழர் ‪கருப்புசாமி‬ அவர்கள் ஆதித்தமிழர் பேரவை துணை பொதுசெயலாளர் ‪ஆனந்தன்‬ வழக்குரைஞர் ,சபாய் கரம்ச்சாரி அந்தோலன் கோவை மாவட்ட ஒருக்கிணைப்பாளர் தோழர் ‪‎மோகன பிரியா‬ அவர்கள் மற்றும் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்

இன்று 20.1.2016 மதியம் 12 மணியளவில் பாளை தந்தை பெரியார் சிலை முன்பு சாதி வெறி ,மத வெறி ,மதுவெறி மற்றும் அரச பயங்கரவாதம், கண்டித்து ஆதித்தமிழர் பேரவை சார்பில் கோரிக்கை முழக்க போராட்டம் நடைபெற்றது (காணொளி )

இன்று 20.1.2016 மதியம் 12 மணியளவில் பாளை தந்தை பெரியார் சிலை முன்பு சாதி வெறி ,மத வெறி ,மதுவெறி மற்றும் அரச பயங்கரவாதம்,  கண்டித்து ஆதித்தமிழர் பேரவை சார்பில் கோரிக்கை முழக்க போராட்டம் நடைபெற்றது

.போராட்டத்தில்,

1.ஐதராபாத் தலித் மாணவர் படுகொலைக்கு காரணமான சாதி வெறியர்களை கைது செய்.

2.சென்னை கரபாக்கம் பகுதியில்  தலப்பாக்கட்டு பிரியாணி கடையில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி மலக்குழிக்குள் இறக்கி 4 பேர் படுகொலைக்கு காரணமான ஒட்டல் உரிமையாளரை கைது செய். கையால் மலம் அள்ள தடைச்சட்டம் இருந்தும் மலம் அள்ளுவதற்கு உட்படுத்திய மாநகராட்சி அதிகாரிகளை பதவி விலக்கு.

3. சேலம் , அஷ்தம்பட்டியில் மதுவிற்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் மீது பூட்ஸ் காலால் மிதித்து காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்திய காவல்த்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடு.

உள்ளிட்ட கோரிக்கைகள் முழங்கப்பட்டது.
இப்போராட்டத்தில் மாநில துனைபொதுசெயலாளர் நெல்லை மாயா, மாநில இளைஞர் அணிச்செயலாளர் தமிழ்வேந்தன் ,மற்றும் மானூர் ராஜா, ஆதித்தமிழன், வீரத்தமிழன், அஜீஸ். ஆட்டோ சீனி, சுந்தர்ராஜு,தன்னூத்து முத்துலட்சுமி , ரெங்கன் உள்பட பேரவை தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்பீம் யாத்ரா குழு இன்று 20.1.16 அன்று கோவை வந்தடைந்தது இக்குழுவை ஆதித் தமிழர்களின் அறிவாசான் அய்யா அதியமான் வரவேற்றார்

"மலக்குழியில் மனிதனை இறக்காதே" , "ஆளும் அதிகார வர்க்கங்கள் துப்பரவு தொழிலாளர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்" என இந்தியா முழுவதும் "பீம் யாத்ரா" என்ற தலைப்பில் பயணம் செய்யும் குழுவை தமிழகத்தில் கடந்த 14.1.16 அன்று சென்னையில் ஆதித்தமிழர்களின் அறிவாசான் அய்யா அதியமான் அவர்கள் தொடங்கி வைத்தார்.
அதன் பின் இந்த பீம் யாத்திரை பல்வேறு மாவட்டங்களில் சுற்றுபயணம் மேற்கொண்டு துப்பரவு பணியாளர்களுக்காக ஆர்பாட்டம் செய்து வருகிறது.பயணம் செல்லும் அணைத்து மாவட்டங்களிலும் அய்யா அதியமான் அவர்கள் வழிகாட்டுதலின் படி ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் கலந்து கொண்டு எம் மக்களின் இழிவொழிக்க வேண்டிய தேவையை மக்களிடமும் இத்தொழிலில் தள்ளப்பட்ட தொழிலாளர்களை மீட்டெடுக்க அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பற்றியும் முழங்கி வருகின்றனர்.
இன்று 20.1.16 இப்பயணம் கோவை வந்ததடைந்தது.இதில் ஓய்வில்லாமல் தமிழகம் முழுவதும் எம்மக்களின் விடியலுக்காய் பல போராட்டங்களிலும்,அரசிற்கு இழிவு தொழிலிலிருந்து எம்மக்களின் விடுதலை வேண்டி பல்வேறு நெருக்கடிகளையும்,எம்மக்களின் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க பல அரசியல் காய் நகர்த்தல்களையும் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை கார்ல் மார்கஸ் வழியில் பயணித்து எம்மக்களை வழிநடத்திவரும் ஆதித்தமிழர்களின் அறிவாசான் அய்யா அதியமான் அவர்கள் கலந்துகொண்டு எம்மக்களின் இழிதொழிலை எம் தலைமுறையில் ஒழித்தே தீருவோம் என சூளுரைத்தார்,அதோடு எம்மக்களின் இழிநிலையை போக்கி அவர்கள் கையில் அரசியல் அதிகாரத்தை நிச்சயம் பெற்று தருவேன் என உறுதிபூன்டார்.
இதன் போது பீம் யாத்திரா குழுவினர் எம்மகளின் விடியலுக்காய் ஓய்வின்றி போராடிவரும் அய்யா அதியமான் அவர்களுக்கும் ஆதித்தமிழர் பேரவையினருக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டனர்.

அய்யா அதியமான் அவர்களின் காணொளியை காண இங்கு சொடுக்கவும்