அண்மையச்செய்திகள்

Saturday, 20 October 2018

தகவல் தொழில் நுட்ப அணியோடு அய்யா ஆலோசனை

தகவல் தொழில் நுட்ப அணியோடு அய்யா ஆலோசனை

தகவல் தொழில் நுட்ப அணியோடு மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் அறிவாசான் தலைமகன் அய்யா அதியமான்.

மதிய உணவு உண்ணாமல் கூட தலைவரின் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் எழுச்சியோடும், உற்ச்சாகத்தோடும் கேட்கும்
பேரவைத் தோழர்கள்.
நேரம் :மாலை 6.15 மணிஅருந்ததியர் இளைஞர் பேரவை தோழர் வடிவேல் அவர்கள் அய்யாவுடன் சந்திப்பு

வீரத்தாய் குயிலி நினைவிடத்தில் அருந்ததியர் இளைஞர் பேரவை தோழர் வடிவேல் அவர்கள் ஆதித்தமிழர்களின் அறிவாசான் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்


வேலுநாச்சியர் நினைவிடத்தில் அய்யா அதியமான் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.வேலுநாச்சியர் நினைவிடத்தில்
அனைத்து சமுதாயத்தின் விடுதலை அய்யா அதியமான் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.வீரத்தாய் குயிலி நினைவிடத்தில் நிறுவனர் வீரவணக்கம் செலுத்தினார்

வீரத்தாய் குயிலி வரலாறு மீண்டது இனி வரலாறை திருடபவர்கள் வாய் மூடிக்கொள்வார்கள்

வீரத்தாய் குயிலிக்கு ஆதித்தமிழர்களின் தலைமகன் அய்யா அதியமான் அவர்கள் வீரவணக்கம் செலுத்தினார்
ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவைக் கான கொடி அறிமுகம்

#வீரத்தாய் #குயிலி நினைவிடத்தில் #ஆதித்தமிழர்_தொழிலாளர்_பேரவைக் கான #கொடி அறிமுகம் ஆதித்தமிழர்களின் #தலைமகன் #அய்யா #அதியமான் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்கள்


மதுரை திருமண நிகழ்வில் அய்யா அதியமான்ஆதித்தமிழர் குடும்ப சுயமரியாதை திருமண நிகழ்வில் ஆதித்தமிழர்களின் தலைமகன் பெரியார் மாணவண் அய்யா அதியமான் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களையும் சுயமரியாதை திருமணத்தின் அவசியத்தையும் எடுத்துக்கூறினார் உடன் திரளான பேரவையினர்
19.10.18Tuesday, 16 October 2018

வீரத்தாய் குயிலிக்கு வீரவணக்கம் செலுத்த ஆதித்தமிழர் பேரவை சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு வெற்றி.

#வீரத்தாய்_குயிலிக்கு_வீரவணக்கம் #செலுத்த_ஆதித்தமிழர்_பேரவை #சார்பில்_தொடுக்கப்பட்ட_வழக்கு #வெற்றி.
**********************
தமிழ்க அரசே!
காவல் துறையே!!
அஞ்சமாட்டோம்! அஞ்சமாட்டோம்!!
அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்!!!
அதியமானின் தம்பிகள் நாங்கள் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்!
முறியடித்து முன்னேறுவோம்!!
பதினெட்டாம் நூற்றாண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் போராளி வீரமங்கை குயிலி அவர்களின்
238 வது நினைவு நாளில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் வீரவணக்கம் செலுத்த #அய்யா_அதியமான் அவர்களின் வழிகாட்டுதலில் படி மாநில துணைப்பொதுச்செயலாளர் தோழர்.கபீர்நகர் #கார்த்திக் அவர்கள் கடந்த 04-10-2018 அன்று அனுமதி கோரி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு மனு கொடுத்தார்.
குயிலிக்கு வீரவணக்கம் செலுத்த காவல் துறை அனுமதி மறுத்த நிலையில் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இன்று வழக்கு விசாரணையில் ஆதித்தமிழர் பேரவைக்கு சாதாரணமாக குயிலிக்கு வீரவணக்கம் செலுத்த அனுமதி வழங்கி தீர்பளித்தது என்பதை மகிழ்சியுடன் தெரிவித்து கொள்ளிறேன்.
தகவலுக்காக,
கபீர்நகர்.கார்த்திக்
மாநில துணைப்பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை.

அடிப்படை வசதியற்ற அருந்ததியர் சேரியும்..! சிகிச்சைக்கு வந்தவரை கூறு போட்ட மருத்துமனையும்.!!

அடிப்படை வசதியற்ற அருந்ததியர் சேரியும்..!
சிகிச்சைக்கு வந்தவரை கூறு போட்ட மருத்துமனையும்.!!
""""""""""""""""""""""""""""""""""""
அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கிழப்பழுவூர் அருகே உள்ள கருப்பில கட்டளை ஊராட்சியில் மூப்பனார், படையாச்சியார், யாதவர், பறையர் என பல சமூகத்தினர் இருந்தாலும் பெரும்பான்மையாக அருந்ததியர் மக்கள் அடிப்படை வசதியற்ற புறக்கணிக்கபட்ட பெருஞ்சேரியாகவே இருந்து வருகின்றது.
ஏறத்தாழ 650 அருந்ததியர் குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் சுமார் 5 பேர் மட்டுமே அரசுப் பணிகளிகளில் இருந்து வருகின்றனர். இந்த 5 பேரும் அருந்ததியர் உள்ளிட ஒதுக்கீட்டின் மூலம் அரசுப் பணிகளில் அமர்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பகுதியைச் சேர்ந்த ராஜா வின் மனைவி கவிதா(34) த/பெ அப்பாதுரை என்பவர் அரியலூர் மாவட்ட முதன்மை நீதி மன்றத்தில் இளநிலை அலுவலராக கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கண்பார்வைகுறைபாடு காரணமாக அரியலூர் ஜோசப் கண் மருத்துவமனைக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கண் நரம்பில் நீர் கட்டி உள்ளது, இதை அகற்றுவதற்கு திருச்சி நியூரோ ஒன் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தார்கள்.
அதனடிப்படையில் திருச்சி நியூரோ ஒன் மருத்துவமனையில் கடந்த 4-10-2018 அன்று சேர்ந்துள்ளார்.
இவரை பரிசோதனை செய்த டாக்டர் ராமகிருஷ்ண ஈஸ்வர் என்பர் அறுவை சிகிச்சை செய்தால் சரியாகிவிடும் என்றும் ஐம்பதாயிரம் ரூபாய் ஆகும் கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொண்ட கவிதா 8-10-2018 அன்று உடல் முழு தகுதியுடன் அறுவை சிக்சைக்கு மாலை 7.30 க்கு சென்றுள்ளார்.
பின்னர் 10.30 Pm தீவிர அவசர பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவர்களது குடும்பத்தினர் யாரையும் பார்க்க அனுமதிக்க வில்லை அவ்வப் போது பணத்தை மட்டும் கட்டச் சொல்லி வலியுறுத்தியுள்ளனர். இப்படி 11 ந்தேதி வரை சுமார் 3 இலட்சம் வரை கட்டியுள்ளனர்.
அக்டோபர் 12 ந் தேதி இரவு ரோந்து மருத்துவர்கள் செயற்க்கை சுவாசத்தில் இருப்பதாக மருத்துவர்கள்அருணா ரமணி, அரவிந்த் ஆகியோர்கள் கூறியுள்ளனர்.
பின்னர் ICU சென்று பார்த்த தந்தை அப்பா துரை மற்றும் உறவினர்கள் கண் தொடர்பாக எந்த அறுவை சிகிச்சை செய்யாமல் உடலில் பல்வேறு பாகங்களில் கட்டுகள் போடப்பட்டு சுயநினைவின்றி செயற்க்கை சுவாசத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றுள்ளனர்.
பின்பு 14-10-2018 அன்று மாலை 6.30 மணியளவில் திருச்சி மலைக் கோட்டை காவல் உதவி ஆய்வாளர் மூலம்
கவிதாவின் தந்தை அப்பாதுரை வீடான காட்டு பிரிங்கியத்தில் வந்து நேரில் கூறிச் சென்றுள்ளார்.
இறந்ததில் மர்மம் இருப்பதை அறிந்த
பின்னர் நமது ஆதித்தமிழர் பேரவைத் தோழர்களுடன் தொடர்பு கொண்ட கருப்பில கட்டளை அருந்ததியர் சண்முக சுந்தரம் திருச்சி தோழர் செங்கை குயிலி மற்றும் தோழமை இயக்கத் தோழர்களோடும் கவிதாவின் உறவினர்களோடு திருச்சி - கரூர் சாலையில் 15-10-2018 அன்று சாலை மறியலில் ஈடுபட்டு சட்ட வழிகாட்டுதலோடு அப்பாதுரை மற்றும் உறவினர்களோடும் தோழமை இயக்கத்தினரோடு சட்டப் படி நியூரோ ஓன் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு செய்தவுடன் ஆட்சியர் பரிந்துரையின் பேரில் திருச்சி காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் உடல் கூறாய்வை ஒளிப்பதிவு செய்யப்பட்டு பின்னர் உடல் ஒப்படைக்ப்பட்டது.
உடலை அடக்கம் செய்வதற்கு கருப்பில கட்டளைக்கு கொண்டுவரப்பட்டனர்.
மறுநாளான
16-10-2018 மறைந்த கவிதாவிற்கு வீரவணக்கம் செலுத்த ஆதித்தமிழர் மகளீர் பேரவையின் மாநில செயலாளர் தோழர் செங்கை குயிலி, ஆதித்தமிழர் பொறியாளர் பேரவை மாநில செயலாளர் தோ ர் எழில் புத்தன், ஆதித்தமிழர் தூய்மைத் தொழிலாளர் பேரவை மாநிலச் செயலா ளர் பெரு.தலித்ராசா.மற்றும் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் சந்திரலேகா ஆகியோர் வீரவணக்க அஞ்சலி செலுத்தினார்கள்.
தகவலுக்காக :
பெரு.தலித்ராசா.
ஆதித்தமிழர் பேரவை.
16-10-2018

Thursday, 11 October 2018

ஆதித்தமிழர் பேரவை சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த செயற் குழு கூட்டம் நடைபெறறது

ஆதித்தமிழர் பேரவை சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த செயற் குழு கூட்டம் நடைபெறறது
------
ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டம் பைபாஸ் சாலையில் உள்ள வள்ளலார் அரங்கத்தில் மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமையில் மாலை 3 30 மணியளவில் நடைபெற்றது அருந்ததியர்களின் இடஒதுக்கீட்டுக்காக உயிர்நீத்த திருச்சி ராணி நினைவுநாளில் நவம்பர் 26 அன்று தனித் தொகுதிகளில் அருந்ததியர்களுக்கு சமூக நீதி கோரிக்கையை வலியுறுத்தி சேலம் மாவட்ட மாநாடு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது இந் நிகழ்வில் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார் தலைவர் அய்யா அதியமான் மேலும் பொதுச்செயலாளர் ரவிகுமார் நிதிச்செயலாளர் பெருமாவளவன் துணை பொதுச் செயலாளர்கள் செல்வ வில்லாளன் விடுதலைச் செல்வன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வீர சிவா ராதாகிருஷ்ணன் தொழிலாளர் பேரவை தலைவர் பாண்டியன் மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் சிலம்பரசன் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் பெருந்தமிழன் சேலம் மாநகர செயலாளர் உதய பிரகாஷ் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்
தகவல்
ஊடக பிரிவு
ஆதித்தமிழர் பேரவை
சேலம் மாவட்டம்

ஆதித்தமிழர் டாஸ்மாக் பணியாளர்கள் பேரவை துவங்கப்பட்டதுநாமக்கல் மாவட்டம் டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் டாஸ்மாக் தொழிலாளர் பேரவை துவக்க விழா நடைபெற்றது நிகழ்வில் பெயர் பலகையை திறந்து வைத்து கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை நிகழ்த்துகிறார் ஆதித்தமிழர்களின் முகவரி அய்யா அதியமான் நிகழ்வில் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் டாஸ்மாக் பணியாளர் பேரவை நிர்வாகிகள்
தகவல்
ஊடக பிரிவு
ஆதித்தமிழர் பேரவை
நாமக்கல் மாவட்டம்

 செய்தியாளர் சந்திப்பு காணொளி 


அய்யாவின் உரை


Wednesday, 10 October 2018

#நாமக்கல் மாவட்டத்தில் #டாஸ்மாக் #பணியாளர்கள் பேரவை நிர்வாகிகளுக்கு தலைவர் #அதியமான் பயிற்சி

#நாமக்கல் மாவட்டம் #டாஸ்மாக் பணியாளர் #பேரவை துவக்க விழா தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்கள் பேரவை நிர்வாகிகள் மற்றும் #செயற்குழு உறுப்பினர்கள் ஆதித்தமிழர்களின் #அறிவாசான் அய்யா #அதியமான் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர் பின்பு பணியாளர்கள் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் மாநில ்தனை பொதுச்செயலாளர்கள் செல்வவில்லாளன் தமிழரசு மாவட்ட நிர்வாகிகள் சரவணன் மணிமாறன் பங்கேற்றனர்
தகவலுக்காக
#ஊடகப்பிரிவு
#ஆதித்தமிழர்_பேரவை
#நாமக்கல் #மாவட்டம்

11.10.18 - 11 Am


நள்ளிரவு 1 மணிக்கு அய்யா அதியமான் அவர்கள் தொழிலாளர் பேரவையுடன் ஆலோசனை

நள்ளிரவு 1 மணிக்கு அய்யா அதியமான் அவர்கள் தொழிலாளர் பேரவையுடன் ஆலோசனை
நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் பேரவை துவக்க விழா மற்றும் டாஸ்மாக் தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து நடுநிசி ஒன்று முப்பது மணி அளவில் தலைவர் அதியமான் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் இந்த ஆலோசனையில் மாநில துணைப் பொதுச் செயலாளர் செல்வ வில்லாளன் மேற்கு மாவட்ட செயலாளர் சரவணன் பொதுச் செயலாளர் ரவிக்குமார் தகவலுக்காக ஊடகப்பிரிவு ஆதித்தமிழர் பேரவை நாமக்கல் மாவட்டம்


மூதாட்டியின்.நிலத்தை அபகரிக்க முயன்ற ஆதிக்க சமூகத்தினர் களத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்

அருந்ததிய மூதாட்டியின்.நிலத்தை அபகரிக்க முயன்ற ஆதிக்க சமூகத்தினர்- -- வீரியத்துடன் களத்தில் இறங்கி நிலத்தை மீட்டு கொடுத்த.ஆதித்தமிழர் பேரவையினர்

இன்று.! 9-10-2018 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா கல்லூத்து கிராமத்தில் மறைந்த குள்ளிமுத்தன் பகடைக்கு பாத்தியப்பட்ட புலஎண்.106/2C ல் 0.11.00 ஏர்ஸ் புஞ்சை நிளம் அதாவது எனது கணவருக்கு சொந்தமான பூர்வீக நிளத்தை சாதிஆதிக்க கள்ளர் சாதியினர் நிலத்தில் வேலைசெய்து கொண்டிருந்த என் மகனை தடுத்து சக்கிலியப்பயலே நிளத்தில் காலவெச்ச வெட்டி கொன்னுருவேன் என தகாத வார்த்தைகளால் என் சாதியை இழிவாக பேசியும் என்னை திட்டி அரிவாளால் வெட்டவந்த, கொலை மிரட்டல் விடுத்தது சம்மந்தமாக புகார்மனுவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார்மனு கெடுத்தபோது உடன் மாநில இனளஞர் அணிசெயலாளர் தோழர் இரா.செல்வம், தெற்கு புறநகர் மாவட்டத்தலைவர் தோழர் அ.முக்கையா மாவட்டச்செயலாளர் தோழர் க.மல்லிகா மற்றும் தோழர் இராவணன் ஆகியோர் கலந்துகொண்டோம்.

தகவலுக்காக.

அ.முக்கையா
மாவட்டத்தலைவர்
புறநகர் மதுரை
தெற்கு மாவட்டம்.நாமக்கல் வருகைதந்த ய்யா அதியமான் அவர்களுக்கு டாஸ்மாக் பணியாளர்கள் வரவேற்பு

நாமக்கல் வருகைதந்த ஆதித்தமிழர்களின் தலைமகன் அய்யா அதியமான் அவர்களுக்கு டாஸ்மாக் பணியாளர்கள் சார்பில் அமைப்பினர் வரவேற்பு அளித்தனர்.

நாமக்கல் மாவட்டம் டாஸ்மாக் பணியாளர்கள் பேரவை துவக்க விழாவிற்கு வருகை தந்த அருந்ததியர்களின் தலைவர் ஐயா அதியமான் அவர்களுக்கு நாமக்கல் coastal விடுதியில் டாஸ்மாக் பணியாளர்கள் பேரவை சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் சரவணன் தகவலுக்காக ஊடகத்துறையில் ஆதித்தமிழர் பேரவை நாமக்கல் மாவட்டம்


மனோன்மணியம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் - அய்யா அதியமான் கண்டனம்

#மனோன்மணியம் #பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய காவல்துறை மீது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழில் தேர்வு எழுதுவது தமிழ்நாட்டில்மறுக்கப்படும் அவலம் தொடர்ந்து நீடிக்கிறது. தமிழர்கள் வெட்கப்பட வேண்டிய ஒன்று.- அய்யா #அதியமான் கண்டனம்

ஒட்டன் சத்திரம் கள்ளிமந்தயத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையி நிலம் எங்கள் உரிமை நடைபெற்ற போராட்டத்தில் அணைத்து கட்சி ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கோரிக்கை வலியுறுத்தி பேசினார்

திண்டுக்கல் ஒட்டன் சத்திரம் கள்ளிமந்தயத்தில்  தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையி நிலம் எங்கள் உரிமை நடைபெற்ற போராட்டத்தில் அணைத்து கட்சி ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கோரிக்கை  வலியுறுத்தி பேசினார்டாஸ்மாக் பணியாளர்கள் பேரவை தொடக்கவிழா கொடியேற்றி சிறப்புரை சமூகநீதி போராளி அய்யா .இரா.அதியமான்

டாஸ்மாக் பணியாளர்கள் பேரவை
தொடக்கவிழா
கொடியேற்றி சிறப்புரை
சமூகநீதி போராளி
அய்யா .இரா.அதியமான்

விழுப்புரம் மாவட்டத்தில் பஞ்சமி நில மீட்பு போராட்டம் -- ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பங்கேறபு !

விழுப்புரம் மாவட்டத்தில் பஞ்சமி நில மீட்பு போராட்டம் -- ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பங்கேறபு ! 10-10-2018
********
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் பஞ்சமி நிலங்களை மீட்க வலியுறுத்தி காலை 11 மணியளவில் தாலுக்கா அலுவலகம் முன்பு நில மீட்புக்கான போராட்டம் நடைபெற்றது அம்பேத்கர் பேரவை தலைவர் நிகோலஸ் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தியாகி இமானுவேல் பேரவை சந்திரபோஸ் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சம்பத் காங்கிரஸ் கட்சி செல்வபெருந்தகை சமூக சமத்துவ படை சிவகாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் அருந்ததியர்களின் தலைநிமிர்வு ஐயா அதியமான் ஆலோசனையின் பேரில் பொதுச்செயலாளர் கோவை ரவிக்குமார் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார் நிறைவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு உரை நிகழ்த்தினார் ஊடகப்பிரிவு ஆதித்தமிழர் பேரவைTuesday, 23 January 2018

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுக நடத்தும் ஆர்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவை ஆதரவு

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுக நடத்தும் ஆர்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவை ஆதரவு
பேருந்து கட்டணத்தை 3600 கோடி வரை உயர்த்தி, நட்ட சுமையை மக்கள் மீது சுமத்தும் தமிழக அரசைக் கண்டித்து, திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை பங்கேற்கும்.
"""""""""""""”""""""""”""""”""""'""
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய, நடுத்தர மக்கள், தங்களது போக்குவரத்து தேவைகளுக்கு பேருந்தையே பயன்படுத்தி வருகின்றனர். இந் நிலையில் தமிழக அரசு திடீரென பேருந்து கட்டணத்தை உயர்த்தி மக்களை தாங்க முடியா சுமைக்கு ஆளாக்கி உள்ளது.
தமிழக அரசின் இந்த மக்கள் விரோத செயலைக் கண்டித்து, கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நாடெங்கும் பலதரப்பினர் போராடிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழகம் முழுதும் மாணவர்களின் போராட்டமும் வலுவடைந்து வருகிறது.
இப்படி, முன்னேற்பாடுகள் ஏதுமில்லாமல் 3600 கோடி ரூபாய் அளவிற்குப் பேருந்து கட்டணத்தை இரவோடு இரவாக உயர்த்தி மக்களை வதைப்பதுதான் மக்களுக்கான அரசா என்ற கேள்விகளை மக்கள் கேட்க தொடங்கியுள்ளனர்.
திமுக ஆட்சியின் போது பேருந்து கட்டணமோ, மிசாரக் கட்டணமோ உயர்த்தப்படவே இல்லை, அம்மையார் உயிரோடு இருந்த போதும், அவருக்கு பின்னால் முதல்வரான ஓ.பி.எஸ், இ.பி.எஸ் களின் ஆட்சியில்தான் இத்தனை கொடுமைகள் அரங்கேற்றப் படுகின்றது என்றும், மக்கள் கேட்க தொடங்கியுள்ளனர்.
போக்குவரத்துக் கழகம் நட்டத்தில் இயங்கி வருவதாகக்கூறி, இந்தக் கட்டண உயர்வை அறிவித்துள்ள தமிழக அரசு, போக்குவரத்துத்துறை நட்டமில்லாமல் இயங்க உரிய நிர்வாக மேம்பாடுகளை மேற்கொள்ளாமல், கட்டணத்தை உயர்த்தி நட்ட சுமையை பொதுமக்கள் மீது சுமத்துவது ஏற்றுக்கொள்ள இயலாதது.
பேருந்துகள் அனைத்தும் மிகவும் பழுதடைந்து எலிகளும், கரப்பான் பூச்சிகளும் குடியேறி, மழை நீரும் பேருந்துக்குள் கொட்டும் அளவிற்கு ஓட்டையும், உடைசலுமாக உரிய பராமரிப்பின்றி தகுதியற்றுப்போன பேருந்துகளை சரி செய்து, மக்களுக்கு சேவை செய்வதை விடுத்து கட்டண உயர்வை மட்டும் அறிவித்திருப்பது வெக்கக் கேடானது, விரோதமானது.
தமிழக அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, பேருந்து கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்வரும் 27.1.2018 சனிக்கிழமை அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவை தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்வதோடு,
மக்கள் நலனில் அக்கறை கொண்ட மதிப்புக்குரிய செயல்தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களின் அழைப்பை ஏற்று ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் என தெரிவித்துக் கொள்வதோடு,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பேரவைத் தோழர்கள் திரளாக பங்கேற்று போராட்டத்தை வெற்றிபெறச் செய்திட வேண்டும் என்று பேரவைத் தோழர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் பேரவைத் தோழர்கள் அந்தந்த மாவட்ட திமுக செயலாளர்களை நேரில் அணுகி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் செய்தியை உடனடியாக உறுதி படுத்திட வேண்டும் என்று, மாவட்ட செயலாளர்களும், தலைமை நிர்வாகிகளும் அறிவுறுத்தப் படுகின்றனர்.
இவண்
இரா.அதியமான்
நிறுவனர்/தலைவர்
ஆதித்தமிழர் பேரவை
தலைமையகம். கோவை
23.1.2018

Monday, 15 January 2018

தோழர் ஞானி மறைவு -- ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் இரங்கல்


தோழர் ஞானி மறைவு --
ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் இரங்கல்
"''""""""""""""""""""""""""""""""""
எனது நெடுங்கால நண்பரும் அரசியல் தோழருமான தோழர் ஞானி அவர்கள் மறைவு செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். தோழரின் இழப்பு உழைக்கும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு பேரிழப்பாகும். தோழருக்கு ஆதித்தமிழர் பேரவை சார்பில் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வதோடு, அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இடதுசாரி சிந்தனையாளரும், வரலாற்று ஆய்வாளருமான தோழர் ஞானி அவர்களின் சிந்தனையும் எழுத்தும் பண்முகத்தன்மை கொண்டது, குறிப்பாக "மலக்குழியில் மனிதனை இறக்காதே" என்ற முழக்கத்தை முன்னிறுத்தி தமிழகம் முழுதும் ஆதித்தமிழர் பேரவை முன்னெடுத்த தொடர்வண்டி (இரயில்) மறியல் போராட்டத்தை அங்கீகரித்து, மனித மலத்தை மனிதன் சுமக்கும் அவலத்தை தனது எழுத்தின் மூலம் பொதுப்புத்தி சமூகத்திடம் கேள்வியை எழுப்பியவர்,

மறைக்கப்பட்ட மாமன்னர் ஒண்டிவீரன் வரலாற்றை "ஒப்பில்லா மன்னன்" என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றில் தொடராக எழுதி, இந்திய விடுதலைப் போராட்டத்தில் மறைக்கப்பட்ட ஒண்டிவீரன் வரலாற்றை நாடறிய செய்தவர். இப்படி ஒடுக்கபட்ட சமூகத்திலும் ஒடுக்கபட்ட சமூகமான அருந்ததியர் சமூக மக்களின் வலியையும், வரலாற்று தகவல்களையும், தனது எழுத்தின் மூலம் துணிச்சலோடு பதிவிட்ட தோழர் ஞானியை யாரும் மறந்திருக்க முடியாது.

இடதுசாரி சிந்தனையிலும், ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய அக்கரையிலும் உள்ள ஒரு சில எழுத்தாளர்களின் வரிசையில் தோழர் ஞானி அவர்களுக்கும் நிரந்தர இடம் உண்டு, என்பது மறுக்க முடியாத உண்மை. தோழரின் இழப்பு உழைக்கும் மக்களுக்கு பேரிழப்பு.

தோழருக்கு ஆதித்தமிழர் பேரவை சார்பில் வீரவணக்கத்தை செலுத்துதோடு, அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவண்
இரா.அதியமான்
நிறுவனர்/தலைவர்,
ஆதித்தமிழர் பேரவை.
கோவை.
15.1.2018.
 
 

Tuesday, 2 January 2018

ஆதித்தமிழர் பேரவை பொதுக்குழு கூட்டம் 31-12-2017 நடைபெற்றது - இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது31.12.2017 அன்று திருச்செங்கோட்டில் அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஆதித்தமிழர் பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது, இதில் ஒடுக்கப்பட்ட அருந்ததிய சமூக முன்னேற்றத்திற்கான பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது

ஆதித்தமிழர் பேரவை
மாநில பொதுக்குழு கூட்டம்.
""""""""""""""""""
ஆதித்தமிழர் பேரவையின் "மாநில பொதுக்குழு" கூட்டம் பேரவை நிறுவநர் 'அய்யா' அதியமான் தலைமையில் 31.12.2017 திருச்செங்கோடு நாடார் மகாலில் பிற்பகல் 4 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில் மாநில மாவட்ட ஒன்றிய, மாநகர, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
""""""'''''''''''''''"
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
""""""""""""""""
தீர்மானம்.1
வீரவணக்க தீர்மானம்:-
""""""""""""""""
அருந்தததியர் மக்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்த வலியுறுத்தி உயிர் ஈகம் செய்திட்ட தோழர்கள் நீலவேந்தன், இராணி, மகேசுவரன், மற்றும் ஆதித்தமிழர் பேரவையின் வளர்ச்சிக்கு உழைத்த தோழர்களுக்கும் இக்கூட்டம் தனது வீரவணக்கத்தை செலுத்துகிறது.

தீர்மானம்.2
துப்புரவு தொழிலாளர் மறுவாழ்வு தீர்மானம்:-
""""""""""""""""
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் இழிவை தடை செய்து, இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டும், அதை அடிப்படையாகக் கொண்டு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல் தீர்ப்பை நடைமுறைப் படுத்தாமலும், கண்காணிப்புக் குழுக்களை அமைக்காமலும், காலம் தாழ்த்தும் தற்போதைய மத்திய மாநில அரசுகளின் அலட்சியப் போக்கால் கடந்த 2016-2017 ஆம் ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணிபுரியும் தொழிலாளர்கள் மலக்குழியில் இறங்கி நச்சுவாயு தாக்கி மரணமடைந்துள்ளனர், இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, தனிக்கவனம் செலுத்தி நிரந்தர தீர்வு காணவேண்டிய மத்திய மாநில அரசுகள் கண்டும் காணாமலே இருந்து வருகிறது.

உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி 1993 முதல் விஷவாயு தாக்கி இறந்த துப்புரவு பணியாளர்களை கணக்கில் எடுத்து அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும், இதுவரை நச்சு வாயு தாக்கி இறந்தவர்களின் புள்ளி விபரங்களை அரசே கணக்கெடுக்க வேண்டும் எனவும் இந்த பொதுக்குழு தமிழக அரசை வலியுறுத்துவதோடு,

மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவரையும் கையால் மலமல்லும் தொழிலாளர்கள் என அரசு அறிவித்திட வேண்டும். மேலும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டிய அடையாள அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை இந்த பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம்.2
அரசியல் அதிகாரப் பகிர்வு தீர்மானம்.
""""'"""'""'""""""""""""""""""'
தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட அதாவது பட்டியலின மக்களில் மூன்றில் ஒரு பங்காக வாழக்கூடிய அருந்ததியர் மக்களுக்கு, கல்வி வேலை வாய்ப்புகளில் உரிய வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்ததால், கலைஞர் ஆட்சியில் 3 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கி கல்வியிலும், வேலையிலும் ஓரளவிற்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டது.

ஆனால் அரசியல் அதிகாரப் பங்கீட்டில் இதுவரை அருந்ததியர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டே வருகிறது. தமிழகத்தில் உள்ள 45 தனி சட்டப்பேரவை தொகுகளில், 44 தொகுதிகள் தாழ்த்தப்படோருக்கும், 1 தொகுதி பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தொகுதி மறுசீரமைப்பின் போது பெரும்பான்மையான தொகுதிகள் வட மற்றும் தென் மாவட்டங்களுக்குமே சென்றுள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு சட்டப்பேரவை தேர்தலிலும் பெரும்பான்மையான தனித் தொகுதிகளை பறையர்களுக்கும், பள்ளர்களுக்கும் மட்டுமே அனைத்து கட்சிகளும் ஒதுக்கி வருகிறது, இது சமூகநீதிக்கு எதிரானது என்று தெரிந்தும் ஒவ்வொரு கட்சிகளும் இதே நிலைப்பாட்டிலேயே உள்ளது.

நியாயப்படி அருந்ததியர் மக்களுக்கு கிடைக்கவேண்டிய மூன்றில் ஒரு பங்கான 15 தொகுதிகளையும் சேர்த்தே பறையர்களும், பள்ளர்களும் அனுபவித்து வருகின்றனர். இது அருந்ததியர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்,

எனவே வர இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில், ஒவ்வொரு கட்சியும் அருந்ததியர் மக்களுக்கு கிடைக்கவேண்டிய 15 தொகுதிகளை கட்டாயம் ஒதுக்கிதர வேண்டும் என்று இந்த பொதுக்குழு அனைத்து கட்சிகளையும் வலியுறுத்துகிறது.

குறிப்பாக சமூக நீதியை போற்றி வளர்க்கும் திராவிட முன்னேற்றக் கழகம் இதில் முக்கிய கவனம் செலுத்தி, வர இருக்கின்ற சட்டப்பேரவை தேர்தலில் 15 தொகுதிகளை அருந்ததியர் மக்களுக்கு ஒதுக்கவேண்டும், இதே போன்று ஆறு தனி நாடாளுமன்ற தொகுதிகளில் இரண்டு தொகுதிகளை அனைத்து கட்சிகளும் அருந்ததியருக்கு ஒதுக்கி தரவேண்டும், என இந்த பொதுக்குழு வலியுறுத்துகிறது.

மேற்கண்ட இரண்டு தீர்மானங்களையும் நடைமுறைப்படுத்த அரசுகளை வலியுறுத்தி இந்த ஆண்டு முழுவதும்! இழிவொழுப்பு, அதிகார மீட்பு ஆண்டாக ஆதித்தமிழர் பேரவையின் செயல்பாடுகள் அமையும்.
__________________
தலைமைக்காக
பொதுச்செயலாளர்,
ஆதித்தமிழர் பேரவை.
31.12.2017.