அண்மையச்செய்திகள்

Sunday, 27 November 2016

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில்.. கிணத்துக்கடவு முத்து மகாலில் நவீன குலக்கல்வி திட்ட எதிர்ப்பு கருத்தரங்கம் அனைவரும் பங்கேற்கலாம்.

திசம்பர்.6
புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில்..
கிணத்துக்கடவு முத்து மகாலில்
நவீன குலக்கல்வி திட்ட எதிர்ப்பு கருத்தரங்கம்
அனைவரும் பங்கேற்கலாம்.
________________
ஆதித்தமிழர் பேரவை

கோவை மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பாக 27.11.16 அன்று புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றதுஇக்கருத்தரங்கத்திற்கு வருகை புரிந்த ஆதித்தமிழர்களின் தலைமகன் அய்யா அதியமான் அவர்களை கோவை மாவட்ட பேரவையினர் மற்றும் பொதுமக்கள்\ சிறப்பான வரவேற்பு அளித்தனர் பின்னர்
புதிய கல்வி கொள்கையான நவீன குலகல்வி திட்ட எதிர்ப்பு கருத்தரங்கம் கோவையில் அய்யா அதியமான் அவர்கள் தலைமயில் பேரவையினர் மற்றும் திராளன பெண்கள் பொதுமக்களோடு சிறப்பாக நடைபெற்று வருகிறது


யாரைக் காவுகொடுக்க கருப்புப்பண கள்ளநோட்டு ஒழிப்பு போலி நடவடிக்கை.? ---- ஆதித்தமிழர் பேரவையின் வெளியீடான "ஆதித்தமிழன் அறிவாயுதம்* இதழின் தலையங்கம்.


யாரைக் காவுகொடுக்க கருப்புப்பண கள்ளநோட்டு ஒழிப்பு போலி நடவடிக்கை.? ---- ஆதித்தமிழர் பேரவையின் வெளியீடான "ஆதித்தமிழன் அறிவாயுதம்* இதழின் தலையங்கம்.

மத்தியில் ஆளும் மோடி அரசு கறுப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிப்பதாகச் சொல்லிக்கொண்டு, ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் நிலையை இன்று நாட்டில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. தாம் உழைத்து சம்பாதித்த பணத்தைக் கூட வாங்குவதற்கு ஒரு நாட்டின் குடிமக்கள் கால்கடுக்க நாள் முழுதும் வங்கிகளுக்கு எதிரே வரிசையில் காத்திருக்கிற கொடுமை உலகில் எந்த கொடுங்கோல் ஆட்சிகளிலும் நடந்தததாக பதிவுகளில்லை.

வங்கிகளுக்கு முன்னால் வரிசையில் காத்திருந்த மக்களில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 யும் தாண்டும் என்ற புள்ளி விபரம் வேதனையளிக்கிறது, அப்படி இறந்தோரில் ஒருவர்கூட பணக்காரர் இல்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது இதிலிருந்தே தெரிகிறது இது கறுப்புப் பணக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை இல்லை என்பது.

முன் யோசனையற்ற இந்த நடவடிக்கையால் நாட்டில் பெரும் கலவரம் ஏற்படலாம்! என உச்சநீதிமன்றமே தனது அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. இதனால் இந்தியா பெறும் பொருளாதாரப் பின்னடைவை சந்திக்கப்போகிறது, என பல்வேறு பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

மோடி அரசு பதவியேற்றதிலிருந்து ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கைத் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதிலேயே குறியாக உள்ளது. பகவத் கீதையை தேசிய நூலாக மாற்றுவதற்கான முயற்சிகள், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் மக்கள் உயிர்களை ஈவு இரக்கமற்ற முறையில் காவு கொண்டது. புதியக்கல்விக் கொள்கை என்ற பெயரில் குலக்கல்வி முறையை நடைமுறை படுத்தத் துடிப்பது, பொது சிவில் சட்டம் என்ற பெயரில் இசுலாமியர்களுக்கு எதிரான வன்மத்தை மேற்கொள்வது, என ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் இசுலாமிய மக்களுக்கு எதிராக நெருக்கடிகள் பலவற்றை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் மோடி அரசின் மதவெறி பாசிச செயல்பாடுகளோடு, இந்த நெருக்கடியும் வெகு மக்களின் கழுத்தை நெறிக்கும் செயலாகவே அமைந்துள்ளது.

மோடி அரசு பதவியேற்ற நாள் முதல் இன்று வரை வேலையற்றோருக்கு புதிய வேலை வாய்ப்புகளை போதிய அளவுக்கு உருவாக்கித்தரவில்லை, நாட்டை முன்னேற்றுவதற்கான உருப்படியான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை, வெற்றுக் கூச்சலும், உணர்ச்சியை தூண்டும் உரை வீச்சும், நாட்டுக்கு நாடு சுற்றிவரும் ஊதாரித்தனம் மட்டுமே நடந்து கொண்டிருக்கும் சூழலில் இப்போது எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கையால் இருக்கிற வேலை வாய்ப்புகளும் பறிபோகும் நிலைதான் உருவாகியுள்ளது,

விவசாயத் தொழிலாளர்களும், அமைப்புசாரா தொழிலாளர்களும் பட்டினி கிடந்து சாகும் நிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் குறைந்த பட்ச தற்சார்பு பொருளாதாரமும் அழிக்கப்பட்டு, பார்பனிய தரகு முதலாளிகள் மூலம் அன்னிய நாட்டு மூலதனங்களை இறக்குமதி செய்து கார்பரேட் நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறி அன்னிய நாட்டிடம் கையேந்துகின்ற சூழலே ஏற்படும்.

வராக்கடன் என்ற பெயரில் பல லட்சம் கோடிகளை தள்ளுபடி செய்யும் மோடி அரசு, தூய்மைப் பணியாளர்கள் பட்ட கடன்களையும், மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்களையும், சிறு குறு தொழில் புரியோர் பெற்ற கடன்களையும் வாராக் கடன் பட்டியலில் வைத்து தள்ளுபடி செய்ய முன்வருமா?

ஆக மோடியின் இந்த அறிவிப்பு கருப்புப்பண பேர்வழிகளை அழிப்பதல்ல, அன்றாடம் காய்ச்சிகளை நெருக்கடிக்கு உள்ளாக்கி அவர்களின் சுருக்குப் பையில் இருக்கும் காசைப் பிடுங்கி கருப்புப் பண முதலைகளிடம் கடனாக ஒப்படைக்கும் செயலன்றி வேறொன்றுமில்லை.

ஆக இப்போதாவது விழிதெழவேண்டும், மோடிக்கு ஆதரவாக அண்டப்புளுகளை அள்ளி வீசும் ஊடக பொய்யுரைகளுக்கு ஆட்படாமல் மக்கள் விரோத பார்பனிய பயங்கரவாத பாசிச மோடி அரசை அப்புறப்படுத்த ஜனநாயக சக்திகளும் வெகுமக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதே, இப்போதைக்கு நாட்டை பேரழிவிலிருந்து மீட்பதற்கான வழிமுறையாகும்.

ஆதித்தமிழர் பேரவை மகளிரணிச்செயலாளர் இராணி நினைவுநாளில் 26.11.2016 தாராபுரத்தில் சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக கணடன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஆதித்தமிழர் பேரவை மகளிரணிச்செயலாளர் இராணி நினைவுநாள் 26.11.2016 அன்று தாராபுரத்தில் சாதிஆதிக்க ஆணவ படுகொலைகளுக்கு எதிராக கணடன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கடந்த 26.11.2013 அன்று அருந்ததியர் மக்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தி தர கோரி
திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அம்பேத்கர் சிலை அருகில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து இறந்த திருச்சி இராணி அவர்களின் நினைவு நாளில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் தாபுரத்தில் சாதி ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு நிறுவனர் அதியமான் தலைமை தாங்கினார், கூட்டத்தில் பேரவை தோழர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு திருச்சி இராணி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
நிறுவனர் அதியமான் திருச்சி இராணி அவர்களை பற்றி குறிப்பிட்டு பேசும் போது, ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை முழங்க தொடர் போராட்டங்களால் கடந்த 2009 ஆம் ஆண்டு திமுக அரசால் அருந்ததிய மக்களுக்கு 3 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது, இதனால் இந்த மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறிய அளவு கூட பயன்பெறாமல் இருந்த காலங்கள் மாறி குறிப்பிட்ட அளவு பொறியாளர்களும், மருத்துவர்களும் உருவாக வாய்ப்புகள் அமைந்தது. இதற்கு காரணமான திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு ஆதித்தமிழர் பேரவையும் அருந்ததியர் மக்களும் மீண்டும் தங்களின் நெஞ்சம் நிறந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் அருந்ததியர்களின் நீண்ட கால கோரிக்கையான 6 விழுக்காடு இட ஒதுக்கீட்டு கோரிக்கையை வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இதை இப்போதைய அரசு அலட்சிய படுத்தாமல் அருந்ததிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய விகிதாச்சாரம் மற்றும் இழிநிலை ஒழிப்புக்கான வழி முறையாக  3 விழுக்காடு ஒட ஒதுக்கீட்டை  6 விழுக்காடாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி கடந்த 26.11.2013 ஆம் ஆண்டு ஆதித்தமிழர் பேரவை மாநில மகளிரணிச் செயலாளர் வீரமங்கை இராணி அவர்கள் திருச்சி அம்பேத்கார் சிலை அருகில் தீக்குளித்து இறந்தார். ஆதித்தமிழர் பேரவை இதுபோன்ற தீக்குளிப்பிற்கு ஆதரவு அளிப்பதில்லை என்றும் திருச்சி இராணி மற்றும் ஒட்டுமொத்த அருந்ததியர்களின் லட்சிய கோரிக்கையான 6 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தமிழக அரசு அளித்து இம்மக்களின் வாழ்வை மேம்படுத்த முன் வரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

கூட்டத்தின் தொடக்கத்தில் இராணி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது அதனை தொடர்ந்து. 26.11.2016 அன்று பிடல் காஸ்ட்ரோ இறப்பின் செய்தியை அறிந்த நிறுவனர், அவரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களையும், மக்கள் மீது அவருக்கு இருந்த மாறாத பற்றையும், அவர் எடுத்துக்கொண்ட போராட்ட யுக்திகளையும், அதற்காக அவர் செய்த தியாகங்களையும் நினைவு கூர்ந்து உரையாற்றினார். பின்னர் பிடல்காஸ்ட்ரோ மறைவிற்கு நூற்றுக்கணக்கான நீலச்சட்டை தொண்டர்கள் எழுந்து நின்று நிறுவனர் முன்னிலையில் அமைதிகாத்து இரண்டு நிமிடம் வீரவணக்கம் செலுத்தினர்.

மேலும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்.
***************
*தமிழகத்தில் நாளும் நாளும் அதிகரித்து வரும் சாதி ஆதிக்க ஆணவப்படுகொலை என்பது,
2013 பெரம்பலூர்.பார்த்திபன் 2013 தருமபுரி.இளவரசன் 2015 சேலம்.கோகுல்ராஜ்
2016 உடுமலைப்பேட்டை.சங்கர் 2016 பழனி.சிவகுருநாதன் என இதுவரை 100 க்கும் மேற்பட்ட ஆணவப்படுகொலைகள் நடந்துள்ளது, இந்த வன்கொடுமை ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என இக்கூட்டத்தின் மூலம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

*கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்பட்டு வரும் அருந்ததியர் மக்களுக்கான மூன்று விழுக்காடு இடஒதுக்கீட்டை தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கீடு செய்து நடைமுறைப் படுத்திட வேண்டும் என தமிழக அரசை இந்தப் பொதுக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.


*சோசலிச புரட்சியாளர் பிடல்காஸ்ட்ரோ விற்கு நீலச்சட்டை போராளிகள் வீரவணக்கம்*


26.11.2016
தாராபுரத்தில் நடைபெற்ற வீரமங்கை ராணி நினைவு நாள் நிகழ்வில் கியூபா வின் முன்னாள் அதிபர் பிடல்காஸ்ட்ரோ அவர்களின்  மறைவிற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் பேசிய நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் பிடல் காஸ்ட்ரோ வின் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களையும், மக்கள் மீது அவருக்கு இருந்த மாறாத பற்றையும், அவர் எடுத்துக்கொண்ட போராட்ட யுக்திகளையும், அதற்காக அவர் செய்த தியாகங்களையும் நினைவு கூர்ந்து உரையாற்றினார்.

பிடல்காஸ்ட்ரோ மறைவிற்கு நூற்றுக்கணக்கான நீலச்சட்டை தொண்டர்கள் எழுந்து நின்று நிறுவனர் முன்னிலையில் அமைதிகாத்து இரண்டு நிமிடம் *வீரவணக்கம் செலுத்தப்பட்டது.*
______________________
*ஆதித்தமிழர் பேரவை*
தலைமைக்காக
பொதுச்செயலாளர்.

நாளை 28.11.2016 அன்று தி.மு.க சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் பங்கேற்கவும்.


முன்னறிவிப்பின்றி 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதித்த பிஜேபி அரசைக் கண்டித்தும், தற்போது நிலவும் பணத் தட்டுப்பாடு நீங்கும்வரை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாளை (28.11.2016) நடைபெறும் ஆர்ப்பாட்டதிற்கு ஆதித்தமிழர் பேரவை தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும்  ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட கோரிக்கை வெற்றி பெற ஒத்துழைப்பு தருவார்கள் என்பதை  தெரிவித்துக் கொள்கிறேன்.

இவண்
இரா.அதியமான்
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.
27.11.2016

Thursday, 24 November 2016

தாழ்த்தப்ட்ட மக்களின் வீடுகளில் தீ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களுடன் #ஆதித்தமிழர் பேரவையினர் திடீர் குடியேறும் போராட்டம் --- ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு


தேனி அல்லிநகரம் 12வடு வார்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் வீடுகள் தீ விபத்தில் எரிந்து அதில் உன்ன உணவு உணவின்றி உடுத்த உடையின்றி தங்க இடமின்றி நிரந்தரமாக வீட்டுமனை பட்டா நிவாரணமாக வழங்கிட வலியறுத்தி மாவட்ட ஆட்சியை அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது இதில் திரளான  நூற்றுக்கணக்கான பெண்கள் குழந்தைகளும் ஆதித்தமிழர் பேரவையினரும் திரளாக கலந்து கொண்டனர் இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பதற்ற சூழ்நிலை நிலவியது மற்றும் செய்தியாளர்களும் குவிய தொடங்கினர்.
குடியேறும் போராட்டத்திற்கு தலைமைதாங்கிய மாவட்ட செயலாளர் தோழர் இரா இளந்தமிழன் அவர்கள்
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது தேனி அல்லிநகரம் 12 வது வார்டில் அருந்ததிய மக்கள் நீண்டநாள் குடியிருந்து வருகின்றனர் இங்கு இருக்கும் வீடுகளில் 22.11.2016 அன்று மாலை பொழுதில் திடீரென்று தி பற்றி எரிந்தது இதனால் அங்கு 5 வீடுகளும் ஒரு கடையும்  மேல் தீ பற்றி எரிந்து  முற்றிலும் சாம்பலானது இந்த சம்பவத்தால் அந்த வீடுகளில் வைத்திருந்த அரசு ஆவணங்கள் குழந்தைகளில் கல்வி சான்றிதழ்கள் பிறப்பு சான்றிதழ்கள்,ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்கள் என முழுவதும் எரிந்து சாம்பலாகி போனது..தற்போது அந்த மக்கள் பொருளையும் ,பணத்தையும் இழந்து உன்ன உணவின்றி உடுத்த உடையின்றி தங்க இடமின்றி உள்ளனர் .
இதனை தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதியும் இலவச வீட்டு மனை பட்டாக்களும் உடனே வழங்க வேண்டும் ஆதித்தமிழர் பேரவை இம்மொளோடு இணைந்து ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தி வருகிறோம் என்று கூறினார்
குடியேறும் போராட்டத்திற்கு
தலைமை
இரா இளந்தமிழன் - மாவட்ட செயலாளர்
முன்னிலை தீப்பொறி அரசு - மாவட்ட தலைவர்
நீலக்கனலன் - மாநில தொழிலாளர் பேரவை துணைச்செயலாளர்
பழ விடுதலைவேந்தன் - மாவட்ட துணைச்செயலாளர்
கோட்டுர் ஜெயவேல் - தேனி ஒன்றியச்செயலாளர்
ஆ. நாகராஜன் - தேனீ நகரச்செயலாளர்

காணொளியை காண இங்கு சொடுக்கவும்


Wednesday, 23 November 2016

பல்கலைகழகங்களில் நடைபெற்றுவரும் முறைகேடுகளுக்கு எதிராக ஆதித்தமிழர் பேரவையின #ஜனநாயக போராட்டங்கள் தொடரும். ---- ஆதித்தமிழன்- ஊடகமையம் (ஆதபே)


அருந்ததிய மக்களுக்கு கிடைக்கப்பெற்ற சிறு உரிமைகளை பெறுவதற்கு கூட வருட கணக்கில் போராட வேண்டிய அவலம்.

#அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டின் மூலம் பாரதியார் பல்கலைகழகத்தில்11 இடங்களும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் 2 இடங்களும் பேராசிரியர் துணை பேராசிரியர் இடங்கள் அருந்ததியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது சிறு மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில் அருந்ததியர் மக்களுக்கு மூன்று #விழுக்காடு உள் இடஒதுக்கீடு முன்னுரிமை அடிப்படையில் கடந்த 2009 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் உள்ள பலதுறைகளில் இச்சட்டம் நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனையிலும் வேதனையானது,

குறிப்பாக பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர், இணை பேராசிரியர், மற்றும் பேராசிரியர் போன்ற பணிகளில் அருந்ததியர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டும், அந்த இடங்களை வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்தி திட்டமிட்டு மறுக்கப்பட்டே வருகிறது, மேலும் இதுவரை தமிழ்நாட்டில் உள்ள 22 மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிக்கு அருந்ததியர் ஒருவர் கூட நியமிக்கப் படவில்லை.

இதில் குறிப்பாக 30 ஆண்டுகளாக மேற்கு மண்டலத்தில் இயங்கி வரும் பாரதியார் பல்கலைக்கழகம் உள் இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தாமல் முறைகேட்டில் ஈடுபடுவதில் முதன்மையாய் விளங்கி வந்தது, மேற்கு மண்டலத்தில் அருந்ததியர்களும், கவுண்டர்களும் அதிகளவில் உள்ள நிலையில், தகுதி உள்ள ஒரு பட்டியல் இனத்தவரோ அல்லது ஒரு அருந்ததியரோ இதுவரை பாரதியார் பல்கலை கழகத்தில் துணை வேந்தராக அமர்த்தப்படவில்லை.

இப்படி முறைகேடாக நடந்து கொள்ளும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை எதிர்த்து கடந்த 22.3.2012 அன்று ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் உடனிருக்க கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைகழங்களிலும் குறிப்பாக பாரதியார் பல்கலைகழகத்தில் அருந்ததியர் மக்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை முறையாக நடைமுறை படுத்தாமல் திட்டமிட்டு அலட்சியப்படுத்தி வருவதை அம்பலப்படுத்தி தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் இதனை கண்டித்து 2.4.2012 அன்று #பாரதியார் #பல்கலைக்கழகம் முன்பு ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பும் செய்யப்பட்டது.

அறிவித்தபடி #ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்து பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு 2.4.2012 அன்று போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய நிறுவனர் அதியமான் அவர்கள் பல்கலைக்கழக மானிய குழு (UGC) தனது சுற்றறிக்கையில் 31.03.2102 க்குள் SC / ST காலியிடங்களை சிறப்பு நியமன தேர்வின் (Special recruitment drive) மூலம் நிறைவு செய்ய ஆணையிட்டும், ஆதிக்க சாதி மனோநிலை கொண்ட இந்த பல்கலைக்கழக நிர்வாகம் இந்த நிமிடம் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதோடு,

#UGC தற்காலிக ஆசிரியர் பணி நியமனங்கள் செய்ய 35 பேர் தேர்ந்தெடுக்க விளம்பரம் கொடுத்ததில் "(SC(A) க்கு 5 பேர்" , இதில் (SC(A) இல் ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், மீதம் நான்கு பேருக்கு நேர்காணலே நடத்தப்படவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் தேர்தெடுக்கப்பட்ட 26 பேரில் 17 பேர்களும் ஒரே சமூகத்தை (கவுண்டர்) சார்ந்தவர்கள்.

இது மட்டுமல்லாமல் தற்காலிக ஆசிரியர் பணியாளர்களின் பணி நியமனம் 31.03.2012 இல் முடிவடையம் நிலையில் பல்கலைகழக மானிய குழுவின் நெறிமுறைகளை மீறியும் அரசின் இட ஒதுக்கீடு அரசாணைகளை மீறியும் மீண்டும் பணியமர்த்த முயற்சி மேற்கொள்ளப்படுவதன் மூலம் SC அருந்ததியர்களுக்கான பணிவாய்ப்பு திட்டமிட்டு மறுக்கப்படுகிறது இதை பாரதியார் பல்கலைக்கழக ஆட்சி குழு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்,

தொடர்ந்து, பல்கலைக்கழக மானிய குழு UGC தனது 11.வது ஐந்தாண்டு திட்டத்தில் பட்டியிலின மாணவர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதி சுமார் ஒன்றரை கோடி ரூபாயை Remedial Coaching Classes மூலம் மாணவர்களின் குறை களைவு பயிற்சி வகுப்புகள் நடத்த ஒதுக்கப்பட்ட நிதியை ஐந்தாண்டுகாலமாக செலவிடாமல் நிதியாண்டு இறுதியில் அவசர அவசரமாக செலவிட ஆணையிட்டுள்ளது எனவும், இதனால் பட்டியலின மாணவ மாணவியர்களுக்கு கிடைக்கவேண்டிய பயனை வஞ்சனையாக திட்டமிட்டு இந்த நிர்வாகம் சூழ்ச்சியோடு தடுத்து நிறுத்தியள்ளது மட்டுமல்லாமல்

பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழுவிலும் (சிண்டிகேட்) மற்றும் தகுதி நிலை கண்டறியும் குழுவிலும் (Scrutinizing Comitee ) பட்டியல் இனத்தவர்களுக்கு எந்த பிரதிநிதித்துவமும் இந்த நிர்வாகம் வழங்கவில்லை எனவும், இது போல் இந்நிர்வாகத்தின் பல்வேறு முறைகேடுகளை பட்டியலிட்டார்.

இது தொடர்பாக #விசாரணை கமிஷன் அமைத்து விசாரித்து பட்டியிலின மாணவர்களின் உரிமையை பாதுக்காக்க நடவடிக்கை வேண்டும் எனவும் தமிழக அரசை கேட்டு கொண்டார்.

இதே போல் 23.6.2014 அன்று மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டில் நிரப்பவேண்டிய பணியிடங்களை நிரப்பாமல் முறைகேடு செய்யும் காமராசர் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அய்யா #அதியமான் அவர்கள் தலைமையில் #காமராசர் பல்கலைக் கழகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் கோரிக்கை மனு நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

இந்த நிலை பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல தொடக்க பள்ளி ஆசிரியர் தேர்விலும் கூட இந்நிலையே இருந்து கொண்டிருக்கிறது, அருந்ததியர் மக்களின் உள் இட ஒதுக்கீடு 3 விழுக்காடு வழங்க பட்ட பின். அருந்ததிய மக்கள் ஓரளவு பயன்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த ஒதுக்கீட்டைக் கூட அருந்ததிய மக்கள் பெற்று விட கூடாது என சில அரசு நிர்வாகங்களினாலும், அருந்ததிய மக்களுக்கு கிடத்திருக்கும் இந்த குறைந்த அளவு உள் இட ஒதுக்கீடும் கூடாது என சிலர் நயவஞ்சகமாக செயல்பட்டு வரும் நிலையில்,

ஆதித்தமிழர் பேரவை மற்றும் ஜனநாயக அபைப்புகளின் தொடர் போராட்டங்களினாலும் கோரிக்கை மனுக்களாலும் பாரதியார் பல்கலைக்கழகம், மற்றும் சில பல்கலைகழகங்களில் அருந்ததியர் மக்களுக்கு பேராசிரியர் துணைப்பேராசிரியர் பதவிகள் நிரப்பப்பட்டு வருகிறது என்ற செய்திகள் கடுகளவு மகிழ்ச்சி தருகின்றன.

அருந்ததிய மக்களுக்கு கிடைக்கப்பெற்ற சிறு உரிமையை பெறுவதற்கு கூட வருட கணக்கில் போராட வேண்டிய அவல நிலையில் இன்றும் அருந்ததியர் மக்கள் இருப்பதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, கல்வி வேலை வாய்ப்புகளில் அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்திட வேண்டுமெனவும், இந்த் ஒதுக்கீட்டை அரசியலிலும் ஒதுக்கீடு செய்து அருந்ததிய மக்களுக்கு உரிய பங்கை அளிக்க வேண்டும் எனவும், இதனை கண்காணிக்க அரசு கண்காணிப்பு குழு அமைத்து

அருந்தத்தியர் மக்களின் இட ஒதுக்கீட்டின் அளவினை 6.விழுக்காடாக உயர்த்தி வழங்கிட, முறையாக நடைமுறை படுத்திட வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை மீண்டும் தமிழக அரசை கேட்டு கொள்கிறோம்.

என்று சாதி ஒழிப்பு பணியில் அய்யா அதியமான் வழியில்
ஆதித்தமிழன்
#ஆதித்தமிழர் #பேரவை #ஊடக #மையம்.


Tuesday, 22 November 2016

கோவையில் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு கருத்தரங்கம் மற்றும் கோவை இருகூர்,காமாட்சிபுரம் கிளையில் பெயர் பலகை திறப்பு & கொடியேற்று நிகழ்வு

கோவையில் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு கருத்தரங்கம் மற்றும் கோவை இருகூர்,காமாட்சிபுரம் கிளையில் பெயர் பலகை திறப்பு & கொடியேற்று நிகழ்வு
************
சிறப்புரை
சமூகநீதி போராளி
இரா.அதியமான்
*****
துவக்கவுரை
நீலராணுவ தளபதி
ஆ.நாகராசன்
*************
தலைமை
மகேசு - கிளைதலைவர்
************
வரவேற்புரை
கோவை சிவா - மாநகரச்செயலாளர்
***********
கருத்துரை
சே.கோபால் -- மாநில குழு
நா.முருகன் - மாவட்டச்செயலாளர்
***********
முன்னிலை
மு.சண்முகம் - செயலாளர்
தங்கமணி - துணைச்செயலாளர்
ச.வினோத்குமார் - நிதிச்செயலாளர்
சுரேசு குமார் - துணைத்தலைவர்
சுதா - மகளிரணி தலைவர்
சாரதாமணி - செயலாளர்
நதியா - துணைச்செயலாளர்
பூவாததாள் நிதிச்செயலாளர்
இளைஞரணி
சக்திவேல்
வெ.நாராயணன்
பழ பெருமாள்
மாவீரன்
மற்றும் ஊர் பொதுமக்கள்.
************

"ஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்கும் விடுதலை"

Monday, 21 November 2016

கோவையில் காமாட்சிபுரம் நொய்யல் பகுதியில் ஆதித்தமிழர் பேரவை புதிய கிளை தொடங்கப்பட்டது.

21.11.2016 கோவை மாநகரம் காமாட்சிபுரம் நொய்யல் பகுதியில் ஆதித்தமிழர் பேரவை தொடக்கம்.
தோழர் மல்லேஷ், சண்முகம், வினோத்குமார் ஆகியோர் கூட்டத்தை ஏற்பாடு செய்தனர்.
கூட்டத்தில்

மகளிர் பேரவை பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவராக பத்மாவதி,
து.தலைவராக கலைவாணி,
செயலாளராக தங்கமணி து.செயலாளராக.சாரதாமணி உள்ளிட்ட 7 பேர் கொண்ட பொறுப்பாளர்களும்.

பேரவைக்கு
தலைவராக மல்லேஷ்,
செயலாளராக சண்முகம்,
நிதிச்செயலாளராக வினோத்குமார் துணைச் செயலாளராக நதியா என்ற லட்சுமி உள்ளிட்ட 7 பேர் கொண்ட பொறுப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்,

மேலும் இளைஞர் அணியும் தேர்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் பொதுச்செயலாளர் நாகராசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
ஆட்டோ.சிவா, இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.Thursday, 17 November 2016

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பரமத்தி ஒன்றியம் அண்ணாநகர்-இந்திராநகர் பகுதியில் அய்யா அதியமான் அவர்கள் எளிய மக்களிடம் தீவிர பிரச்சாரம் 17.11.2016அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்ப்பாளர் கே.சி.பழனிச்சாமியை ஆதரித்து பிரச்சார கடைசி நாளில்.. பேரவையின் தலைவர் அதியமான் அவர்கள் அருந்ததியர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு.
இடம்..
பரமத்தி ஒன்றியம்
அண்ணாநகர்-இந்திராநகர்