அண்மையச்செய்திகள்

Tuesday, 31 October 2017

பெரியார்-அம்பேத்கர் படிப்பு வட்டம் அமெரிக்கா சிறப்பு சொற்பொழிவு ஆற்றுகிறார் அய்யா அதியமான்

பெரியார்-அம்பேத்கர் படிப்பு வட்டம் அமெரிக்கா
சிறப்பு சொற்பொழிவு

தலைப்பு - சமூகநீதியும் அடிதட்டு மக்களும்
சொற்பொழிவு வழங்குகிறார் - தோழர் அதியமான் (ஆதித்தமிழர் பேரவை நிறுவனர்)

தோழர் அதியமான் அவர்கள் பல்வழி (Conference) அழைப்பின் மூலம் நம்முடன் பேசவிருக்கிறார். நீங்கள் இருக்கும் இடத்திலே இந்த கூட்டத்தில் பல்வழி அழைப்பின் வாயிலாக கலந்து கொண்டு பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்.

அமெரிக்க நேரம் : வெள்ளிக்கிழமை நவம்பர் 17ம் நாள் இரவு 9.00 PM EST
இந்திய நேரம் : சனிக்கிழமை நவம்பர் 18ம் நாள் காலை 7.30 AM IST

Join Teleconference Call by phone
USA Dial-In Number, +1 701801 1211
INDIA Dial-In Number, +91 7400 130 536
Access-Code : 109155053#

Join Online Meeting by Computer / Smartphone from anywhere
https://tinyurl.com/PASCamerica
Online Meeting Id : pascamerica

( தோழர் அதியமான் அவர்கள் செப்டம்பர் 30 - 2017அன்று அமெரிக்காவில் California மாகாணத்தில் செயல்பட்டு வரும் Ambetkar king study circle புதிய இணையதளத்தை
www.akscusa.org தொடங்கி வைத்து "ஆதித்தமிழர் பேரவை கடந்து வந்த பாதை" என்ற தலைப்பல் பல்வழி (conference call)அழைப்பின் மூலம் செவ்வி வழங்கி இருந்தார்கள்
அதன் முழு செவ்வியை கேட்க
செவ்வி mp3 - https://drive.google.com/…/0B-Dkvyw7NXuYX2VFaU9SVGRvM…/view…
-
Youtube link -
https://youtu.be/YBqAPowaLhE )

கரூரில் கந்து வட்டி கொடுமைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்

கரூரில் கந்து வட்டி கொடுமைக்கு எதிரான
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்
"""""""""""""''''''''''''''''''”"""""'"''''''''''''''''''""""""""""""""""""""""
தமிழகத்தில் கந்து வட்டி சட்டத்தை தீவிரமாக
நடைமுறை படுத்த கோரியும்,
மத்திய அரசு, மாநில அரசுகளை
கண்டித்து
சாமானிய மக்கள் நல கட்சி மற்றும்
தோழமை இயக்கங்களின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்
ஆதித்தமிழர் பேரவை சார்பில் கலந்து கொண்டு தோழர் முல்லயரசு ,சக்திவேல் உள்ளிட்டட தோழர்கள் கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்#stand_with_mugilan #release_mugilan கரூரில் இன்று மனு அளிக்கப்பட்டது:

#stand_with_mugilan
#release_mugilan
கரூரில் இன்று மனு அளிக்கப்பட்டது:
1. சுற்றுசூழல் செயற்பாட்டாளர் முகிலன் அவர்களை கடந்த 18-09-2017 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஆழ்வார் திருநகரி சாலையில் வைத்து இலங்கையில் வெள்ளை வேன் கடத்தல் போன்று வாகனத்தில் கடத்தி கைது செய்த காவல் துறை மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும்,
2. முகிலன் அவருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும்,
3. கூடங்குளத்தில் போராடிய மக்கள் மீது போடப்பட்டுள்ள 132 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரியும்,
4. பல்வேறு குறைபாடுகளுடன் உள்ள கூடங்குளம் அணுவுலைகளை நிரந்தரமாக மூடவும், அங்கு கூடுதலாக உருவாக்க திட்டமிட்டுள்ள அணு உலைத் திட்டங்களை கைவிடவும் மத்திய மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
5. இயற்கை வளங்களை பாதுகாக்க போராடிய முகிலன் அவர்களை விடுதலை செய்யக்கோரியுமான மனு இன்று கரூர் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது...

பங்கு பெற்ற அமைப்புகள்:
1. தோழர் முகிலன் விடுதலைக்கான ஆதரவு இயக்கம்
2. நம்மாழ்வார் மன்றம்
3. காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்
4. தந்தை பெரியார் திராவிட கழகம்
5. ஆதித் தமிழர் பேரவை
6.சாமானிய மக்கள் நலக் கட்சி
7.புரட்சி பாரதம் கட்சி

அமெரிக்க மாகாணத்தில் கலிபோர்னியாவில் செயல்பட்டுவரும் அம்பேத்கர் படிப்பு வட்டத்தை (Ambetkar King Study Circle ) சார்ந்த தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.அமெரிக்க மாகாணத்தில் கலிபோர்னியாவில் செயல்பட்டுவரும் அம்பேத்கர் படிப்பு வட்டத்தை (Ambetkar King Study Circle ) சார்ந்த தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
இப்படிப்பு வட்டத்தில் தன்னையும் இனைத்துக்கொண்டு சிறப்பாக செயல்பட்டுவரும் #ஆதித்தமிழர_பேரவையை சேர்ந்த அண்ணன் செல்வா (நடுவில் Blue check shirt) அவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

நாடு கடந்து அண்ணலை கொண்டு சேர்க்கும் #AKSC தோழர்கள் அனைவருக்கும் தாயகத்திலிருந்து #ஆதித்தமிழர்_பேரவை சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருவைகுண்டம் ஒன்றியம் உட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சி அருந்ததியர் பகுதியில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருவைகுண்டம் ஒன்றியம் உட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சி அருந்ததியர் பகுதியில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது

ஆதித்தமிழர் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருவைகுண்டம் ஒன்றியம் உட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சி அருந்ததியர் பகுதியில் நேற்று 29/10/2017 காலை 11.00 மணியளவில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

தலைமை:
ஒன்றிய துணைத்தலைவர், கொம்பன்
முன்னிலை:
ஒன்றிய தலைவர், முனியாண்டி
ஒன்றிய செயலாளர், கதிர்வேல்
ஒன்றிய நிதிச்செயலாளர், சக்திவேல்
ஒன்றிய இளைஞரணி செயலாளர்,
வைகைசெல்வன்
ஒன்றிய மாணவரணி செயலாளர், அருந்ததிமுத்து
மற்றும் நகர,கிளை பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வரதராஜபுரம் நகர பொறுப்பாளர் பட்டியல்;

நகர தலைவர்,
செந்தில்
நகர செயலாளர்,
அர்ச்சுனன்
அமைப்பு செயலாளர்,
கருப்பசாமி
இளைஞரணி செயலாளர்,
பெருமாள்
பொறுப்பாளர்கள் பட்டியல் தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தின் தீர்மானங்கள்:

பகுதியில் கொடி கம்பம் பெயர்பலகை அமைக்கப்பட வேண்டும்.

பகுதியின் அடிப்படை வசதிகள் இல்லாமை, தெரிவிக்கப் பட வேண்டும்.

ஒன்றியத்தின் அனைத்து கிளையிலும் கந்துவட்டி புகார்கள் இருந்தால் அதனை மாவட்டத்திற்கு தெரியபடுத்த வேண்டும்.

தகவலுக்காக

சு.அருந்ததிமுத்து
ஒன்றிய மாணவரணி செயலாளர்
ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம்
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
#ஆதித்தமிழர்பேரவை
புற்றுநோயில்லா மாநகரை உருவாக்குவோம் ! எதிர்கால தலைமுறையையை வளமாக்குவோம் !

புற்றுநோயில்லா மாநகரை உருவாக்குவோம் !
எதிர்கால தலைமுறையையை வளமாக்குவோம் !
#நீரோடை
#ஈரோடு

எதிர்கால தலைமைறையின் மேல் அக்கறையில் விழிப்புணர்வு செய்துக்கொண்டிருக்கும் ஆதித்தமிழர் பேரவை ஊடகப்பிரிவுச் செயலாளர் தோழர் இரா வீர வேந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
எதிர்கால தலைமுறையை
வளமாக்குவோம்
#ஆதித்தமிழர்_பேரவை
.

*நவம்பர் 8 கறுப்பு நாள்* - தமிழகத்தில் முன்னெடுக்கும் தி.மு.க விற்கு ஆதித்தமிழர் பேரவை ஆதரவு.*நவம்பர் 8 கறுப்பு நாள்* - தமிழகத்தில் முன்னெடுக்கும் தி.மு.க விற்கு ஆதித்தமிழர் பேரவை ஆதரவு.

*நவம்பர் 8 கறுப்பு நாள்*
பண மதிப்பிழப்பு செய்து இமாலய ஊழல் புரிந்த மக்கள் விரோத மோடி அரசின் பொருளாதாரத் தோல்வியை மக்களிடன் எடுத்துச் சொல்ல இந்திய அளவில் ஒருங்கிணைப்படும் போராட்டத்தை தமிழகத்தில் முன்னெடுக்கும் தி.மு.க விற்கு ஆதித்தமிழர் பேரவை ஆதரவு.
"""""""""""""""""""""""""""""""""""""
தலைவர் அதியமான் அறிவிப்பு.
"""""""""""""""""""""""""""""""""""""
கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி மோடி அரசு பணமதிப்பிழப்பு முடிவை முன்னறிவிப்பின்றி அறிவித்தது. அதன் முதலாண்டு நிறைவு நாளை கறுப்பு நாளாக கடைபிடித்து, மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு மிகப்பெரிய பொருளாதார தோல்வியை சந்தித்து உள்ளது என, மக்களுக்கு எடுத்துச் சொல்ல தேசிய அளவில் காங்கிரஸ், இடசாரி உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின் அடிப்படியில் நவம்பர் 8 ஆம் தேதி அன்று தமிழகத்தில் தி.மு.க தலைமை ஏற்று மாவட்டம் தோறும் கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்று செயல்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதை ஆதித்தமிழர் பேரவை வரவேற்கிறது. நடைபெறவுள்ள இந்த போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் பெரும் திரளாக பங்கேற்று போராட்டத்தை வலுவடையச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

மோடி அரசின் பண மதிப்பிழப்பு அறிவிப்பால் தமது சொந்த பணத்தை வங்கியில் போட்டுவிட்டு அதை எடுப்பதற்காக வரிசையில் காத்திருந்ததில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்த செய்திகளும், ஏராளமான சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை சந்தித்ததும், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் சுமார் 3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதையும், ரிசர்வ் வங்கியே இப்போது ஒப்புக்கொண்டுள்ள நிலையில்,

கறுப்புப் பணத்தைப் பிடிப்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை என்றும், இதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பிரதமர் மோடி மிகவும் ஆவேசமாக முழங்கினார். ஆனால் கடந்த ஓராண்டில் கறுப்புப்பண முதலைகள் எவரையும் பாஜக அரசு கண்டுபிடிக்கவோ கைது செய்யவோ இல்லை, என்பதுதான் கடந்த ஓராண்டின் வரலாறு சொல்கிறது.

பழைய நோட்டுகளுக்குப் பதிலாக புதிய நோட்டுகளை மாற்றித்தரும் சட்டவிரோத செயல்களில் பாஜகவினர் பலர் ஈடுபட்ட செய்திகள்தான் அப்போது வெளிவந்து கொண்டே இருந்தது. சுதந்திர இந்திய வரலாற்றில் மோடி அரசின் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் மிகப்பெரிய ஊழல் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

பொருளாதார சிந்தனையோ நாட்டு மக்கள் மீது அக்கறையோ இல்லாமல் கர்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மோடி அரசு எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தோல்விக்காகவும், அதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பலியானதற்காகவும், பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். என்று ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிப்புக்குள்ளான மக்களின் நிலை குறித்து பேச வேண்டிய எடப்பாடி பழனிச்சாமி அரசு, வாக்களித்த மக்களுக்கு துரோகமிழைத்து மோடி அரசிற்கு காவடி தூக்கும் பினாமி அரசாக செயல்பட்டு வரும் நிலையில், மோடி அரசின் பொருளாதார தோல்விகளை மக்களிடம் விரிவாக எடுத்துச்சொல்ல தி.மு.க தலைமையில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பங்கெடுப்பதோடு, மோடி அரசின் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த போராட்டம் தமிழகம் மற்றும் இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை விரும்புகிறது,

எனவே பேரவை தோழர்கள் அந்தந்த மாவட்டத்தில் தி.மு.க நடத்தும் போராட்டத்தில் பங்கேற்று போராட்டத்தை வலுவடையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவண்
இரா.அதியமான்
நிறுவனர்/தலைவர்,
ஆதித்தமிழர் பேரவை.
29.10.2017 கோவை.விருதுநகர் மாவட்டம் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

29.10.17 விருதுநகர் மாவட்டம் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்டச்செயலாலர் பூவை ஈஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அநீதிகளுக்கு எதிராய் மக்களை அணிதிரட்டுவோம்
ஆதித்தமிழர்களாய் விடுதலையாவோம் அய்யா அதியமான் வழியில்

மேலப்பாளையம் தோழர் மாரிமுத்து அவர்களின் தந்தையார் அவர்களுக்கு ஆதித்தமிழர் பேரவையினர் புகழஞ்சலிநெல்லை மாவட்ட களப்போராளி மேலப்பாளையம் தோழர் மாரிமுத்து அவர்களின் தந்தையார் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்
ஆதித்தமிழர் பேரவை சார்பில் தோழர ்கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினார்கள்
திருப்பூர் தெற்கு மாவட்ட சிறப்பு செயர்குழு கூட்டம் நடைபெற்றது29.10.17 திருப்பூர் தெற்கு மாவட்ட சிறப்பு செயர்குழு கூட்டம் மாவட்டச்செயலாளர் தோழர் அர்ச்சுனன் தலைமையில் நடைபெற்றது
தலைமை நிலையச்செயலாளர் ஆனந்தன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்
திருச்செங்கோட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய கருத்தரங்கத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் ,

திருச்செங்கோட்டில்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய கருத்தரங்கத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் ,

கல்வியாளர்
தோழர்.பிரின்சு கஜேந்திபாபு.
உரைநிகழ்த்தும்,
'சமத்துவத்திற்கான கல்வி'
என்கிற தலைப்பில் கருத்தரங்கில்.

ஆதித்தமிழர் பேரவையின்
துணை பொதுச்செயலாளர்
தோழர் செல்வ விள்ளாலன் கலந்து கொண்டார்
வன்கொடுமை திருத்த சட்டம்-2015, கையால் மலமள்ளும் தடைச்சட்டம் கந்துவட்டி தடைச்சட்டம், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில்..கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,28.10.2017 மாலை 4.30 மணியளவில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில்..
அய்யா அதியமான் ஆணைக்கு இணங்க..

வன்கொடுமை திருத்த சட்டம்-2015,
கையால் மலமள்ளும் தடைச்சட்டம்
கந்துவட்டி தடைச்சட்டம்,
உள்ளிட்ட மக்கள் நலனுக்கான சட்டங்களை முழுமையாக நடைமுறைப் படுத்தத் தவறும்..

எடப்பாடி பழனிச்சாமி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் அலட்சியப் போக்கை கண்டித்து, ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சின்னச்சாமி தலைமை தாங்கினார். சோழன், துரையரசன், கனகசபை, வீரக்குமார், வீரசக்திவேல், குணசேகரன், ஈரோடு அழகுமணி, சித்திரா, வீரக்குமார், இளைஞரணி பிரபாகரன், இராமகிருட்டிணன்,

சசி,மனித உரிமை அமைப்பு குருசாமி, தி.வி.க பொறுப்பாளர், முகிலரசன், தி.மு.க சிடிசி.வேலுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

ஆர்ப்பாட்ட இறுதியில் பேரவை பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் அவர்கள் கண்டன பேருரை ஆற்றினார்.

50 பெண்கள் உட்பட 90 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பட்டத்தை சிறப்படைய செய்தனர்.

திருப்பூர் வடக்கு மாவட்டம்.ஆதித்தமிழர் பேரவையின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

ஆதித்தமிழர் பேரவையின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
*********
தேனி கம்பம் பகுதி அரசு மருத்துவமனையில் மக்கள் வாழும் பகுதியில் கொட்டபடுவதை எதிர்த்து கம்பம் பகுதி ஆதித்தமிழர் பேரவையினர் முற்றுகை செய்திருந்தனர்.இதன் மீது மருத்துவமணை நிர்வாகம் கவணத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளது
தகவல்
அதியர்மணி ஆதித்தமிழர்பேரவைஅருந்ததியர் உள்ஒதுக்கீடு பாதுகாப்பு கருத்தரங்கத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்

அருந்ததியர் உள்ஒதுக்கீடு பாதுகாப்புபு கருத்தரங்த்திக்கு மாநிலநிதிசெயலாளர்
ப.பெருமாவளவன் அவர்களுடன் மாநிலதுனைபொது
செளலாளர் கபீர்நகர்
காத்திக் ..மாநில இளைஞரணிசெயலாளர்.செல்வம் மற்றும் மாநகர்மாவட்டசெயலாளர் க.சாமிகண்ணு
ப.ஆதவன் செல்லப்பாண்டி கொளி
ரமேஷ் சரவணன் உசிலை.சேனைமுத்து

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் கருகிய உயிர்களுக்கு நீதி கோரி ஈரோடு வடக்குமாவட்ட அந்தியூர் ஒன்றிய ஆதித்தமிழர் பேரவை சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் கருகிய உயிர்களுக்கு நீதி கோரி
ஈரோடு வடக்குமாவட்ட அந்தியூர் ஒன்றிய ஆதித்தமிழர் பேரவை சார்பில் நடந்த
கண்டன ஆர்ப்பாட்டம்
27.10.2017 இன்று மாலை 5 மணியளவில்.
அந்தியூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. 40 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்பாட்டத்திற்கு,
மாவட்ட செயலாளர் மா.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
ஆ.நாகராசன், பொதுச்செயலாளர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இரா.வீரவேந்தன் ஊடகப்பிரிவு செயலாளர்.
மாவட்டத்தலைவர், தருமலிங்கம்,
ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் வீரக்குமார், அழகுமணி, தலைவர் இராமகிருட்டிணன், உள்ளிட்டோர் தனது கண்டனங்களை பதிவு செய்தனர். ஒன்றிய செயலாளர் ராஜா, மோகன், மீனா, லட்சுமி, அங்குராஜ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
ஆதித்தமிழர் பேரவை
ஈரோடு வடக்கு மாவட்டம்.

கந்துவட்டி கொடுமைகளை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டும் தமிழக அரசையும் காவல்துறையையும் கண்டித்தும் ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அணைத்து காட்சிகள் நெல்லை சாலை மறியல் --- பரபரப்பு

கந்துவட்டி கொடுமையால் உயிரிழந்த இசக்கிமுத்து குடும்பத்திற்கு நீதிகேட்டும் கந்துவட்டி கொடுமைகளை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டும் தமிழக அரசையும் காவல்துறையையும் கண்டித்தும் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பாக அனைத்து கட்சிகள் சார்பில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் திரளான தோழர்கள் கலந்து கொண்டு கைதானார்கள்'
திராவிடர் விடுதலை கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் தோழர் #அன்புரோசு அவர்களின் இறுதி நிகழ்வில் ஆதித்தமிழர் பேரவையினர் வீரவணக்கம் செலுத்தினர்

திராவிடர் விடுதலை கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் தோழர் #அன்புரோசு அவர்களின் இறுதி நிகழ்வில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் தோழர் அருந்ததி அரசு தூத்துக்குடி கு.கி. கலைகண்ணன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்

Sunday, 29 October 2017

*நவம்பர் 8 கறுப்பு நாள்* பண மதிப்பிழப்பு செய்து இமாலய ஊழல் புரிந்த மக்கள் விரோத மோடி அரசின் பொருளாதாரத் தோல்வியை மக்களிடன் எடுத்துச் சொல்ல இந்திய அளவில் ஒருங்கிணைப்படும் போராட்டத்தை தமிழகத்தில் முன்னெடுக்கும் தி.மு.க விற்கு ஆதித்தமிழர் பேரவை ஆதரவு.

*நவம்பர் 8 கறுப்பு நாள்* பண மதிப்பிழப்பு செய்து இமாலய ஊழல் புரிந்த மக்கள் விரோத மோடி அரசின் பொருளாதாரத் தோல்வியை மக்களிடன் எடுத்துச் சொல்ல இந்திய அளவில் ஒருங்கிணைப்படும் போராட்டத்தை தமிழகத்தில் முன்னெடுக்கும் தி.மு.க விற்கு ஆதித்தமிழர் பேரவை ஆதரவு.
"""""""""""""""""""""""""""""""""""""
தலைவர் அதியமான் அறிவிப்பு.
"""""""""""""""""""""""""""""""""""""
கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி மோடி அரசு பணமதிப்பிழப்பு முடிவை முன்னறிவிப்பின்றி அறிவித்தது. அதன் முதலாண்டு நிறைவு நாளை கறுப்பு நாளாக கடைபிடித்து, மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு மிகப்பெரிய பொருளாதார தோல்வியை சந்தித்து உள்ளது என, மக்களுக்கு எடுத்துச் சொல்ல தேசிய அளவில் காங்கிரஸ், இடசாரி உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின் அடிப்படியில் நவம்பர் 8 ஆம் தேதி அன்று தமிழகத்தில் தி.மு.க தலைமை ஏற்று மாவட்டம் தோறும் கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்று செயல்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதை ஆதித்தமிழர் பேரவை வரவேற்கிறது. நடைபெறவுள்ள இந்த போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் பெரும் திரளாக பங்கேற்று போராட்டத்தை வலுவடையச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

மோடி அரசின் பண மதிப்பிழப்பு அறிவிப்பால் தமது சொந்த பணத்தை வங்கியில் போட்டுவிட்டு அதை எடுப்பதற்காக வரிசையில் காத்திருந்ததில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்த செய்திகளும், ஏராளமான சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை சந்தித்ததும், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் சுமார் 3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதையும், ரிசர்வ் வங்கியே இப்போது ஒப்புக்கொண்டுள்ள நிலையில்,

கறுப்புப் பணத்தைப் பிடிப்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை என்றும், இதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பிரதமர் மோடி மிகவும் ஆவேசமாக முழங்கினார். ஆனால் கடந்த ஓராண்டில் கறுப்புப்பண முதலைகள் எவரையும் பாஜக அரசு கண்டுபிடிக்கவோ கைது செய்யவோ இல்லை, என்பதுதான் கடந்த ஓராண்டின் வரலாறு சொல்கிறது.

பழைய நோட்டுகளுக்குப் பதிலாக புதிய நோட்டுகளை மாற்றித்தரும் சட்டவிரோத செயல்களில் பாஜகவினர் பலர் ஈடுபட்ட செய்திகள்தான் அப்போது வெளிவந்து கொண்டே இருந்தது. சுதந்திர இந்திய வரலாற்றில் மோடி அரசின் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் மிகப்பெரிய ஊழல் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

பொருளாதார சிந்தனையோ நாட்டு மக்கள் மீது அக்கறையோ இல்லாமல் கர்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மோடி அரசு எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தோல்விக்காகவும், அதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பலியானதற்காகவும், பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். என்று ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிப்புக்குள்ளான மக்களின் நிலை குறித்து பேச வேண்டிய எடப்பாடி பழனிச்சாமி அரசு, வாக்களித்த மக்களுக்கு துரோகமிழைத்து மோடி அரசிற்கு காவடி தூக்கும் பினாமி அரசாக செயல்பட்டு வரும் நிலையில், மோடி அரசின் பொருளாதார தோல்விகளை மக்களிடம் விரிவாக எடுத்துச்சொல்ல தி.மு.க தலைமையில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பங்கெடுப்பதோடு, மோடி அரசின் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த போராட்டம் தமிழகம் மற்றும் இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை விரும்புகிறது,

எனவே பேரவை தோழர்கள் அந்தந்த மாவட்டத்தில் தி.மு.க நடத்தும் போராட்டத்தில் பங்கேற்று போராட்டத்தை வலுவடையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவண்
இரா.அதியமான்
நிறுவனர்/தலைவர்,
ஆதித்தமிழர் பேரவை.
29.10.2017 கோவை.Saturday, 28 October 2017

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் கருகிய உயிர்களுக்கு நீதி கோரி ஈரோடு வடக்குமாவட்ட அந்தியூர் ஒன்றிய ஆதித்தமிழர் பேரவை சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் கருகிய உயிர்களுக்கு நீதி கோரி
ஈரோடு வடக்குமாவட்ட அந்தியூர் ஒன்றிய ஆதித்தமிழர் பேரவை சார்பில் நடந்த
கண்டன ஆர்ப்பாட்டம்
27.10.2017 இன்று மாலை 5 மணியளவில்.
அந்தியூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. 40 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்பாட்டத்திற்கு,
மாவட்ட செயலாளர் மா.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
ஆ.நாகராசன், பொதுச்செயலாளர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இரா.வீரவேந்தன் ஊடகப்பிரிவு செயலாளர்.
மாவட்டத்தலைவர், தருமலிங்கம்,
ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் வீரக்குமார், அழகுமணி, தலைவர் இராமகிருட்டிணன், உள்ளிட்டோர் தனது கண்டனங்களை பதிவு செய்தனர். ஒன்றிய செயலாளர் ராஜா, மோகன், மீனா, லட்சுமி, அங்குராஜ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
ஆதித்தமிழர் பேரவை
ஈரோடு வடக்கு மாவட்டம்.

Friday, 27 October 2017

கந்துவட்டி கொடுமைகளை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டும் தமிழக அரசையும் காவல்துறையையும் கண்டித்து ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அணைத்து காட்சிகள் நெல்லை சாலை மறியல் --- பரபரப்பு

ந்துவட்டி கொடுமைகளை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டும் தமிழக அரசையும் காவல்துறையையும் கண்டித்தும் ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அணைத்து காட்சிகள் நெல்லை சாலை மறியல் --- பரபரப்பு
*********

கந்துவட்டி கொடுமையால் உயிரிழந்த இசக்கிமுத்து குடும்பத்திற்கு நீதிகேட்டும் கந்துவட்டி கொடுமைகளை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டும் தமிழக அரசையும் காவல்துறையையும் கண்டித்தும் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பாக அனைத்து கட்சிகள் சார்பில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் திரளான தோழர்கள் கலந்து கொண்டு கைதானார்கள்