அண்மையச்செய்திகள்

Tuesday 28 November 2017

பசுமைவீடு திட்டநிதியை, அமுக்க நினைக்கும் திட்டக்குடி பேரூராட்சி நிர்வாகிகள்...!

பசுமைவீடு திட்டநிதியை,
அமுக்க நினைக்கும் திட்டக்குடி
பேரூராட்சி நிர்வாகிகள்...!
_____________________
27-11-2017 இன்று மதியம் கடலூர் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களிடம் திட்டக்குடியை சேர்ந்த தருமக்குடிகாடு பகுயில் உள்ள ந.அண்ணாத்துரை என்பவர் கூரைவீடு கடந்த ஆண்டு தீப்பிடித்து சாம்பலான தால் இவருக்கு பசுமைவீடு கட்டித்தர அரசு முன்வந்தது
கடன் பட்டு...!
லோல் பட்டு...!! வீடுகட்ட
அஸ்திவாரம் போடும்போது மட்டும் ரூபாய் 45000 கொடுத்த அதிகாரிகள் இப்போது வீட்டை முழுவதும் கட்டிமுடிந்த பின்பும் மீதம் ரூபாய் 1,65,000 தரமறுக்கிறது அமுக்கப் பார்க்கிறது திட்டக்குடி பேரூராட்சி நிர்வாகம் அதனால் கடலூர் மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் பேரவையின் மாவட்ட துணை செயலாளர் தோழர் ராஜா மற்றும் அ.சந்திரலேகா அவர்களும் புகார் மனுவை கொடுக்க வந்தபோது கலெக்டர் இல்லாததால் சப்கலெக்டரிடம் மனு கொடுத்த போது உடன் நானும்.
இரா.செல்வம்
மாநிலச்செயலாளர்
ஆதித்தமிழர் இளைஞர் பேரவை

ரிக் வண்டி முதலாளிகளால் படுகொலை செய்யப்பட்ட சுரேஷ் குடும்பத்திற்கு அய்யா நேரில் ஆறுதல்

ரிக் வண்டி முதலாளிகளால் படுகொலை செய்யப்பட்ட சுரேஷ் குடும்பத்திற்கு அய்யா நேரில் ஆறுதல்
ரிக் வண்டி முதலாளிகளால் படுகொலை செய்யப்பட்ட சுரேஷ் குடும்பத்திற்கு அய்யா நேரில் ஆறுதல் கூறினார்  அதனை தொடர்ந்து செய்தியர்களுக்கு பேட்டியளித்தார்
*நாமகிரிப்பேட்டை சுரேஷ் படுகொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்....!
*வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் வழிகாட்டுதலின் படி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் மற்றும் வீடு ,நிலம் உள்ளிட்ட சட்ட உரிமைகளை வழங்கு....!
*நாமக்கல் மாவட்டத்தில் உள்ள லாரி, ரிக் தொழிலாளர்கள் மர்மமான முறையில் காணாமல் போவதும், பிணமாக மீட்பதும், தொடர்கதையாக உள்ளது .
எனவே , மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் பதியப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை, மர்ம மரணங்கள் ,கடத்தல், காணவில்லை என்கிற வகையான புகார்களை மத்திய புலனாய்வு துறை #CBI விசாரணை க்கு உத்தரவிட வேண்டும்....!
*சாதியவாதிகளுக்கு துணையாக பாதிக்கப்பட்டோரின் புகாரை பெற மறுக்கும் காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்....!
*தமிழகத்தில் நடக்கும் மத,சாதியவாதிகளின் பினாமி எடப்பாடி ஆட்சியில் ஒடுக்கப்பட்டோர் மீது தாக்குதல்,படுகொலைகள்,கடத்தல்,
கொள்ளை,கந்துவட்டி கொடுமை, தற்கொலை ,மாணவர்கள் தற்கொலை என சட்டம்,ஒழுங்கு சீர்கெட்டு மக்களின் பாதுகாப்பை அச்சுருத்தும் ஆட்சியை அகற்ற வேண்டும்...! எனவும்
திட்டக்குடி, திண்டுக்கல்,நாமக்கல், மதுரை என நாளுக்கு நாள் தலித்கள் கொலையாவதை வேடிக்கை பார்க்கும் அரசையும், காவல்துறையையும் கண்டித்து..... தலைவர் #அதியமான்
நாமகிரிப்பேட்டை சுரேஷ் இல்லத்தில் பேட்டி..... 27/11/17
இரா.செல்வ வில்லாளன்
துணை பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை






மதுரை ஆட்சியர் அலுவலகம் ஆதித்தமிழர் பேரவையினரால் முற்றுகை

மதுரை ஆட்சியர் அலுவலகம் ஆதித்தமிழர் பேரவையினரால் முற்றுகை
**********
மதுரை மாநகராட்சி 29 வது வார்டு கபீர்நகர் அருந்ததியர் மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரியும்,பொதுகழிப்பறை,குடிநீர் வசதிகளை செய்து தரக்கோரி 27.11.2017 இன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் குடியேறும் போராட்டத்தில் மாநில துனைபொதுச்செயலாளர் கார்த்திக்,மாவட்டச்செயலாளர் ஆதவன், துனைச்செயலாளர் அன்புச்செழியன்,மணிகண்டன், மற்றும் பேரவை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.



திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அய்யா அதியமான் தலைமையில் முற்றுகை செய்து அதிகாரிகளிடம் மனு அளித்தார்

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அய்யா அதியமான் தலைமையில் முற்றுகை செய்து அதிகாரிகளிடம் மனு அளித்தார்
*****
திண்டுக்கல் மூன்று துப்புரவு பணியாளர் படுகொலைக்கு நீதி கோரி..

திண்டுக்கல் மாநகராட்சியில் நிருவனர் அதியமான் அவர்கள் தலைமையில் முற்றுகை செய்து அதிகாரிகளிடம் மனு அளித்தார்




Sunday 26 November 2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு! ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் அறிவிப்பு.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு! ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் அறிவிப்பு.
********************************
எதிர்வரும் திசம்பர் 21 ல் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர் சகோதரர் மருதுகணேசனை ஆதரித்து அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பது என ஆதித்ததமிழர் பேரவை தலைமைக்குழு முடிவு செய்து அறிவிப்பு செய்கிறது.
இதற்கான ஆதரவுக் கடித்தத்தை தி.மு.க செயல்தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நேரில் கொடுத்து தங்களது ஆதரவை உறுதிபடுத்தும் என ஆதித்தமிழர் பேரவை தலைமைக்குழு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குழப்பநிலை செயலற்ற எடப்பாடி.பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க பினாமி அரசினால் தமிழகத்தில் நிலவுகின்ற பல்வேறு நெருக்கடிகளை சமாளிக்க முடியாமலும், தமிழக நலனுக்கு ஏற்றவாறு முடிவெடுக்க முடியாமலும் திணறிக்கொண்டு இருக்கிறது,
தங்களது கட்சிக்குள் உள்ள உட்கட்சி குழப்ப நிலையை சமாளிக்கும் முயற்சியில் மட்டுமே தங்களது முழுக்கவனத்தை செலுத்தி வருவதால், தமிழக மக்களின் நலன் குறித்து எந்தவித கவலையும், அக்கறையும் காட்டாமல் மக்களின் நம்பகத்தன்மையை அ.தி.மு.க அரசு இழந்து நிற்கிறது.
இந்நிலையில் மீனவர் படுகொலை, கந்துவட்டி தற்கொலைகள், ஆள்கடத்தல், கூலிப்படை கொலைகள், விவசாய நிலங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம், பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரளஅரசின் அடாவடித்தனம் போன்ற, நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், தமிழப் பெண்களுக்கான பாதுகாப்பும் கேள்விக்குறியாகி கொலை கொள்ளை வழிப்பறி திருட்டு என தமிழக அரசின் சட்ட ஒழுங்கும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.
தி.மு.க ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு, தமிழகத்தை அழிவுப் பாதையை நோக்கி அழைத்துச் சென்று மக்கள் விரோத செயலில் ஈடுபட்டு வருகிறது,
தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அருந்ததியர் மக்களுக்கான 3 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தாமலும், பல்கலைக் கழக இணை மற்றும் துணைப் பேராசிரியர்கள் நியமங்களிலும், தமிழக அரசுத்துறையில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள வேலைவாய்பு நியமனங்களிலும் நேரடியாக ஆளும் அ.தி.மு.க அமைச்சர்கள் தலையிட்டு பல லட்சம் ரூபாயை கையூட்டாகப் பெற்றுக் கொண்டு அருந்ததியர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பறித்து அவற்றை பிற சமூகத்தவருக்கு மடைமாற்றி விடுகின்ற முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மனிதக் கழிவுகளை மனிதன் அகற்றும் இழிவினை ஒழித்திடும் முயற்சியில், தூய்மை தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காகவும், மறுவாழ்விற்காகவும் தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தூய்மைத் தொழிலாளர் நலவாரியத்தை அ.தி.மு.க அரியணை ஏறியது முதல் அதை கிடப்பில் போட்டு செயலிழக்கச் செய்து, நவீனக் கருவிகள் வாங்குவதற்கான முயற்சிகள் ஏதும் எடுக்காதனால் மலக்குழி மரணங்கள் நாளும் நாளும் அதிகரித்துக் கொண்டே போகிறது, இதனால் அவர்களது வாழ்வு கேள்விக்குறியாகி வருகிறது. இப்படி எந்த துறைகளும் முன்னேற்றம் காணாமல் முற்றிலும் முடங்கிக் கிடக்கும் செயலற்ற அ.தி.மு.க பினாமி ஆட்சியை அகற்றுவதற்கு மக்கள் தயாராகிவிட்டனர், அதனுடைய வெள்ளோட்டம்தான் இந்த இடைத்தேர்தல், ஆகவே ஆர்.கே.நகர் வாக்காளப் பெருமக்கள் கையில் கிடைத்திருக்கின்ற இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்காகவும், தமிழக முன்னேறத்திற்காவும் முழு நேரமாக உண்மை உணர்வோடு உழைத்து வரும் தலைவர் கலைஞர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ள தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் திராவிட முன்னேற்றக் கழக செயல்தலைவரின் லட்சியத்தை நிறைவேற்ற அவர் அறிவித்திருக்கும் வேட்பாளர் சகோதரர் மருதுகணேஷ் அவர்களுக்கு, நமது வாக்குகளை அளித்து தமிழக வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கிட வேண்டும் என்பதை கேட்டுகொள்வதோடு, தி.மு.க வேட்பாளரை ஆதரித்து அவரது அமோக வெற்றியை உறுதி செய்திட ஆதித்தமிழர் பேரவை தனது பிரச்சரத்தை ஆர்.கே.நகர் தொகுதியில் செய்திடும் என்று இந்த அறிவிப்பின் மூலம் தெரியபடுத்திக் கொள்கிறேன்.
இவண்
இரா.அதியமான்,
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.
26.11.2017
தொடர்புக்கு,
"""""""""""""""""""
பொதுச்செயலாளர்
ஆ.நாகராசன்
9442701235
தலைமை நிலைய செயலாளர்,
வழ.ச.சு.ஆனந்தன்,
.9443066307


வீரமங்கை திருச்சி இராணி அவர்களின் நினைவு நாளில் சமூகநீதி பாதுகாப்பு விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது

வீரமங்கை திருச்சி இராணி அவர்களின் நினைவு நாளில் சமூகநீதி பாதுகாப்பு விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது

வீரமங்கை திருச்சி இராணி அவர்களின் நினைவிடம் மற்றும் இல்லத்தில் அவரின் உருவப்படத்தை வைத்து வீரவணக்கம் செலுத்திவிட்டு சமூகநீதி பாதுகாப்பு விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது










திருச்சியில் வீரமங்கை இராணி அவர்களின் நினைவிடத்தில் அய்யா அதியமான் தலைமையில் நீலச்சட்டை இரானுவம் வீரவணக்கம் செலுத்தினர்

திருச்சியில் வீரமங்கை இராணி அவர்களின் நினைவிடத்தில் அய்யா அதியமான் தலைமையில் நீலச்சட்டை இரானுவம் வீரவணக்கம் செலுத்தினர் 


மதுரை சேடப்பட்டி ஒன்றியம் உத்தப்புரம் பட்டாளம்மன் நகரில் ஆதித்தமிழர் பேரவையின் புதிய கிளை தொடக்கம்

மதுரை சேடப்பட்டி ஒன்றியம் உத்தப்புரம் பட்டாளம்மன் நகரில் ஆதித்தமிழர் பேரவையின் புதிய கிளை தொடக்கம்
*******
இன்று 26.11.17 மதுரை சேடபட்டி ஒன்றியம் உத்தப்புரம் பட்டாளம்மன் நகர் பகுதியில்
கிளை தொடங்கி அறிமுக கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது
ஒன்றிய செயலாளர். பூப்பாண்டி. தலைமையில் நடைபெற்றது.
அதில் நான்(விடுதலை சேகரன்) கலந்து கொண்டு ஆதித்தமிழர்பேரவை யின் கொள்கை பற்றியும்
#அய்யா அதியமான்#
அவர்கள் அருந்ததியர் சமூக விடுதலை நோக்கி பயணிக்கும் அவரது அயராத உழைப்பு பற்றியும்,
அமைப்பு ஆவதின் அவசியத்தையும் நம் சமூகத்தை எவ்வாறு தீண்டாமை வன்கொடுமை பிரச்னைகளிலிருந்து மீட்டெடுப்பது குறித்து பேசினேன்.
கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர்.
நாகராஜ் 7548866467
செயலாளர்.
ஜெ.பாண்டி
8524834450
நிதிச்செயலாளர்.
S.ராமகிருஷ்ணன்
9047907010
அமைப்பு செயலாளர்.
சங்கிலி பாண்டி
8778897362
கொ.ப.செயலர்.
சூர்யா.
8675722380
து.செயலாளர்.
மு.பால்பாண்டி
7339672570
தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பேரவை உறுப்பினர் அடையாள அட்டையை பெற்று இன்று முதல் பேரவை உறுப்பினர்களாக தங்களை பதிவு செய்து கொண்டனர்.
இறுதியில் பூப்பாண்டி நன்றியுரை ஆற்றி கூட்டத்தை முடித்து வைத்தார்.
தகவலுக்காக.
சி.விடுதலை சேகரன்.
ஆதித்தமிழர்பேரவை.
மதுரை.



ஆதித்தமிழர் பேரவை ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம் சார்பில் வீரத்தாய் ராணிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

ஆதித்தமிழர் பேரவை ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம்  சார்பில் வீரத்தாய் ராணிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

வீரத்தாய் ராணிக்கு வீரவணக்கம்
உள் இட ஒதுக்கீட்டை அய்யா அதியமான்
தலைமையில் வென்றெடுப்போம்
வென்றெடுப்போம்...
ஆதித்தமிழர் பேரவை ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம் பாளையங்கோட்டை

கு.கி.கலைகண்ணன்




வேலைக்கு சென்ற தந்தை எலும்புக் கூடாய்..மூன்று குழந்தைகள் தவிப்பு

*வேலைக்கு சென்ற தந்தை எலும்புக் கூடாய்..*
*மூன்று குழந்தைகள் தவிப்பு*
""""""""''''""'''"""""""""""""""""
ஒருமாசம் ஆகுது ஏம்மா இன்னும் அப்பா வரல.. எங்க மேல அப்பாவுக்கு பாசமே கிடையாதா?
அப்பா வந்தா திங்கிறதுக்கு ஏதாவது வாங்கித் தருவாரு, ஸ்கூலுக்கு போகும் போது சாக்லெட் வாங்கி கொடுத்து முத்தம் கொடுத்து அனுப்பி வைப்பாரு.. எப்பமா வருவாரு அப்பா..
என கடந்த ஒரு மாதகாலமாக அப்பாவை காண ஏங்கிக் கிடக்கும் மூன்று குழந்தைகளின் ஏக்கத்தை போக்குவதற்கு, பதில் ஏதும் தெரியாத நிலையில், இன்று வருவார் நாளை வருவார் என்று குழந்தைகளுக்கு சமாதானம் சொல்லி தேற்றுவதோடு, கணவர் என்ன ஆனார்! அவரிடம் இருந்து ஒரு போன் கூட வரவில்லையே என ஒவ்வொறு நாளையும் ஒரு யுகமாக கழித்து வந்த சுரேசின் மனைவிக்கு நேற்று வந்த தொலைபேசி அழைப்புதான் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உனது கணவர் சத்தியமங்கல காட்டில் மரங்களின் இடுக்கில் சிக்கி பிணமாக கிடக்கிறார், நீ வந்து அடையாளம் காட்ட வேண்டும் என்பதே அந்த தொலைபேசியின் தகவல்! பேசியது நாமகிரிப்பேட்டை காவல் அதிகாரி ஒருவர்.
தொலைபேசி தகவலைக் கேட்டு, இதயமே நின்று போன சுரேசின் மனைவி, இரவு முழுவதும் அழுது புலம்பிய நிலையில், அங்கு கிடப்பது தனது கணவரின் உடலாக இருக்கக் கூடாது என ஊரில் உள்ள கடவுள்களை எல்லாம் இரவு முழுவதும் வேண்டியுள்ளார்.
இரவு கழிந்தது பொழுது விடிந்தது (25.11.2017) அதிகாலையில் சத்தியமங்கலத்திற்கு புறப்பட்டு பண்ணாரியைத் தாண்டி மைசூர் போகும் வழியில் எத்தனையோ வளைவுகள், அதில் 28 வது வளைவில் குவிந்திருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து அதிர்ந்து போன சுரேசின் மனைவியிடம், மரத்தின் இடுக்கில் சிக்கி கிடந்த உடலை காட்டிய போது, அந்த உடலில் மேல் அணிந்திருந்த பேண்ட்டும் பெல்ட்டும் தனது கணவரதுதான் என்று தெரிந்தவுடன் மயக்கம் அடைந்து விட்டார்.
உடலை கைப்பற்றி கொண்டு வர முயற்சி செய்த போது, சுரேசின் மண்டை ஓடும், கை கால் எழும்புகள் மட்டும்தான்! கிடைத்தது.
கடந்த 20.10.2017 அன்று கடத்தப்பட்ட சுரேசை 23 ஆம் தேதி பொம்மைக் குட்டை மேட்டில் வைத்து படுகொலை செய்து, இரண்டு மூன்று வாகனங்களில் உடலை மாற்றி மாற்றி எடுத்துச் சென்று, இறுதியாக மைசூருக்கு சரக்கு ஏற்ற சென்ற லாரி போல ஒரு லாரியை செட்டப் செய்து, பூபதி, சிலம்பரசன் ஆகிய ஓட்டுனர்களைக் கொண்டு, ஓட்டுனர் இருக்கைக்கு பின்னால் உள்ள ஓய்வெடுக்கும் படுக்கையில் கிடத்தி, செக் போஸ்டுகளை கடக்கும் போது, சுரேசை தூங்குவதாக சொல்லி ஏமாற்றி, 28 வது வளைவில் சுரேசின் உடலை இறக்கி கை கால்களை ஆளுக்கு ஒருவர் பிடித்து வீசி எறிந்துள்ளனர்.
அப்படி வீசி எரியப்பட்ட சுரேசின் உடல்தான் தற்போது எலும்புக் கூடாக கிடைத்துள்ளது. இந்த உண்மைகள் அனைத்தையும் ஒத்துக் கொண்டது. பூபதியும் சிலம்பரசனும்தான்!
இந்த கொலைச் சம்பவத்தில், மகாலட்சுமி ரிக் வண்டி உரிமையாளர் தனசேகரன், அவனது தம்பி மைத்துனர், இன்னொரு ஓனர்.. என பெரிய நெட் ஒர்க் கும்பல் ஈடுபட்டு உள்ளது.
இந்த கும்பல்களுக்கு பைனான்ஸ் செய்வது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பினாமிகள் கரூர் பைனான்சியர்களாம்!
இதுவரை ரிக் வண்டி வேலைக்கு சென்று வீடு திரும்பாதோர் எண்ணிக்கை 30 யும் தாண்டுமாம்,
ஆதித்தமிழர் பேரவையின் விடா முயற்சியும், சமரசமாகாத போர் குணமும்தான் சுரேசின் கொலையை கண்டுபிடிக்க காரணமாக அமைந்தது,
ரிக் வண்டி உரிமையாளர்களின் மறுபக்கத்தை முழுமையாக கண்டுபிடித்து இது வரை காணாமல் போனவர்களுக்கு நீதி கிடைக்கப் பேரவையின் முயற்சி தொடரும்,
குறிப்பு:- சுரேசின் எலும்புகள் DNA பரிசோதனைக்கு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மற்ற பாகங்கள் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் உள்ளது, நாளை மறுநாள் உடலின் பாகங்களை சுரேசின் உறவினர்களிடம் காவல்துறை ஒப்படைக்குமாம்!
அப்பாவின் ஏக்கத்தில் கிடக்கும் மூன்று குழந்தைகளுக்கு எந்த உறுப்பைக் காட்டி தேற்றப் போகிறாரோ சுரேசின் மனைவி.
--நாகராசன்
ஆதித்தமிழர் பேரவை.
25.11.2017 இரவு 11.17

ரிக் வண்டி மரணம் உடல் மலையடியில்

ரிக் வண்டி மரணம் உடல் மலையடியில்

நாமக்கல்லில் ஒரு மாதத்திற்கு.முன் கானாமல் போன சுரேஷ் என்பவரை மலை அடியில் உடல் கிடப்பதாக போலிசார் கூறியதால் 27 கொண்டை ஊசி வளைவில் திம்பம் பகுதியில் தற்போது பேரவையினர் காவ்லதுறையினர்..

இது சம்பந்தமாக ஆதித்தமிழர் பேரவையினர் தொடர் போராட்டம் நடத்தினதின்ல் தற்போது.உடல் இங்கு.இருக்கிறது அடையாளம் காட்டுங்இள் என்று குடுமப்தினரை அழைத்துள்ளனர்..குடும்பத்தினருடன் பேரவையினர்

முந்தைய செய்தி
_____
*ரிக்க வண்டி ஓனரால் கடத்தப்பட்ட சுரேஷ் படுகொலை செய்யப்பட்டு சத்தியமங்கலம் காட்டில் பிணமாக மீட்பு!*
""""""""""""""""""""""""""""""""""
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்த அருந்ததியர் சுரேஷ், கடந்த 20.10.2017 அன்று அட்வான்ஸ் பணத்தை வாங்கிக்கொண்டு வேலைக்கு வரவில்லை என்று மகாலட்சுமி போர்வெல் வாகன உரிமையாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த தனசேகரன் என்பவனால் அடித்து இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

மேற்படி சுரேஷ் என்பவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன, இவர் பேரவை ஒன்றிய செயலாளர் ராமேஷ் என்பவரின் உடன் பிறந்த சகோதன் ஆவார். இவர் கடத்தி செல்லப்பட்ட நாள்முதல் காவல்நிலைய முற்றுகை, எஸ்.பி அலுவலத்தில் முறையீடு என தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படாதால், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூலம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் இன்று 24.11.2017 நாமக்கல் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் நாமகிரிப்பேட்டை பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

இந் நிலையில் கடத்தி சென்ற ரிக்வண்டி உரிமையாளர் மீது ஏற்கனவே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளான், அந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் மூன்று நபர்களை நேற்று முன்தினம் கைது செய்து விசாரிக்கப்பட்டதில், சுரேஷை கொலை செய்து சத்தியமங்கலம் காட்டில் வீசியதாக ஒத்துக்கொண்டுள்ளனர். அந்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறை நேரில் சென்று பார்த்ததில், அங்கு கிடப்பது சுரேஷின் உடல்தான் என்பது உறுதியாகியுள்ளது.

நாளைக் காலை சுரேஷின் உறவினர்களை அழைத்து உடலை அடையாளம் காணவைப்பதாக சுரேஷின் மனைவிக்கு தகவல் கொடுத்துள்ளது காவல்துறை.

இந்த தகவலை அறிந்த மாவட்ட செயலாளர் மணிமாறன் காவல்துறையை தொடர்பு கொண்டு விசாரித்ததில்.. கொலை செய்யப்பட்டது உண்மைதான் என்பது தெரிய வந்துள்ளது.

எனவே நாளை விசாரணைக்கு நாமக்கல் மாவட்ட தோழர்கள் சத்தியமங்கலம் வருவதால், ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு தந்து உதவிட வேண்டும் என்று கேட்டுகொள்கிறது பேரவை தலைமைக் குழு.
____________________
தகவலுக்காக
பொதுச்செயலாளர்.
24.11.2017 இரவு 9.15.




நெல்லை - பாளையங்கோட்டை அரசுமருத்துவமனையில் குழந்தைகள் அவலம் - ஆதித்தமிழர் பேரவை செய்தியாளர்கள் சந்திப்பு



நெல்லை - பாளையங்கோட்டை அரசுமருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சுமார் 40 குழந்தைகளை காற்று வசதி கழிப்பிட வசதி என்று எந்த வசதியும் இல்லாத வேறு வார்டுக்கு மாற்றியுள்ளது மருத்துவமனை நிர்வாகம் அந்த வார்டில் குழந்தைகளுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு அனைவரும் வார்டை விட்டு வெளியேறியதால் சிகிச்சை பெற முடியாமல் பத்து மணி நேரம் அவதிப்பட்டுள்ளனர் மதியம் பதினோறு மணியிலிருந்து இரவு பத்து மணிவரை குளிர்ந்த காற்றில் பிள்ளைகளோடு வாசலில் இருந்துள்ளனர்
நோயாளிகளுக்கு அறை வசதி செய்து கொடுக்காத நிர்வாகம் அவர்கள் சிகிச்சை பெற்று வந்த அறையிலிருந்து அவர்களை வெளியேற்றி விட்டு அந்த இடத்தில் மீட்டிங் ஏற்பாடு செய்துள்ளனர்
மனசாட்சி இல்லாத மருத்துவர்கள்
நோயாளிகளுக்கு முன் ஏற்பாடு செய்யாமல் அவர்களை வெளியேற்றிய மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் இரவு பத்து மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் வசதியான வார்டுக்கு நோயாளிகள் மாற்றி அதன்பின்
சிகிச்சை அளித்தனர்..
ஊடக பத்திரிக்கையாளர்களின் முயற்சியால் அவர்களது கோரிக்கை நிறைவேறியது
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தேன்

கு.கி.கலைகண்ணன்





சிவகங்கைமாவட்டம் கருத்தரங்கம் குறித்து கலந்தாய்வு கூட்டம்

சிவகங்கைமாவட்டம் கருத்தரங்கம் குறித்து கலந்தாய்வு கூட்டம்

24-11-2017 இன்று சிவகங்கைமாவட்டம் சிவகங்கைநகர் 26வது வார்டு அகிலாண்டபுரம் பகுதி தோழர் ரஞ்சித் தலைமையில்,தோழர்காசிநாதன் முன்னிலையில் டிசம்பர்10ல் உள்ஒதுக்கீடும்-சமூகநீதியும் கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்டத்தலைவர் ம.பால்பாண்டி,மாவட்டச்செயலாளர்அழ.பாலு ஆகியோர்கள் கலந்துகொன்டனர்கள்



ரிக்க வண்டி ஓனரால் கடத்தப்பட்ட சுரேஷ் படுகொலை செய்யப்பட்டு சத்தியமங்கலம் காட்டில் பிணமாக மீட்பு!

ரிக்க வண்டி ஓனரால் கடத்தப்பட்ட சுரேஷ் படுகொலை செய்யப்பட்டு சத்தியமங்கலம் காட்டில் பிணமாக மீட்பு!
""""""""""""""""""""""""""""""""""
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்த அருந்ததியர் சுரேஷ், கடந்த 20.10.2017 அன்று அட்வான்ஸ் பணத்தை வாங்கிக்கொண்டு வேலைக்கு வரவில்லை என்று மகாலட்சுமி போர்வெல் வாகன உரிமையாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த தனசேகரன் என்பவனால் அடித்து இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

மேற்படி சுரேஷ் என்பவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன, இவர் பேரவை ஒன்றிய செயலாளர் ராமேஷ் என்பவரின் உடன் பிறந்த சகோதன் ஆவார். இவர் கடத்தி செல்லப்பட்ட நாள்முதல் காவல்நிலைய முற்றுகை, எஸ்.பி அலுவலத்தில் முறையீடு என தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படாதால், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூலம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் இன்று 24.11.2017 நாமக்கல் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் நாமகிரிப்பேட்டை பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

இந் நிலையில் கடத்தி சென்ற ரிக்வண்டி உரிமையாளர் மீது ஏற்கனவே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளான், அந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் மூன்று நபர்களை நேற்று முன்தினம் கைது செய்து விசாரிக்கப்பட்டதில், சுரேஷை கொலை செய்து சத்தியமங்கலம் காட்டில் வீசியதாக ஒத்துக்கொண்டுள்ளனர். அந்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறை நேரில் சென்று பார்த்ததில், அங்கு கிடப்பது சுரேஷின் உடல்தான் என்பது உறுதியாகியுள்ளது.

நாளைக் காலை சுரேஷின் உறவினர்களை அழைத்து உடலை அடையாளம் காணவைப்பதாக சுரேஷின் மனைவிக்கு தகவல் கொடுத்துள்ளது காவல்துறை.

இந்த தகவலை அறிந்த மாவட்ட செயலாளர் மணிமாறன் காவல்துறையை தொடர்பு கொண்டு விசாரித்ததில்.. கொலை செய்யப்பட்டது உண்மைதான் என்பது தெரிய வந்துள்ளது.

எனவே நாளை விசாரணைக்கு நாமக்கல் மாவட்ட தோழர்கள் சத்தியமங்கலம் வருவதால், ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு தந்து உதவிட வேண்டும் என்று கேட்டுகொள்கிறது பேரவை தலைமைக் குழு.
____________________
தகவலுக்காக
பொதுச்செயலாளர்.
24.11.2017 இரவு 9.15.


தோழர் சோ. அருந்ததி அரசு உள்ளிட்ட தோழர்கள் வழக்கிலிருந்து விடுதலை


கடந்த 2012 ம் வருடம் அன்று
தூத்துக்குடி தெற்கு மாவட்ட சார்பில்
ஆதித்தமிழர் பேரவை நிறுவன
தலைவர் சமூகநீதி பாதுகாவலர் அய்யா அதியமான் அவர்களால் கொடியேற்று விழா மிக எழுச்சியோடு நடைபெற்றது.
அன்று , அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக காவல்துறையினரால் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கு திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முழமாக கடந்த 5 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்தது.
அந்த வழக்கில் ஆஜரான ஆதித்தமிழர் பேரவை மாநில அமைப்பு செயலாளர்
தோழர் சோ. அருந்ததி அரசு உள்ளிட்ட தோழர்கள் இன்று 24-11-2017 விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின்விடுதலைக்கு உறுதுணையாக இருந்த மரியாதைக்குரிய வழக்கறிஞர் தோழர் சதீஸ்பாலன் அவர்களுக்கும் , வழக்கறிஞர் உதயா அவர்களுக்கும் ஆதித்தமிழர் பேரவை யின் நெஞ்சம் நிறைந்த நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆதித்தமிழர் பேரவை
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்


வன்கொடுமை தடுப்பு சட்டம், கந்துவட்டி தடை சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்திட நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது



வன்கொடுமை தடுப்பு சட்டம்,
கந்துவட்டி தடை சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்திட வலியுறுத்தி நாமகிரிப்பேட்டையில்
கண்டனஆர்ப்பாட்டம்.
பேரவையின் கிழக்கு மா.செயலாளர் மணிமாறன் முன்னிலையில் பெண் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.




கத்திப்பட பாணியில் நடந்த கோரப் படுகொலை

கத்திப்பட பாணியில்*
*நடந்த கோரப் படுகொலை*
""""""""""""""""""""""""""""""""""""
மூன்று துப்புரவுத் தொழிலாளர்கள் ஒரே நாளில் ஒரே நேரத்தில், வெவ்வேறு இடங்களில் கோரமாக வெட்டிப் படுகொலை!

கிடைக்கப் பெற்றிருக்கும் முதல் தகவல்:-
""""""""""""""""""""""""'
திண்டுக்கல்லில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலைக்கு, பலிதீர்க்க திண்டுக்கல் சோலைஹால் பகுதியை சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர்கள் பாலமுருகன் (45), வீரா (35), சரவணன் (30) ஆகிய மூவரும் பட்டப்பகலில் படுகொலைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர்.

இது கத்திப் படத்தில் வரும் காட்சி போல 17 பேர் கொண்ட கூலிப்படை ஒரே நேரத்தில், ஒரே வடிவத்தில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட படுகொலையாக நடந்துள்ளது.
இந்த கூலிப் படையில் நாயக்கர், வன்னியர், பெரும்பான்மையாக பறையர்கள் இருப்பதாக தகவல் வந்துள்ளது.

முன்விரோதத்தில் படுகொலையான சோமு என்ற சோமசுந்தரம் (வன்னியர்) கொலையில் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது தெரியவில்லை, படுகொலையான மூவரில் வீராவும், சரவணனும் உடன் பிறந்த அண்ணன் தம்பிகள்!

படுகொலைக்கு உள்ளானவர்கள், முன் விரோதக் கொலையில் தொடர்பு உள்ளவர்களா இல்லையா? என்பது போகப் போக விசாரணையில் தெரிய வரும்.

எது எப்படியோ! கூலிப்படைகள் எல்லாம் அம்மையார் பொறுப்புக்கு வந்தவுடன் ஆந்திராவுக்கு ஓடிவிட்டார்கள் என்று வீரவசனம் பேசிய அதிமுக அரசில்தான் கூலிப்படை கொலை கோரமாக நடந்துள்ளது.

தடுத்து நிறுத்துமா? இல்லை தனக்கு சாதகமாக கூலிப்படைகளை பயன்படுத்துமா! ஆளும் அரசுகளுக்கே வெளிச்சம்!

ஆதித்தமிழர் பேரவை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் காளிராஜ் களத்தில் உள்ளார்

*குறிப்பு*
""""'""""""""""
இதில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் முன் பின் மாறலாம்.. இது மேலோட்டமாக கிடைக்கப் பெற்ற தகவல்தான்!
_______________________
-நாகராசன்
ஆதித்தமிழர் பேரவை.



சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் கருத்தரங்கம் குறித்து கலந்தாய்வுகூட்டம் நடைபெற்றது

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் கருத்தரங்கம் குறித்து கலந்தாய்வுகூட்டம் நடைபெற்றது

23-11-17 இன்று சிவகங்கை மாவட்டத்தில் , வருகிற டிசம்பர் 10 ல் நடைபெறவிருக்கும் உள் ஒதுக்கீடும் சமூநீநீதியும் கருத்தரங்கத்திற்கான கலந்தாய்வுகூட்டம் இந்திரா நகரில் மாவட்ட தலைவர் பால்பாண்டி தலைமையில் கலந்தாய்வு நடைபெற்றது மாவட்டச்செயலாளர் அழ.பாலு மற்றும் தோழர்கள் கலந்து கொண்ட கலந்து கொண்டனர்