அண்மையச்செய்திகள்

Monday, 31 July 2017

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், தாசசமுத்திரம் அருந்ததியர் பகுதி மக்களுக்கு பட்ட வழங்க மனு

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், தாசசமுத்திரம் அருந்ததியர் பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றனர். ஒரே வீட்டில் 2,3, குடும்பங்கள் வசிக்கின்றனர். எனவே இலவச வீட்டு மனை வழங்கும் திட்டத்தின்கீழ் வீட்டு மனை வழங்க வேண்டி மக்கள் கு.தீ.நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது. களத்தில் காடையாம்பட்டி பேரவை நிர்வாகிகள் துரை.மாதேசு ஒன்றிய செயலாளர்,ஜெயபால் ஒன்றிய தலைவர்,சக்திவேல் ஒன்றிய அமைப்பு செயலாளர்
தகவலுக்காக
துரை.மாதேசு
சட்டக்கல்லூரி மாணவர்.
சேலம் மாவட்டம். (வடக்கு)

Comment

ஈரோட்டில் பல ஆண்டுளாக வாழந்து வரும் மக்களுக்கு அதே இடத்தில் மக்களுக்கு பட்டா வழங்கு ---- மாவட்ட அதிகாரியிடம் ஆதித்தமிழர் பேரவையினர் மனு

ஈரோட்டில் பல ஆண்டுளாக வாழந்து வரும் மக்களுக்கு அதே இடத்தில் மக்களுக்கு பட்டா வழங்கு ---- மாவட்ட அதிகாரியிடம் ஆதித்தமிழர் பேரவையினர் மனு
*************
31/7/2017 காலை 11 மணியளவில்
#ஈரோடு_மாவட்ட_ஆட்சித்தலைவர் அலுவலகம் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்..
நாங்கள் வாழும் இடத்திலேயே பட்டா வழங்குங்கள் என்று பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட அதிகாரிடம் மனு அளித்தனர்..
( ஈரோடை மாநகரில் ஒடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம் என்கிற பெயரில் பல நூறு ஆண்டுகள் மாநகரத்தின் மையத்தில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களை மாநகரத்தின் மையத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் குடியமர்ந்த திட்டமிடும் தமிழக அரசு.
ஈரோடு மாநகரத்தில் சென்ட்ரல் தியேட்டர் பின்புறம் ஓடை பகுதியில் உள்ள 300 குடும்பங்களை தமிழக அரசு நீங்கள் ஒடை புறம்போக்கு நிலத்தில் உங்கள் குடியிருப்புகள் உள்ளது ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், எனவும் விரைவில் மாநகர எல்லையில் உள்ள சித்தோடு பகுதிக்கு செல்லுங்கள் என்று அரசு அதிகாரிகள் நோட்டிஸ் வழங்கியுள்ளனர்..)
இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட செயலாளர் .பழ. வீரக்குமார் மாநகர் மாவட்டத் தலைவர். இரா. இராமகிருஷ்ணன் .மாநகர் மாவட்ட நிதி செயலாளர் சிவ .ராதா.மாநில ஊடக பிரிவு செயலாளர் இரா .வீரவேந்தன்.ஆகியோர் கலந்து கொண்டனர்....
Comment

தேனி நகராராட்சி முறைகேடுகள் குறித்து பேரவை புகார் மனு

தேனி அல்லிநகரம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச்சங்கத்தில் லஞ்ச ஊழல் பல்வேறு முறை கேடுகள் செய்து வரும் அதிமுக கைகூலி நடராஜன் மற்றும் அய்யனார்ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியாளர் முன்பு தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது
வீரவேந்தன்
தேனி

Comment

தேனி ஆதித்தமிழர் பேரவை போராட்டத்திற்கு கிடைதத வெற்றி ___

ஆதித்தமிழர் பேரவை போராட்டத்திற்கு கிடைதத வெற்றி
___
ஆதித்தமிழர்பேரவையின் வெற்றி
தேனி ஆண்டிபட்டி ஒன்றியம் ராஜதானி பஞ்சாயத்து க்கு உட்பட்ட கிராமத்தில் புதுக்கோட்டை பகுதியில் சுகாதாரம் கருதி அப்பகுதி மக்களுக்கு சரியான குடிநீர் வசதி இல்லாமல் பெண்கள் கழிப்பிட வசதி மற்றும் சாலை வசதிகள் குறித்து மனுநீதி நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கண்களில் கருப்பு துணி அனுந்து போராட்டம் நடத்தியது தேனி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை நிகழ்ச்சி க்கு ஆண்டிபட்டி ஒன்றியம் மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்
முதற்கட்ட பணியாக அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது
வாழ்த்துக்கள் #ஆண்டிபட்டி ஒன்றியம்
செயலாளர், மல்லையசாமி
போராட்ட மக்கள் ஒறிங்கினைப்பு மாவட்ட துனை தோழர் வல்லரசு அவர்கள்
Comment

மாமன்னர ஒன்டிவீரனார் நினைவு தினம் சேலம் மாவட்ட செயற்குழு

ஆகத்து 20 மாமன்னர் ஒண்டிவீரன் வீரவணக்க நாளில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் நடைபெறும் சிறைநிரப்பும் போராட்டத்தில் தோழர்கள் திரளாக பங்கெடுப்பது என இன்று நடைபெற்ற ஆலோசணை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது..
தகவலுக்காக...
சுபாசு.மு
ஆதித்தமிழர் பேரவை
சேலம் கிழக்கு மாவட்டம்.
செந்தாரப்பட்டி.

Comment

மாமன்னர ஒன்டிவீரனார் நினைவு தினம் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயற்குழு

நாமக்கல் கிழக்கு மாவட்ட செயற்குழு தீர்மானங்கள்
1. ஆக20 நெல்லை மாமன்னர் ஒண்டிவீரனார் நினைவு நாளில் சிறைநிரப்பும் போராட்டத்தில் திரளாக பங்கேற்பது எனவும்,
மேலும் தலைமை அறிவிக்கும் மாநில மாநாட்டிற்கு முழு வீச்சில் பணியாற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது
ஒன்றியம் வாரியாக 25 பேர் கலந்து கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
Comment

மாமன்னர ஒன்டிவீரனார் நினைவு தினம் மதுரை புறநகர் மாவட்ட செயற்குழு

ஆகத்து 20 சிறை நிரப்பும்* போராட்டம் குறித்து மதுரை புறநகர் மாவட்டச்செயற்குழு நடைபெற்றது.*சிறைநிரப்பும் போராட்டம் வெற்றிப்பெற தோழர்களை திரளாக பங்கெடுக்க வைத்து போராட்டத்தை வெற்றி பெறச்செய்வோம். தகவலுக்காக: பா.ஆதவன். மாவட்டச்செயலாளர்.
Comment

மாமன்னர ஒன்டிவீரனார் நினைவு தினம் விருதுநகர் மாவட்ட செயற்குழு

ஆகத்து 20 ஒண்டிவீரன் வீரவணக்கம்நிகழ்வும் ஆதித்தமிழர் பேரவை நடத்தும்சிறைநிரப்பும் போராட்டம் பற்றிய ஆலோசனை கூட்டம் விருதுநகர் மாவட்ட செயலாளர் பூவை. ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது
Comment

மாமன்னர ஒன்டிவீரனார் நினைவு தினம் நெல்லை மேற்கு மாவட்ட செயற்குழு

மாமன்னர் ஒண்டிவீரனார் வீரவணக்க நினைவு நாளில் நடக்கும் சிறை நிரப்பும் போராட்டம் குறித்து நெல்லை மேற்கு மாவட்டம் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்
மாவட்ட செயலாளர் கலிவருணன் அவர்கள் தலைமையில் இலத்துர் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது..
ஆதித்தமிழர்பேரவை
Comment

மாமன்னர ஒன்டிவீரனார் நினைவு தினம் நாமக்கல் மேற்கு மாவட்ட செயற்குழு

மாமன்னர ஒன்டிவீரனார் நினைவு தினத்தில் மாமன்னர் ஒன்டிவீரனாருக்கு வீரவணக்கம் செலுத்துவது அதன் பின் மணிமண்டப பணிகளை முழுமை படுத்தாத தமிழக அரசைகண்டித்து நடைபெறும் சிறை நிரப்பும் போராட்டத்தை மாபெரும் வெற்றிபபெறவைப்பது நாமக்கல் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாட்ட செயலாலளர் ந.சரவணக்குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது.

தேனி அல்லிநகரம் நகராட்சியில் துப்பரவு தொழிலாளினியின் அவலம்


#தேனி #நகராட்சி #அலட்ச்சியத்தால் #கொடுமை!!
#வெட்கக் #கேடு!!
#வேதனை!!
""""""""""""""""""""""""""""""""""""""""
தேனி அல்லிநகரம் நகராட்சியில் துப்பரவு(அரசு ஊழியர் )பணி செய்பவர் தோழர் #சேகர்(53) என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தேனி 1st Division. 4 th Ward வீரப்பைய்யர் கோவில் தெருவில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் (நகராட்சி அலட்ச்சியத்தால் பாதுகாப்பு உபகரணம் வழங்காததால்) குப்பைகள் அப்புறப்படுத்தும் போது தோழர் சேகரின் கை விரலில் ஊசி குத்தி ரத்தம் வடிந்துள்ளது.அதை Ward Maestri கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அதை அவர் I st Aid கூட செய்திட மறுத்து, "சின்னக்காயம் தானே சீக்கிரம் ஆறிடும். நீ போய் வேலையைப் பாரு" என்று அலட்சியமாக கூறியுள்ளார்.

இரண்டு நாள் கழித்து நகராட்சி சுகாதார அலுவலர்களிடம் "அய்யா கை வலிக்கிறது" என்று கூறியுள்ளார்.அதற்கு சுகாதார அலுவலர்கள் முறையான மருத்துவ ஆலோசனை வழங்காமல் தனியார் (காசு பறிக்கும்) மருத்துவமனைக்கு போகச்சொல்லியிருக்கிறார்கள்.அவரும் அதிகாரி பேச்சை கேட்டு தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டார்.தனியார் மருத்துவமனையில் வழக்கம் போல் காசை கறந்து கொண்டு மதுரை தலைமை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர்.
அவர்களும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.அங்கு
சேகருக்கு சரியான சிகிச்சையும்
வழங்கப்படவில்லை.
தோழர்
தேனி நீலக்கணலன்-9543349956- (மா.தொ.பேரவை)அவர்கள் மூலம் அறிந்து, பாதிக்கப்பட்டவரின் சிகிச்சைகள் குறித்தும்,மருத்துவரிடமும்
தோழர்.பா,ஆதவன்(ம.பு.மா.செயலாளர்).
தோழர், இரா.அன்புச்செழியன்(துணைச் செயலாளர்) .
தோழர்.பெரு.தலித்ராஜா (துணைத்தலைவர்) .
ஆகியோர்கள் இன்று (30-7-2017/காலை 7 மணிக்கு) நேரில்சென்று சந்தித்து முழு விபரங்களையும், தங்களுக்கு நேர்ந்த கொடுமையை (ஒரு கை செயலிலைந்த நிலையில்) தோழர் சேகரும் அவரது துணைவியாரும் கண்ணீருடன் எங்களுக்கு தெரிவித்தார்கள்.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
நம் கேள்வி:
=> பணிக்குச் செல்லும் முன் மருத்துவ பரிசோதனை ஏன் செய்யப்படவில்லை?
=> பாதுகாப்பு கவசங்களான கையுறை, காலுறை ஏன் வழங்கப்படவில்லை?
=> காயம் பட்டவுடன் சுகாதார ஆய்வாளர் நகராட்சி மருத்துவமனைக்கு ஏன் அழைத்துச்செல்லப்படவில்லை?
=> சிகிச்சைக்கான செலவினங்களை நகராட்சி நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வில்லையே ஏன்?
=> இதுவரை ஒரு நகராட்சி அதிகாரிகள் கூட வந்து பார்க்க வில்லையே ஏன்???
"""""""''"""""""'"""""""""""""""""""""""""""""
அரசு ஊழியருக்கொரு நீதி.
துப்பரவாளர்க்கொரு நீதியா????
""""""""""""""""""""""""""""""""""""""""""""
நீதிக்கான போராட்டத்தை விரைவில் முன்னெடுப்போம்.
By,
புறநகர் மாவட்ட செய்திப் பிரிவு.
#ஆதித்தமிழர் #பேரவை மதுரை.

மக்கள் குடியிருப்புகளை அகற்ற நினைக்கும் அரசை கண்டித்து மக்களுக்கு பேரவையினர் ஆலோசனை

29/7/2017 இரவு 7 மணியளவில் ஈரோடு ஒடைபகுதி..
ஈரோடை மாநகரில் ஒடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம் என்கிற பெயரில் பல நூறு ஆண்டுகள் மாநகரத்தின் மையத்தில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களை மாநகரத்தின் மையத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் குடியமர்ந்த திட்டமிடும் தமிழக அரசு.
ஈரோடு மாநகரத்தில் சென்ட்ரல் தியேட்டர் பின்புறம் ஓடை பகுதியில் உள்ள 300 குடும்பங்களை தமிழக அரசு நீங்கள் ஒடை புறம்போக்கு நிலத்தில் உங்கள் குடியிருப்புகள் உள்ளது ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், எனவும் விரைவில் மாநகர எல்லையில் உள்ள சித்தோடு பகுதிக்கு செல்லுங்கள் என்று அரசு அதிகாரிகள் நோட்டிஸ் வழங்கியுள்ளனர்..
இந்நிலையில் மாநகர மாவட்டம் சார்பாக ஆதித்தமிழர் பேரவையின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மக்களுடன் ஆலோசிக்கப்பட்டது..
இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட செயலாளர் .பழ. வீரக்குமார் மாநகர் மாவட்டத் தலைவர். இரா. இராமகிருஷ்ணன் .மாநகர் மாவட்ட நிதி செயலாளர் சிவ .ராதா.மாநில ஊடக பிரிவு செயலாளர் இரா .வீரவேந்தன்.ஆகியோர் கலந்து கொண்டனர்..
Comment

*திமுக/ஆதித்தமிழர்* *பேரவை* உள்ளிட்ட தோழமை கட்சிகள் மீது வழக்கு!!

*திமுக/ஆதித்தமிழர்* *பேரவை* உள்ளிட்ட தோழமை கட்சிகள் மீது வழக்கு!!
***************************
27-7-2017 அன்று பல லட்சம் மாணவர்கள் நலனுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வினை ரத்து செய்திடக் கோரி ...

மதுரை புறநகர், ஒத்தக்கடையில் திமுக முன்னெடுத்த அறவழி மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்ட *திமுக/கம்யூனிஸ்ட்கட்சிகள்/திக/விசிக/ஆதித்தமிழர்* *பேரவை* உள்ளிட்ட, மற்றும் தோழமை கட்சியைச் சேர்ந்த 1500 க்கும் மேற்ப்பட்டோர்கள் மீது மதுரை புறநகர் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் (பினாமி அரசு) வழக்குப் பதிவு செய்துள்ளது.

முரசொலி நாளிதழ். 29-7-2017
"""""""""""""""""""""""""""""""""""""""""
பினாமி அரசு எடுத்துள்ள இந்நடவடிக்கையை *ஆதித்தமிழர்* *பேரவை* மதுரை புறநகர் மாவட்டம் வன்மையாக கண்டிக்கிறது!!
**************************
By,
புறநகர் மாவட்ட செய்திப் பிரிவு.
*ஆதித்தமிழர்* *பேரவை*
மதுரை.


மத்திய மாநில அரசு SC/ST ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை

மத்திய மாநில அரசு SC/ST ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன
ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் சேரை.குமார் இளையராஜா தமிழ்குட்டி தோழர்களுடன் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தோம்
ஆதித்தமிழர் பேரவை
நெல்லை
மகிழ்ச்சி
Comment

ஈரோடு தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை நடத்தும் "" சமூகநீதியில் அருந்ததியர்களுக்கு அரசியல் விடுதலை நோக்கி "" எழுச்சி கருத்தரங்கம்

ஈரோடு தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை நடத்தும்
"" சமூகநீதியில் அருந்ததியர்களுக்கு அரசியல் விடுதலை நோக்கி ""
எழுச்சி கருத்தரங்கம்
6.8.17

Friday, 28 July 2017

இயற்கை எரிவாயு திட்டத்தை தமிழகத்தில் ரத்துசெய்யவேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வழியுறுத்தி "மனித சங்கிலி போராட்டம்" -- இயற்கை பாதுகாப்பு குழு-மதுரை துணை ஒருங்கினைப்பாளர்

இயற்கை எரிவாயு திட்டத்தை தமிழகத்தில் ரத்துசெய்யவேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வழியுறுத்தி "மனித சங்கிலி போராட்டம்" அணிதிரள்வோம் தமிழக வாழ்வுரிமையை காப்போம் -- இயற்கை பாதுகாப்பு குழு-மதுரை துணை ஒருங்கினைப்பாளர்
இரா.செல்வம் (ஆதித்தமிழர் பேரவை )
----------------------
தோழர்களே, மாணவர்களே, விவசாய பெருங்குடி மக்களே, வியாபாரிகளே தோழர்களே, மாணவர்களே, விவசாய பெருங்குடி மக்களே, வியாபாரிகளே குடும்பத்துடன் அணிதிரள்வோம் தமிழக வாழ்வுரிமையை காப்போம் இந்தியாவின் வல்லரசு கனவு வயல்வெளிகளில் இருந்து தான் வர வேண்டும்.
விவசாயத்தையும், விவசாயிகளையும் அழித்து விட்டு வல்லரசாக முடியவே முடியாது...!தோழர்களே
இயற்கை எரிவாயு திட்டத்தை தமிழகத்தில் ரத்துசெய்யவேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வழியுறுத்தி"மனித சங்கிலி போராட்டம்" 1-8-2017 அன்று மாலை 4-00 மணிக்கு நடக்கவுள்ளது தோழர்களே, மாணவர்களே, விவசாய பெருங்குடி மக்களே, வியாபாரிகளே தமிழக மக்களின் வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுக்க குடும்பத்துடன் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டுகிறேம்.

இயற்கை பாதுகாப்பு குழு-மதுரை
துணை ஒருங்கினைப்பாளர்
இரா.செல்வம்  (ஆதித்தமிழர் பேரவை )

Thursday, 27 July 2017

விருதுநகர் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்

#விருதுநகர் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் மனித சங்கிலி போராட்டத்தில் நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் அந்தந்த மாவட்டங்களில் ஆதித்தமிழர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டனர்தளபதி ஸ்டாலின் அவர்களை கைது - சாலை மறியலில் ஆதித்தமிழர் பேரவை

திமுக செயல் தலைவரை கைது தளபதி ஸ்டாலின் அவர்களை கைது செய்ததை கண்டித்து #இராசிபுரத்தில் சாலை மறியலில் ஆதித்தமிழர் பேரவைசார்பாக நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையில் தோழர்கள்.கலந்து கொணடு கைதாகினர்
LikeShow more reactions
Comment

தாராபுரம் ஆதித்தமிழர்.பேரவை.அலுவலகத்தில் வைத்து ஆகத்து 20 மாமன்னர் ஒண்டிவீரனார் வீரவணக்க ஆலோசனை கூட்டம்

27.7.17 அன்று தாராபுரம் ஆதித்தமிழர்.பேரவை.அலுவலகத்தில் வைத்து ஆகத்து 20 மாமன்னர் ஒண்டிவீரனார் வீரவணக்க நாளில் அய்யா அதியமான் அவர்களின் ஆணைக்கிணங்க நெல்லை யில் நடைபெறவிருக்கிற சிறை நிரப்பும் பராட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது திரளான பேரவை தோழர்கள் கலந்து கொண்டனர்
LikeShow more reactions
Comment