அண்மையச்செய்திகள்

Monday, 28 December 2015

அரசியல் என்றால் 'வாக்கு'வங்கியை திரட்டுவது மட்டுமல்ல.. தற்காப்புப் படையை தயார் படுத்திக்கொள்வதும்தான்! - பொதுச்செயலாளர் -- ஆ நாகராசன்

அரசியல் என்றால் 'வாக்கு'வங்கியை திரட்டுவது மட்டுமல்ல..
தற்காப்புப் படையை தயார் படுத்திக்கொள்வதும்தான்!
"""""""""""""
விருதுநகர் மேற்கு மாவட்ட சாத்தூர் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் பாண்டியராஜ் தலைமையில் 27.12.2015 ஞாயிறு அன்று ஓ.மேட்டுப்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் ஈஸ்வரன்,மாநில மகளிரணி பொருளாளர் பாண்டியம்மாள், உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வெங்கடாசலபுரம், படந்தால், ரெங்கப்பநாயக்கன்பட்டி, அமீர்பாளையம், சின்னகொல்லபாளையம், உப்பத்தூர், சமத்துவபுரம், முள்ளிச்சேவல், சத்திரப்பட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் 72 பேர் கலந்து கொண்டனர்.
எழுச்சியோடும், சிறப்போடும் நடைபெற்று கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து அதிர்ந்து போன அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி தூண்டுதலின் பேரில் 100.க்கும் மேற்பட்ட தேவர் சமூக குண்டர்கள் கூட்டத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்த முற்பட்டனர்.
அந்த மிரட்டலுக்கு அஞ்சிடாத "அய்யா" அதியமானின் நீலச்சட்டை படை எதிர் தாக்குதலுக்கு தயாரானது, அதை கொஞ்சமும் எதிர் பார்க்காத காவல்துறை பேரவை தோழர்களை சமாதனப்படுத்தி, தாக்குதலுக்கு தலைமை தாங்கிய குண்டர்களில் இருவரை கைது செய்தது.
காவல்துறையின் கைது நடவடிக்கையை கேள்விப்பட்டு ஆத்திரம் கொண்ட அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்து, நேரடியாக கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து பேரவை தோழர்களை தாக்கச்சொல்லி குண்டர்களை தூண்டுயுள்ளார்.
ஆளும் கட்சி ஒன்றிய செயலாளரின் அடாவடித்தனத்திற்கு அஞ்சிப்போன காவல்துறை, பிரச்சினையை மேலும் வளரவிடாமல் தடுப்பதற்கு பேரவை தோழர்களிடம் நல்லவர்கள் போல் நாடகமாடி, மினி பேரூந்து ஒன்றை வரவழைத்து தோழர்களை அதில் ஏற்றிக்கொண்டு முன்னும் பின்னும் போலீஸ் வாகன பாதுகாப்போடு! சாத்தூர் பேரூந்து நிலையம் வரை கொண்டுவந்து விட்டுள்ளது.
தேர்தல் நெருங்க நெருங்க அம்மாவின் அடிமைகள் தங்களது விசுவசத்தை அம்மாவிடம் காட்டுவதற்கு இதைப்போன்று பல மிரட்டல்களை பேரவையினர் மீது காட்டுகின்றனர்,
ஏற்கனவே அந்த பகுதிக்குள் நுழைய விடாமல் டாக்டர்.கிருஷ்ணசாமியை மிரட்டியவர்கள், அருந்ததியர் இயக்கங்கள் எதையும் வரவிடாமல் பார்த்துக்கொண்டவர்கள், இப்போது பேரவை மீது பாய்கின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் சாத்தூர் டி.எஸ்.பி எஸ்.குமார் என்பவர் பேரவையின் ஒன்றிய செயலாளர் தம்பி பாண்டியாராஜிடம்,
கூட்டம் நடத்துவதற்கு ஏன்? அனுமதி வாங்கவில்லை! அரங்ககூட்டமாக இருந்தாலும் அனுமதி இல்லாமல் ஏன்? நடத்தினாய்! என்று மிரட்டி தனது செல் போனில் ஒன்றிய செயலாளரின் புகைப்படம் ஒன்றை எடுத்து வைத்துள்ளார்.
அதைக்கண்டு அஞ்சிடாத பாண்டியராஜ், இன்று நூறு பேர்தான் கூடினோம்! நாளை ஆயிரம் பேர் கூடினால் அவர்களால் என்ன செய்ய முடியும். முடிந்தால் பாதுகாப்பு கொடுங்கள் இல்லையென்றால் ஒதுங்கிக்கொள்ளுங்கள் நாங்களே! எங்களை பாதுகாத்து கொள்கிறோம், என்று துணிவோடு பதில் அளித்துள்ளார் டி.எஸ்.பி.யிடம்.
இந்த துணிவும், அரசியல் தெளிவும் அய்யா நமக்கு கற்றுத்தந்த பாடம். அவர் வழியில் அஞ்சிடாமல் நடப்போம்! அரசியல் அதிகாரத்தில் இடம்பெற அயராது உழைப்போம்!!
ஆதித்தமிழர் பேரவையின் செயல்பாடு அ.தி.மு.க. வின் வாக்குவங்கியை சரித்து வருவதால் இப்பேற்பட்ட அடக்குமுறைகளை நம் மீது தொடர்ந்து கட்டவிழ்த்து விட்டதும் இயல்புதான்! இனிமேலும் தொடர்வார்கள் என்பதும் எதார்த்தம்தான்!!
அரசியல் என்றால் 'வாக்கு'வங்கியை திரட்டுவது மட்டுமல்ல..
தற்காப்பு படையை தயார் படுத்திக்கொள்வதும்தான்!
எச்சரிக்கையுடன் எதிர்கொள்வோம்!
எதுவாக இருந்தாலும்!!
==>பொதுச்செயலாளர்.
28.12.2015

ஆதித்தமிழர் பேரவை தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக அருந்ததியர் குடியிருப்புகளில் பழுதடைந்த வீடுகளை புதிதாக கட்டி தர வலியுறுத்தி எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

28.12.15 ஆதித்தமிழர் பேரவை தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக  எட்டையபுரம் அருகே உள்ள குளத்துள்வாய்பட்டி,ரணசூர்நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் அருந்ததியர் குடியிருப்புகளில் பழுதடைந்த வீடுகளை புதிதாக கட்டி தர வலியுறுத்தி எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
.பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர்
இம்முற்றுகை   போராட்டத்தில் மாவட்ட அமைப்புச்செயலாளர் சின்னராசு ,நிதிசெயலாளர் உதயசூரியன் ,இளைஞர் அணிச்செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் மதன் ,நகரச்செயலாளர் செண்பகராஜ், பொருளாளர் கிருஷ்ணசாமி ,உட்பட பலர் கலந்து கொண்டனர் ,மனுவை பெற்று கொண்ட தாசில் தார் ஜெகநாதன் ,இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் களைந்து சென்றனர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பதட்டை ஒன்றியம் பிம்பலூர் கிராமத்தில் ஐயா அருந்ததி மைந்தன் தலைமையில் ஆதித் தமிழர் பேரவை கலெக்டரிடம் மனு

27.12.15 பெரம்பலூர் மாவட்டம் வேப்பதட்டை ஒன்றியம்
பிம்பலூர் கிராமத்தில் துணை பொது செயலாளர் ஐயா அருந்ததி மைந்தன் அடிப்படை வசதிகளை ஆராய்ந்து பின்னர்
அவர்களை திரட்டி கலெக்டரிடம் மனு அளித்தனர்
 உறுப்பினர் சேர்க்கை பனியில்  ஐயா அருந்ததி மைந்தன்
ஆதித்தமிழா்பேரவை நாமக்கல் கிழக்கு மாவட்ட செய்திதொடா்பாளா் பிரபாகரன் அவா்களின் தாயார் உடல் நலக்குறைவால் 28.12.15 காலை காலமானாா் -- ஆதித் தமிழர் பேரவையின் ஆழ்ந்த இரங்கல்

ஆதித்தமிழா்பேரவை நாமக்கல் கிழக்கு மாவட்ட செய்திதொடா்பாளா் பிரபாகரன் அவா்களின் தாயார் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானாா்
தாயாரை இழந்து தவிக்கும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சாா்பாக ஆழ்ந்த இரங்களையும் வீரவணக்கத்தையும் தொிவித்துக் கொள்கிறோம்
அவரது பாதிப்பில் பங்குபெறும் நாமக்கல் கிழக்கு மாவட்ட தோழா்கள்கோவை மாவட்ட ‪ஆதித்தமிழர் பேரவை‬ சார்பாக நடைபெற்ற ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம்

 கோவை மாவட்ட ‪ஆதித்தமிழர் பேரவை‬ சார்பாக 28.12.15 நடைபெற்ற ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம்
 ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாக அருந்ததியர் மக்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யும்

‪கிணத்துக்கடவு காவல்துறை‬ உதவி ஆய்வாளர் ‪செல்வநாயகத்தை‬ கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது..

Sunday, 27 December 2015

இப்போதாவது புத்தி வருமா? இவர்களுக்கு! -- ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் கேள்வி எழுப்புகிறார்

இப்போதாவது புத்தி வருமா?
இவர்களுக்கு! -- ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் கேள்வி எழுப்புகிறார்
"""""""""""""""
சட்டப்பேரவையில் அம்மா அம்மா என்று புகழ்பாடி காலத்தை தள்ளும் கட்சிகளுக்கு மத்தியில் ஜெயலலிதாவை நேருக்கு நேராக பார்த்து நாக்கைத் துருத்தி அடிப்பதற்கு கையை ஓங்கிய தில்!

ஊரெல்லாம் சாராயக்கடையை திறந்து வைத்து நாட்டையே குடிகாரர்களாக மாற்றும் ஜெயலலிதா! விஜயகாந்தை
குடிகாரன் என்று கூறிய போது, ஆமாம்! அவர்தான் எனக்கு ஊத்திக்கொடுதார். என்று  கூறிய தில்!

கட்டப்பஞ்சாயத்து செய்து மக்களை சுரண்டும் கட்சிக்காரர்களை கண்டிப்பதற்கு துணிவில்லாமல் இருக்கும் அரசியல்
தலைவர்களுக்கு மத்தியில், தனது கட்சி எம்.எல்.ஏ வை பொதுமக்கள் மத்தியில் அடித்து உதைத்த தில்!

மழைவெள்ள பாதிப்பால் குவிந்து கிடந்த குப்பைகளை கூட்டிப் அள்ள தூய்மைப் பணியாளர்களை அடிமாடுகளைப்போல் அழைத்து சென்ற ஜெயலலிதாவை பார்த்து அ.தி.மு.க காரர்களை துப்புரவுப் பணியில் ஈடுபட சொல்லாதது ஏன் என்று கேள்வி கேட்ட தில்!

பெரியாரிய வாதிகளை நோண்டி நோண்டி கேள்வி கேட்டு இந்துத்துவ வெறியர்களை தூக்கிப்பிடிக்கும் தந்தி டி.வி பாண்டே போன்ற ஆர்.எஸ்.எஸ் காரர்கள் இருக்கும் இந்த ஊடகவாதிகளையும்,

அம்மையார் வீசி எறியும் அரசு விளம்பரங்களுக்கும்! கேள்வி கேட்க்க துணிவில்லாத ஊடகவாதிகளையும்,

பணம் கொடுத்தால் மட்டும் செய்திவெளியிடும் பணத்தாசை பிடித்த ஊடகவாதிகளின் கேவலத்தை காரித்துப்பிய விஜயகாந்தின் தில்!

பாராட்டத்தக்கது.
இப்போதாவது புத்திவருமா?

==>பேரவை
பொதுச்செயலார்
ஆ .நாகராசன்

27.12.15 அன்று கரூர் தாந்தோனி ஒன்றியம்,பொம்மனத்துபட்டி ஊரில் ஆதித்தமிழர் பேரவை புதிய கிளைஅமைக்கப்பட்டது.

27.12.15 அன்று கரூர் தாந்தோனி ஒன்றியம்,பொம்மனத்துபட்டி ஊரில் ஆதித்தமிழர் பேரவை புதிய கிளைஅமைக்கப்பட்டது.
திரளான பேரவை தொண்டர்கள் கலந்து கொண்டனர்சமூக நீதியை விரும்பும் தோழர்களுக்கு இந்திய இரயில்வே துறையின் மந்திரி திரு. சுரேஷ் பிரபு அவர்களுக்கு இந்திய இரயில்வே துறையில் இருக்கும் கையால் மலம் அள்ளும் முறை ஒழிக்கப்பட மின்னஞ்சல் அனுப்ப அய்யா அதியமான் வேண்டுகோள்

அனைவருக்கும் வணக்கம்,
கீழே இருக்கும் கடிதம் இந்திய இரயில்வே துறையின் மந்திரி திரு. சுரேஷ் பிரபு அவர்களிடம் இருந்து இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்று கருதுகிறேன். இந்தியன் இரயில்வே துறை சிறப்பாக செயல்பட கருத்து கேட்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் sureshprabhu@irctc.co.in என்ற மின்னஞ்சலுக்கு SUBJECT லைன் -இல் மட்டும் "END MANUAL SCAVENGING IN INDIAN RAILWAYS" என்பதை CUT PASTE செய்து அனுப்பினால், இந்திய இரயில்வே துறையில் இருக்கும் கையால் மலம் அள்ளும் முறை ஒழிக்கப்பட அனைவரும் குரல் கொடுத்ததாக இருக்கும் என்று கருதுகிறேன். அனைவரும் இந்தத் தகவலை தத்தமது சமூக வலைதளங்கள் அனைத்திலும் பதிவு செய்தும், தங்களின் மின்னஞ்சல் வரிசையில் இருக்கும் அனைவருக்கும் அனுப்பியும், இதை பரப்ப உதவுமாறு ஆதித்தமிழர் பேரவையின் சார்பாக வேண்டுகிறேன்.
Dear Rail user,
Our respected Prime Minister, Shri Narendra Modi Ji has a vision for this great nation and in this vision Indian Railways has an important place to be the "backbone of India's economic development".
During my tenure I have tried to bring about a change and to usher in new practices and new work culture. All Budget Announcements have been broken up into actionable points and are being monitored on a regular basis. I am happy to inform that 103 Budget Announcements already stand implemented.
In the past one year a number of milestones have been achieved. However, I am aware that the journey for transforming the Indian Railways will be long and winding. There are many more challenges to be overcome and expectations to be fulfilled. But I have been fortunate to always have your unstinting support and cooperation.
It is, therefore, important to communicate with you about the work being done in Indian Railways. Please Download Booklet containing the recent initiatives taken by the Railways. I look forward to your suggestions and I am confident that together we will make the Indian Railways much better.
With regards,
Yours sincerely,
(Suresh Prabhu)

கையால் மலம் அள்ளும் தொழிலுக்குத் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் குறித்த மாநில அளவிலான இரண்டு நாள் கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறுவனர் வழிகாட்டுதலின் பேரில் பொதுச்செயலாளர் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றினர்

கையால் மலம் அள்ளும் தொழிலுக்குத் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் குறித்த மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம்

இன்று (27.12.2015) மதுரை ஐடியாய் மையத்தில் நடைபெற்றது. அதன் இரண்டாம் நாள் அமர்வில்

நிறுவனர் வழிகாட்டுதலின் பேரில் பொதுச்செயலாளர் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகள்  கலந்துகொண்டு உரையாற்றினர்

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் கடந்த 22.12.2015 அன்று விபத்திற்குள்ளாக்கபட்டு சாதி வெறியோடு திட்டி தாக்கிய அம்மாசி அவர்களை பேரவை நிர்வாகிகள் சந்தித்து விசாரணை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்தனர்

நாமக்கல் கிழக்கு மாவட்டம் இராசிபுரம் தாலுக்கா முள்ளுக்குறிச்சி அருந்ததியர் தெருவைச்சேர்ந்த அம்மாசி அவர்கள் சாதி வெறியர்களால் கடந்த 22.12.2015 அன்று விபத்திற்குள்ளாக்கபட்டு சாதி வெறியோடு திட்டியும் மிரட்டியுள்ளனர்,இவர் இராசிபுரம் தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்,இவரை ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் நேரில் சென்று மாநில துணைப் பொதுச்செயலாளர் நாமக்கல் சுப்ரமணி மாவட்ட தலைவர் பாரிவேந்தன் மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன்
மா.து.செயலாளார் செந்தில்
தூ.தொ.மா.செயலாளர் நீலவேங்கை ஆகியோர் நலம் மற்றும் சம்பவம் பற்றி விசாரித்து வருகின்றனர்.Friday, 25 December 2015

துப்புரவு பணியாளர் மகள் 13.வயது சிறுமி கை,கால் வெட்டப்பட்டு உயிருக்கு போராட்டம். சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்! தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் "அய்யா" அதியமான் வலியுறுத்தல்.

துப்புரவு பணியாளர் மகள் 13.வயது சிறுமி கை,கால் வெட்டப்பட்டு உயிருக்கு போராட்டம்.
சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!
தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் "அய்யா" அதியமான் வலியுறுத்தல்.
""""""""""""""""
ஈரோடு வெண்டிபாளையம் துப்புரவு தொழிலாளி நாகராஜ் என்பவரது மூத்தமகள் 13 வயது ஹரிப்பிரியா கடந்த 21.12.2015 இரவு 8.00 மணியளவில் கை கால் வெட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தனான நிலையில் இரயில் தண்டவாளம் அருகே வீசப்பட்டு கிடந்துள்ளார்.

இதை அறிந்த அவரது பெற்றோர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்து முதல் கட்ட மருத்துவத்துவ சிகிச்சையை தொடங்கி, பின்னர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சுய நினைவிழந்து அவசர சிகிச்சை பிரிவில் இருக்கின்றார்.

தகவல் கிடைக்கப்பெற்று நேற்று சென்னையிலிருந்து புறப்பட்டு இரவு 9.00 மணியளவில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை நேரில் சென்று பார்த்தேன்.

சிறுமி ஹரிப்பிரியா ஒரு கை, ஒரு கால் வெட்டப்பட்டு தலையில் படுகாயம் அடந்த நிலையில் ஆக்ஸிசன் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த சம்பத்தை பொறுத்த மட்டில் இது விபத்து என்று பார்க்க முடியாது, இதில் மிகப்பெரிய மர்மம் அடங்கியுள்ளது. இச் சிறுமி ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால் பாலியல் சித்தரவதைக்கு உள்ளாக்கபட்டு பின்னர் கை,கால் வெட்டப்பட்டு வீசப்பட்டு இருக்கவேண்டும், மேலும் அந்த சிறுமியிடம் கடைசியாக அரை மணிநேரம் செல்போனில் பேசிய மர்மநபர் யாரென்று கண்டு பிடித்து விசாரணை நடத்தி உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த சம்பவத்தை விசாரிப்பதில் ஈரோடு காவல்துறை மிகவும் மெத்தனப்போக்கை கடைபிடிக்கிறது. எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவே தமிழகஅரசு இந்த வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறிப்பாக விளிம்பு நிலை அருந்ததியர் மக்கள் மீதான இதைப்போன்ற வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதைப்பற்றி இந்த அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை. எனவே தமிழக அரசின் இந்த அருந்ததியர் விரோத போக்கை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

இவண்.
இரா.அதியமான்
ஆதித்தமிழர் பேரவை
24.12.2015Thursday, 24 December 2015

டிசம்பர் 24 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நினைவு தினம் மதுரை மாவட்டம் ஆதித்தமிழர் பேரவை சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது

மதுரையில்,
24/12/2015, அன்று பகுத்தறிவு பகலவன்,தந்தை பெரியார் அவர்களின் வீரவணக்க நாள்.
தோழர் செங்கைகுயிலி,தோழர் சானகி,தோழர் கௌரி,தோழர் தலித்ராஜா ஆகியோர் புரட்சியாளர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.


24.12.15 இன்று ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் , தளபதி ஸ்டாலின் அவர்களை சந்தித்த சில மணி நேரத்தில் தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்காக குரல் கொடுத்து தளபதி அவர்கள் தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டி அவர்களு பதவி உயர்வும் தற்காலிக பணியாளர்களை உடனே நிரந்தரம் செய்யவேணும் எனவும் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்

24.12.15 இன்று ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் வருங்கால முதல்வருமான திமுக பொருளாளருமான மதிப்பிற்குரிய தளபதி திரு ஸ்டாலின் அவர்களை சென்னையில் அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்தார்

அதன் போது
விலங்குகளை விட கேவலகாக நடத்தப்படும் தூய்மைத் தொழிலாளர்கள் மாண்புடன் வாழ தி.மு.க தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. தற்போதைய அ.தி.மு.க ஆட்சியில் தூய்மை தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள், இதை கண்டித்து துப்புரவு பணியாளர்களை மாண்புடன் நடத்த தமிழக அரசை வலியுறுத்தவேண்டும் என நிறுவனர் தளபதி ஸ்டாலின் அவர்களை கேட்டுகொண்டார் .

கேட்டு கொண்ட அடுத்து சில மணி நேரத்தில் தூய்மை பணியாளர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும்  தளபதி திரு .ஸ்டாலின் அவர்கள் தனது முகநூல் பக்கதில் தூய்மை பணியாளர்களுக்காக இந்த அரசு சென்னையில் உள்ள மற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து சுகாதார மற்றும் அடிப்படை வசதிகள்  உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் எனவும் மேலும் அவர்களின் சேவையை பாராட்டி அவர்களின் கல்வி தகுதி அடிப்படையில் பதவி உயர்வும் தற்காலிக ஊழியர்களாக இருந்தால் பணி நிரந்தரமும் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டு கொண்டுள்ளார்


அவரின் முகநூல் பதிவு கீழே

மழை வெள்ளத்தால் சென்னையில் குவிந்து கிடந்த குப்பைகளை சீர்படுத்த இரவு பகலாக அகற்ற பாடுபட்ட துப்புரவுத் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகள் அவர்களின் சுகாதார வசதிகள் குறித்து அதிமுக அரசு அக்கறை காட்டாதது வேதனைக்குரியது. இதனால் துப்புரவு தொழிலாளர் பழனிச்சாமி உயிரிழக்க இந்த அரசு காரணமாக இருந்துள்ளது கடும் கண்டத்திற்குரியது. சென்னையில் உள்ள மற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து சுகாதார மற்றும் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டு கொள்கிறேன். வெளி மாவட்ட தொழிலாளர்களுக்கு சென்னையில் அவர்களின் பணி முடிந்து விட்டது என்றால் அவர்களை பாதுகாப்பான முறையில் சொந்த ஊர்களுக்கு திரும்ப அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டு கொள்ளும் அதே நேரத்தில் இதுவரை அவர்கள் சென்னையில் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் பொருட்டு சிறப்பு நேர்வாக நிதியுதவி செய்ய வேண்டும். அவர்களின் கல்வி தகுதி அடிப்படையில் பதவி உயர்வும் தற்காலிக ஊழியர்களாக இருந்தால் பணி நிரந்தரமும் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டு கொள்கிறேன். துப்புரவு தொழிலாளர்களிடம் மனித நேயத்துடன் அதிமுக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.விளிம்பு நிலை மக்களான அருந்ததிய மக்களின் வாழ்க்கை முன்னேற சமரசமின்றி  தொடர்ந்து  குரல் கொடுத்துவரும் திமுக தலைவர் கலைஞர்  திரு கருணாநிதி அவர்களுக்கும் தளபதியார் திரு ஸ்டாலின் அவர்களுக்கும் அருந்ததிய மக்களின் சார்பாக ஆதித்தமிழர் பேரவையின்
நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்

தளபதியார் நிறுவனர் சந்திப்பு. - 24.12.2015

தளபதியார் நிறுவனர் சந்திப்பு.
""""""""""""""""""""""""""""""""'"
விலங்குகளை விட கேவலகாக நடத்தப்படும் தூய்மைத் தொழிலாளர்கள் மாண்புடன் வாழ தி.மு.க தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. தற்போதைய அ.தி.மு.க ஆட்சியில் தூய்மை தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள், இதை கண்டித்து துப்புரவு பணியாளர்களை மாண்புடன் நடத்த தமிழக அரசை வலியுறுத்துவேன். என்று ஆதித்தமிழர் பேரவை நிறுவனரிடம் தி.மு.க பொருளாளர் "தளபதியார்" வாக்குறுதி!Wednesday, 23 December 2015

டிசம்பர் 24 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நினைவு தினம் நாமக்கல் மேற்கு மாவட்டம் ஆதித்தமிழர் பேரவை சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது

ஆதித்தமிழர் பேரவை நாமக்கல் மேற்கு மாவட்டம். மவட்ட செயளாலர் தமிழரசு அவர்கள் தலைமையில் பகுத்தறிவுதந்தை பெரியாருக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது உடன் மாநில துணை கொள்கைபரப்பு செயலாளர் தோழர் செல்வவில்லளன் மற்றும் பேரவை தோழர்கள் கலந்து கொண்டனார்
டிசம்பர் 24 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நினைவு தினம் திருச்சி மாவட்டம் ஆதித்தமிழர் பேரவை சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது

இன்று 24/12/2015,,காலை 07:30 மணிக்கு,
திருச்சி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பாகவும்,பொறியாளர் பேரவை சார்பாகவும் திருவெறும்பூர் பெரியார் படிப்பகத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தோழர்கள்: எழில்புத்தன்,மணியரசு,திருவீரன்.


 (தமிழகம் முழுவதும் ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெரியாருக்கு வீரவணக்கம் செலுத்தினர்) 

டிசம்பர் 24 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நினைவு தினம் கரூர் மாவட்டம் ஆதித்தமிழர் பேரவை சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது

கரூர் மாவட்டத்தில்
தந்தை பெரியார் நினைவு
நாள்
வீரவணக்க நிகழ்வு
மாவட்ட செயலாளர்
இரா.முல்லையரசு தலைமையில்
லைட்ஹவுஸ் கார்னர்
பெரியார் சிலைக்கு
மாலை அணிவித்து
மரியாதை செய்யப்பட்டது.


 (தமிழகம் முழுவதும் ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெரியாருக்கு வீரவணக்கம் செலுத்தினர்) 

டிசம்பர் 24 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நினைவு தினம் சென்னையில் அய்யா அதியமான் தந்தை பெரியார் சிலைக்கு மரியாதையை செலுத்தினார் (தமிழகம் முழுவதும் ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெரியாருக்கு வீரவணக்கம் செலுத்தினர்)

டிசம்பர் 24 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நினைவு தினம் தமிழகம் முழுவதும்  ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெரியாருக்கு வீரவணக்கம் செலுத்தினர் சென்னை அய்யா அதியமான் பெரியார் சிலைக்கு மரியாதையை செலுத்தினார்விலங்குகளை விட கேவலமாக நடத்தப்படும் துப்பரவு பணியாளர்கள் அனைவரையும் மாண்புடனும், உயிருடனும் மீட்டெடுக்க.. தமிழக அரசை வலியுறுத்தி,அய்யா அதியமான் தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை ஆர்பாட்டம்

விலங்குகளை விட கேவலமாக நடத்தப்படும் துப்பரவு பணியாளர்கள் அனைவரையும் மாண்புடனும், உயிருடனும் மீட்டெடுக்க.. தமிழக அரசை வலியுறுத்தி,அய்யா அதியமான் தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை ஆர்பாட்டம்
______________
சிதைந்துபோன சென்னையை சீர்படுத்த அடிமாடுகளைப் போல் அழைத்துச் செல்லப்பட்ட வெளிமாவட்டத்தை சேர்ந்த அனைத்து துப்புரவு தொழிலாளர்களையும் திருப்பி அனுப்பு!
மிருகங்களை விட கேவலமாக நடத்தப்படும் துப்புரவு தொழிலாளர்கள் மீதான சாதி ஆணவப்போக்கை கைவிடு!
குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகளை அகற்றுவதற்கு அரசின் இயந்திரங்களை முழுமையாக பயன்படுத்து!
பொதுமக்களை போலவே மழை வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளாகி ஏற்கனவே நொந்து கிடக்கும் சென்னையை சேர்ந்த துப்புரவு தொழிலாளர்களை மேலும் கொடுமைபடுத்தும் வகையில் 4.ஆயிரம் நிரந்தர பணியாளர்கள் உட்பட 25.ஆயிரம் துப்புரவு தொழிலாளர்களையும் கட்டாயப்படுத்தி கடுமையாக வேலை வாங்குவதை நிறுத்து!
துப்புரவு தொழில் என்பது, ஒரு சாதி சம்மந்தப்பட்டது என்று மக்கள் மனதில் மண்டிக்கிடக்கும் மனோநிலையை மாற்ற முற்போக்கு இயக்கங்களே! முன் வா!
தூய்மை பணியில் ஈடுபட்டிருக்கும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் நபர் ஒன்றுக்கு 2.லட்சம் பேரிடர் நிவாரண நிதி வழங்கு!
துப்புரவு தொழிலாளர்களை கடைச்சரக்கு போலவும், அடிமைகளைப் போலவும் ஒப்பீடு செய்து அவர்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த மக்கள் நல கூட்டியக்க தலைவர்கள் திருமாவளவனையும்,
வீடு வீடாக வந்து சுத்தம் செய்யாமல் ரோட்டை மட்டும் சுத்தம் செய்து ஏமாற்றிவிட்டு ஓடுகின்றனர், துப்புரவு பணியாளர்கள் என்று அவர்களது தியாகத்தை கொச்சை படுத்தும் வைகோ.வையும் கண்டித்து
இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றுகொண்டு இருக்கிறது
குப்பையை கொட்டுகிறவன் சுத்தமானவன் என்றும் அதை சுத்தம் செய்பவன் குப்பைக்காரன் என்றும் சாதிப்புத்தியுடன் பொதுசமூகம் சொல்வதுபோல்!
அல்லாமல்
குப்பை கொட்டுவது நமது உரிமை என்று ஒவ்வொறுவரும் நினைத்தால் போல்!
அதை
அள்ளுகின்ற கடமையும் ஓவ்வொறுவருடையதே! என்று எண்ணவேண்டும்.
_______________
ஆதித்தமிழர் பேரவை


காணொளியை காண இங்கு சொடுக்கவும்