அண்மையச்செய்திகள்

Tuesday, 29 March 2016

புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாளில் அந்த மாபெரும் புரட்சிப் பேரணியில் பங்கெடுத்து மலமள்ளும் இழிவினை ஒழிக்க உறுதி ஏற்போம் தோழர்களே!!! -----அய்யா அதியமான்

புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாளில் அந்த மாபெரும் புரட்சிப் பேரணியில் பங்கெடுத்து மலமள்ளும் இழிவினை ஒழிக்க உறுதி ஏற்போம் தோழர்களே!!! -----அய்யா அதியமான்

"சாதி அமைப்பானது உலகம் முழுவதிலும் 250 மில்லியன் மக்களை பல்வேறு நாடுகளில் பாதித்துள்ளது" என்று 2016ஆம் ஆண்டின் ஐநாவின் பிரத்யேக குழு ஒன்று ஐநாவின் மனித உரிமை அங்கத்திற்கு ஒரு அறிக்கையை சமர்பித்துள்ளது. அந்தஅறிக்கையின் விவரங்கள்:

http://www.un.org/apps/news/story.asp…

இந்தியாவில் நிலவும் மலமள்ளும் அவலமும் சாதி அமைப்பைச் சார்ததே. எனவே, மார்ச்19ஆம் தேதியன்று சபாய் கரம்சாரி அந்தோலன் (ska) அமைப்பைச் சார்ந்தவர்கள் மற்றும் நாடாளுமன்ற எம்பிக்களை அடங்கிய குழுவினர் டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்து "மலமள்ளும் இழிவினை ஒழிக்க" மனு செய்துள்ளனர். ஏற்கனவே SKA அமைப்பினர் தமிழ்நாட்டில் பீம்யாத்ரா சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது பேரவை அனைத்து ஊர்களிலும் அக்குழுவினரை வரவேற்று அந்த யாத்திரையில் பங்கெடுத்து சிறப்பித்தது. பீம் யாத்ரா புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாளன்று டெல்லியில் மாபெரும்பேரணியுடன் முடிவடைகின்றது. எனவே, புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாளில் அந்த மாபெரும் புரட்சிப் பேரணியில் பங்கெடுத்து மலமள்ளும் இழிவினை ஒழிக்க உறுதி ஏற்போம் தோழர்களே!!!
தி.மு.க. மாவட்ட செய்யளாலர்களை ஆதித்தமிழர் பேரவை மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்

தி.மு.க. மாவட்ட செய்யளாலர்களை ஆதித்தமிழர் பேரவை மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள்
சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்காந்திகிராமத்தில். தனி வாக்குசாவடி அமைக்க வழியுறுத்தி பேரவையினர் மனு

சோழவந்தான் சட்டமன்ற தொகுதி
அலங்காநல்லூா்.ஒன்றியம்
காந்திகிராமம். பகுதி மக்கள் சுமாா் 1200 குடும்பங்கள் வசிக்கின்றனா். கடந்த சில வருடங்களாக சுமாா். 2 கிலோ மீட்டா். தூரம் நடந்து சென்று வாக்களித்து வந்துள்ளனா்.
இதில் பாதி முதியவா்கள்.
கிராம பொதுமக்கள்.
கேட்டுகொன்டதற்கு. இனங்கி.!

ஆதித்தமிழா்பேரவை.
அலங்கை ஒன்றிய செயலாளா்.
அண்னண். தமிழ்குமரன்
அவா்களின். தலைமையில்
ஒன்றிய தலைவா்.
அண்னண்.ஆதிரையன்.
ஒன்றிய து.செயலாளா்.
அலங்கை.வீர.சக்திவேல்
ஒன்றிய இளைஞா் அணி.
செயலாளா். சரவணன்
தோழா்.டெய்லா் ரவி.
தோழா்.துரைப்பாண்டி.
மற்றும். அனைத்து தோழா்களும்
இனைந்து.
வட்டாச்சியா் அலுவலரை சந்தித்து
காந்திகிராமத்தில். தனி வாக்குசாவடி
அமைக்க வழியுறுத்தி கேட்டுகொன்டோம்.!!
மிக விரைவில் சாிசெய்யபடும்.
என்று உறுதியளித்துள்ளாா்.!!

ஆதித்தமிழா்பேரவை.
அலங்கை ஒன்றியம்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் திரு ராஜாராம் அவர்களை ஆதித்தமிழர் பேரவையினர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் திரு ராஜாராம் அவர்களை ஆதித்தமிழர் பேரவை சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சோ. அருந்ததி அரசு, வடக்கு மாவட்ட பொருப்பாளர்கள், செண்பக ராஜ், உதயசூரியன், ஜெயகண்ணன், சின்னராசு, விருதுநகர் மாவட்ட செயலாளர் பூவை ஈஸ்வரன் ஆகியோர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.ஆதித்தமிழர் பேரவை தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் கோவில்ப்பட்டியில் தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆதித்தமிழர் பேரவை தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் கோவில்ப்பட்டியில் தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆதித்தமிழர் கட்சியில் இருந்து விலகி தோழர்கள் மு. சங்கர், A.J. சுரேஷ் ஆகியோர் ஆதித்தமிழர் பேரவையில் இணைந்தனர்.ஆ.த.கட்சியின் கம்பம் நகரச்செயலாளர் தோழர் விஜயகுமார் அவர்கள் தன்னை மீண்டும் ஆதித்தமிழர் பேரவையில் இனைத்துக் கொண்டார்

ஆ.த.கட்சியின் கம்பம் நகரச்செயலாளர் தோழர் விஜயகுமார் அவர்கள் தன்னை மீண்டும் தேனி மாவட்ட செயலாளர் இளந்தமிழன் தலைமையில் ஆதித்தமிழர் பேரவையில் தன்னை இனைத்துக் கொண்டார்

புதிய தமிழகம் கட்சியி சேலம் மாவட்டம் ,தாரமங்கலம் ஒன்றிய செயலாளராக பணியாற்றிய தோழர் மகேந்திரன் அவர்கள் தன்னை ஆதித்தமிழர் பேரவையில் அடிப்படை உறுப்பினராக இனைத்துக்கொண்டார்

 29/3/2016 ஆதித்தமிழர் பேரவை சேலம் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது
தலைமை ;,
ராதாகிருஷ்ணன் மவட்ட செயலாளர்
சிறப்பு அழைப்பாளர் ;
வீராசிவா மாநில இளைஞர் அணி துணை செயலாளர் மற்றும். மாவட்ட துணை செயலாளர் இளங்கோ, மாவட்ட நிதிச் செயலாளர் ராணி மற்றும் கொங்கனபுரம், எடப்பாடி, கடையம்பட்டி,மகுடஞ்சாவாடி, சங்ககிரி, நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ,உடன் சங்ககிரி சோமு

அக்கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின்் சேலம் மாவட்டம் ,தாரமங்கலம் ஒன்றிய செயலாளராக பணியாற்றிய தோழர் மகேந்திரன் அவர்கள் இன்று முதல் தன்னை ஆதித் தமிழர் பேரவையில் அடிப்படை உறுப்பினராக இனைத்துக்கொண்டார் அவருக்கு மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் உறுப்பினர் அட்டை வழங்கினர் ,மாவட்ட நிதிச்செயலலர் ராணி, மாவட்ட துணை செயலாளர் இளங்கோ, சங்ககிரி சோம சோமு உள்ளிட்டோர் உடனிருந்தனர்  Monday, 21 March 2016

பேரவையின் நிறுவனர் தலைமையில்.. மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலம் முற்றுகை மேற்கு மண்டல ஐ.ஜி வழியாக தமிழக அரசிற்கு கோரிக்கை

பேரவையின் நிறுவனர் தலைமையில்..
மேற்கு மண்டல
காவல்துறை தலைவர் அலுவலம் முற்றுகை
மேற்கு மண்டல ஐ.ஜி வழியாக தமிழக அரசிற்கு கோரிக்கை.
""""""""""""""""""""""""""""""""""""""""""
*தொடரும் சாதிய ஆணவப் கொலைகளை தடுத்து நிறுத்தக் வேண்டும்,
*சாதிக் கலவரங்களை தூண்டிவிடும் கட்சிகள், இயக்கங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*படுகொலையான சங்கரின் குடும்பத்தாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், என்பன குறித்து.

வணக்கம்,
கடந்த 13.03.2016 அன்று உடுமலைபேட்டையில் சாதிமறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட பொறியாளர் சங்கர் கௌசல்யா தம்பதி மீது கோரப் படுகொலை தாக்குதல் நடத்தப்பட்டு, தலித் இளைஞர் சங்கர் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டும், அவரது மனைவி கெளசல்யா படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகிறார்.
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 83 ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளது. இந்த படுகொலைகளிலேயே மிகவும் கோரமான முறையில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த படுகொலையால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இந்நிலையில் சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே மீண்டும் சங்கரின் தம்பியை படுகொலை செய்வோம் என்று கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது என்று அவரது தந்தை நேற்று (20.3.2016) என்னிடம் கூறினார், கொலையாளிகள் மீண்டும் இவ்வளவு துணிவுடன் கடிதத்தின் மூலம் கொலை மிரட்டல் விடுத்திருப்பது, சங்கரின் குடும்பத்தார் மத்தியில் பெரிய அச்சத்தை உருவாக்கியுள்ளது.
படுகாயங்களுடன் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கெளசல்யாவை சந்தித்து சின்ன சின்ன உதவிகள் செய்வதற்கு கூட சங்கரின் குடும்பத்தருக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் சங்கரின் தந்தையார் கூறுகின்றார்.
எனவே,
1) வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட விதிகளின் படி கொலையாளிகள் அனைவருடைய சொத்துக்களையும் முடக்க வேண்டும்,
2) கொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு, திட்டம் தீட்டிக் கொடுத்ததாக கெளசல்யாவால் கூறப்படும், அவரது தாயார், மற்றும் தாய்மாமன் ஆகியோரையும் இந்த வழக்கில் இணைத்து உடனடியாக கைது செய்ய வேண்டும்,
3) முன்கூட்டியே பாதுகாப்பு கோரி மனுக்கொடுத்திருந்தும் அந்த மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல், சட்டப்படி புரிய வேண்டிய கடமையை புறக்கணித்து, மெத்தனம் காட்டிய அரசு வருவாய் அதிகாரிகள், மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
4) மருந்தவமனையில் சிகிச்சை பெற்று வரும் கெளசல்யா தற்போது மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு நிர்கதியாய் நிற்கின்றார், அவரை காப்பாற்றும் நோக்கில், அரசு முழு கவனம் செலுத்தி அவருடைய கல்வி, பாதுகாப்பு, அரசுப்பணி, ஆகியவற்றிற்கு உத்திரவாதம் அளித்திட வேண்டும்.
5) தொடரும் இதைப்போன்ற சாதிய ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டம் இயற்ற வேண்டும்,
7) ஆணவக்கொலைகளை தூண்டுவோர் மீது உரிய நடடிக்கை எடுத்து, அவர்களது கட்சி இயக்கத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும்,
மேற்கண்ட கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஆகிய தங்களை ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.
நாள்.. 21.3.2016
இடம்.. கோவை
இவண்,
இரா.அதியமான்
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.

Sunday, 20 March 2016

சாதிமறுப்பு காதல்மணம் புரிவோரின் தற்காப்புக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் செய்தியாளர்களிடம் தலைவர் அதியமான் பேட்டி

சாதிமறுப்பு காதல்மணம் புரிவோரின் தற்காப்புக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்
செய்தியாளர்களிடம் தலைவர் அதியமான் பேட்டி.
************
இன்று 20.3.2016
ஜாதி வெறிக் காட்டுமிராண்டிகளால் கோரப்படுகொலைக்கு உள்ளான உடுமலை தம்பி சங்கரின் தந்தை மற்றும் இரண்டு தம்பிகள் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்களை சந்தித்து பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் ஆறுதல் கூறினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனர்,
வன்கொடுமை கொலைகளை அரங்கேற்றும் சாதிவெறியர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும்,
*கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான சங்கரின் மனைவி கெளசல்யாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்குவதுடன், அவரை அரசே தத்தெடுத்து படிக்க வைத்து, அரசு வேலை வழங்க வேண்டும்.
*கெளசல்யாவை இயல்பாக சந்திப்பதற்கு சங்கரின் குடும்பத்தாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
*வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி தாழ்த்தப்பட்டோரின் தற்காப்பிற்கு துப்பாக்கி வழங்க வேண்டும்.
* ஆளும் அ.தி.மு.க அரசு முற்றிலும் ஆளும் தகுதியை இழந்துவிட்டது. சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். கண்டிப்பாக இந்த அரசை வரும் சட்டப்பேரவை தேர்தலில் அப்புறப்படுத்துவார்கள்.
__________
தொகுப்பு.
பொதுச்செயலாளர்.

"அய்யா"ஆசிரியர் கி.வீரமணி அதியமானுக்கு புகழாரம்.!!

"அய்யா"ஆசிரியர் கி.வீரமணி அதியமானுக்கு புகழாரம்.
""""""""''''''''''''
திரவிடர் கழகம்
சார்பில் இரண்டு நாள் மாநாடு திருச்சியில் தொடங்கியது.
மார்ச்.19, 20 ஆகிய இரண்டு நாட்கள் திருச்சி சிறுகனூரில் நடைபெறும் திராவிடர் கழக மாநாடு தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு "சமூகநீதி" என்ற தலைப்பில் நடைபெறுகிறது.
முதல் நாள்.
"""""""""""""""""
19.3.2016 தொடங்கிய முதல் நாள் மாநாட்டில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் 'அய்யா' அதியமான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தந்தை பெரியார் அவர்களின் திரு உருவப்படத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.
முன்னதாக பேசிய ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அய்யா அதியமான் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி, அடித்தட்டு மக்களை அம்பேத்கர், பெரியார் வழியில் அணிதிரட்டும் ஆதித்தமிழர் பேரவையை திராவிடர் கழகம் ஒத்த கருத்து உள்ள இயக்கமாக மட்டும் பார்க்கவில்லை, நாங்கள் இருவருமே திராவிடர் குடும்பத்தை சார்ந்தவர்கள் என்று பெருமிதம் கொண்டார். மேலும் தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்கும் முழு தகுதி அடித்தட்டு மக்களை அணிதிரட்டும் சகோதரர் அதியமானுக்கு உண்டு என்று புகழாரம் சூட்டினார்.

(சமூக நீதி மாநாட்டில் கலந்து கொண்ட சாவித்திரி பாய் பூலே வின் பேத்திக்கு ஆதித்தமிழர் பேரவை வெளியிட்ட சாவித்திரி பாய் பூலே வின் வரலாற்று புத்தகத்தை நமது அரசியல் முகவரி அய்யா அவர்கள் வழங்கினர்)

மாநாட்டில் அய்யா அதியமான் அவர்கள் உரையாற்றிய காணொளியை காண இங்கு சொடுக்கவும்