அண்மையச்செய்திகள்

Thursday, 29 November 2018

மரியாதைக்குரிய விபிதுரைசாமி இல்ல திருமண நிகழ்வில் அய்யா அதியமான் திமுக தலைவர் ஸ்டாலி அவர்கள் கலந்து கொண்டு இணையர்களை வாழ்த்தினர்


இன்று சென்னையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய விபி துரைசாமி அவர்களின் இல்ல திருமண விழாவில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மாண்புமிகு தளபதி அவர்கள் உடன் நிறுவனர் தலைவர் அய்யா அதியமான் அவர்கள் பங்கேற்று இணையர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்த மத்திய பா.ச.க அரசுக்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம் நிறுவனர் அதியமான் அறிக்கை


காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மத்திய நீர்வளத்துறை மூலம், பாசிச பா.ச.க அரசு அனுமதி அளித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் வரத்தை கர்நாடக அரசு திடீர் என குறைத்ததற்காக தமிழக விவசாயிகள் கொந்தளிப்பின் பாதிப்பை கடப்பதற்குள¸; அடுத்த கணமே மத்திய அரசு இவ்வாறு மேகதாதுவில் அணைகட்ட அனுமதி தந்திருப்பது¸ ஏற்கனவே கஜா புயலால் வாடும் தமிழக மக்களை மேலும் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகம்¸ கர்நாடகா¸ கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நீர் பங்கீடு வழக்கில் உச்சநீதி மன்றம் பிறப்பித்த உத்தரவின்படி¸ மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைத்துள்ளது. மேற்கண்ட நான்கு மாநிலத்தில் புதிய அணை கட்டுவதாக இருந்தால்¸ அதை பரிசீலித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மட்டுமே உள்ளது என தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையெல்லாம் மீறி கர்நாடக அரசு நம் தமிழக எல்லை மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை அசுர வேத்தில் செய்வதற்கான உள்நோக்கமாக¸ 400 மெகாவாட் நீர்மின் நிலையம் அமைத்து கார்ப்பரேட்டுகளுக்கு மின்சாரம் தாரை வார்க்கவே என கருதப்படுகிறது.
வெறுமனே கரப்சன் கலெக்சன் என செயல்படும் தமிழக அரசு மத்திய அரசுக்கு புறா விடு தூது போல கண்துடைப்புக்காக கடிதம் எழுதி காலம் கடத்துகிறது. ஆனால் கர்நாடக அரசோ தனது மாநில எம்.பிக்களை அழைத்து சென்று பிரதமரை சந்தித்து அனுமதி பெற்றுள்ளது. நமது மாநில எம்.பிக்களை அழைத்து தமிழகம் மத்திய அரசுக்கு அழுத்தம் தராதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. தமிழகம் இந்தாண்டும் உடலுறுப்பு தானத்தில் நாட்டிலேயே முதலிடம் பிடித்தது சாதனைதான். அதேசமயம் மாநிலத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைப்பதிலும் முதலிடமாக இருப்பது வேதனையே.
இறுதியாக¸ தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்வது போல தமிழக அரசு உடனடியாக உச்சநீதி மன்றத்தை நாடவேண்டிய தருணம் இது. மேலும் இது போன்ற இரு மாநில பிரச்சனைகளில் மத்திய அரசு மிகுந்த கவனத்தோடு கையாள வேண்டும். இப்படிப்பட்ட செயல்கள் இரு மாநில மக்களிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கிவிடும். இத்திட்டத்தை அனுமதித்த மத்திய பா.ச.க அரசை ஆதித்தமிழர் பேரவை மிக வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இத்திட்டத்தின் அனுமதியை உடனடியாக திரும்பப் பெறுமாறு ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.
இவண்
இரா.அதியமான்
நிறுவனர்/தலைவர்
ஆதித்தமிழர் பேரவை .
கோவை, 28.11.2018

Tuesday, 27 November 2018

தனித்தொகுதிகளில் அருந்ததியர்களுக்கு சமூகநீதி - ஆதித்தமிழர் பேரவை சார்பில் சேலம் மாவட்ட எழுச்சி மாநாடு சங்ககிரியில் மிக சிறப்பாக நடைபெற்றது


நவம்பர் 26'' 2018ல் சேலம் மாவட்டம் சங்ககிரியில் மாலை 4 மணியளவில் வீரமங்கை ராணி நினைவு நாளில் தனித்தொகுதிகளில் அருந்ததியர்களுக்கு சமூகநீதி சேலம் மாவட்ட எழுச்சி மாநாடு ஆதித்தமிழர் பேரவை நிருவனர் அய்யா அதியமான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில்
1-ஒ.என். முருகன்,சேலம் மேற்கு மாவட்ட தலைவர் காங்கிரசு கட்சி
2-ந.மகேந்திரவர்மன், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் மதிமுக
3-பி.பி.ராமமூர்த்தி, சேலம் மாவட்ட செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
4-ஏ.மோகன், சேலம் மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
5-எஸ்.முகம்மது ரயீஸ், சேலம் மேற்கு மாவட்ட தலைவர், மனிதநேய மக்கள் கட்சி
6-கோவை ரவிக்குமார், பொது செயலாளர், ஆதித்தமிழர் பேரவை,
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1 - தமிழகத்திலுள்ள தனித் தொகுதிகளில் கடந்த 70 ஆண்டுகளில் ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலின் போதும் இரண்டு அல்லது மூன்று அருந்ததியர்கள் தான் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் ஆனால் ஒவ்வொரு முறையும் மற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் 20-க்கும் குறையாமல் தேர்வு செய்யப்படுகின்றனர் 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட அருந்ததியர் சமூகத்திற்கு அரசியலில் சமூக நீதி இல்லை எனவே அருந்ததியர்கள் பெரும்பான்மையாக உள்ள 15 தொகுதிகளில் அனைத்து கட்சிகளும் அருந்ததியர் மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தனித் தொகுதிகளில் அருந்ததியருக்கு சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது
2 - தமிழகத்தில் தொடர்ந்து சாதியின் பெயரால் ஆணவ படுகொலைகள் நடைபெறுவது வன்மையாக கண்டிக்கிறோம் இளவரசன் கோகுல்ராஜ் சங்கர் ஆகியோரைத் தொடர்ந்து ஓசூர் நந்தி சுவாதி ஆணவ படுகொலை மிகுந்த கண்டனத்துக்குரியது ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்வதுடன் சாதியின் பெயரால் நடைபெறும் ஆணவ படுகொலைகளை தடுக்க சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்றும் இதுபோன்ற கொலைகளை விசாரிக்க தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் ஓசூர் நந்தி சுவாதி கொலை வழக்கை தாமதமின்றி விசாரித்து குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது
3 - தாழ்த்தப்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் பாலியல் கொலைகள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது தேனி ராகவி ஆத்தூர் ராஜலட்சுமி தர்மபுரி சௌமியா ஆகியோரின் படுகொலைக்கு இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது மேற்கண்ட கொலை வழக்குகளில் நேர்மையாக விசாரணை நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்வதுடன் உடனடியாக விசாரணை செய்து கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது மேலும் அவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 25 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
4 - தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பிரித்து அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது இந்த உள் இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
5- தமிழகத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறாத காரணத்தினால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவது தாழ்த்தப்பட்ட மக்கள் தான் எனவே தமிழக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை முறையாக முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று இந்த மாநாடு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
6 - கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் மிகப் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறது தமிழக அரசின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக நிவாரணங்கள் சென்றடையவில்லை குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எவ்வித நிவாரணமும் சென்றடையவில்லை எனவே தமிழக அரசு விரைந்து செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்
7 - சேலம் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகம் வாழ்கின்ற பகுதிகளில் முறையாக அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை மேலும் அப்பகுதியில் குடியிருக்கும் அருந்ததியர் சமூகத்திற்கு பட்டாக்கள் வழங்கப்படவில்லை எனவே சேலம் மாவட்டத்தில் வாழ்கின்ற அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் முறையாக வழங்கி அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்று இந்த மாநாட்டின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்
8 - தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலை இல்லை எனவே தமிழக அரசு மேற்கு மாவட்டங்களான கோவை திருப்பூர் ஈரோடு நாமக்கல் சேலம் தர்மபுரி ஆகிய இடங்களில் புரட்சியாளர் அம்பேத்கரின் திருவுருவச் சிலையை தமிழக அரசு நிறுவ வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது
1 - அக்டோபர் 28 இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் பூமிநாதன் தாயார் நாகம்மாள் (75)
2 - நவம்பர் 1 திண்டுக்கல் மாவட்டம் பழனி சத்யா நகர், செல்வி, கோமதி (21)
3 - நவம்பர் 2 மதுரை அலங்காநல்லூர் முருகன் (51)
4 - நவம்பர் 6 தருமபுரி மாவட்டம், அரூர் சவுமியா (14)
5 - நவம்பர் 19 மதுரை தனக்கன் குளம் (40) தூய்மைப் பணியாளர்
6 - நவம்பர் 20 கோவை மாவட்டம் ஆட்டோ வெள்ளியங்கிரி யின் தந்தை ஆறுமுகம்.
7 - நவம்பர் 21 விருதுநகர் மாவட்டம். திரு வில்லிபுத்தூர் கடற்கரை (50)
8 - நவம்பர் 21 நாமக்கல் மல்லசமுத்திரம் முருகேசன் (TNEB)
9 - நவம்பர் 22 திண்டுக்கல் மாட்டம். பேரவையின் வேடசந்தூர் ஒன்றியத் தலைவர் பழனிச்சாமி (52)
10 - நவம்பர் 23 விருதுநகர் மாவட்டத் தலைவர் மாயக்கண்ணன் அவர்களின் தாயார் லெட்சுமியம்மாள் (65)
11 - நவம்பர் 24 தேனி மாவட்ட முன்னாள் கொ.ப.செ ரமேஷ் பெருமாள்
12 - தூத்துக்குடி மாவட்ட நிதிச் செயலாளர் உதயசூரியன்
ஆகியோர்க்கு இம்மாநாடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறது.
என்றும் சாதி ஒழிப்புப் பணியில்
வே.மு.சந்திரன்
மாவட்டசெயலாளர்
வலைத்தளம்: www.aathithamizharperavai.com
வலைப்பூ: www.atptamilnadu.blogspot.com
முகநூல் பக்கம்: https://www.facebook.com/adhiyamaanperavai
🔵🔴🔵