அண்மையச்செய்திகள்

Sunday, 29 November 2015

தலைநகரில் ஆதித்தமிழர்களின் அறிவாசான் அய்யா அதியமான் அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றவிருக்கும் "மக்களை பிளவு படுத்தும் பார்பன மதவாத எதிர்ப்பு" மாநாடு

தலைநகரில் ஆதித்தமிழர்களின் அறிவாசான் அய்யா அதியமான் அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றவிருக்கும்

"மக்களை பிளவு படுத்தும் பார்பன மதவாத எதிர்ப்பு" மாநாடு

சென்னையில்
மாலை 6.00 மணிக்கு திறந்தவெளி மாநாடு
நாள் : 01.12.2015 செவ்வாய்கிழமை.

வாருங்கள் தோழர்களே மக்களை பிளவு படுத்தும் பார்பன மதவாதத்தை எதிர்போம்
சமூக நீதியை காப்போம்.


முகநூல் பற்றி 1.1.2015 அன்று பொதுச்சயலாளர் ஆ.நாகராசன் அவர்கள் வெளியிட்ட பதிவு

முகநூல் பற்றி 1.1.2015 அன்று பொதுச்சயலாளர் ஆ.நாகராசன் அவர்கள் வெளியிட்ட பதிவு.
~~~~~~~~~~~

அகமும் முகமும் ஒன்றாகட்டும்!
அரசியல் வாழ்வு தெளிவாகட்டும்!!
"""""""""""""""""""""""""
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது
முன்னோர்கள் சொன்ன பழமொழி!
அதை பின்பற்றி வழிமொழிவதே முகநூல் எனும் தற்போதைய புதுமொழி!

முகநூல் என்பது படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை, நாத்திகர்கள் முதல் ஆத்திகர்கள் வரை, அரசியல்வாதிகள் முதல் அப்பாவிகள் வரை, காதலர்கள் முதல் எதிர்ப்பவர்கள் வரை, வாலிபர்கள் முதல் வயோதிகர் வரை, வணிகர்கள் முதல் வாங்குபவர்கள் வரை, தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை, பகுத்தறிவாளர்கள் முதல் பழைமைவாதிகள் வரை.

இப்படி... எண்ணற்றோரை ஈர்த்து, தங்களது அகத்தில் உள்ளவற்றை அப்படியே வெளிக்கொணர்ந்து உலகமே! பார்க்கும்படி பதிவு செய்து, பகிர்ந்துகொண்டு ஆனந்தம் கொள்ள வைக்கின்ற அனைவரும் உலாவும் ஊடகம்தான்! முகநூல்,

அந்த ஊடகத்தின் உன்னதம் உருப்படியான பல விசயங்களை உலகிற்கு பரப்பிவந்தலும், அந்த பரப்புதலோடு சேர்ந்து பகைமூட்டும் செய்திகளும் பரப்பப்படுவது, நடக்கத்தான் செய்கின்றது. அப்படிப்பட்ட எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்துகளை  சுட்டிக்காட்டுவதும் நம் கடமையகும்.

"அகத்தில் உள்ளதுதான்! முகத்தில் வெளிப்படும்"
`~~~~~~~~~~~
அகம் எண்ணுவது வார்த்தைகளாகவும், வார்த்தைகள் செயல்களாகவும் மாறி மக்களிடம் சேர்வதை அல்லது சேர்க்கப்படுவதை காலம் காலமாக இம்மக்கள் கண்டுவரும் நிகழ்வு.

அவரவர் அடிமனதில் எழும் எண்ணங்கள் அரசியலாக்கப்பட்டு, அவசியம் உள்ளதாகவும், சில நேரங்களில் தங்களது ஆத்திரத்தையும் கோபத்தையும், அன்பையும் வெறுப்பையும் கொட்டித்தீர்க்கின்ற வடிகாலாகவும். உளவியல் சார்ந்த கருவியாக தற்போது முகநூல் பயன்படுத்தப்படுகிறது.

இதை "முகநூல்" என்று சொல்வதை விட "அகநூல்" என்று, சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

இதற்கு! தந்தைபெரியாரின்  பகுத்தறிவு செயல் ஒன்றைக்கூட உதாரணமாக சொல்ல முடியும். தந்தைபெரியார் எத்தனையோ சமரசமில்லாத போராட்டங்களை முன்னெடுத்தவர், என்பது நாம் அனைவரும் அறிந்ததே!

ஒருமுறை "சாதிஒழிப்பு" மாநாடு ஒன்றை ஈரோட்டில் கூட்டியபோது அந்த மாநாட்டின் முடிவில், சாதியை ஒழிக்கும் கருத்தியலில் உறுதியாக உள்ளவர்கள்  அல்லது விரும்புகிறவர்கள் எத்தனைபேர் என்பதை தெரிந்து கொள்ள, கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்த அந்த மாநாட்டையே சோதனைக்கு உட்படுத்தினாராம்.

அதனடிப்படையில் மாநாட்டிற்கு வந்திருந்த தோழர்களிடம், அன்பார்ந்த தோழர்களே! இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் மேலும்,

மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அரங்கத்தை விட்டு வெளியேறும் போது, மாநாட்டு வரவேற்பு கூடத்தின் மேசை மீது வைக்கப்பட்டுள்ள குறிப்பேட்டில், தங்களது பெயரையும், அதோடு சேர்த்து தங்களது சாதியையும் குறித்து விட்டு செல்லுங்கள் என கேட்டுக்கொண்டாராம்.

பெரியாரின் அந்த அறிவிப்பை ஏற்று, வந்திருந்த அனைவரும் அவ்வாறே குறிக்க தொடங்கினராம்.

ஆனால், மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் மூவர் மட்டும், சாதிஒழிப்பு கருத்தியலில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கின்றோம், எனவே எங்களது சாதியை குறிப்பிட்டு எழுதமாட்டோம் என்று உறுதியாக கூறினராம்,

அவர்களது உறுதியை கண்டு, அந்த மூன்று நபரையும் பார்த்து, தவறாக எண்ணாதீர்கள் இது ஒரு ஆய்வுக்குத்தான். நிலவுகின்ற சாதிய சமூகத்தில் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்று அதிகம் விரும்புகின்றனர், என்ற புள்ளிவிபரத்தை தெரிந்து கொள்ளத்தான் என்றாராம் பெரியார்.

இருந்த போதும் அந்த மூவரும் பெரியாரின் வேண்டுகோளை ஏற்க மறுத்து கடைசிவரை சாதியை குறிப்பிடாமலேயே அடம்பிடித்தனராம்.

அப்படி அவர்கள் அடம்பிடிப்பதை பார்த்த பெரியார், உடனே ஒரு முடிவுக்கு வந்து, அந்த மூவருடைய பெயருக்கு பின்னால் ஒருவருக்கு சக்கிலியர் என்றும் மற்ற இருவருக்கு பள்ளர் என்றும் பறையர் என்றும் குறிப்பிடச்சொன்னாராம்.

அப்படி குறிப்பிட சொன்ன பெரியாரின் கூற்றைக்கேட்ட மூவரும் "கொஞ்சமும்" தாமதிக்காமல் கோபமடைந்து அய்யா "ராமசாமி நாயக்கரே" நாங்கள் உண்மையிலே முதலியார், கவுண்டர், நாயக்கர் சமூகத்தை சார்ந்தவர்கள்,

எங்களை இப்படி தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர்கள் என்று குறிப்பிட சொல்லி கேவலப்படுத்திவிட்டீர்களே! இனிமேல் எதற்கும் எங்களை அழைக்காதீர்கள் என்று, மாநாட்டு அரங்கத்தை விட்டு ஆவேசத்துடன் வெளியேறி சென்றனராம்.

அப்போது அருகில் இருந்தவர்கள் பெரியாரை பார்த்து, தயவு கூர்ந்து போகிறவர்களை அழைத்து சமாதானம் செய்யுங்கள் என்றனராம்.
         
அதற்கு பெரியார் சொன்னாராம்! வெறுமனே, நடிப்பவர்கள் எனக்கு தேவையில்லை உண்மையான உணர்வோடு ஒருசிலர் இருந்தாலே போதும், அவர்களைக் கொண்டே நான் இயக்கத்தை முன்னெடுத்து செல்வேன் போலியானவர்கள் போவதைப்பற்றி எனக்கு கவலையில்லை என்று சொன்னதோடு,

மற்றவரையும் பார்த்து உங்களுக்கும் இதில் உடன்பாடு இருந்தால் இருக்கலாம், இல்லையென்றால் நீங்களும் செல்லலாம், என்று இயல்பாக சொன்னாராம்.

அதுபோல, உள்மனதில் உறங்கி கிடக்கும் எண்ணங்கள் உணர்ச்சி வசப்பட்டுவிட்டால் அது கொஞ்சமும் தாமதிக்காமல் கொப்பளித்துக்கொண்டு வெளியே வரும் என்பதற்கு பெரியாரின் ஆய்வே சாட்சி.

"எத்தனை நாளைக்குத்தான் நானும் நல்லவன் மாதிரியே! நடிக்கிறது" என ஒரு திரைப்படத்தில், நடிகர் ஒருவர் நகைச்சுவை வசனம் ஒன்றை பேசுவார். அந்த திரைப்பட காட்சியை நகைச்சுவை என்றோ அல்லது வசனம் என்றோ நினைக்க முடியுமா?

ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் ஏதோஒரு சுயநல எண்ணம் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது, அந்த சுயநல எண்ணத்தை துரத்தியடித்து, மக்களுக்க்காவே தன்னை மாற்றி கொண்டு வாழ்ந்த மகத்தான மனிதர்கள்தான் இம்மண்ணில் நீங்கா புகழோடு நிலைத்து நிற்கின்றனர், நமக்கும் நல்வழிகாட்டி சென்றுள்ளனர்.

அரசியலில் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள்,
பிறரை எதிர்கொள்ள முடியாமல் இயலாமமையில் உள்ளவர்கள்,
பொறாமையும், வஞ்சகமும், சூழ்ச்சியும் நிறைந்தவர்கள்,
தத்துவார்த்த தெளிவு இல்லாத தற்குறிகள்,
தலைமை பண்பில்லாத தான்தோன்றிகள்,
உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டவர்கள்.

இப்படி தனது உண்மையான முகத்தை உலகுக்கு காட்டாமல்
ஒளிந்து கொண்டு பேக் ஐடி.யில் கருத்து சொல்லும் பேடிகள்,
மது, சூது, மாது என பொழுதை கழிப்பவர்கள்,
பெண்களை போகப்பொருட்களாக சித்தரிப்பவர்கள்,
ஆபாசமாக படமெடுத்து மிரட்டுபவர்கள்,

பொதுவாழ்விற்கு வரும் பெண்களை கொச்சைபடுத்துபவர்கள்,
போற்றுதலுக்குரிய நபர்களை புறம்பேசி களங்கத்தை கற்பிக்க முற்படுபவர்கள்,
அரசியலில் எதிர்கொள்ள முடியாதவர்களை
அடிபணிய வைக்க அவதூறுகளை அள்ளி வீசுபவர்கள்.

இப்படி....
எத்தனையோ முகங்கள் உலாவும் முகநூலில்
மனிதகுல மகத்துவத்தை புரிந்துகொண்டு மக்கள் விடுதலைக்காக
கருத்துப்போர் தொடுப்பவர்கள்,
இயக்க செயல்பாடுகளை பதிவேற்றம் செய்து மக்கள் பிரச்சினைகளை மைய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று
மாற்றத்தை நோக்கி மக்களை அரசியல் படுத்துபவர்கள் என...

எண்ணற்ற முகங்களையும்,  கதாபாத்திரங்களையும் தனக்குள் வைத்துக்கொண்டு இயங்கும் முகநூல் சரியானவற்றையும், தவறானவற்றையும் சேர்த்தே சுமந்துகொண்டு, வலைத்தள உலகத்தில் வலம் வருகிறது.

"விஞ்ஞான வளர்ச்சி" என்பது மனிதகுல விடுதலைக்கான ஆயுதமாக பயன்பட வேண்டுமே தவிர, பிறரை தவறான முறையில் சித்தரித்து வசைபாடுவதற்கும், வஞ்சகம் தீர்த்துக்கொள்வதற்கும் அல்ல.

இதை புரிந்து கொண்டு ஆக்கபூர்வமான செயல்களுக்கும், அல்லல்படும் அடித்தட்டு மக்களின் விடுதலைக்கும் முகநூல் போன்ற வலைத்தளங்களை ஆயுதமாக பயன்படுத்துவோம்.

வரலாறு என்பது, சரியும்! தவறும்! கலந்ததுதான்,
அதில் தவறுகளை கலைந்து விட்டு, சரியானவற்றை எடுத்துக்கொண்டு முன்னேறி செல்வதை போல்! முகநூலையும் சரியான வழியில் பயன்படுத்தி முன்னேற்ற பாதையில் பயணிப்போம்.

முகநூலும், டுவிட்டரும்தான்! மத்தியில் நடந்த ஆட்சி மாற்றத்திற்கு மிக முக்கியமான காரணியாக இருந்துள்ளது. எனவே அதை சரியாக புரிந்துகொண்டு அடித்தட்டு மக்களின் விடுதலைக்கான ஆயுதமாக பயன்படுத்தி அரசியலில் அடியெடுத்து வைப்பதே அறிவார்ந்த செயலாகும்.

எனவே இதை முகநூல் என்று சொல்வதை விட அகநூல் என்று சொல்வதே பொறுத்தமாக இருக்கும்.
_________________
அகமும் முகமும் ஒன்றாகட்டும்!
அரசியல் வாழ்வு தெளிவாகட்டும்!!
""""""""""'''''''""""""'''''''"                                                                       தோழமையுடன்,
ஆ.நாகராசன்,
பொதுச்செயலாளர்.
ஆதித்தமிழர் பேரவை.
   
▶ 1.1.2015

இன்று கரூரில் நடந்த மதுவெறி மதவெறி சாதிவெறிக்கு எதிரான கருத்தரங்கம் மற்றும் கொடியேற்றுவிழா

இன்று கரூரில் நடந்த மதுவெறி மதவெறி சாதிவெறிக்கு எதிரான கருத்தரங்கம் மற்றும் கொடியேற்றுவிழா30/11/2015 திருச்சி பொன்மலை கணேசபுரம் பகுதியில் பேரவை உறுப்பினர் சேர்க்கை மற்றும் கள ஆய்வு நடைபெற்றது.

இன்று 30/11/2015,,
திருச்சி பொன்மலை கணேசபுரம் பகுதியில் பேரவை உறுப்பினர் சேர்க்கை மற்றும் கள ஆய்வு நடைபெற்றது.
களப்பணியில் மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் செங்கை குயிலி,பொறியாளர் பேரவை செயலாளர் தோழர் எழில்புத்தன்,தோழர் மணியரசு ஆகியார்.


ஆளும் கட்சி யின் குண்டர்களால் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளன தோழர் சந்திரன் அவர்களை நேரில் சென்று உடல் நலம் குறித்து விசாரித்தார் மாநில நிதிச் செயலாளர் சேரிக்கலைவனார் பெருமவளவன் அவர்கள் உடன் பேரவை தோழர்கள்.

ஆளும் கட்சி யின் குண்டர்களால்  கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளன தோழர் சந்திரன் அவர்களை நேரில் சென்று உடல் நலம் குறித்து விசாரித்தார் மாநில நிதிச் செயலாளர் சேரிக்கலைவனார் பெருமவளவன் அவர்கள் உடன் பேரவை தோழர்கள்.மேலும் தோழர் பெருமாவளவன் அவர்கள் விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்றுவரும் தோழர் தமிழரசுவை சந்தித்தார்.

அதன் பின் சேலம் மாவட்டம் செயற்குழு கூட்டத்திலும் கலந்து கொண்டார்.


Saturday, 28 November 2015

29.11.2015 அன்று கரூரில் ஆதித்தமிழர் பேரவை நடத்தும் மதுவெறி மதவெறி சாதிவெறி க்கு எதிரான கருத்தரங்கம் மற்றும் கொடியேற்று விழா

29.11.2015 அன்று கரூரில் ஆதித்தமிழர் பேரவை நடத்தும் மதுவெறி மதவெறி சாதிவெறி க்கு எதிரான கருத்தரங்கம் மற்றும்
கொடியேற்று விழா

கருத்துரை வழஙகுகிறார்
நீலப்படை தளபதி
பொதுச்செயலாளர்
ஆ.நாகராசன்

ப.பெருமாவளவன்
நிதிசெயலாளர்,

மாநில துணை பொதுசெயலாளர்கள்
வழக்கறிஞர் ஆனந்தன்,
நாமக்கல் சுப்பிரமணி


மற்றும் பேரவை மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

Friday, 27 November 2015

அதிமுக குண்டர்களால் கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட்ட பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் வே.மு.சந்திரன் அவர்களை அவரது இல்லத்தில் இன்று நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் மற்றும் பேரவை நிர்வாகிகளுடன் சந்தித்தார் 27.11.2015

அதிமுக குண்டர்களால் கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வரும் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர்
தோழர் வே.மு.சந்திரன் அவர்களை சங்ககிரி வேங்கிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் சென்று நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்

உடன் பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் மற்றும் மாவட்ட செயலாளர் ராதாகிருட்டிணன், சோமு, மாரிமுத்து, ரவிசுப்பிரமணி, காவேரி உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் .

Thursday, 26 November 2015

((காணொளி))வீரத்தாய் இராணி வீரவணக்கம் நாளில் திருச்சியில் "மது வெறி","மத வெறி", "சாதி வெறி" யை கண்டித்து எழுச்சிகரமான பொதுக்கூட்டம்

 வீரத்தாய் இராணி வீரவணக்கம் நாளில் திருச்சியில் "மது வெறி","மத வெறி", "சாதி வெறி" யை கண்டித்து எழுச்சிகரமான பொதுக்கூட்டம்

அய்யா அதியமான் அவர்களின் எழுச்சியுரை

திருச்சியில் பிரமாண்ட சுவர் விளம்பரங்கள்

திருச்சியில் பிரமாண்ட சுவர் விளம்பரங்கள் வீரத்தாய் இராணி வீரவணக்கம் நாளில் திருச்சியில்  "மது வெறி","மத வெறி", "சாதி வெறி" யை கண்டித்து எழுச்சிகரமான பொதுக்கூட்டம்

தற்போது அய்யா அதியமான் அவர்கள் மதுவெறி மதவெறி சாதிவெறி க்கு எதிராக எழுச்சியுறையாற்றிக் கொண்டிருக்கிறார்

வீரத்தாய் இராணி வீரவணக்க நாளில் திருச்சியில் நடைபெற்றுக்கொண்டகருக்கிற மதுவெறி மதவெறி சாதிவெறிக்கு எதிராக அய்யா அதியமான்.அவர்கள் எழுச்சியுறையாற்றிக் கொண்டிருக்கிறார்.


வீரத்தாய் இராணி வீரவணக்கம் நாளில் திருச்சியில் "மது வெறி","மத வெறி", "சாதி வெறி" யை கண்டித்து எழுச்சிகரமான பொதுக்கூட்டம் தொடங்கியது அய்யா அதியமான் அவர்கள் தலைமையில்

வீரத்தாய் இராணி வீரவணக்கம் நாளில் திருச்சியில்  "மது வெறி","மத வெறி", "சாதி வெறி" யை கண்டித்து எழுச்சிகரமான பொதுக்கூட்டம் தொடங்கியது அய்யா அதியமான் அவர்கள் தலைமையில்

அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை 6% சதவிகிதமாக உயர்த்த கோரி உயிர் தியாகம் செய்த வீரத்தாய் ராணி அவர்களின் நினைவு நாளில் மது வெறி,மத வெறி, சாதி வெறியை கண்டித்து தற்போது திருச்சியில் கருத்துரிமை முழக்க பொதுக்கூட்டம் ஆதித்தமிழர் பேரவை சார்பாக அய்யா அதியமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது


திருச்சியில் நிறுவனர் அய்யா அதியமான் அவர்களை மாநிலம் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பேரவையினர் மற்றும் பொதுமக்கள் தனி தனியாக சந்தித்து கொண்டிருகின்றனர்

இன்று  திருச்சிக்கு வீரமங்கை ராணி வீரவணக்க நாளில் மதுவெறி மதவெறி சாதிவெறிக்கு எதிராக கருத்துரிமை முழக்க பொதுக்கூட்டத்திற்கு   வந்திருந்த நிறுவனர் அய்யா அதியமான் அவர்களை மாநிலம் மாநிலம் முழுவதிலும் இருந்து   வந்திருந்த பேரவையினர் மற்றும் பொதுமக்கள் தனி தனியாக சந்தித்து கொண்டிருகின்றனர்

விருதுநகர் மாவட்டம்  -
திருச்சி பாலக்கரை மக்கள்
தூத்துக்குடி மாவட்டம்
நாமக்கல் மேற்கு மாவட்டம்கரூர் மாவட்டம்
பள்ளர் சாதிவெறியர்களால் பாதிக்கப்பட்ட திண்டுக்கல் தாமரைப்பாடி அருந்ததியர் மக்கள் இன்று திருச்சி வந்திருந்த நிறுவனர் அய்யா அதியமான் அவர்களை சந்தித்து முறையிட்டனர்

பள்ளர் சாதிவெறியர்களால்  பாதிக்கப்பட்ட திண்டுக்கல் தாமரைப்பாடி அருந்ததியர் மக்கள் இன்று திருச்சிக்கு வீரமங்கை ராணி வீரவணக்க நாளில் மதுவெறி மதவெறி சாதிவெறிக்கு எதிராக கருத்துரிமை முழக்க பொதுக்கூட்டத்திற்கு   வந்திருந்த நிறுவனர் அய்யா அதியமான் அவர்களை  சந்தித்து முறையிட்ட பகுதி மக்களுடன் மாவட்ட செயலாளர் காளிராஜ் மற்றும் தோழர்கள்


ஆதித்தமிழர் பேரவை திண்டுக்கல் மாவட்டம் நீலகொடை ஒன்றியம் கமலபுரம் புதிய கிளை திறக்கப்பட்டு நீலசெங்கொடி ஏற்றப்பட்டு வீரமங்கை இராணி அவர்களுக்கு காளிராஜ் மற்றும் தோழர்கள் வீரவணக்கம் செலுத்தினர்ஆதித்தமிழர் பேரவை திண்டுக்கல் மாவட்டம் நீலகொடை ஒன்றியம் கமலபுரம் புதிய கிளை திறக்கப்பட்டு நீலசெங்கொடி ஏற்றப்பட்டு வீரமங்கை இராணி அவர்களுக்கு காளிராஜ் மற்றும் தோழர்கள் வீரவணக்கம் செலுத்தினர்


வீரத்தாய் இராணி அவர்களின் வீரவணக்கம் நாளில் நடைபெறும் மதுவெறி மதவெறி சாதிவெறிக்கு எதிராக அய்யா அதியமான் அவர்களின் தலைமையில் நடைபெறும் கருத்துரிமை முழக்க பொதுகூட்டதிற்கு கரூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பாக மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

வீரத்தாய் இராணி அவர்களின் வீரவணக்கம் நாளில் நடைபெறும் மதுவெறி மதவெறி சாதிவெறிக்கு எதிராக அய்யா அதியமான் அவர்களின் தலைமையில் நடைபெறும் கருத்துரிமை முழக்க பொதுகூட்டதிற்கு கரூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பாக மாவட்டம் முழுவதும்  ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்
வீரமங்கை ராணித்தாய் அவா்களுக்கு வீரவணக்கம் செலுத்த மற்றும் மதுவெறி மதவெறி சாதிவெறிக்கு எதிராக அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் நடைபெறும் கருத்துரிமை முழக்க பொது கூடத்திற்கு நாமக்கல் மாவட்ட ஆதித்தமிழா்பேரவையினர் திருச்சியை நோக்கி பயணித்து கொண்டு இருக்கின்றனர்

அருந்ததியா் உள் இட ஒதுக்கீட்டுப் போராளி வீரமங்கை ராணித்தாய் அவா்களுக்கு வீரவணக்கம் செலுத்த மற்றும் மதுவெறி மதவெறி சாதிவெறிக்கு எதிராக அய்யா அதியமான் அவர்கள்  தலைமையில் நடைபெறும் கருத்துரிமை முழக்க பொது கூடத்திற்கு நாமக்கல் மாவட்ட
 ஆதித்தமிழா்பேரவையினர்  மாநில துணை பொதுச்செயலாளா் நாமக்கல் சுப்ரமணியுடன் நாமக்கல் கிழக்கு மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளா்கள் திருச்சியை நோக்கி பயணித்து கொண்டு இருக்கின்றனர்வீரமங்கை திருச்சி ராணி -க்கு. சேலம் மேற்கு மாவட்டம் சங்ககிரி ஒன்றியத்தின் சார்பாக வீரவனக்கம் செலுத்தப்பட்டது

 வீரமங்கை திருச்சி ராணி -க்கு. சேலம் மேற்கு மாவட்டம் சங்ககிரி ஒன்றியத்தின் சார்பாக வீரவனக்கம் செலுத்தப்பட்டது
மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன்,, மாநில துணை பொதுச்செயலாளர் வேமுசந்திரன். மவட்டதலைவர்மாரிமுத்து நிதிச் ரவிசுப்ரமணியன் ,,ஸ்ரீதர்,,சுரேஸ்,, மற்றும் சங்ககிரி சோமு கலந்து கொண்டனர்Wednesday, 25 November 2015

நவம்பர் 26' 2015 தோழர் இராணி அவர்களின் நினைவு நாளிற்கு ஆதித்தமிழர் பேரவை மாவட்ட ஒன்றிய வாரியாக அடிக்கப்பட்ட பதாகைகள்

நவம்பர் 26' 2015 தோழர் இராணி அவர்களின் நினைவு நாளில் திருச்சியில் நடைபெறவிருக்கும் மதுவெறி மதவெறி சாதிவெறிக்கு எதிராக ஆதித்தமிழர்களின் அறிவாசான் அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் நடைபெறவிருக்கும் கருத்துரிமை பொதுக்கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டம் ,ஒன்றியம் சார்பாக அடிக்கப்பட்ட எழுச்சிகரமான வாசகஙக்ள் கொண்ட பதாகைகள்.