அண்மையச்செய்திகள்

Thursday, 3 August 2017

கடலூர் மாவட்டம், திட்டக்குடி தருமக்குடிக்காடு அருந்ததியர் சிவக்குமார் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரையும், காவல் கண்காணிப்பாளரையும் சந்தித்து மனுவளித்த பின் செய்தியாளர்களை சந்தித்து கீழ்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி தருமக்குடிக்காடு அருந்ததியர் சிவக்குமார் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரையும், காவல் கண்காணிப்பாளரையும் சந்தித்து மனுவளித்த பின் செய்தியாளர்களை சந்தித்து கீழ்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
1) குற்றவாளி விசிக நிர்வாகி அலெக்சாண்டர் அவரது தம்பி உள்ளிட்ட அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
2) சிக்கலுக்குறிய 64 செண்ட் நிலத்தை அருந்ததியர் மக்கள் பயன்பாட்டுக்கே ஒதுக்கவேண்டும்.
3) குற்றவாளிகளுக்கு பக்கபலமாக இருக்கும் திட்டக்குடி காவல் துணை ஆய்வாளர் வேம்பு DSP பாண்டியன், மற்றும் அறநிலைத்துறை, வருவாய்துறை அலுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4) காவதுறை விசாரணை அதிகாரி வேறு ஒருவர் நியமிக்க வேண்டும்.
5) சிவக்குமாரின் குடும்பமான மனைவி இரண்டு மகள்கள், ஒரு மகனின் வாழ்வு மற்றும் கல்வி உத்திரவாதத்திற்கு இழபீடும் அரசுப் பணியும் வழங்க வேண்டும்.
6) அருந்ததியர் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும்,
7) சிவக்குமார் உடற்கூறு ஆய்வை 2 க்கு மேற்பட்ட மருத்துவக்குழு கொண்டு நடத்திட வேண்டும், ஆய்வின் போது, உறவினர் ஒருவரும் அமைப்பு தோழர் ஒருவரும் உடனிருக்க வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஆட்சியரிடமும், காவல் கண்காணிபாளரிடமும் மனுவளித்து விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.
பொதுச்செயலாளர், உடன்
கடலூர் மாவட்ட செயலாளர் பக்கிரி, ஜெயராமன், முருகன்,
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வீரமுருகன், தலைவர் ராசாத்தி, தமிழரசி,
திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் அர்ஜுணன்,
திருப்பூர் வடக்கு மாவட்டம் அமைப்பு செயாலார் வீரகுமார், முருகன்,
மதுரை மாவட்ட துணைத்தலைவர் தலித்.ராஜா,
சேலம் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் மாதேசு, உள்ளிட்ட நிர்வாகிகள் பங்க்கேற்றனர்.
____________________
செய்தி.
பொதுச்செயலாளர்
3.8.2017
Tuesday, 1 August 2017

வறுமைக் கோட்டுக்கு கீழாக உள்ள மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலை கைவிட்டு பழைய முறையிலேயே ரேசன் பொருட்கள் வினியோகிக்க வேண்டும்! தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.

வறுமைக் கோட்டுக்கு கீழாக உள்ள மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலை கைவிட்டு பழைய முறையிலேயே ரேசன் பொருட்கள் வினியோகிக்க வேண்டும்!
தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.
""""""""""""''"'"'"""""""""""""
நிறுவனர், அய்யா அதியமான் அறிக்கை
""""""""""""""""""""""""""""
நியாயவிலைக் கடைகளில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு புதிய கட்டுப்பாடுகள் பலவற்றை விதித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இது ஏழை எளிய நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் செயலாகும். ஏற்கனவே விலைவாசி ஏற்றத்தால் விழி பிதுங்கி கிடக்கும் நிலையில், மேலும் மக்களை பட்டினிச்சாவுக்கு அழைத்துச் சென்று படுகுழியில் தள்ளும் நிலையை தமிழக அரசு உருவாக்கி வருகிறது, எனவே, ரேசன் வினியோகத்தில் தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடு விதிகளை உடனடியாகத் திரும்பப் பெற்று பழைய முறையையே பின்பற்ற வேண்டுமென ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.

இது ஒருபுறமிருக்க மேலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையை மாதம்தோறும் நான்கு ரூபாய் உயர்த்துவதென்றும், சிலிண்டருக்கான மானியம் ரத்து செய்யப்படுமென்றும் மத்திய அரசின் அறிவிப்பு ஆணை வெளியாகியுள்ளன. இதை உறுதிபடுத்தும் விதமாக மத்திய அமைச்சரின் விளக்கமும் அமைந்துள்ளது, அவரது அறிவிப்பின் சாரத்தை பார்த்தால் மானியத்தை படிப்படியாக குறைத்து பின் முற்றிலும் ரத்து செய்யப்படும் என்பதையே காட்டுகிறது,
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் விலை மூன்று ஆண்டுகளில் குறைந்துள்ள நிலையில் எரிவாயுவின் விலையை உயர்த்தும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப சுரண்டலுக்கே வழிவகுக்கும். மத்தியில் ஆளும் பாஜக அரசின் இந்த மக்கள் விரோத அறிவிப்பை வன்மையாக கண்டிப்பதோடு, இதற்கு தமிழக அரசு தனது எதிர்ப்பை தெரிவித்து மானியத்தை பாதுகாக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வற்புறுத்துகிறது.
இவண்
இரா.அதியமான்
நிறுவனர்,
ஆதித்தமிழர் பேரவை.
1.8.2017, கனடா

கதிராமங்கலம் - நெடுவாசல் மக்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக - மனித சங்கிலி போராட்டம்

கதிராமங்கலம் - நெடுவாசல் மக்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக - மனித சங்கிலி போராட்டம்

கதிராமங்கலம் - நெடுவாசல் மக்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக பல்வேறு இயக்கங்களோடு மதுரையில் இன்று (1-8-2017) மனித சங்கிலி போராட்டம் இயற்கை பாதுகாப்பு குழு சார்பாக நடந்த போராட்டதிற்கு, மதுரை மாநகர் மாவட்டச்செயலாளர் க.சாமிகண்ணு தலைமையில் து.ஜானகி, இரா.செல்வம், கி.செல்லப்பாண்டி, இரா.கௌரி, க.சரவணன், பெரு.தலித்ராஜா, செ.விஜயா மற்றும் பேரவை தோழர்கள், மற்றும் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என 350 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள்

Comment

தோழர் திவ்யாவிற்கு துணை நிற்போம்!

தோழர் திவ்யாவிற்கு துணை நிற்போம்!
'''''’'''''''''
'கக்கூஸ் ஆவணப்படம் குறித்தும் 'ஆவணம்படம இயக்குனர் தோழர் திவ்யாபாரதி குறித்தும் அவதூறான தகவலை வெளியிட்டு தொலைபேசி வாயிலாக ஒருமையில் பேசி நாகரீகமற்ற முறையில் நடந்து கொள்ளும் நபர்களை ஆதித்தமிழர் பேரவை வண்மையாக கண்டிக்கிறது.
தூய்மை பணியாளர்கள் பணியின்போது எதிர்கொள்ளும் இடரை காட்சிபடுத்தும் கக்கூஸ் ஆவணப்படத்தை அனைத்து தரப்பினரிடம் கொண்டு செல்லவும் தோழர் திவ்யாவின் தொடர் முயர்சிகளுக்கும் துணை நிற்போம்
__________
ஆதித்தமிழர் பேரவை
Comment

முரசொலி பவள விழா... ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா இரா.அதியமான் அவர்களுக்கு அழைப்பு..

முரசொலி பவள விழா...
ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா இரா.அதியமான் அவர்களுக்கு அழைப்பு..