அண்மையச்செய்திகள்

Friday, 30 September 2016

*சுதந்திர போராட்ட தியாகி வீரத்தாய் குயிலியின் 236 நினைவு நாளில் வீரவணக்கம் செலுத்த அழைக்கிறது ஆதித்தமிழர் பேரவை

*சுதந்திர போராட்ட தியாகி வீரத்தாய் குயிலியின் 236 நினைவு நாளில் (அக்டோபர் 11) சிவகங்கையில் அமைந்துள்ள வீரத்தாயின் நினைவிடத்திற்கு வீரவணக்கம் செலுத்த குடும்பம் குடும்பமாக அணிதிரள்வோம் வாரீர். -- அழைக்கிறது ஆதித்தமிழர் பேரவை சிவகங்கை மாவட்டம்*
**********************
ஆங்கிலயேர்களை எதிர்த்து தமிழ் மண்ணில் நடைபெற்ற அந்நிய எதிர்ப்பு போராட்டத்தில் ஒண்டிவீரன்,பூலித்தேவன்,சுந்தரலிங்கம்,வீரபாண்டிய கட்டபொம்மன் ,போன்ற தியாகிகள் பட்டியலில் சிவகங்கை சீமையின் இராணி வேலுநாச்சியார் ,மருது பாண்டியர்கள் ,வீரத்தாய் குயிலி போன்றவர்களின் வீரம் செறிந்த வரலாறுகள் அழிக்க முடியாதது.

ஜெர்மனிக்கும் ஜப்பானுக்கும் நீர்மூழ்கி கப்பலில் நடைபெற்ற யுத்தத்தில் ஜப்பானிய வீரர்களின் தியாகமே தற்கொலை போராட்டத்தின் துவக்கமாக கருதப்படுகிறது. ஆனால் இரண்டாம் உலக போர் நடைபெறுவதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரே பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து தமிழ்மண்ணில் நடைபெற்ற போர்களத்தில் தான் முதன் முதலாக "தற்கொலை போராளி" உருவானார்கள் என்பது நாம் அறியாதது.

அந்த ஈகைக்கு உரிய வீரமங்கையின் பெயர் "குயிலி" அவள் பெண் என்பதால் மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட அருந்ததியர் என்பதுவும் வரலாற்றை பக்கங்களில் அவள் வஞ்சிக்க பட்டிருக்கிறாள் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

1780ம் ஆண்டு வேலுநாச்சியார் எட்டு ஆண்டுகளுக்குப்பிறகு திப்புசுல்தான் உதவியுடன் ஆங்கிலேயரிடம் கையிலிருந்த சிவகங்கையை மீட்டதற்காக மதுரையில் இருந்து தனது போர்படையுடன் வெற்றிவாகை சூடி வந்தார். விஜயதசமி திருவிழா சிவகங்கையில் உள்ள இராஜராஜேஸ்வரி கோவிலில் பெண்கள் மட்டும் வழிபாட்டிற்காக அனுமதிக்கப்படுவர்.இதை சாதகமாக பயன்படுத்தி இராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்குள் நுழைந்தார்கள் வேலுநாச்சியார் ,குயிலி தலைமையிலான உடையாள் படையினர் கைகளில் ஆயுதங்களோடு  உள்ளே நுழைந்தனர்.போர் மூண்டது அரண்மனை வெளியில் மருது சகோதரர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.வேலுநாச்சியார்,குயிலி தாக்குதல்களை சற்றும் எதிர்பாராத ஆங்கில தளபதி பாஞ்சோர் என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாமல் விழி பிதுங்கி நின்றான். ஆனால் இந்த போர் இது வரை நடந்த தாக்குதல்களிலிருந்து மாறுபட்டிருந்தது. ஆங்கிலேயர்களின் நவீன ஆயுதங்களுக்கு முன்பு வேலுநாச்சியார் படை தாக்கு பிடிக்க முடியவில்லை. தமிழர் பக்கம் அழிவு அதிகமாகி கொண்டிருந்தது. அரண்மனையிலிருந்து , ஆயுத கிடங்குகளிலிருந்தும் மேலும் மேலும் ஆயுதங்கள் ஆங்கில படைக்குச் சென்று கொண்டிருந்தது. என்ன செய்வதனை சிந்திக்க கூட முடியாத சூழலில் ஓர் உருவம் எரி நெய்யை ஊற்றி கொண்டு அரண்மனை ஆயத கிட்டங்கியில் குதித்தது.
 மறுநிமிடமே ஆயுத கிட்டங்கி வெடித்து சிதறியது உடல்கள் அங்கம் அங்கமாக சிதறியது. அவ்வுருவம் சுக்கு நூறாகி போனது. ஆயுத கிட்டங்கியில் அழிப்பு வேலுநாச்சியாரின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.ஆயிரக்கணக்கானோர் மண்ணில் மடிந்தார்கள். ஆங்கில தளபதி பாஞ்சோர் வேலுநாச்சியாரிடம் மன்னிப்பு கேட்டு புறமுதுகு காட்டி ஓடினான்.வேலுநாச்சியார் வெற்றி பெற்றதாக அறிவிக்க பட்டார்.வெற்றியை கொண்டாட தன் தளபதிகளெல்லாம் நெருங்கி கொண்டிருந்த பொழுது குயிலியை தேடினார் வேலுநாச்சியார். குயிலியை கண்டறியாத முடியாத அளவிற்கு உருத்தெரியாமல் மண்ணோடு மண்ணாகிப் போயிருந்தாள் குயிலி.
    சிவகங்கை மண்ணை அந்நிய ஆதிக்கத்திலிருந்து விரட்டிட இராணி வேலுநாச்சியாரின் சபதம்  நிறைவேற்றிட தன்னையே ஈந்து தற்கொலைப் போராளியாய் அழிந்து போன வீரமங்கை குயிலியின் வீரம் இந்த தலைமுறைக்கு எடுத்து சொல்லப்பட வேண்டும். உலகில் தற்கொலை போராளிகளுக்கான விதை தமிழ் மண்ணில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் குயிலியால் விதைக்கப்பட்டுள்ளது.ஈழத்தில் கரும்புலிகளின் ஈடு இணையற்ற தியாகம் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தியாக உணர்வை மென்மேலும் உயாத்தியது என்றால் மிகையாகாது.அதுபோல் வீரத்தாய் குயிலியின் ஈகமும் தமிழர்களின் தியாக உணர்வை பறை சாற்றுகிறது
 
     தென்மாவட்டத்தின் தியாகி இம்மானுவேல் சேகரனின் படுகொலைக்கு பின்னர் தேவேந்திர மக்கள் எழுச்சியுற்றனர்.
ஆனால் தன் சமூகம் இழிவிலிருந்து விடுதலை பெற வேண்டும் என எந்த சமூகத்திலும் நடைபெறாத உயிர் தியாகம் அருந்ததியர் சமூகத்தில் அதுவும் ஆதித்தமிழர் பேரவையின் மாநில பொருளாளர் பழ.நீலவேந்தன் (வழக்கறிஞர்) அவர்களும் மற்றும் மாநில மகளிரணிச் செயலாளர் திருச்சி ஆ.இராணி அவர்களும் அருந்ததிய மக்களின் விடுதலைக்கு அடித்தளமாக இருக்கும் அருந்ததியர் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என தங்களையே தீக்கிரையாக்கி உயிர் நீத்த பின்பும் கூட இன்னும் எம்மக்கள் விழிப்படையாமல் இருப்பது நமது கள்ப்பணியை இன்னும் வீரியத்துடன் செய்லபட வேண்டுமென்பதை உணர்த்தி நிற்கிறது.
   மேலும் இச்சமூகத்தில் எல்.சி.குருசாமி அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 1923இல் தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது வறுமையின் காரணமாக கல்வி கற்க முடியாத நிலையில் இருந்த குழந்தைகள் கல்வி கற்பதற்காக பல இரவு பாட சாலைகளை நிறுவினார்.மேலும் இக்குழந்தைகள் கல்வி கற்பதற்க்காக மத்திய உணவு திட்டத்திற்கும்,ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்க வேண்டும் முதன் முதலில் சட்டசபையில் கோரிக்கை வைத்தவர் எல்.சி.குருசாமி. அவர்கள்.

அவ்வழி தோன்றல் தான் ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அய்யா அதியமான் அவர்கள் 1994-ல் தொடங்கப்பட்ட ஆதித்தமிழர் பேரவை பல போராட்டங்களும் ,மாநாடுகளும் நடத்தியதின் அடிப்படையில் தான் 2009-ம் ஆண்டு அருந்ததியர்களுக்கான 3% இட ஒதுக்கீட்டை வாங்கி கொடுத்தது.இவ்வாறு அருந்ததியர் வாழ்வில் உயர் நிலை வெளிச்சத்தை ஏற்படுத்தியவர் அய்யா அதியமான் அவர்கள் வழியில் நமது உரிமைகளை வெல்வோம். வென்றெடுப்போம்.

ஆதித்தமிழர்களே!!! ஆதித்தமிழச்சிகள்!! வீரத்தாய் குயிலி நினைவு நாளில் குடும்பம் குடும்பமாக ஒன்றுபடுவோம்!!! வாரீர்.... வாரீர்

புரட்சியாளர் அம்பேத்கார் வழியில் புரட்சி செய்வோம் !!!

தந்தை பெரியார் வழியில் கலகக்காரர்களாவோம் !!!
 
பேராசான் மார்க்ஸ் போல் தத்துவங்கள் படைப்போம் !!
மேதகு பிரபாகரன் போல் போர்க்குணம் கொண்ட போராளியாவோம் !!

ஆதித்தமிழர்களின் விடுதலை முகவரி தலைவர் அய்யா அதியமான் அவர்கள் வழியில் அமைப்பாவோம்
"ஆதித்தமிழர்பேரவை வலுப்படுத்துவோம்,ஆதித்தமிழர்களின் விடுதலையை விரைவாக்குவோம்"
_______
ஆதித்தமிழர் பேரவை சிவகங்கை மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி சட்ட மன்ற வேட்பாளர் அர.சக்கரபாணி அவர்களுக்கு  *திராவிட இயக்க தமிழர் பேரவை* சார்பில் கால் நூற்றாண்டு விழாவில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டனர்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி சட்ட மன்ற வேட்பாளர் அர.சக்கரபாணி அவர்களுக்கு  *திராவிட இயக்க தமிழர் பேரவை* சார்பில் கால் நூற்றாண்டு விழா நடைபெற்றது .., *ஆதித்தமிழர் பேரவை* சார்பில் மாவட்ட செயலாளர் *ப.விடுதலை* ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் *ப.ஈஸ்வரன்* கலந்து கொண்டு பேரவை சார்பில் *சு.ப.வீரபாண்டியன்* *அர.சக்கரபாணி* பொண்ணாடை போர்த்தி கவுரவித்தனர்..., *சு.ப.வீ* பேசும்போது அருந்த்திய மக்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை பெற ஆதித்தமிழர் பேரவை தலைவர் *அய்யா அதியமான்* ஒரு காரணம் என்று அய்யாவை  பற்றியும்..., பேரவை பற்றியும் சுமார் 8 நிமிடம் வாழ்த்தி பேசினார்..,..

Thursday, 29 September 2016

விடுதலை போராட்ட வீராங்கனை வீரத்தாய் குயிலிக்கு முழு உருவச்சிலை அமைத்து அவரது நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை.

விடுதலை போராட்ட வீராங்கனை வீரத்தாய் குயிலிக்கு முழு உருவச்சிலை அமைத்து அவரது நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை.

சுதந்திர போராட்டத்தில் எதிர்த்து போரிட்ட வீராங்கனை வீரத்தாய் குயிலுக்கு அவரது நினைவிடத்தில் முழு உருவ சிலை அமைக்க வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட ஆலோசனை கூட்டம் .மானாமதுரையில் நடந்தது.மாவட்ட செயலாளர் பாலு தலைமை வகித்தார் இம்மானுவேல் பேரவை மாவட்ட சங்கர் அம்பேத்கார் முன்னிலை வகித்தார்.
சுதந்திர போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு வெள்ளையர்களின் ஆயுத கிடங்கில் தற்கொலை தாக்குதல் நடத்தி வீரமரணம் அடைந்த தியாகி வீரத்தாய் குயிலியின் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்,அவரது நினைவிடத்தில் முழு உருவச்சிலை அமைக்க வேண்டும்,சிவகங்கை மாவட்ட நகராட்சி பேருராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் துப்பரவு தொழிலாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும்,மாவட்டத்தில் சொந்த வீடு இல்லாத அருந்ததியர் குடும்பங்களுக்கு அரசு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்க நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காளிதாசன்,மாவட்ட துணை தலைவர் முருகேசன்,மாவட்ட அமைப்பு செயலாளர் முருகன்,மானாமதுரை நகர துணை செயலாளர் மனோஜ் குமார்,தமிழ்முரசு,பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,நகர செயலாளர் ஒண்டிவீரகுமார் நன்றி கூறினார்.
 Wednesday, 28 September 2016

சென்னை லயோலா கல்லூரியில் "caste victimization" - A Study on the Dalits (Arunthathiyar's) of Dalits, ஆய்வு நூல் வெளியீட்டு விழாவில் அய்யா அதியமான் அவர்கள் கலந்து கொண்டு ஆய்வு நூலை பெற்றுகொண்டு வாழ்த்துரை வழங்கினார்

28.9.2016  சென்னை லயோலா கல்லூரியில் "caste victimization" 
- A Study on the Dalits (Arunthathiyar's) of Dalits, ஆய்வு நூல் வெளியீட்டு விழாவில் அய்யா அதியமான் அவர்கள் கலந்து கொண்டு ஆய்வு நூலை பெற்றுகொண்டு வாழ்த்துரை வழங்கினார்
*******************
சென்னை லயோலா கல்லூரி பிஎட் பயிற்சி வளாகத்தில் டாக்டர் பேரா.ஜெபமாலைராஜா அவர்களால் ஆய்வு செய்யப்பட்ட "caste victimization" என்ற ஆய்வு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் கலந்து கொண்டு ஆய்வு நூலை பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

விரிவாக்கம் கீழே:
""""""""""""""""''''''''''"""""
அருந்ததியர்களின் நிலை பற்றியும், அவர்கள் விடுதலைக்கான வழிமுறைகள் பற்றியும், சமூநீதியின் புரிதல்கள் பற்றியும் விரிவாக உரையாற்றினார்.

பல பத்தாண்டுகளுக்கு முன்னதாகவே இதே வளாகத்தில் இதைப்போன்ற ஆய்வு நூல்கள் பறையர் சமூகத்தினருக்கு கிடைத்துவிட்டது, அதன் பயனாக அவர்கள் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்து விட்டனர், அரசியல் ரீதியாகவும் பெரும் வளர்ச்சியை தொடர்ந்து வருகின்றனர்,

ஆனால் அருந்ததியர்களைப் பற்றி ஆய்வு நூல் முதன்முதலில் பேரா.மார்க்கு அவர்கள்தான் கரிசல் சங்கத்தில் இருந்த போது "அருந்ததியர் வாழும் வரலாறு" என்னும் நூலை கொண்டு வந்தார்,

அதன் பிறகு மிகவும் துள்ளியமாக, சரியான ஆய்வுடன் நண்பர் எழில்.இளங்கோவன் அவர்கள் எழுதி பேரவை சார்பில் வெளியிட்ட "அருந்ததியர் வரலாறு" என்ற நூல்தான். அருந்ததியர்களை பற்றிய புரிதல்களை தெரிந்து கொள்ள குறைந்த பட்சம் உதவியது ஆனால் இதைப்போன்ற நூல்கள் நம்மிடம் மிகவும் குறைவாகவே உள்ளது.

நிலைமை இப்படி இருக்க  அருந்ததியர்கள் முழு விடுதலை பெறுவதற்கு நாம் இன்னும் பல ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். முன்னதாக அருந்ததியர் விடுதலை என்பது  தூய்மைப் பணியில் இருந்து தொடங்க வேண்டும், அவர்கள் அத் தொழிலில் இருந்து முழுமையாக விடுபடுவதில்தான் அமைந்துள்ளது, எனவே சமூகநீதியின் நீட்சியாக அருந்ததியருக்கான 3 விழுக்காடு உள் இடஒதுக்கீடு தூய்மைப் பணியாளருக்கு மட்டுமே கிடைக்கப் பெற்றால் அதை ஆதித்தமிழர் பேரவை முழுமையாக வரவேற்கும்.

எனது நீண்ட கால நண்பரான பேரா.ஜெபமாலைராஜா அவர்கள். அருந்ததியர் உள் இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு பலவகையில் இருந்தபோது  உள் இடஒதுக்கீட்டின் நியாயத்தைப் பற்றி ஆதரவு நூல் வெளியிட்டவர். இவர் மட்டும்தான். அவரின் இந்த முயற்சியை ஆதித்தமிழர் பேரவை சார்பிலும், எனது சார்பிலும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று உரையை  நிறைவு செய்தார்.
உடன் பொதுச்செயலாளர் நாகராசன், து.பொ.செ.ஆனந்தன், நாமக்கல் தமிழரசு டெல்லி.கந்தசாமி, வேலூர் செந்தில் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட பேரவையினர் பங்கேற்றனர்.
____________________
தொகுப்பு
பொதுச்செயலாளர்.
28.9.2016

Tuesday, 27 September 2016

சாதி வெறியை ஒழியுங்கள்! - தலித் தலைவர்களுக்கு அதியமான் வேண்டுகோள்


சாதி.. சாதி வெறியை ஒழியுங்கள்! : தலித் தலைவர்களுக்கு அதியமான் வேண்டுகோள்.
டி.வி.எஸ். சோமு -----www.patrikai.com இல் வந்த செய்தி
தொடர்புடைய செய்தி பக்கம் - https://www.patrikai.com/arunthatiya-woman-raped-paraiyar-caste-discrimination-adhiyaman-interview/


பண்ருட்டியை அடுத்த ஏரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர்.  இவரை, பறையர் இனத்தைச் சேரந்த உத்ரகுமார் என்பவர், ஜெயந்திக்கு தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்து வந்தார். இதற்கு ஜெயந்தி எதிர்ப்பு தெரிவித்துவந்தார்.  இந்த நிலையில் ஜெயந்தி மட்டும் வீட்டில் இருக்கும் நேரத்தில், புகுந்த உத்ரகுமார், ஜெயந்தியை பலாத்காரப்படுத்திவிட்டார்.

இதையடுத்து சாதிவெறி காரணமாக, அருந்ததிய பெண்மணியை, பறையர் இனத்தைச் சேர்ந்தவர் பலாத்காரப்படுத்தியதாக புகார் எழுந்தது. இது குறித்து ஜெயந்தி காவல்துறையில் தெரிவித்தும் புகார் வாங்க மறுத்து அலைக்கழிக்கப்பட்டார்.  உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை மறுத்தது.  இந்த நிலையில் ஆதித்தமிழர் பேரவை கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஜெயராமன், பக்கிரி, முருகன் ஆகியோர் தலையிட… புகார் பதிவு செய்யப்பட்டது. உத்ரகுமார் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில்,  நாம் அப்பகுதி டி.எஸ்.பி. முரளியை தொடர்புகொண்டு பேசினோம்.

அவர், “குறிப்பிட்ட புகார் பதியப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கை பதிவதிலோ, குற்றம்சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதிலோ காவல்துறை சுணக்கம் காட்டவில்லை” என்று நம்மிடம் தெரிவித்தார்.

தலித் இன மக்களுக்குள்ளேயே சாதி பாகுபாடு நிலவுவதாகவும், பள்ளர் – பறையர் இன மக்கள், தங்களைவிட சமுதாயத்தின் கீழ்த்தட்டில் இருக்கும் அருந்ததி இன மக்களை சாதிப்பாகுபாட்டுடன் நடத்துவதாகவும் தொடர்ந்து புகார்கள் தொடர்ந்து எழுந்துவருகின்றன.
சாதி.. சாதி வெறியை ஒழியுங்கள்! : தலித் தலைவர்களுக்கு அதியமான் வேண்டுகோள் தமிழ் நாடு பேட்டிகள் tamil news online
ஜெயந்தி

பறையர் இனத்தைச் சேர்ந்த பெண்ணை, அருந்ததி இனத்தைச் சேர்ந்த இளைஞர் காதலித்ததால், அந்த காதல் ஜோடியை பறையர் இனத்தைச் சேர்ந்த சிலர் தாக்கியதாகவும் சமீபத்தில் செய்திகள் வந்தன.

இந்த நிலையில், அருந்ததி இன மக்களுக்காக தொடர்ந்து போராடி வரும் ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமானை தொடர்புகொண்டு பேசினோம்.

அவர் நம்மிடம் தெரிவித்த கருத்துக்களில் இருந்து..

“ஒரு பகுதியில் ஐம்பது பறையர் இன குடும்பங்களும், ஐந்து அருந்ததி இன குடும்பங்களும் வசித்தால், அங்கு பறையர் இன ஆதிக்கம் நிலவவே செய்கிறது.

பாலியல் பலாத்கார விவகாரங்களில் ஏது சாதி..  ஆணாதிக்கம்தானே நிலவுகிறது என்று சிலர் கேட்கிறார்கள். உலகின் பிற பகுதிகளில் அப்படி இருக்கலாம்.  இங்கு ஆணாதிக்கத்தோடு சாதிவெறியும் சேர்ந்தே இருக்கிறது.

உயர் சாதி என சொல்லிக்கொள்பவர்கள் பள்ளர், பறையர் இன பெண்களுக்கு சாதி ஆணவத்தோடு பாலியல் சீண்டல் செய்கிறார்கள். பள்ளர், பறையர் இனத்தவர், அதே சாதி ஆணவத்தோடு அருந்ததி இன பெண்களை சீண்டுகிறார்கள்.

இதைச் சொன்னால், தலித் சமுதாயத்திற்குள் பிரிவினை ஏற்படும் என்கிறார்கள் சிலர். ஆனால் ஏற்கெனவே இச்சமுதாயத்திற்குள் பிரிவினை நிலவுகிறது என்பதுதான் உண்மை.

உதாரணமாகச் சொன்னால் அருந்ததி இனத்தவருக்கான 3 சதவிகித உள் ஒதுக்கீட்டை பள்ளர், பறையர் இன தலைவர்கள் எதிர்க்கிறார்கள். ஒட்டுமொத்த தலித் இன 76 சாதிகளுக்கு 18 விழுக்காடு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்களில் அருந்ததியின சமுதாயத்தினருக்கு நீண்ட நாட்களாக   படிப்பிலும், வேலை வாய்ப்பிலும் இன்னும்  மற்ற உரிமைகளும்  உரிய பங்குதொடர்ந்து கிடைக்காத காரணத்தினால் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களிலும் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஆகவே சமூக நீதியின் அடிப்படையில் அவர்களுக்கு மூன்று விழுக்காடு உள் இட ஒதுக்கீடு, ஆதித்தமிழர் பேரவையின் கடும் முயற்சியினால் கிடைத்தது.

ஆனால் இதை நடை முறைப்படுத்துவதில் பல்வேறு தடங்கல்கள் இருக்கின்றன.  இந்த உள் ஒதுக்கீட்டை மீறி, அருந்ததி இன மக்களுக்கான பணியிடங்களை பிற தலித் இனத்தவர் பெற்றுவருகிறார்கள். சமீபத்தில் தமிழகம் முழுதும் உதவி பேராசியர் பணிக்கு ஆட்கள் எடுக்கப்பட்டபோதும் அதற்கு முன்பு ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆட்கள் எடுக்கப்பட்ட போதும் இதுதான் நடந்தது.  இப்படி தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த நிலை மாற, பள்ளர் பறையர் இன மக்களின் தலைவர்களாக இருப்பவர்கள் முன் முயற்சி எடுக்க வேண்டும்.
சாதி.. சாதி வெறியை ஒழியுங்கள்! : தலித் தலைவர்களுக்கு அதியமான் வேண்டுகோள் தமிழ் நாடு பேட்டிகள் tamil news online
அதியமான்

பெரியாரையும், அம்பேத்கரையும் ஏற்றுக்கொள்ளும் தலித் தலைவர்கள் அருந்ததியின மக்களின் அடிமட்ட சூழலைப் புரிந்து உள் இட ஒதுக்கீட்டை ஆதரிக்க வேண்டும். அருந்ததி இன மக்களிடம் இணக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என தன் இன மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

ஆனால், இந்த தலித் தலைவர்கள்…  அருந்ததி இன மக்களின் பிரதிநிதிகளை மதிப்பதே இல்லை. தங்களது போன் எண் கூட எங்களுக்கு கிடைக்கக்கூடாது என நினைக்கிறார்கள். அப்படி எங்களுக்கு கிடைத்தாலும் அவர்களிடம் பேச முடியாது என்பதே வருத்தமான உண்மை.

சி.பி.எம். கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், சி.பி.ஐ. கட்சியின் நல்லகண்ணு ஆகியோர் மிக உயர்ந்த தலைவர்கள். அவர்களுடன் நாங்கள் நிமிட நேரத்தில் போனில் தொடர்புகொண்டு பேச முடிகிறது. ஆனால் பள்ளர், பறையர் இன தலைவர்களாகச் சொல்லிக்கொள்பவர்களை நாங்கள் அணுக முடிவதில்லை. அப்படி அணுக அவர்கள் அனுமதித்தால்தானே எங்களது தரப்பை.. நியாயத்தை அவர்களிடம் சொல்லி புரிய வைக்க முடியும்?

சாதிப்படிநிலை ஒழிய வேண்டுமென்றால் அகமண முறை ஒழிய வேண்டும். அதாவது, சொந்த சாதிக்குள் திருமணம் செய்துகொள்வது நிறுத்தப்பட வேண்டும். இதைத்தான் அம்பேத்கர் சொன்னார்.

ஆனால் அம்பேத்கர் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தும் தலித் தலைவர்கள், இதை பின்பற்றுகிறார்களா?

அருந்ததியினர் இனத்திலும் அகமண முறை உண்டு. அதை ஆகப்பெரும்பாலும் ஒழித்துவிட்டோம். பறையர், பள்ளர் சாதி தலைவர்களாக இருப்பவர்களும், இதைக் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் சாதி ஒழியும்” என்று சொல்லி முடித்தார் அதியமான்.

– டி.வி.எஸ். சோமு
நன்றி www.patrikai.com

நீலவேந்தன் நினைவிடத்தில் காவல்துறை தடையை மீறி.. நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் தலைமையில் ஆயிரக்கணக்கான பேரவை வீரவணக்கம் வீரவணக்கம் செலுத்தினர்

நீலவேந்தன் நினைவிடத்தில் காவல்துறை தடையை மீறி..
நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் தலைமையில் ஆயிரக்கணக்கான பேரவை வீரவணக்கம் வீரவணக்கம் செலுத்தினர்Wednesday, 21 September 2016

கோவில்ப்பட்டி அய்யனேரி கிராமத்தில் அருந்ததியர் சமூக மக்கள் பல்லாண்டு காலமாக பயன்படுத்தும் சுடுகாட்டு நடை பாதையை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி மாவட்டம் கோவில்ப்பட்டி வட்டம் அய்யனேரி கிராமத்தில் அருந்ததியர் சமூக மக்கள் பல்லாண்டு காலமாக பயன்படுத்தும் சுடுகாட்டு நடை பாதையை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கையும், சர்வே எண் 388/40, பட்டா எண் 673 ஐ ரத்து செய்ய வலியுறுத்தி.

" மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் "

கண்டன சிறப்புரை :
நீலசட்டை இராணுவ தளபதி

அண்ணன் ஆ. நாகராசன் அவர்கள்
பொதுச்செயலாளர்

தலைமை ;
மு. முத்துக்குமார் மாவட்ட தலைவர்.

கண்டன உரை :
தோழர். கபீர் நகர் கார்த்திக் மாநில துணை பொதுச் செயலாளர்.
தோழர். ஜானகி அம்மாள் மாநில மகளிரணி செயலாளர்.
தோழர். சோ. அருந்ததி அரசு தெற்கு மாவட்ட செயலாளர்.
தோழர் மு. நம்பிராஜ் பாண்டியன் மாவட்ட துணைச் செயலாளர்.கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

தோழர் பூவை ஈஸ்வரன் விருதுநகர் மாவட்ட செயலாளர்.
தோழர் முத்துவீரன் நெல்லை மாவட்ட செயலாளர்.
தோழர். மு. உதயசூரியன் மாவட்ட நிதி செயலாளர்.
செ. சந்தனம் தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர்.
தோழர். தொல்காப்பியன் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர். மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை, பொருப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இடம் -கோவில்ப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

தூத்துக்குடி (வடக்கு) மாவட்டம்.
ஆதித்தமிழர் பேரவை

தேனியில் மக்கள் உரிமை முழக்க ஆர்ப்பாட்டம் பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் அவர்கள் உரிமை முழக்க உரை

20.9.16
தேனி மாவட்டம் ஆதித்தமிழர்பேரவை நடத்தும் மக்கள் உரிமை முழக்க ஆர்ப்பாட்டம் அண்ணன் ஆ.நாகராசன். அவர்களும் துனைப்பொதுச்செயளாலர் கபீர்நகர் கார்த்திக் ,மாநில மகளிரணி செயலாளர் ஜானகிஅம்மாஅவர்களும் மதுரை தோழர் தலித் ராஜா மற்றும் தேனி மாவட்ட பெரும் திரளான தோழர்கள் கலந்துகொண்டனர்


பொதுச்செயலாளர் அவர்களின் உரையை காண சொடுக்கவும் 
Tuesday, 20 September 2016

காவிரிப் பிரச்சனை , ராம்குமார் தற்கொலை? உடுமலையில் ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்


காவிரிப் பிரச்சனையில் கர்நாடாகவில் தமிழர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் புழல் சிறையில் தறகொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் ராம்குமார் சாவில் நீதி விசாரணை நடத்த வலியுறுத்தியும் உடுமலையில் 20-9-2016 நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்   ஆதித்தமிழர் பேரவையினர் துணை பொதுச்செயலாளர் ஈழவேந்தன் தலைமையில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்


Monday, 19 September 2016

ராம்குமாரின் மர்ம மரணம்: தமிழக அரசுதான் பொறுப்பு - ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான்


இரங்கல்
"""""""""""""
ராம்குமாரின் இந்த மர்ம மரண துயர நிகழ்வால் அவரை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆதித்தமிழர் பேரவை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் கண்டனம்.
""""""""""""""
சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் இன்று சிறையில் தற்கொலைச் செய்து கொண்டதாக வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சி செய்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். தற்போது உயர் பாதுகாப்பு அம்சம் கொண்ட புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மின் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று சிறைத்துறை சொல்வதும் அதையே தமிழக அரசும் சொல்வது நம்பும் வகையில் இல்லை. இந்த மர்ம மரணத்தில் இருக்கும் முடிச்சுகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது, மேலும் ராம்குமாரின் மர்ம மரணத்தின் மூலம் சுவாதி கொலையில் மறைந்துள்ள உண்மைகள் வெளி உலகுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டு விடக்கூடாது.

சுவாதி படுகொலையில் பல உண்மைகள் மர்ம முடிச்சுகளாகவே உள்ளது, இதில் ராம்குமார் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் என்று அவரது பெற்றோருடன் பல தரப்பினரும் சொல்லி வருகின்றார்கள். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில் அரசு நிர்வாகம் காடியதால்தான், இந்த மர்ம மரணம் நடந்துள்ளது. எனவே இந்த மர்ம மரணத்திற்கு தமிழக அரசுதான் முழு பொறுப்பை ஏற்கவேண்டும்.

ராம்குமாரின் மரணம் குறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்டு உயர் விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் தமிழக ஜெயலலிதா அரசு பொறுப்பேற்ற நாள் முதல் சாதி ஆணவப் படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகவும் வேதனையையும் அச்சத்தையும் அளிக்கிறது எனவே தமிழக அரசு இதில் முழுப் பொறுப்பேற்று உரிய நடவடிக்களை விரைந்து மேற்கொண்டு முழுமையாக இதை கட்டுப்படுத்த வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை கேட்டுகொள்கிறது.

இவண்
இரா.அதியமான்
நிறுவனர், அதித்தமிழர் பேரவை.
19.9.2016Sunday, 18 September 2016

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் இளையசேந்தல் கிராமத்தில் ஆதித்தமிழர் பேரவை கிளை தொடங்கப்பட்டு கொடியேற்றப்பட்டது


ஆதித்தமிழரகளின் தேசிய கோடி நீலச்செங்கொடி ஏற்றுவிழா கிளைப்பொருப்பாளர் தோழர் குருசாமி தலைமையில் நடைபெற்றது.
உடன் மு.முத்துக்குமார்
மாவட்ட தலைவர்
மு.நம்பிராஜ்பாண்டியன்
மாவட்ட துணைச்செயலாளர்
மு.உதயசூரியன்
மாவட்ட நிதிச்செயலாளர்
அய்யா ராஜாமணி
ஒன்றியதலைவர்
மற்றும் கிளை தேழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆதித்தமிழர் பேரவை தூத்துக்குடிமாவட்டம் 
 


 

உடுமலைபேட்டையில் ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

உடுமலைப்பேட்டையில் இன்று 17-9-2016 தந்தை பெரியார் பிறந்த நாள் விழா ஆதித் தமிழர் பேரவை சார்பாக கொண்டாடப்பட்டது. மாவட்டச்செயலாளர் க.தங்கவேல் தலைமையில் நடந்தது. உடுமலை அருகில் உள்ள பாலப்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...
இந்நிகழ்வில் மதவெறிக்கு எதிராகவும் நவீன குலக்கல்விக்கு எதிராகவும் சாதிஆணவக் கொலைகளை தடுத்திடவும் சூழுரை ஏற்கப்பட்டது...
திராவிடர் விடுதலைக் கழகம் உடுமலை நகர பொருப்பாளர் தோழர் இயல் ,மடத்துக்குளம் தோழர் மோகன் தலித்முரசு இதழ் சார்பாக தோழர் அருட்செல்வன் தோழர் கொழுமம் ஆதி, நான் (மா.ஈழவேந்தன்)உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அதே போல உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பெரியார் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் ஆதித் தமிழர் பேரவை சார்பாக தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்


Saturday, 17 September 2016

தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

இன்று 17.9.16 அன்று புரட்சியாளர தந்தை பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் வழிகாட்டுதலின் படி தமிழகம் முழுவதும் ஆதித்தமிழர் பேரவையினர் அய்யா பெரியார் சிலை இருக்கும் இடத்திற்கு நீலச்சட்டை பட்டாளத்தோடு ஊர்வலமாக சென்று புரட்சி கோஷங்கள் எழுப்பி அய்யா பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர்
"மதவெறி சாதிவெறியை மாய்த்திடுவோம்!
மனித நேயத்தை மக்கள் நெஞ்சில் வளத்திடுவோம்"
அய்யா பெரியார் பணி முடித்திடுவோம்
சூளுரை ஏற்றுக்கொண்டனர்.

ஈரோடு வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

இன்று 17.9.16 அன்று புரட்சியாளர தந்தை பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் வழிகாட்டுதலின் படி தமிழகம் முழுவதும் ஆதித்தமிழர் பேரவையினர் அய்யா பெரியார் சிலை இருக்கும் இடத்திற்கு நீலச்சட்டை பட்டாளத்தோடு ஊர்வலமாக சென்று புரட்சி கோஷங்கள் எழுப்பி அய்யா பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர்
"மதவெறி சாதிவெறியை மாய்த்திடுவோம்!
மனித நேயத்தை மக்கள் நெஞ்சில் வளத்திடுவோம்"
அய்யா பெரியார் பணி முடித்திடுவோம்
சூளுரை ஏற்றுக்கொண்டனர்.

ஈரோடுவடக்குமாவட்ட சார்பில்தந்தை பெரியாருக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்