அண்மையச்செய்திகள்

Monday, 29 February 2016

"மலக்குழியில் மனிதனை இறக்கி மாண்பையும், உயிரையும் காவுகொடுக்கு" அரச வன்கொடுமை எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

#‎ஆதித்தமிழர்_தூய்மைத்_தொழிலாளர்_பேரவை‬ சார்பில்..
21.2.2016 காலை.11 மணிக்கு ஈரோடு K.S.ராஜா குப்புசாமி திருமண மண்டபத்தில்
"மலக்குழியில் மனிதனை இறக்கி
மாண்பையும், உயிரையும் காவுகொடுக்கு"
அரச வன்கொடுமை எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது.
இதில் ‪#‎ஆதித்தமிழர்_பேரவையின்‬ நிறுவனத் தலைவர் ‪#‎அய்யா_அதியமான்‬ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
"""""'"'''''''''''''''''''''''''
தீர்மானம் 1
மனித மலத்தை மனிதன் அகற்றும் இழிநிலையில் இருந்து இம் மக்களை முழுமையாக விடுவித்து அவர்களுக்கும், அவர்களது குடும்பத்ததாருக்கும் மாற்றுத் தொழில் வழங்கி மறுவாழ்வை ஏற்படுத்திட வேண்டும் என மத்திய மாநில அரசுகளை இம் மாநாடு வலியுருத்துகிறது.
தீர்மானம் 2
மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகத்தின் சார்பில் 2014.ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த கணக்கெடுப்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, சிற்றூராட்களில் நியமிக்கப்பட்டு பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களிடம் மட்டுமே கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, இதை விரிவு படுத்தி தனியார் வசம் உள்ள அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களிடமும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என இந்த மாநாடு வலியுருத்துகிறது.
தீர்மானம் 3
தனியார் வசம் உள்ள கழுவகற்றும் வாகனங்கள், தனியார் விடுதிகள், உணவகங்கள், மருத்துவ மனைகள், பள்ளிகள், கல்லூரிகள், போன்ற அனைத்து வகைப்பட்ட தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களை முழுமையாக கணக்கெடுத்து, இவர்கள் அனைவரும் கையால் மலமல்லும் தொழிலாளர்கள்தான் என அறிவிப்பு செய்திட வேண்டும் என இம் மாநாடு வலியுறுகிறது.
தீர்மானம் 4
மனிதக் கழிவை மனிதன் அகற்றுவதற்கான தடைச்சட்டம் 2013 மற்றும் அதன் விதிகளை முழுமையாக நடைமுறைப் படுத்திட வேண்டும் என இம் மாநாடு வலியுருத்துகிறது.
தீர்மானம் 5
தனியார் ஒப்பந்த முறையிலும், மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர் அனவரையும் கையால் மலம் அள்ளும் தொழிலாளர் என அறிவித்திட வேண்டும் என இம் மாநாடு வலியுருத்துகிறது.
தீர்மானம் 6
இத் தொழிலில் இருந்து விடுவிக்கப்படும் மற்றும் ஒய்வு பெற்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசு ஊழியருக்கு வழங்குவற்கு இணையான ஓய்வூதியம் வழங்கிடு, நகரத்தின் மய்யப் பகுதியில் சொந்தக் குடியிருப்புகள் கட்டிக்கொடு, துப்புரவுத் தொழிலாளிகளின் குழந்தைகளுக்கு உயர் கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரையில் கட்டணமில்லா இலவசக் கல்வி வழங்கிட வேண்டும் என இம் மாநாடு வலியுருத்துகிறது.
தீர்மானம் 7
நிரந்தர அல்லது தற்காலிக நவீன கழிப்பிடங்களை உருவாக்காமல் கோயில், மற்றும் விழாக் காலங்களில் உதாரணமாக கும்பகோண மகாமகம், திருச்செந்தூர், சிரீரங்கம் போன்ற கோயில்களில் கட்டாயாப் படுத்தி கழிவகற்றும் பணிகளை செய்வதற்கு பிற மாவட்டங்களில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக கொத்தடிமைகள் போல் துப்புரவு பணியாளர்களை அழைத்து செல்லுகின்ற வழக்கத்தை கைவிட வேண்டும் என இம்மாநாடு வலியுருத்துகிறது.
தீர்மானம் 8
சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகத்தின் மூலம் நடத்தப்படும் மறு கணக்கெடுப்பு முறை வெறும் கண்துடைப்பாகவே நடத்தப் படுகிறது காரணம் இப்டிபடுப்பட்ட தொழிலாளர்களை நியமிப்பதே அந்தந்த மாநகராட்சி, நகராட்சி ஆணயாளர்கள்தான் என்பது வெட்ட வெளிச்சமாக இருக்கும் போது கைப் புண்ணுக்கு கண்ணாடி எதற்கு எந்து போல் நாடகமாடும் அரசுகளை இம் மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
தீர்மானம் 9
உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் 1993 முதல் நச்சுவாயு தாக்கி இறந்தவர்களை கணக்கெடுத்து அனைவருக்கும் பத்து லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும், அந்த தீர்ப்பில் வழங்கியுள்ள அனைத்துப் பரிந்துரைகளையும் நடைமுறைப் படுத்திட வேண்டும் என இம் மாநாடு வலியுருத்துகிறது.
தீர்மானம் 10
மனித மலத்தை மனிதன் அகற்றும் நிலை முற்றிலும் ஒழிப்பதற்கு இத் தொழிலை முற்றிலும் இயந்திரமயமாக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை இம் மாநாடு வலியுருத்துகிறது.
இம் மாநாட்டில் ஈரோடு மாவட்ட தூய்மைத்தொழிலாளர் பேரவை செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார், ஆதித்தமிழர் பேரவையின் மாநில பொதுச்செயலாளர் ஆ.நாகராசன், நிதிச்செயலாளர் ப.பெருமாவளவன், தலைமை நிலைய செயலாளர் வீரவேந்தன், துணைப் பொதுச்செயலாளர், வழக்கறிஞர் ஆனந்தன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, தூய்மைத் தொழிலாளர் அணி மாநில நிர்வாகி சித்துராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். முடிவில் சோ.குமார் நன்றி கூறினார்.

மாநாட்டில் அய்யா அவர்களின் உரையை காண இங்கு சொடுக்கவும்அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற நடைபெறு உண்ணாவிரதத்திற்கு ஆதித்தமிழர் பேரவை ஆதரவு

நமது நிறுவனத்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்கு வழக்கறிஞர் கனகசபை அவர்களின் தலைமையில் பேரவை நிருவாகிகள் கலந்து கொண்டனர்

‎ரிக் வண்டி மரணங்கள்‬

#‎ரிக்_வண்டி_மரணங்கள்‬
‪#‎நாமக்கல்‬ மாவட்டம் இராசிபுரம் வட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள ‪#‎கல்குட்டு‬ கிராமம் ‪#‎அருந்ததியர்‬ பகுதியில்
‪#‎ஆந்திராவில்‬ உள்ள ‪#‎அசோக்ரெட்டி‬ போர்வெல் கம்பெனிக்கு புரோக்கர் முலம் முன்பணம் 10,000 ரூபாய் பெற்றுக் கொண்டு மனோஜ் (20)பாண்டியன், சக்திவேல், உட்பட நான்கு பேரும் அசோகா போர்வெல் கம்பெனிக்கு ஆந்திர மாநிலம் ‪#‎கடப்பா‬ பகுதிக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு சென்றவர்கள்..
கடந்த ஓராண்டில் எந்தவித விடுமுறையும் இல்லாமல் கொத்தடிமையாக வைத்து உள்ளார்கள்
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரில் கல்குட்டு #அருந்ததியர் பகுதியில் உள்ள மனோஜ் அவர்களின் பாட்டி ‪#‎இறப்பிற்க்கும்‬ ஈமச்சடங்கு செய்வதற்கு கூட போர்வெல் நிர்வாகம் விடுமுறையில் செல்ல அனுமதி வழங்கவில்லை.
இதற்கிடையில் ‪#‎பாண்டியன்‬ தன் தாத்தாவிற்க்கு ஆந்திராவில் சரியான உணவு,தங்குவதற்கு இடம் இல்லாமல் இருக்கின்றோம் எங்களை மீட்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.. அதன் அடிப்படையில் பாண்டியன் தாத்தா அவர்கள் ‪#‎நாமகிரிப்பேட்டை‬ ‪#‎காவல்நிலையத்தில்‬ புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை..
10/2/2016 அன்று ஆந்திரா அசோக போர்வெல் அலுவலகத்தில் இருந்து மனோஜ் அவர்களின் பெற்றோர்க்கு உங்கள் மகனுக்கு உடல்நிலை சரியில்லை ஆந்திராவில் இருந்து ராசிபுரத்தில் வந்து கொண்டு இருக்கிறார் என்று தகவல் சொல்லியுள்ளார்கள்..அதன் அடிப்படையில் மனோஜை அழைத்து வர 10/2/2016 அன்று இரவு பெரியப்பா மகன் சென்று உள்ளார்..
பெரியப்பா மகன் அவர்கள் மனோஜை பார்க்கும் போது மனோஜிற்க்கு அப்பா அம்மா யார் என்று தெரியாமல் போகும் அளவிற்கு ‪#‎சுய_நினைவு‬ இல்லாமல் கண்கள் வீங்கியும் கை கால்கள் வீங்கியும் பேருந்தில் வந்துள்ளார்.
மனோஜ் அவர்களை ‪#‎இராசிபுரம்‬ மருத்துவமனையில் இரண்டு நாள் சிகிச்சை அளித்து உள்ளார்கள்..13/2/2016 அன்று மேல் சிகிச்சைக்கு ‪#‎சேலம்_அரசு_மருத்துவமனைக்கு‬ சேர்த்து உள்ளார்கள்.. மூன்று நாள் 17/2/2016 காலையில் மனோஜ் அவர்கள் சிகிச்சை பலன் இல்லாமல் உயிர் இழந்தார்..
சேலம் மருத்துவமனையில் மனோஜ் உடலை உடற்கூறு ஆய்வு செய்யாமல் சீக்கிரம் எடுத்து செல்லுங்கள் என்று அவசரநிலையில் உடலை மருத்துவமனையில் இருந்து அனுப்பியுள்ளார்கள்..
பேரவை தோழர்கள் அசோகா போர்வெல் கம்பெனிக்கு தொடர்பு கொண்டு கேட்க்கும்போது இவர்களின் பராமரிப்பு செலவு அதிகமாக உள்ளது.இவர்கள் தர வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு மற்றவர்களை அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார்கள்..
மனோஜ் சாவிற்க்கு காரணமான அசோகா போர்வெல் அதிபரை கைது செய்யவேண்டும்.. கம்பெனியில் கொத்தடிமையாக இருப்பவர்களை மீட்க வேண்டும்..
என ‪#‎ஆதித்தமிழர்_பேரவை‬ சார்பில் மனோஜ் உடலை புதைக்கமால் போராட்டம் நடைபெற்று வருகிறது
கல்குட்டு பகுதி முழுவதும் ‪#‎காவல்துறை‬ குவிக்கப்பட்டு அசோகா போர்வெல் அதிபரை கைது செய்யாமல் பேச்சுவார்த்தை நடத்துகிறது


கோலாகல குதூகலத்தில் "கும்பகோண மகாமகம்" கொடுமையின் உச்சத்தில் துப்புரப் பணியாளர்களின் பேரவலம்!

கோலாகல குதூகலத்தில்
"கும்பகோண மகாமகம்"
கொடுமையின் உச்சத்தில் துப்புரப் பணியாளர்களின் பேரவலம்!
"""""""""""""""""""""
மற்றவர்கள் மாற்றமும் ஏற்றமும் பெற்றிட..
துப்புரவுத் தொழிலாளர்கள் நாற்றத்தைச் சுமந்து சாக வேண்டுமா?

தமிழக அரசே!
"""""""""""""""""""""
கும்பகோண மகாமக விழாவில் குவியும், குப்பைக் கழிவுகளுடன் கூடிய மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு துப்புரவுத் தொழிலாளர்களை வற்புறுத்தி ஊர் ஊராய் அழைத்துச் வந்து கொடுமைப் படுத்துவதை உடனே நிறுத்து!
உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை காலதாமதமின்றி முழமையாக நடைமுறைப் படுத்து! சட்டத்தை தீவிரமாக்கு,
உண்ண உணவும், தங்குவதற்கு இடவசதியும், பாதுகாப்பு உபகணமும் இன்றி துப்புரவுத் தொழிலாளர்களை விலங்குகளை விட கேவலமாகக நடத்தி அவர்களின் உயிர்களைக் காவு கொடுக்காதே!
குப்பைக் கழிவுகளை அகற்ற மேலை நாடுகளைப் போல் மனிதர்களை பயன்படுத்தாமல் எந்திரங்களை பயன்படுத்து!
பொதுமக்களே!
"""""""""""""""""""""""
சக மனிதர்கள் குப்பைக் கழிவுகளை அகற்றுவதை சகித்துக் கொண்டு வேடிக்கை பார்க்காதே! இவர்களையும் சக மனிதர்களாக பார்த்திடு! இவர்களின் மறுவாழ்விற்கு குரல்கொடுத்திடு!
முற்போக்காளர்களே!
"""""""""""""""""""""""""
காவிரி, முல்லைப் பெரியாறு தமிழ் ஈழம், மீத்தேன், அத்திக்கடவு, அணுஉலை, இதுவெல்லாம் பொதுப் பிரச்சினை என்றால் "இது" பொதுப் பிரச்சினை இல்லையா?
இழிவென்று தெரிந்தும் இதை ஏன்? செய்வேண்டும்
"""""""""""""""""""
சட்டத்தால் ஒழிக்கப்பட்ட இழிதொழிலை இவர்கள் செய்வது எதனால்?
தடுத்து நிறுத்தவேண்டிய தமிழக அரசு விரும்பி செய்தாலும் விடலாமா?
சட்டத்தால் ஒழிக்கப்பட்ட குழந்தைத்தொழில், கள்ளச்சாரயம், கஞ்சா விற்பனை போன்றவற்றை விரும்பி செய்தால் விடுமா?
கேள்விகள் ஆயிரம் கேவலப்படுகிறது தமிழினம்!
________________
மனித மலத்தை மனிதன் சுமப்பது தேசிய அவமானம்!
இதிலென்ன தூய்மை இந்தியா, மேக் இந்தியா பகுமானம்!!
_________________
பிப்ரவரி..21
அணிதிரள்வோம்!
கும்பகோணத்திற்கு!!
அழைக்கிறது..
ஆதித்தமிழர் பேரவை.
""""""""""""""""""""''''"''

Tuesday, 16 February 2016

விளம்பரங்களால் விலைபோகும் ஊடக தருமம். - ஆனந்தன் - ஆதித்தமிழர் பேரவை

விளம்பரங்களால் விலைபோகும் ஊடக தருமம்.
"""""""""""""""""""""""""""""""""""
ஊடக தர்மம், ஊடக நீதி, ஜனநாயகத்தின் ஜந்தாவது தூண் என்று பேசும் ஊடகங்களும் பத்திக்கைகளும், இப்போது உண்மையான ஊடக அறத்தின் படி செயல் படுகிறதா என்றால்! இல்லை என்பதே ஏதார்த்த உண்மையாக உள்ளது.

சமூகத்தில் சாதியாலும் மதத்தாலும் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு அடித்தட்டு மக்களின் குரல்வளை நெறிக்கப்படும் போது ஒடுக்கப்பட்டவனின் குரலாக ஒலிக்க வேண்டிய பத்திரிக்கைகள்!    

விளம்பரம் மூலம் கிடைக்கும் வருவாய்க்கான செய்திகளை முதல் பக்கத்தில் வெளியிட்டு வியாபர நோக்கிற்கான செய்திகளையே பிரதான செய்திகளாக மாற்றுகின்றன.

அரசியல் கட்சிகளின் செய்திகளை "வார இதழ்கள்" அனைத்தும்! கடைசி பக்க விளம்பரமா? அல்லது நடுப்பக்க விளம்பரமா? அந்த கட்சி கொடுக்கும் விளம்பரத்தை பொறுத்தே முக்கியத்துவம் பெறுகின்றது.

மாணவர்களின் உரிமைக்கான நியாயமான போராட்டமா! அல்லது மலத்தை அள்ளி சாக்கடையிலேயே சமாதியாகும் சாபக்கேடா? இப்படி எதுவானாலும் அவர்கள் தரப்பு நியாயங்கள் எதுவும் பத்திரிக்கைகளில் துண்டு செய்தியாகக் கூட அரங்கேறுவதில்லை, அதையும் மீறி ஒரு ஓரத்திலாவது செய்தியாக வேண்டுமானால், அதற்கு அவர்களின் உயிர்கள் ஈடாக்கப்பட வேண்டும்.

மது ஒழிப்பு போராட்டமானலும் சரி, மக்கள் நலன் காக்கும் போராட்டமானலும் சரி, எந்த செய்திகளும் ஊடகங்கத் திரைகளில் ஒலிபரப்பு செய்யப்படாது, காரணம், ஊடக நிறுவனங்களுக்கு அதனால் எந்த பலனும் கிடையாது.

ஆட்சியாளர்களின் அலங்கோல நிர்வாகத்தை  மறைப்பதற்கு அரசு கொடுக்கும் விளம்பரம் அதற்கான நிதியின் அளவைப் பொறுத்து, அந்த செய்தி அலங்கரிக்கப்பட்டு ஆகா ஒகோ என்று முக்கியத்துவம் பெறுகிறது.

முதல் நாள் இரண்டு கடைசிப்பக்க விளப்பரம் கொடுக்கப்படும், அந்த விளம்பர செய்தியே, அடுத்தநாள் தலைப்பு செய்தியாகி, அரசின் சாதனைகள் என்ற பெயரில் அடிக்கல் நாட்டும் விழா முதல் காணொலிக் காட்சியில் நடக்கும் திறப்பு விழா வரை அனைத்தும் நான்கைந்து முறை செய்தியாக்கப்படும்.

தமிழகத்தில் வெளிவரும் தினசரி பத்திரிக்கைகளில்  சனி ஞாயிறு தவிற்து மற்ற நாட்களில் கடைசி இரண்டு பக்க விளம்பரத்திற்கு தினசரி பத்திரிக்கைகள் வாங்கும் ஒரு நாள் விளம்பரத் தொகை  குறைந்த பட்சம் 75.லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை,

ஒரு நாளைக்கு ஒவ்வொரு துறையும் அந்தந்த துறை சார்பாக மூன்று பத்திரிக்கையில் விளம்பரம் கொடுக்கப்பட்டால் ஆகும் செலவு  3×75= 2.கோடியே 25.லட்சம், சராசரியாக அரசு துறைகளின் சார்பாக ஆளும் அரசின் புகழ்பாட மக்களின் வரிப்பணம் வாரி வாரி இறைக்கப்படுகின்றது.

TNPC கட்டிட திறப்பு விழா முதல் தமிழகத்தின் கடை கோடி கிராம கக்கூஸ் திறப்பு விழா வரை ஆளும் அம்மையாரின் விளம்பரம் மக்கள் வரிப்பணத்தில் கொடுக்கப்படுகிறது, அதுவே அடுத்த நாள் செய்தியாக முக்கியம் பெறுகிறது.
ஒரு நாளைக்கு அரசால்  பத்திரிக்கைகளுக்கு கிடைக்கும் வருமானம் இரண்டு கோடியே 25.இலட்சம் என்றால் ஒரு ஆண்டில் அரசு விளம்பரங்களால் பத்திரிகைகள் அடையும் வருவாய் எவ்வளவு என்று, எண்ணிப்பார்க்க வேண்டும்,

ஊடக தருமம் மக்கள் உரிமைகளுக்கு குரல் கொடுக்குமா? அல்லது அரசு கொடுக்கும் விளம்பர வருவாய்க்கு வாய்பிளக்குமா?
வறுமையின் காரணமாக வயிற்றுப் பிழைப்புக்காக விலைபோகும் விலைமாதர்கள் கூட அன்றாடம் மன அழுத்தத்திற்கு ஆளாகும் போது, அந்த மன அழுத்தம் இவர்களுக்கு வருமா என்று எதிர்பார்ப்பது நமது முட்டாள்த்தனத்தையே காட்டும்.

இவர்களால்..
விலை போவது ஊடக தருமம் மட்டுமல்ல!
ஊடகத்தின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும்தான்!!

என்றும்..
அய்யாவின் வழியில் ஆனந்தன்.

Sunday, 14 February 2016

மதுரை ராஜாஜி பூங்காவில் காதலர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர் ஆதித்தமிழர் பேரவையினர்.

காதலர் தின வாழ்த்துக்கள்
  14.2.16 மதுரை ராஜாஜி பூங்காவில் காதலர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர் ஆதித்தமிழர் பேரவையினர்.
துண்டறிக்கையையும் காதலர்களுக்கு கொடுத்து வாழ்த்துக்கள் கூறினர்.
"காதல் செய்வீர், காதல் செய்வீர்
சாதி ,மதம் ,ஒழிய காதல் செய்வீர்
*காதலர் தினத்தை மதுரைவீரன் தினமாக அறிவித்திடு!
*சாதிமறுப்பு திருமணம் செய்யும் காதலர்களுக்கு பாதுகாப்பு கொடு
இதில் ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் கபீர்நகர் கார்த்திக் ,ஜானகி அம்மாள்,பா.ஆதவன்,இரா செல்வம் போன்றோர் கலந்து கொண்டனர்

சென்னையில் அருந்ததிய மக்களிடையே திமுக பொருளாளர் தளபதி ஸ்டாலின் அவர்கள் சந்திப்பு

சென்னையில் அருந்ததிய மக்களிடையே திமுக பொருளாளர் தளபதி ஸ்டாலின் அவர்கள் சந்திப்பு
ஆதித்தமிழர் பேரவை பொதுசெயலாளர் நாகராசன் ,தலைமையில் பேரவை தோழர்கள் இதில் கலந்து கொண்டு தளபதி ஸ்டாலின் அவர்களுடன் அருந்ததிய மக்களின் கோரிக்கைகளை எடுத்து கூறினர்

திருப்பூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பாக திருப்பூர் பேரூந்து நிலையம் மற்றும் பூங்காக்களில் பொதுமக்கள் மற்றும் காதலர்களுக்கு இனிபப்பு வழங்கி காதலர் தினத்தை கொண்டாடினர்.

திருப்பூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பாக திருப்பூர் பேரூந்து நிலையம் மற்றும் பூங்காக்களில் பொதுமக்கள் மற்றும் காதலர்களுக்கு இனிபப்பு வழங்கி காதலர் தினத்தை கொண்டாடினர்.
மேலும் காதலர் தினத்தை மதுரைவீரன் தினமாக. அறிவிக்க முழக்கங்கள் எழுப்பபட்டது


ஏழு தமிழர்-இசுலாமிய அரசியல் சிறைவாசிகள் விடுதலை -செய்ய வேண்டும் என உண்ணா நிலை போராட்டம் - ஆதித்தமிழர் பேரவையினர் கலந்துகொண்டனர்

ஏழு தமிழர்-இசுலாமிய அரசியல் சிறைவாசிகள் விடுதலை -செய்ய வேண்டும் என உண்ணா நிலை போராட்டம் - 13-02-2016, சனி காலை10 மணிமுதல் மாலை-5.வரை மதுரை ஓபுளா படித்துறையில் நடை பெற்றதில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் இரா.செல்வம் தலித்ராஜா, ராமர், சுரேஸ், குணா ஆகியோர் கலந்து கொண்டார்கள்


Tuesday, 9 February 2016

ஆதித்தமிழர் பேரவையின்‬ துணைப் பொதுச்செயலாளர் தோழர் .‪இராஜராஜன்‬ அவர்களின் புதல்வன் திருமண வரவேற்பு நிகழ்வில் அய்யா ‪அதியமான்‬ அவர்கள் வாழ்க்கை துணையேற்போருக்கு வழிகாட்டுதல் உரை நிகழ்த்தி இணையர்களை வாழ்த்தினார்


9.2.2016. ஈரோடு
‪‎ஆதித்தமிழர் பேரவையின்‬ துணைப் பொதுச்செயலாளர் தோழர் .‪இராஜராஜன்‬ அவர்களின் புதல்வன் திருமண வரவேற்பு நிகழ்வு.
‪மல்லிகை‬ அரங்கம் எதிரில் உள்ள ‪‎செல்லாயம்மன்‬ திருமண மண்டபத்தில்
மாலை 7 மணியளவில் நடைபெற்றது
ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் பெருந்தலைவர் அய்யா ‪அதியமான்‬ அவர்கள் கலந்து கொண்டு வாழ்க்கை துணையேற்போருக்கு வழிகாட்டுதல் உரை நிகழ்த்தி இணையர்களை வாழ்த்தினார்

அய்யா அதியமான் அவர்களின் வாழ்த்துரையை காண இங்கு சொடுக்கவும் 

அய்யா அதியமான் அவர்களின் வாழ்த்துரையை காண இங்கு சொடுக்கவும் 


 

Friday, 5 February 2016

தமிழகத்தில் தலித் முதல்வர் வேட்பாளர் குறித்து அய்யா அதியமான் அவர்கள் 4.2.16 அன்று "தி ஹிந்து" ஆங்கில நாளிதழுக்கு வழங்கிய செவ்வி

தமிழகத்தில் தலித் முதல்வர் வேட்பாளர் குறித்து அய்யா அதியமான் அவர்கள் 4.2.16 அன்று "தி ஹிந்து" ஆங்கில நாளிதழுக்கு வழங்கிய செவ்வி

செவ்வியை கேட்க இங்கு சொடுக்கவும்
தி ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்த செய்தியை பார்க்க இங்கு சொடுக்கவும்

மதுரைவீரன் உண்மை வரலாறு விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து மாவட்ட தோழர்களுக்கு ஆலோசனை வழங்கினார் பேரவை பொதுச்செயலாளர்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிப்ரவரி.14 காதலர் நாளில் நடைபெறும் மதுரைவீரன் உண்மை வரலாறு விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து மாவட்ட தோழர்களுக்கு ஆலோசனை வழங்கும் பேரவை பொதுச்செயலாளர்  அண்ணன்ஆ,நாகராசன், உடன் மாநில துணை பொதுச்செயலாளர்கள் வழக்கறிஞர் ஆனந்தன், நாமக்கல்.மணிமாறன், துணை கொள்கை பரப்பு செயலாளர், செல்வவில்லாளன் மற்றும் பேரவை தோழர்கள்.
Monday, 1 February 2016

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ரோகித் வெமுலாவின் படுகொலைக்கு நீதிக்கேட்டு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டு சிறப்புரையற்றினார்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபளையத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ரோகித் வெமுலாவின் படுகொலைக்கு நீதிக்கேட்டு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பாக மாநில துணை கொள்கைபரப்பு செயலாளர் தோழர் செல்வவில்லளன் கலந்து கொண்டு சிறப்புரையற்றினார் உடன் தோழர் பிராகாஷ்,மற்றும் சங்ககிரி சோமு
விருதுநகர்‬ மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பாக அருந்ததிய மக்களின் அடிப்படை வசதி கோரி உரிமைமுழக்க ‪ ஆர்ப்பாட்டம்‬ நடைபெற்றது ( படங்கள் மற்றும் காணொளி )

2016 பிப்ரவரி 1ல் காலை 10 மணியளவில்
‪விருதுநகர்‬ மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பாக அருந்ததிய மக்களின் அடிப்படை வசதி கோரி உரிமைமுழக்க ‪ ஆர்ப்பாட்டம்‬ நடைபெற்றது
நிறுவனர்  அய்யா ‪அதியமான்‬ அவர்களின் உரிமை முழக்க பேருரை ஆற்றினார்கள்

அய்யா அவர்களின் உரையை காண இங்கு சொடுக்கவும்