அண்மையச்செய்திகள்

Wednesday 29 June 2016

தலித் ஒற்றுமையால் BHEL சங்க தேர்தலில் அம்பேத்கர் யூனியன் அமோக வெற்றி

தலித் ஒற்றுமையால்
BHEL சங்க தேர்தலில் அம்பேத்கர் யூனியன்
அமோக வெற்றி


"""""""""""

போராட்ட செய்தியை காண இங்கு சொடுக்கவும் 


BHEL-ல் 28.6.2016 அன்று சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக தொழிற் சங்கமான LPF, அதிமுக தொழிற் சங்கமான ATP, சிபிஎம் தொழிற் சங்கமான CITU உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட சங்கங்கள் போட்டியிட்டது, இதில் டாக்டர் அம்பேத்கர் யூனியனும் அடங்கும்.
அய்ந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சங்க அங்கீகாரத்திற்கான இத்தேர்தலில் டாக்டர் அம்பேத்கர் யூனியனை முதன்மைச் சங்கமாக ஆக்கிட
BHEL SC/ST EWC ன் கௌரவத் தலைவரும் ஆதித்தமிழர் பேரவை நிவனருமான சமூகநீதிப் போராளி 'அய்யா' இரா.அதியமான் அவர்கள் கடந்த 24.06.2016 அன்று BHEL EAST gate ல் நடைபெற்ற சிறப்பு வாயிற்கூட்டத்தில் தொழிலாளர்கள் மத்தியில் வாக்குகள் சேகரித்து உரையாற்றினார்,
அவர் ஆற்றிய உரை எஸ்சி/எஸ்டி தொழிலாளர்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது, அதன் காரணமாக இதுவரை அய்ந்தாம் இடத்தில் இருந்து வந்த அம்பேத்கர் யூனியன் எஸ்சி/எஸ்டி தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து வாக்களித்த காரணத்தினால் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது.
இது என்ன? சாதனையா என்று கூட எண்ணத் தோன்றும், சாதனைதான்! ஏனென்றால் 1990 க்கு முன்புவரை ஆதிக்க சக்திகள் நடத்திய தொழிற் சங்கங்களில் கொடி தூக்கவும், கோசம் போடவும், போஸ்ட்டர் ஒட்டவும் இன்ன பிற எடுபிடி வேலைகளை செய்யவும் மட்டுமே பயன்படுத்தபட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள். 1991.ல் ஏற்பட்ட அம்பேத்கரின் நூற்றாண்டு எழுச்சி "யாருக்கும் நான் அடிமை இல்லை! எனக்கடிமை எவருமில்லை!!" என்ற புரட்சிகர கருத்துக்கு இட்டுச்சென்று அம்பேத்கர் பெயரில் சங்கத்தை தொடங்க காரணமாக அமைந்தது. அப்படி உருவானதே இந்த அம்பேத்கர் யூனியன்.
யூனியன் தொடங்கப்பட்ட போது முதன்மை சங்கமாக இருந்த அம்பேத்கர் யூனியன் பின்நாளில் தலித்துகளுக்குள் ஏற்பட்ட அதிகாரப் பகிர்வு பாகுபாட்டின் காரணமாக சில மனமாச்சரியங்கள் ஏற்பட்டு அம்பேத்கர் யூனியன் அய்ந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதை உணர்ந்த தொழிலாளர்கள் இனிமேல் சங்க பொறுப்புகளை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ளலாம் என முடிவுக்கு வந்து தங்களுக்குள் சில ஏற்பாடுகளை செய்துகொண்டு தற்போது, இந்த தேர்தலில் அம்பேத்கர் யூனியன் களம் கண்டு இரண்டாம் இடத்தை எட்டியுள்ளது.
இதற்கு காரணம் தலித்துகளில் பெரும்பன்மையாக உள்ள மூன்று பிரிவுகளான அருந்ததியர், ஆதிதிராவிடர், தேவேந்திரர் சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் தனித்தனியாக அழைக்கப்பட்டு, கடந்த 22.6.2016 அன்று தமிழக முன்னேற்றக் கழக தலைவர் திரு, பெ.ஜான்பாண்டியன் அவர்களும், 24.6.2016 அன்று ஆதித்தமிழர் பேரவை நிறுவனர், திரு, இரா.அதியமான் அவர்களும், 25.6.2016 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு, தொல்.திருமாவளவன் அவர்களும் வாக்கு சேகரித்து உரையாற்றினர்,
இதில் பேசிய திரு, அதியமான் அவர்கள் தலித் தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்று யார் சொன்னது, நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கின்றோம், நீங்கள் நினைத்தால் வெற்றி விழா கூட்டத்தில் ஒரே மேடைக்கு வர தயாராக இருக்கின்றோம், என்று பேசியது தொழிலாளர்கள் மத்தியில் மேலும் எழுச்சியூட்டியது.
இதன் காரணமாக நடந்து முடிந்த தேர்தல் நல்ல மாற்றத்தைக் கொடுத்துள்ளது,
வாக்குகள் விபரம்.
"""""""""""""
தகுதியுடைய மொத்த வாக்குகள் =5803
பதிவானவை =5594
செல்லாதது =18
திமுக
BHEL- EPU/LPF =891
அம்பேத்கர் யூனியன்
BPDr.AEU =814
அதிமுக
BPAWU/ATP =730
சிபிஐ(எம்)
BHEWU/CITU =655
BMS =634
BHEL-DTS/AITUC =559
BPEU/INTUC =541
BPWU/PJTM = 326
BCEU =119
BNSU = 307
அரசியல் பலம், அதிகாரபலம் பணபலம் கொண்ட மிகப்பெரிய அரசியல் கட்சிகளெல்லாம் களம்கண்டு சாதிக்க முடியாததை தலித் தொழிலாளர்களின் ஒற்றுமை சாதித்துக் காட்டியுள்ளது.
இந்த சாதனையும் வெற்றியும் நீடித்து மேலும் முதல் சங்கமாக வரவேண்டும் என்றால் இப்போது உள்ள ஒற்றுமை நிலை நிறுத்தப்பட வேண்டும், அப்படி தலித் ஒற்றுமை நிலைத்து வலுப்பெற வேண்டும் என்றால், அம்பேத்கர் யூனியனில் உள்ள அதிகாரம் மிக்க பதவிகளான தலைவர், செயலாளர், பொருளாளர், பதவிகள் சுழற்சி முறையில் அருந்ததியர், ஆதிதிராவிடர், தேவேந்திரர், சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப் படவேண்டும், மேலும் பெல் நிறுவனத்தில் உள்ள பணி நியமனங்களிலும், பதவி உயர்வுகளிலும் உரிய பங்கீடு கிடைப்பதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், இது போன்ற அனுகுமுறைகளை கடைபிடித்தால், பெல் நிறுவனத்தில் மட்டுமல்ல அனைத்து தளங்களிலும் தலித்துகள் அதிகாரம் பெறமுடியும்.
இந்திய நாட்டில் உள்ள உழைக்கும் தொழிலாளர்களில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் தலித் மக்களே! எனவே இந்தியாவில் தலித் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து அந்தந்த தளங்களில் வலுவான தொழிற் சங்கங்களை கட்டமைத்து விட்டாலே! மத்தியிலும், அந்தந்த மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரத்தைக் எளிதாக கைப்பற்ற முடியும் என்று அம்பேத்கர் நம்பினார், அதன் காரணமாகவே சுதந்திர தொழிலாளர் கட்சியை கூட தொடங்கினார், ஆனால் பார்பனிய சூழ்ச்சியாலும், நமக்குள் இருக்கும் பார்ப்பனிய பாகுபாட்டுக் கூறுகளாலும் நமது ஒற்றுமை சிதைந்து வலுவிழந்து இருக்கின்றோம், எனவே இதைப்புரிந்து கொண்டு எல்லா தளங்களிலும், நமக்கான பிரதிநிதத்துவத்தை நமக்குள் பாகுபாடின்றி பகிர்ந்து கொண்டு தொழிற்சங்கங்களை கட்டி எழுப்பினால் அரசியல் அதிகாரம் சாத்தியம்!
அதற்கு நடந்து முடிந்த பெல் நிறுவன தேர்தலே முன்னுதாரணம்!!
________________
தோழமையுடன்
பொதுச்செயலாளர்
ஆதித்த்கமிழர் பேரவை.

Sunday 26 June 2016

பேரவையின் திருச்சி மாவட்ட செயலாளர் அய்யா அருந்ததிமைந்தன் அவர்களின் இரங்கல் கூட்டம் அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ( படங்கள் மற்றும் காணொளி )

ஆதித்தமிழர் பேரவையின் திருச்சி மாவட்ட செயலாளர் அய்யா அருந்ததிமைந்தன் அவர்களின் இரங்கல் கூட்டம் அவர் எரியூட்டப்பட்ட இடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு பேரவையின் நிறுவனர் 'அய்யா: அதியமான் தலைமையில் நடைபெற்றது. இதில் பேரவையின் பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் நிதிச்செயலாளர் ப்.பெருமாவளவன், திராவிடர் விடுதலைக் கழகம் புதியவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பழனிச்சாமி, மக்கள் அதிகாரம் தர்மாராஜ், ம.க.இ.க. ஜீவா, தமிழக வாழ்வுரிமை கட்சி சரவணன், விடுதலைச் சிறுத்தைகள் தமிழாதன், தமிழ்ப்புலிகள் ரமணா, ஆதித்தமிழர் கட்சி சு.க.சங்கர், உள்ளிட்ட கட்சி மற்றும் அமைப்பின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வீரவணக்க இரங்கல் உரை நிகழ்த்தினர், இந்நிகழ்வில் பேரவை தோழர்கள் திரளாக பங்கேற்றனர். முன்னதாத நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கில் பொதுமக்களும், ஆதித்தமிழர் பேரவை மற்றும் தோழமை இயக்க தோழர்களும் கலந்து கொண்டு வீரவணக்க முழக்கமிட்டனர்..

அய்யா அதியமான் அவர்களின் உரையை காண இங்கு சொடுக்கவும்















BHEL-ல் தலைவர் அதியமான் எஸ்சி/எஸ்டி தொழிலாளிகள் மத்தியில் வாக்குகள் சேகரித்தார் (படங்கள் மற்றும் காணொளி )


-----------------------------
BHEL-ல் நடைபெறும் சங்க அங்கீகாரத் தேர்தலில் டாக்டர் அம்பேத்கர் சங்கத்தை முதன்மைச் சங்கமாக்கிட
BHEL SC/ST EWC ன் கௌரவத் தலைவரும் ஆதித்தமிழர் பேரவை நிவனருமான சமூக நீதிப்போராளி 'அய்யா' இரா.அதியமான் அவர்கள் இன்று 24/06/2016, வெள்ளி மாலை 03.15 மணிக்கு BHEL EAST gate ல் நடைபெறும் சிறப்பு வாயிற்கூட்டத்தில் எஸ்சி/எஸ்டி தொழிலாளிகள் மத்தியில் வாக்குகள் சேகரித்தார்

=>பேரவை GS
BHEL சங்க தேர்தலில் அய்யா அதியமான் அவர்களின் உரையை காண இங்கு சொடுக்கவும்
















வாக்கு சேகரிக்கின்றார் பேரவையின் நிறுவனர்.
-----------------------------
BHEL-ல் நடைபெறும் சங்க அங்கீகாரத் தேர்தலில் டாக்டர் அம்பேத்கர் சங்கத்தை முதன்மைச் சங்கமாக்கிட
BHEL SC/ST EWC ன் கௌரவத் தலைவரும் ஆதித்தமிழர் பேரவை நிவனருமான சமூக நீதிப்போராளி 'அய்யா' இரா.அதியமான் அவர்கள் இன்று 24/06/2016, வெள்ளி மாலை 03.15 மணிக்கு BHEL EAST gate ல் நடைபெறும் சிறப்பு வாயிற்கூட்டத்தில் எஸ்சி/எஸ்டி தொழிலாளிகள் மத்தியில் வாக்குகள் சேகரித்தார்

=>பேரவை GS

சமூக நீதிப்போராளி 'அய்யா' இரா.அதியமான் அவர்களை BHEL தொழிற்சங்க நிர்வாகிகள் சந்தித்தனர்

BHEL சங்க தேர்தலில்
வாக்கு சேகரிக்கின்றார் பேரவையின் நிறுவனர்.
------------------------------
BHEL-ல் நடைபெறும் சங்க அங்கீகாரத் தேர்தலில் டாக்டர் அம்பேத்கர் சங்கத்தை முதன்மைச் சங்கமாக்கிட
BHEL SC/ST EWC ன் கௌரவத் தலைவரும் ஆதித்தமிழர் பேரவை நிவனருமான சமூக நீதிப்போராளி 'அய்யா' இரா.அதியமான் அவர்கள் இன்று 24/06/2016, வெள்ளி மாலை 03.15 மணிக்கு BHEL EAST gate ல் நடைபெறும் சிறப்பு வாயிற்கூட்டத்தில் வாக்கு சேகரிக்கிறார்.
முன்னதாக நிறுவனரை விடுதி அறையில் சந்தித்தித BHEL அருந்ததியர் நிர்வாகிகள்.

பேரவை GS






Wednesday 22 June 2016

தேனி மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு கலைஇலக்கிய மேடை 5அம்சத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்றஆர்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டனர்

தேனி மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு கலைஇலக்கிய மேடை 5அம்சத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று 21.06.16ல்தேனி ஸ்டேட் பேங்க் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில்
சமூக நலப்போராளி அய்யா .பழ.நெடுமாறன் அவர்கள் பங்கு பெற்றார் தேனிமாவட்ட ஆதித்தமிழர்பேரவை சார்பாக மாவட்ட செயளாலர் தோழர்.இரா.இளந்தமிழன் அவர்களும்,தூய்மை தொழிலாளர் பேரவையின் சார்பில் தோழர் மாநில துனை செயலாளர் நீலகனலன் அவர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்
ஆர்ப்பாட்டத்தின். கோரிக்கைகள்
1.தமிழகத்தில் நூலகங்கள் எண்ணிக்கையை இரட்டிப்பாக வேண்டும்,நூலகத்துறை க்கு தனி அமைச்சகம் உருவாக்கவேண்டும்
2.தமிழின் தொன்மையையும் ,தனித்தன்மையும் உலகுக்கு உணரச்செய்யும் விதமாக மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் செயல்பாடுகளில் மாநில அரசு தீவரமாக தலையிடவேண்டும்
3.தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கின்ற புதிய விருதுகள் ,திட்டங்கள் அறிவித்திடவேண்டும் .
4.கடந்த முறை அறிவிக்கப்பட்ட மினி திரையரங்கு திட்டத்தை கிராமந்தோரும் செயல்படுத்த வேண்டும்
5.அஞ்சல் வழித்தமிழ்க் கல்வியை குறைந்த கட்டணத்தில் நாடு,உலகம் முழுமைக்கும் செயல்படுத்தவேண்டும்
என்ற தீர்மானம் முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில் விசிக ,மற்றும் ,தலித்மக்கள் சம்மேளனம் ,புதிய தமிழகம் ,தமிழர் தேசிய. கட்சி ,சிபிஎம் எல் ரெட்ஸ்டார் கட்சியின் தோழர்கள் திரளாக பங்கபெற்றனர்.





Tuesday 21 June 2016

BHEL நிறுவன சங்க தேர்தலில் sc/st தொழிலாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான்.

BHEL நிறுவன சங்க தேர்தலில் sc/st தொழிலாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான BHEL -ல் வருகிற 27/06/2016 அன்று சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெறுகிறது.
இத்தேர்தலில் EPU, INTUC, CITU, ATP, DTS- AITUC, NDLF, BCEU, BMS, BNSU , BP.Dr.AEU (BOILER PLANT Dr AMBEDKAR EMPLOYEES UNION) ஆகிய தொழிற்சங்கங்கள் போட்டியிடுகின்றன.
SC/ST தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்த தொழிற்சங்கமான BP.DR.AEU வை முதன்மைச் சங்கமாக வெற்றி பெறச்செய்வதற்காக அனைத்து sc/st தொழிலாளர்களும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
BP.DR.AEU வெற்றி பெற்றால் தான் sc/st தொழிலாளர்களின் உரிமைகளையும்,கோரிக்கைகளையும் வென்றெடுக்க முடியம்.ஆகவே BHEL-ல் நடைபெறும் சங்க அங்கீகாரத் தேர்தலில் டாக்டர் அம்பேத்கர் சங்கத்தை முதன்மைச் சங்கமாக்கிட
BHEL sc/st EWC ன் கௌரவத்தலைவரும் ஆதித்தமிழர் பேரவை நிவனருமான சமூக நீதிப்போராளி நமது அய்யா இரா.அதியமான் அவர்கள் நாளை 24/06/2016, வெள்ளிக்கிழமை மாலை 03.15 மணிக்கு BHEL EAST gate ல் நடை பெறும் சிறப்பு வாயிற்கூட்டத்தில் வாக்கு சேகரிக்கிறார் .ஆகவே நமது தோழர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
------ கோ.திருவீரன்.


திருப்பூர் மாநகரம் 19வது வார்டு சின்னப்புத்தூரில் ஆதித்தமிழர் பேரவையினர் சாலை மறியல்

18.6.16 மாலை 6.30 மணிக்கு திருப்பூர் மாநகரம் 19வது வார்டு சின்னபுதுர் அருந்ததியர் பகுதியில் சாக்கடையில் செல்லும் மழை நீர் கழிவு நீரை ஊருக்குல் வராமல் சாக்கடை கட்டுமான பணியை முறையாக அமைக்க கோரி ஆதித்தமிழர்பேரவை சோழன் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் தலைமையில் ஊர் பொது மக்கள் 50 பேர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சாலை மறியலில் ஈடுபட்பவர்களிடம் அனுப்பூர்பாளையம் காவல் ஆய்வாளர் சண்முகம் அவர்கள் மேற்படி கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கபடும் என கூறியதின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.சோழன் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர்.


கோவையில் தோழர் வழக்கறிஞர் அர.தாமோதரன் தோழர் சாமுண்டீஸ்வரி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு நிகழ்வை, சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணமாக ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் நடத்திவைத்தார்.

16.06.2016 இன்று கோவையில் தோழர் வழக்கறிஞர் அர.தாமோதரன் தோழர் சாமுண்டீஸ்வரி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு நிகழ்வை, சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணமாக ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் நடத்திவைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் மேலவை உறுப்பினரும் கோவை வழக்கறிஞர் சங்க தலைவருமான தண்டபாணி அவர்களும், திமுக வழக்கறிஞர் அணி செயலாளர் அருள்மொழி அவர்களும் முன்னிலை வகித்தனர், இதில் பேரவை பொதுச்செயலாளர் நாகராசன் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். முடிவில் மணமகன் நன்றி கூறினார்.
தோழமையுடன்
பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை