அண்மையச்செய்திகள்

Saturday, 31 October 2015

மதுவெறி, மதவெறி சாதிவெறியை எதிர்த்து தீபாளியை புறக்கணிக்க ஆதித்தமிழர் பேரவை முடிவு.

இன்று 1.11.2015 திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் மதுவெறி மதவெறி சாதிவெறி க்கு எதிராக அறைகூவல்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பூரண மதுவிலக்கு அமல்படுத்தும் வரை ஆதித்தமிழர் பேரவை தனது போராட்டங்களை தொடரும்.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
மதுவெறி, மதவெறி சாதிவெறியை எதிர்த்து தீபாளியை புறக்கணிக்க ஆதித்தமிழர் பேரவை முடிவு.
மதுவெறி, மதவெறி சாதிவெறியை எதிர்த்து தீபாளியை புறக்கணிக்க ஆதித்தமிழர் பேரவை முடிவு.
"""""""""""""""""""""""""""""""
இந்தியா என்பது பலதரப்பட்ட மொழியை பேசக்கூடியவர்களும், பல்வேறு மதத்தை சார்ந்தவர்களும் வாழக்கூடிய, வேற்றுமையில் ஒற்றுமை காணும் மதசார்பற்ற மாபெரும் சனநாயக நாடு.

இங்கு வாழுகின்ற மக்கள் அனைவரும் இனத்தாலும் மொழியாலும் கலாச்சார பண்பாட்டாலும் மாறுபாடு கொள்ளாமல் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்பதே! இந்திய அரசியல் சாசனம் வகுத்து தந்துள்ள நீதி.

அந்த நீதியின் அடிப்படையில் நம்மை ஆளும் ஆட்சியாளர்கள், அரசியல் சாசனம் வகுத்து தந்துள்ள சட்ட நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து தரப்பட்ட மக்களையும் பாகுபாடின்றி, அவர்களின் உரிமைகளை நிலை நாட்டிட ஆட்சிபுரிய வேண்டும் என்பதே! அதனுடைய விதி.

ஆனால்! அந்த விதிகள் எவற்றையும் பின்பற்றாமல் மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதாவின் மோடி அரசு. இசுலாமிய, கிருத்துவ சிறுபான்மை மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்யாமல் இந்துமத வெறியர்களுக்கும், சாதி வெறியர்களுக்கும் துணைபோவது என்பது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.

ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகளை மறைமுகமாக தூண்டிவிட்டு தாழ்த்தப்பட்ட, இசுலாமிய மக்களை அச்சுறுத்தி அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதை பார்க்கின்ற போது, இது ஓர் இந்துவ அரசுதான்! என்பதை வெளிப்படையாகவே உறுதிசெய்கிறது.

பகவத்கீதையை தேசிய நூலாக அறிவித்தது, சமஸ்கிருதத்தை உலக மொழி அந்தஸ்த்துக்கு உயர்த்த எடுக்கும் முயற்சிகள், கருத்துரிமைக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலை சம்பவங்கள், மாட்டுக்கறி உண்டதற்காக நடத்திக்காட்டிய  கோரப்படுகொலைகள் என நீளும் இந்த அராஜகங்களின் விளைவாக மதுவெறி, மதவெறி, சாதி வெறியை தூண்டி நாட்டை அமைதியிழக்க செய்யும் மத்திய அரசின் மக்கள்விரோத நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க.

தமிழக 'ஜெ' அரசோ! பி.ஜே.பி.க்கு முட்டுக்கொடுக்கின்ற வகையில் மதவெறியர்களுக்கும், சாதி வெறியர்களுக்கும் சாதகமான சூழ்நிலையையே உருவாக்கி வருகிறது.

மக்களை மரணக்குழிக்கு அனுப்பும் மதுக்கடைகளை மூடி, மதுவிலக்கை அமல்படுத்தாமல், மக்கள் விரோதபோக்கையே கடைபிடித்து வருகிறது. சட்ட ஒழுங்கு சீர்குலைந்து, அரசு அதிகாரிகளுக்கே! பாதுகாப்பு கொடுக்க முடியாமல்  செயலற்ற மக்கள் விரோத அரசாக இருந்து வருவது மேலும் வேதனை அளிக்கின்றது.

இப்படி வேற்றுமையில் ஒற்றுமை காணும் மதசார்பற்ற இந்தியாவை! மதுவெறி, மதவெறி, சாதிவெறியை தூண்டிவிட்டு நாட்டை துண்டாடும் மதவாத, சாதியவாத சக்திகளின் செயல்களுக்கு துணைபோகும் மத்திய மாநில அரசுகளை அம்பலப்படுத்தி,

"திபாவளியை புறக்கணிப்பது" என்று ஆதித்தமிழர் பேரவை முடிவு செய்து, மக்களை விழிப்பூட்டி ஒன்றுபடுத்தும் வேலையில் ஈடுபடுகின்றது.

இணைப்பு
""""""""""""'""""
மதசார்பற்ற இந்தியாவை இந்துத்துவ நாடாக மாற்றும் முயற்சியில் ஈடுபடும் இட்லர் முசோலினி வாரிசுகளான ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க சங்பரிவாரங்களின் நடவடிக்கைகளில் சில
**********************
*பகவத்கீதையை தேசியநூலாக அறிவித்தது,
*ஆசிரியர் தினத்தை குருகுல நாளாக அரிவித்தது,
*சமஸ்கிருதத்தை உலக மொழிக்கு இணையாக உயர்த்தும் முயற்சிகளை மேற்கொள்வது,
*பொது சிவில் சட்டத்தைக் கொண்டு சட்டத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சி
*கர்வாக்சி என்ற பெயரில் வறுமையில் வாடும் இசுலாமியருக்கு 5.லட்சமும், கிருத்துவருக்கு 2.லட்சமும் கொடுத்து ஆசைகாட்டி கட்டாயத்தின் பெயரில் இந்து மதத்திற்கு மாற்றும் முயற்சிகள்,

இசுலாமிய, கிருத்துவ தேவாலயங்கள், கல்வி நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள்.
"""""""""""""""""""""""""""""""
*பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து தற்போது வினாயகர் ஊர்வலத்தின் போது, மசூதிகளின் மீது வெடிகுண்டுகளை வீசுவது, இசுலாமிய வரலாற்று சின்னங்கள் இருக்குமிடத்தில் இந்து கடவுள்கள் பிறந்ததாக கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விடுவது,
*கடந்த ஆண்டு நவம்பர், திசம்பரில் மட்டும் 38.கிருஸ்த்தவ ஆலயங்கள் மீதும் 30.க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மீதும் தாக்குதல்,

கருத்துரிமைக்கு எதிரான படுகொலைகள்
"""""""""""""""""""""""""""
*பகுத்தறிவு கருத்தாளர்கள் புனேயை சேர்ந்த தபோல்கர், பேராசிரியர் கோவிந் பன்சாரே, கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் துணைவேந்தர் கல்புரகி, ஆகியோரை படுகொலை செய்தது,
*ஆசிரியர் சுசீந்திரகுல்கர்னி முகத்தின் மீது மை வீசி தாக்குதல் நடத்தியது.

பசுவதை எதிர்ப்பு என்ற பெயரில் நடத்தப்படும் மனிதப் படுகொலைகள்
""""""""""""""""""""""""""
உத்ரபிரதேசம் தாத்ரியில் மாட்டுக்கறி சாப்பிட்டதாக வதந்தியை பரப்பி முகமதுஅக்லாக் என்பவரை படுகொலை செய்தது,
*அடிமாடுகளை ஏற்றி செல்லும் வாகனங்களை வழிமறித்து அதில் வருவோரை படுகொலை செய்வது,
*மாட்டுக்கறி விருந்து கொடுத்ததாக கூறி காஷ்மீர் சுயேட்சை எம்.எல்.ஏ.ரஷித் என்பவர் முகத்தில் மை வீசி தாக்குதல் நடத்தியது,

இடஒதுக்கீட்டுக்கு எதிரான சதிகள்
""""""""""""""""""""""""""""
*மருத்துவக் கல்விக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு முறையை கொண்டு வருவதற்கான முயற்சி.
*தமிழகத்தில் தேவேந்திரர் ஒரு சிலரை அழைத்து இடஒதுக்கீடு வேண்டாம் என்று வாக்குமூலம் கொடுக்க வைப்பது,
*இடஒதுக்கீட்டுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் சாதி இந்துக்களை தூண்டிவிடுவது.

தலித் மக்கள் மீதான படுகொலைகள்
"""""""""""""""""""""""
*அரியானா மாநிலம் சன்பேத் கிராமத்தில் இரண்டு குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து படுகொலை,
*அதே போன்று கோவிந் என்ற சிறுவன் படுகொலை,
*2014.ல் 2249 தலித் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள்,
*500.க்கும் மேற்பட்ட சாதியப் படுகொலைகள்
*கௌரவம் என்ற பெயரில் 15.க்கும் மேற்பட்ட ஆணவப்படுகொலைகள்,
*தருமபுரி, சேஷசமுத்திரம் ஊர் எரிப்பு, தேர் எரிப்பு,
*பரமக்குடி துப்பாக்கி சூட்டில் 6.பேர் படுகொலை,

தேசத் தலைவர்கள் அவமதிப்பு
""""""""""""""""""""""
இந்திய நாட்டின் தேசபிதா காந்தியாரை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேக்கு சிலை எழுப்புவது, சமூகநீதிக்காக போராடிய தலைவர்கள் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகளை அவமதிப்பது.

மர்ம மரணமடைந்த அரசு அதிகாரிகள்
"""""""""""""""""""""""""""""""""
தமிழகத்தில் வேளாண்துறை அதிகாரி முத்துகுமாரசாமி, திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுப்ரியா மர்ம மரணங்கள்.

இப்படி தொடரும் எண்ணற்ற சாதிவெறி, மதவெறி, பாலியல் சித்ரவதைகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதே! அவர்களுக்கு எச்சரிக்கையாக அமையும்..

http://www.atptamilnadu.blogspot.in/2015/10/blog-post_58.html?m=1ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் ஆதித்தமிழர்களின் அறிவாசான் அய்யா அதியமான் கலந்து கொள்ளும்.

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் ஆதித்தமிழர்களின் அறிவாசான் அய்யா அதியமான் கலந்து கொள்ளும்.

"""""""""""""""""""""""""""""""
திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும்
''இந்து பார்ப்பன,
பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு''
நாள் : 08.11.2015 ஞாயிற்றுக்கிழமை.

கருத்தரங்கம் :
*காலை 9.முதல் மாலை 5.வரை.
இடம்-K.K.S.K.மஹால், பவானி ரோடு, ஈரோடு.

பொது மாநாடு :
*மாலை 6 முதல் 10.வரை.
இடம்-திருநகர் காலனி, ஈரோடு.

பங்குபெறுவோர் :
தோழர் கொளத்தூர் மணி,
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

தோழர் விடுதலை ராஜேந்திரன்,
பொதுச் செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.

தோழர் இரா.அதியமான்,
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.

தோழர் அப்துல்சமது,
மனித நேய மக்கள் கட்சி,

தோழர் ஆளூர் ஷாநவாஸ்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,

தோழர் புனிதப் பாண்டியன்,
ஆசிரியர் தலித் முரசு,

தோழர் வே.மதிமாறன்,
முற்போக்கு எழுத்தாளர்,

தோழர் சுந்தரவள்ளி,
முற்போக்கு எழுத்தாளர்.

மாநாட்டின் தொடக்கத்தில் மேட்டூர் டி.கே.ஆர்.இசைக்குழுவின்
இசை நிகழ்சியும்,வீதி நாடகமும் நடைபெறும்.

தொடர்புக்கு :
தோழர் ரத்தினசாமி, மாநில அமைப்புச் செயலாளர் - 9842712444 .
தோழர் சண்முகப்பிரியன்,மாவட்ட செயலாளர் - 9944408677.

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் 'அய்யா' அதியமான் கண்டன அறிக்கை

ஆதித்தமிழர் பேரவை
நிறுவனர் 'அய்யா' அதியமான் கண்டன அறிக்கை
"""""""""""""""""""""""''''''''''''''
மது விலக்கை அமல்படுத்த கோரி பிரச்சாரம் செய்த
ம.க.இ.க பொறுப்பாளர் கோவன் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறைபடுத்தியதை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.
"""""""""""""""""""""""""
திருச்சியை சேர்ந்த மக்கள் கலை இலக்கிய கழக மைய கலைக்குழு பொறுப்பாளர் மக்கள் இசைப்பாடகர் தோழர் கோவன் அவர்கள் மதுவிலக்கை அமல்படுத்தாத தமிழக அரசை விமர்சனம் செய்து  விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

அது அனைத்து வலைத்தளங்களிலும் வெளிவந்துள்ளது. அந்த பாடல் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் ஏக போக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் அந்த பாடலை பாடியதற்காக தமிழக அரசு, தோழர் கோவன் மீது 124.A, 153.A ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த செயலை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.

தமிழக அரசின் இந்த அடக்குமுறை செயல் என்பது, கருத்துரிமைக்கு எதிராக இந்து மதவெறியர்களால் படுகொலைக்கு உள்ளான பகுத்தறிவாளர்கள் தபோல்கர், பன்சாரே, கல்புரகி ஆகியோரது படுகொலைகளுக்கு இணையான "ஜனநாயக" படுகொலையாகவே! அமைந்துள்ளது,

சட்டமன்றத்திலும் கருத்து சொல்ல உரிமை மறுப்பு, மக்கள் மத்தியிலும் கருத்து சொல்ல உரிமை மறுப்பு என்றால் வாக்களித்த மக்கள் என்ன கிள்ளிகீரைகளா? என்றுதான்! கேட்க தோன்றுகிறது.

ஆதித்தமிழர் பேரவை வெளியிட்ட மதுரைவீரன் நூலுக்கு தடைவிதித்து ஒடுக்கப்பட்டோரின் இலக்கிய படைப்பை முடக்கியது,

செயலற்று கிடக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து கருத்து சொல்லும் அரசியல் கட்சி தலைவர்கள் மீது அவதூறு வழக்குகளை தொடுப்பது, மாணவர்கள் மற்றும் மக்கள் போராட்டங்களை ஒடுக்குவது, தனது கட்சிக்காரர்களை தூண்டிவிட்டு அராஜகத்தில் ஈடுபடுவது, காவல்துறையை ஏவிவிடுவது, ஜனநாயக போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது,

போன்ற அடக்குமுறைகளை ஏவிவிட்டு ஜனநாயகத்தின் குரல்வலையை நெறிக்கும் அராஜக செயல்களை விட்டு விட்டு, மக்களுக்காக போராடும் ஜனநாயக போராட்டங்களை அங்கீகரித்து, அவர்களது கோரிக்கைகளின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதுதான் வாக்களித்த மக்களுக்கு தமிழக அரசு செய்யும் ஜனநாயக கடமையாக அமையும்.

எனவே கருத்துரிமையை பறிக்கும் செயல்களை கைவிட்டு தோழர் கோவன் மீது போடப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தை திரும்பப்பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இவண்..
இரா.அதியமான்
ஆதித்தமிழர் பேரவை.

Tuesday, 27 October 2015

திண்டுக்கல் வேடசந்தூரில் அருந்ததியர் இளைஞர் மீது பறையர் சாதிவெறியர்கள் நடத்திய கொலை வெறித்தாக்குதலை ஆதித்தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கின்றது

திண்டுக்கல் வேடசந்தூரில் அருந்ததியர் இளைஞர் மீது பறையர் சாதிவெறியர்கள் நடத்திய கொலை வெறித்தாக்குதலை
ஆதித்தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கின்றது.october 23-2015
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
21.10.15 அன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள வெட்டல்நாயக்கன் பட்டியை சேர்ந்த அருந்ததியர் இளைஞர் பாலமுருகன் என்வருக்கும் பறையர் சாதிப்பெண் நதியா என்பவருக்கும் காதல் மணம் முடித்து வைத்த தமிழ்ப்புலிகள் அமைப்பின் மாவட்ட செயலாளர் போஸ் என்ற அருந்ததியர் இளைஞரை
வி.சி.கட்சியின் இளம்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் பிரபாகரன், புரட்சிப்பாரதம் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், ஏர்போர்ட்.மூர்த்தியின் பறையர் பேரவை இயக்க பொறுப்பாளர் பாக்கியராஜ்,
மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சார்ந்த அமல்ராஜ், பெரிய.பழனிச்சாமி, சின்ன.பழனிச்சாமி, எஸ்.பழனிசாமி, வேளாங்கண்ணி, முருகன், தன்ராஜ் ஆகிய பறையர் சாதி வெறியர்கள் ஒன்று சேர்ந்து கொலை செய்யும் நோக்கத்தோடு கொடூரமாக அரிவாளால் வெட்டி கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த வன்செயலை வன்மையாக கண்டிப்பதோடு அனைவரையும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும், அருந்ததியர் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என தமிழக காவல்துறையை ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.
காதல் திருமணத்திற்கு எதிராக சாதி இந்துக்களால் ஏவப்பட்ட குடிசைகள் எரிப்பு மற்றும் கோரப்படுகொலைகள்! இளவரசன் தொடங்கி கோகுல்ராஜ் வரை நீளும் அநாகரீகமான வன்செயல்களை கண்டித்து நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருபுறம் போராட்டங்களை நடத்திகொண்டிருக்கும் சூழலில்
விழுப்புரம் கச்சிராபாளயம் அருகே உள்ள கரடிச்சித்தூரில் பறையர் சாதிப்பெண் பரிமளா என்பவரை அருந்ததியர் இளைஞன் வீரன் என்பவர் காதலித்து இருவரும் ஊரைவிட்டு ஓடிப்போன காரணத்தால் பறையர் சாதிவெறியர்கள் அருந்ததியர் பெண்கள் நான்குபேரை மந்தையில் நிறுத்தி மனபங்கப்படுத்தி 19.வயது வெள்ளயம்மாள் என்பவரை படுகொலை செய்து 17.வயது நதியாவை மனநோயாளியாக்கியுள்ளது,
அதே விழுப்புரம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிநேயனூரை சேர்ந்த பறையர் சாதிப்பெண் கோகிலா என்பவரை அருந்ததியர் சாதிஇளைஞன் கார்த்திகேயன் என்பவர் காதலித்து மணம் முடித்த காரணத்தால் சொந்த சாதி கோகிலாவை கௌரவப்படுகொலை செய்தது,
தேனி சின்னமனூர் ஒன்றியம் காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்த 11.வயது அருந்ததியர் சிறுமி நந்தினியை மூன்று பறையர் சாதி இளைஞர்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கி படுகொலை செய்து, தனது பறையர் சாதித்திமிரை காட்டியது,
என நமக்கு தெரிந்த வகையில் அருந்ததியர் மக்கள் மீது இதுவரை பத்துக்கும் மேற்பட்ட வன்செயல்களை பறையர் சாதி வெறியர்கள் அருந்ததியர் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
அப்பேற்பட்ட வன்கொடுமைகளை கண்டிக்க வேண்டிய தலித் அமைப்பின் தலைவர்களும் பிற ஜனநாய சக்திகளும் தலித் ஒற்றுமை சிதையக்கூடாது என கண்டும் காணாமலும் விட்டதன் விளைவுதான் இப்போது வேடசந்தூர் அருந்ததியர் இளைஞர் மீதான பாய்ச்சல்
காதல் திருமணத்திற்கு எதிராகவும், தலித் மக்கள் மீது ஏவப்படும் சாதிஇந்துக்களின் வன்செயல்களையும் கண்டித்து நாம் அனைவரும் ஒருபுறம் போராடிக் கொண்டிருக்கையில், அம்பேத்கரின் கொள்கை வழியில் இயக்கம் நடத்தும் தலித் அமைப்புகளின் நிர்வாகிகளே இப்படிப்பட்ட வன்செயல்களில் ஈடுபடுவதுதான் நமக்கு மிகவும் கவலையளிக்கின்றது.
ஈழப்பிரச்சினையில் எவ்வளவோ அக்கரைகாட்டும் இவர்கள்! இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்? அரியானா ஃபரிபாத் மாவட்டம் சன்பேத் கிராமத்தில் ராஜ்புத் என்ற சாதிவெறியர்களால் இரண்டு தலித் குழந்தைகள் வீட்டோடு பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு
"நாய்கள்" மீது யாரோ கல்லெறிந்தால் அரசாங்கம் எப்படி பொறுப்பேற்க முடியும்! என திரோடு பேசிய மத்திய அமைச்சர் வி.கே.சிங் கூறியது போல, இவர்களும் சொல்லிவிட்டு ஒதுங்கிகொள்ள போகின்றார்களா? இல்லை சொந்த சாதி உணர்வை தாண்டி நடவடிக்கையில் இறங்க போகிறார்களா? என்ற கேள்விகள்தான் நமக்கு எழுகிறது.
அருந்ததியர் இளைஞர் மீது பறையர் சாதி வெறியோடு கொலைவெறித் தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் மீது சட்டப்படியும், கட்சிக் கட்டுப்பாட்டின் அடிப்படையிலும் உரிய நடவடிக்கை எடுப்பார் தோழர் திருமாவளவன் என நம்புகின்றோம். அதன் மூலம் தலித் ஒற்றுமை சிதையக்கூடாது எனவும் எதிர்பார்க்கின்றோம்.
இரா.அதியமான்
ஆதித்தமிழர் பேரவை.

தாத்ரி சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என பிரதமர் மோடி கூறியிருப்பது மதசார்பின்மைக்கும் எதிரானது ஆதித்தமிழர் பேரவை கண்டனம்.

தாத்ரி சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என பிரதமர் மோடி கூறியிருப்பது மதசார்பின்மைக்கும் எதிரானது ஆதித்தமிழர் பேரவை கண்டனம். October 15 - 2015

உத்திரபிரதேச மாநிலம், கவுதம புத்தா நகர் மாவட்டம் தாத்ரி அருகேயுள்ள பிசடா என்னும் கிராமத்தில் மாட்டுக்கறியை உண்டதற்காக இக்லாக் என்பவரை ஈவு இறக்கமின்றி இந்துமத வெறியர்கள் அடித்து படுகொலை செய்துள்ளனர்.
இந்த கோரச் சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் கடுமையாக கண்டித்துவரும் நிலையில் பிரதமர் மோடி அவர்கள், இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாக கண்டித்து அத்தகைய செயலில் ஈடுபட்டவர்களை கடும் நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என சம்மந்தப்பட்ட அரசிற்கு உத்தரவிடுவதற்கு பதிலாக,
இந்துமத வெறியர்களை மீண்டும் உசுப்பேத்திவிடுகின்ற விதமாக இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என மென்மையான அணுகுமுறையை கடைபிடித்திருக்கின்றார். இவரது இந்த அணுகுமுறை என்பது இந்தியாவில் வாழும் 130 கோடி மக்களுக்கும் பொதுவானவர் பிரதமர் என்ற நிலையை மறந்து ஒருதலைபட்சமாக செயல்படுகின்றார் என்பதையே காட்டுகின்றது. மேலும் இவர் ஆர் எஸ் எஸ் அமைப்பின் சீடனாக இருந்து அவர்களது ஆலோசனையின் பேரிலேயே தனது அரசை முன்னெடுத்து செல்லுகின்றார் என்பது, வெட்ட வெளிச்சமாகியிருக்கின்றது.

இந்நிலையில் சிவசேனா கட்சி மோடியின் இந்த மென்மையான அணுகுமுறையைக் கூட ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் இரண்டே நாளில் இரண்டாயிரம் இசுலாமியர்களை குஜராத்தில் கொன்றழித்த நரேந்திரமோடி இப்படி கண்டித்திருப்பது வேடிக்கையியிலும் வேடிக்கையானது என விமர்சனம் செய்துள்ளது.
மாட்டுக்கறி உண்பதை கடுமையாக எதிர்க்கும் சங்பரிவாரங்களாகிய இவர்களின் கொள்கை நோக்கம் பசுவை காப்பற்றும் ஜீவகாருண்ய நோக்கமல்ல இசுலாமியர்களை குறிவைத்து ஒடுக்குவதற்கு "பசுவதை" எதிர்ப்பு என்ற ஆயுதத்தை கையில் எடுத்து நியாயப்படுத்த முற்படுகின்றர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் சமீபத்தில்தான் பாரதிய ஜனதா கட்சியின் எம் எல் ஏ ஒருவர் மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் ஆலை ஒன்றை நடத்தியதற்காக கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மாட்டுக்கறியில் 30 விழுக்காடு இந்தியாவில் இருந்துதான் ஏற்றுமதியாகின்றன. இதை ஏற்றுமதி செய்யும் மூன்று பெரும் ஏற்றுமதியாளர்கள் பி ஜே பி யின் பின்னணியில்தான் தங்களது ஆலையை நடத்தி வருகின்றனர். இந்த மூவரில் ஒருவர் கூட இசுலாமியர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாட்டுக்கறியை உண்பவர்களை எதிர்கின்றோம் என்ற பெயரில் இசுலாமியர் எதிர்ப்பு என்ற அபாயகரமான அரசியலை முன்னெடுக்கும் பார்பனிய இந்துத்துவ சக்திகளை வேரடி மண்ணோடு வெட்டி எறிந்து நாட்டை சுடுகாடாக மாற்ற திட்டமிடும் இவர்களுக்கு எதிராக நாம் அனைவரும் கரம்கோர்க்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.
எந்த கட்சியோடு கூட்டணி வைத்தால் எத்தனை சீட்டு கிடைக்கும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கூட்டு சேராமல் மதநல்லிணக்கம், மதசார்பின்மை, மத எதிர்ப்பு, சாதிஎதிர்ப்பு, ஒடுக்கப்பட்டோர் பாதுகாப்பு மற்றும் சமூகநீதி பாதுகாப்பு என்ற அரசியல் புரிதலும் குறிக்கோளும் உள்ள அணியில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும்.
அதன்மூலம் இந்த மதவாத சக்திகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.
மதவெறி சாதிவெறியை முறியடிப்போம்!
மனிதநேயத்தை வளர்த்தெடுப்போம்!!
தோழமையுடன்
இரா.அதியமான்,
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.

மாநிலக் கல்லூரி மாணவர்களின் மீதான தமிழக காவல்துறையின் தடியடித்தாக்குதலை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது. நிறுவனர் அதியமான் அறிக்கை.

மாநிலக் கல்லூரி மாணவர்களின் மீதான தமிழக காவல்துறையின் தடியடித்தாக்குதலை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.
நிறுவனர் அதியமான் அறிக்கை.)ocober 14-2015
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்திய மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது தமிழக காவல்துறை காட்டுத்தனமான ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு தடியடித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த ஜனநாயக விரோதப்போக்கை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.
மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் போராடியபோது மதுக்கடைகளுக்கு பாதுகாப்பு கொடுத்து குடிகாரர்கள் கும்மாளம் போடுவதற்கு துணையாக நின்று தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியது போல்.
கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளி யுவராஜ் சரணடைய வந்தபோது கொலைகாரனுக்கு ஆதரவாக கூடிய சாதிவெறியர்களை கலைந்து போக வற்புறுத்தாமலும், அப்படி சட்டத்திற்கு புறம்பாக கூடிய சாதிவெறிக் கும்பலை கலைப்பதற்கு தனது தடியை தூக்காமலும் இருக்கும் தமிழக காவல்துறை யாருக்கு கைத்தடியாக செயல்படுகிறது.
அதிமுக அரசு பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் வழிப்பறி, கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளும் நாளும் பெருகியே வருகின்றது. அதற்கு தீர்வு காண துப்பில்லாமலும், கவுரவம் என்ற பெயரில் காதல் மணம்புரியும் தலித் இளைஞர்களை காட்டுத்தனமாக கழுத்தை அறுத்து, நஞ்சு கொடுத்து படுகொலை செய்கின்ற சம்பவங்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமை கொலை வெறியாட்டங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியாத தமிழக அரசு.
சாதிவெறியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வன்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டும் கானாமலும் இருப்பது, ஒடுக்கப்பட்ட உழைக்கின்ற மக்களுக்கு எதிரான அரசாகவே இந்த அரசு செயல்படுகின்றது என்பதைத்தான் மேலும் மேலும் இந்த சம்பவங்கள் உறுதிபடுத்துகின்றது.
இப்படி மாணவர்கள் மீது, மாற்றுத்திறனாளிகள் மீது, போராடும் மக்கள் மீது பொய் வழக்குகளை புனைந்து அடக்குமுறை சட்டங்களை ஏவிவிடுவது, எதிர்கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் மீது அவதூறு வழக்குகளை தொடுத்து அச்சுறுத்துவது என அதிகாரப் போக்கையே கடைபிடிடித்து வரும் இந்த அரசின் செயல்கள் வாக்களித்த மக்களுக்கு செய்யும் வஞ்சகமே அன்றி வேறு என்னவாக இருக்கமுடியும்.
இந்த நிலை இனியும் நீடித்தால் மாற்றத்திற்கான மக்கள் எழுச்சியை எத்தகைய அடக்குமுறையையும் கொண்டு தடுத்துவிடமுடியாது, தமிழக அரசிற்கு தக்கபாடம் புகட்டுவார்கள்.
மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது கண்மூடித்தனமான அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு தடியடி தாக்குதல் நடத்திய காவல்துறையை சார்ந்தவர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, அவர்கள் மீது கிமினல் வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றது.
ஒடுக்கப்பட்டோர்
விடுதலைப்பணியில்
இரா.அதியமான்,
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.

மதுரைவீரன் உண்மை வரலாறு புத்தகத்திற்கு தடைவிதித்த தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.

மதுரைவீரன் உண்மை வரலாறு புத்தகத்திற்கு தடைவிதித்த தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது. August 27-2015
"'"'"'"""'''"''''''''''''''''''''""'''''''''''""'""""""""'"'''"'""''''''''
குழந்தை ராயப்பன் எழுதி ஆதித்தமிழர் பேரவை சார்பில் வெளியிட்டுள்ள "மதுரைவீரன் உண்மை வரலாறு" புத்தகத்தை தடை செய்து தமிழக அரசு அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்க தக்கது மதுரைவீரனின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மை செய்திகளை உலகறிய செய்தமைக்கு தமிழக ஜெயலலிதா அரசு ஏன்? அஞ்சுகிறது.
மதுரைவீரனாக எம் ஜி ஆர் நடித்து அருந்ததியர் மக்களை இத்தனை காலம் ஏமாற்றியது போதாதா! இனி மேலும் ஏமாறுவதற்கு அருந்ததியர்கள் ஏமாளிகள் அல்ல!
உண்மையான மதுரைவீரனின் வாரிசுகளாய் எழுவோம்! போலியான மதுரைவீரனின் மயக்கத்திலிருந்து விடுபடுவோம்!!

கழிவுநீர் தொட்டி அடைப்பை நீக்க கட்டாயப்படுத்தி, இருவர் உயிரிழக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.

கழிவுநீர் தொட்டி அடைப்பை நீக்க கட்டாயப்படுத்தி, இருவர் உயிரிழக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது. October 15 -2015
""""""""""""""""""""""""""""""""""""""
மதுரை ஆரப்பாளையம் அருகில் உள்ள கழிவுநீர் வெளியேற்றும் (லிப்ட்டில்) கிடங்கின் 20 அடி ஆழத்தில் உள்ள கழிவடைப்பை நீக்க விஸ்வநாதன், முனியாண்டி ஆகிய இரண்டு ஒப்பந்த தூய்மைத் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி பணிசெய்ய வைத்த காண்ட்ராக்டர் தாஸ் என்பவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் மாநாகராட்சி நிர்வாகத்தையும் காவல்துறையையும் வலியுறுத்தி வருகின்றது.
ஆனால் சம்மந்தப்பட்ட காண்ட்ராக்டர் தாஸ் என்பவர் அதிமுக அமைச்சர் செல்லூர்.ராஜு அவர்களின் உறவினர் என்பதனால், நிர்வாகங்கம் சட்டப்படி புரிய வேண்டிய கடமையை புறக்கணித்து குற்றவாளிக்கு சாதகமாக நடந்து வருவது மாபெறும் கண்டனத்துக்குறியது.
மனிதக் கழிவை மனிதன் அகற்றுவதற்கு தடைவிதித்து 1993.ல் சட்டம் இயற்றப்பட்டு அந்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் தொடுத்த வழக்கின் காரணமாக கடந்த 2013 செப்டம்பர் 10 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கின்றது.
அந்த தீர்ப்பின் அடிப்படையில் கட்டாயப்படுத்தி கழிவுகளை அகற்ற வற்புறுத்தும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிட வேண்டும் எனவும், 1993 முதல் விஷ வாயு தாக்கி பலியானவர்களை கணக்கெடுத்து அவர்களது கும்பத்தாருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், கையால் மலமள்ளும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளிகளின் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
அப்படி தீர்ப்பில் கூறப்பட்டுள்ள அனைத்து பரிந்துரைகளையும் மாநில அரசுகள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரையும் வழங்கியுள்ள நிலையில் அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டதோடு,
ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொண்டதிற்கிணங்க. கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட தூய்மை தொழிலாளர்களுக்கான நலவாரியத்தையும் முடக்கி வைத்திருப்பது, தூய்மை தொழிலாளர்கள் மீதான தமிழக அரசின் அக்கறையின்மையையே காட்டுகின்றது.
இந்நிலையில் 1993 முதல் இன்றுவரை விஷ வாயு தாக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தமிழகத்தில் மட்டும் மனித உரிமைகள் அமைப்புகள் எடுத்திருக்கும் புள்ளிவிபர கணக்கு சொல்வது சுமார் 283 பேர் என்று.
நிலைமை இப்படியிருக்க, விவசாயிகள் சேற்றில் 'கால்' வைத்தால்தான் மனிதன் சோற்றில் 'கை' வைக்கமுடியும் என மேடைக்கு மேடை முழங்கும் அரசியல் வாதிகள், சோற்றை அள்ளும் கையாலேயே! மலத்தை அள்ளும் இந்த மனிதனின் அவலத்தைப்பற்றி பேசுவதற்கு மனமில்லாமல் மௌனம் சாதிப்பது மிகவும் வேதனையளிக்கின்றது.
இந்த லட்சணத்தில் இந்தியாவில் இன்னும் 11.5 லட்சம் தொழிலாளிகள் கையால் மலத்தை அள்ளி தலையில் சுமக்கின்றனர் என்ற புள்ளி விபரத்தையும் மத்திய அரசே வெக்கமில்லாமல் வெளியிட்டுள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோயில் கட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட கழிவறை கட்டுவதற்குதான் முக்கியத்துவம் கொடுப்போம் என்று ஆட்சியை பிடித்த மோடி அரசு, தற்போது தூய்மை இந்தியா நாடகத்தை நடத்தி நடிகர் நடிகைகளையும் களத்தில் இறக்கி விட்டு வேடிக்கை காட்டுகின்றது. அதற்கான விளப்பரத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாயையும் வீணாக செலவு செய்கின்றது.
மோடி அறிவித்திருக்கும் இந்த அறிவிப்பு ஒரு மோசடி அறிவிப்பு என்று, அறிவிக்கப்பட்ட அதேநாளில் லண்டன் பிபிசி வானொலிக்கு பேட்டி ஒன்றை ஆதித்தமிழர் பேரவை கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
காரணம் உண்மையான தூய்மை இந்தியாவை நாம் காண விரும்பினால் முதலில் தூய்மை பணிபுரிவோரின் நிலைகளைப்பற்றிய விரிவான ஆய்வுகளை நடத்தி அதனடிப்படையில் அவர்களின் மறுவாழ்விற்கு ஆவன செய்வதோடு, கையால் மலமள்ளுவதை தடுத்திட நவீன எந்திரங்களை இறக்குமதி செய்து அதன் மூலமாக கழிவுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தேன்.
எனவே ஆளும் அரசுகள் வெறும் விளம்பர அரசியல் நடத்தாமல் உண்மையாகவே ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசியல் தலையீடு இல்லாமல் சட்டத்தையும், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையும் முழுமையாக நடைமுறைப்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு.
மதுரையில் விஷ வாயு தாக்கி பலியான இருவரின் குடும்பத்தாருக்கு தாமதமின்றி தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதோடு, கட்டாயப்படுத்தி கழிவடைப்பை நீக்கச்சொல்லி வற்புறுத்திய ஒப்பந்ததாரர் தாஸின் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.
விஷ வாயு தாக்கி உயிரிழந்த விஸ்வநாதன் மற்றும் முனியாண்டியை இழந்து வாடும் அவர்களது கும்பத்தாருக்கு ஆதித்தமிழர் பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறது.
தோழமையுடன்,
இரா.அதியமான்,
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை