அண்மையச்செய்திகள்

Friday, 29 December 2017

தை திருநாளில் கொண்டாடும் தமிழா் பண்பாட்டு விழா நிகழ்வு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆதித்தமிழா் பேரவை
சேலம் மாவட்டம் மேற்கு
சாா்பாக தை திருநாளில் கொண்டாடும்
தமிழா் பண்பாட்டு விழா நிகழ்வு குறித்து
ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
உள்ளது.
தலைமை :
மாவட்ட செயலாளா் : இராதாகிருஷ்ணன்
மாவட்ட து.செயலாளா் :ரவி சுப்பிரமணியம்
மாவட்ட தலைவா் :மாாிமுத்து
மாவட்ட து.தலைவா் :ஶ்ரீதா் முன்னிலையில்
மற்றும் நகர,ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

நாள் : 29.12.2017
இடம் : எடப்பாடி


24.12.17.T.கல்லுப்பட்டி ஒன்றியம் பேரையூரில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

மதுரை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
********************************
24.12.17.T.கல்லுப்பட்டி ஒன்றியம் பேரையூரில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தீர்மானங்கள்.
**********************
1.ஜனவரி 28 உசிலம்பட்டியில் அய்யா அவர்களை அழைத்து கருத்தரங்கம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
2.ஒன்றியங்கள் முழுவதும் கருத்தரங்கம் பற்றிய
சுவர் விளம்பரம்,பதாகைகள்,சுவரொட்டி மூலம் விளம்பரங்களை அதிகப்படுத்த வேண்டும் எனவும்.
3.ஒன்றியங்கள் முழுவதும் அதிக அளவில் மக்களை திரட்டுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திசம்பர் 24 இரங்கல் நிகழ்வில் பேரவைத் தலைவர் பங்கேற்பு!

திசம்பர் 24
இரங்கல் நிகழ்வில்
பேரவைத் தலைவர் பங்கேற்பு!
"""""""""""""""""""""""""
கோவை மாநகரப் பொறுப்பாளர் முனுசாமி அவர்கள் தாயாரும், புறநகர் மாவட்ட பொறுப்பாளர் தாமரைவீரன் அவர்கள் தம்பியும் கடந்த வாரம் நோய்வாய்ப்பட்டு மருத்துவமையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அந்நேரம், தலைவர் அவர்கள் இராமநாதபுரம், சிவகங்கை, சென்னை, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட நிகழ்வுகளில் பங்கேற்று இருந்ததனால், அவர்களது இறுதி நிகழ்வில் பங்கேற்க இயழவில்லை.. எனவே இன்று அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களது, குடும்பதாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், மறைந்தவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பொதுச்செயலாளர் ஆ.நாகராசன், த.நி.செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன், தி.செ.கோபால் ஆகியோரும் இரங்கல் நிகழ்வுகளில் பங்கேற்றனர்.ஆதித்தமிழர் பேரவையில் மீண்டும் இணைத்து கொண்ட தோழர்கள்

திசம்பர் 24
தந்தை பெரியார்
வீரவணக்க நாளில்..
கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியம் செம்மேடு பகுதியை சேர்ந்த செயல்வீரர்கள், தாங்கள் களப்பணி செய்த முகாமிலிருந்து விலகி பேரவைத் தலைவர் அய்யா அதியமான் தலைமையில் மீண்டும் தாயகம் திரும்பினர்.
தாயகம் திரும்பிய... நந்தன்தம்பி, துருவன், சிவா, சுரேசு, வெற்றிவேல், சுரேசுகுமார், மலரவன், சதீசு, குணசேகரன், அருணகிரி, தமிழ்முருகன் உள்ளிட்ட தோழர்களை பேரவை தலைமை வாஞ்சையோடு வரவேற்கிறது.
பொதுச்செயலாளர் நாகராசன், த.நி.செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன், தி.செ.கோபால், சோழன், சின்னச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திசை மாறியவர்களுக்கு!
திசை காட்டும் கருவி அதியமான்!
-நாகராசன்.

திசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாளில்.. ஆதித்தமிழர் பேரவை கோவை......

திசம்பர் 24
தந்தை பெரியார்
நினைவு நாளில்..
ஆதித்தமிழர் பேரவை
கோவை......
தலைமை அலுவலகத்தில்!

தந்தை பெரியார் திரு உருவப்படத்திற்கு பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
பொதுச்செயலாளர் நாகராசன், த.நி.செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன், தலைமைக் குழு உறுப்பினர் கோபால், தூ.தொ.து செயலாளர் சோழன், திருப்பூர் மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் சின்னசாமி, கோவை செம்மேடு நந்தன்தம்பி, துருவன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
Thursday, 21 December 2017

திராவிட இயக்கத்தை அழிக்கவும், சிதைக்கவும் பார்ப்பனிய சக்திகளால் பின்னப்பட்ட சதிவலைகளை அறுத்தெரிந்து தமிழகத்தில் தலை நிமிர்ந்து நிற்கிறது திமுக -- 2ஜி வழக்கு தீர்ப்பு குறித்து ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் அறிக்கை

2 ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை!
"""""""""""""""""""""""""
திராவிட இயக்கத்தை அழிக்கவும், சிதைக்கவும் பார்ப்பனிய சக்திகளால் பின்னப்பட்ட சதிவலைகளை அறுத்தெரிந்து தமிழகத்தில் தலை நிமிர்ந்து நிற்கிறது திமுக
""""""""""""""""""""""""""""""""
திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க வேண்டும் சிதைக்க வேண்டும், என்ற தீய எண்ணத்தோடு, 2009 ஆம் ஆண்டு புனையப்பட்ட 2ஜி அலைக்கற்றை வழக்கில் இன்று தில்லி தனி நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வெளியிட்டுள்ளது, இந்த தீர்ப்பை எண்ணி சமூகநீதி மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்,

இவ் வழக்கு பெரிய அளவில் ஊதிப் பெரிதாக்கி சித்தரிக்கப்பட்டவை. பொய்க் கணக்குகளை எல்லாம் உண்மை போலக் காட்டி வானத்திற்கும் பூமிக்குமாக எகிறிக் குதித்து விளம்பரம் செய்து, திமுக மீது களங்கத்தை ஏற்படுத்த பார்பனிய சக்திகள் எவ்வளவோ முயன்றார்கள்.

புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார் கொள்கைகளை உள்வாங்கிய பார்பனிய எதிர்ப்பாளராகவும், பகுத்தறிவுச் சிந்தனையாளராகவும், சட்டம் படித்த அறிவாளியாகவும் விளங்கிய ஆ.ராசா வை.  தாழ்த்தப்பட்டனுக்கு இவ்வளவு அறிவாற்றலா என்ற ஆதிக்க எண்ணதோடும், கலைஞரின் குடுபத்தில் கனிமொழி, ராசாத்தி அம்மாள் உள்ளிட்டவர்களை இணைத்து தி.மு.க வை அழிக்க வேண்டும் என்பதற்காவே திட்டமிட்டு புனையப்பட்டது இவ் வழக்கு.

ஆனால் நிரூபிக்கத் தேவையான முகாந்திரம் இல்லாததால், இன்றைக்கு வழக்கிலிருந்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட அனைவருமே குற்றமற்றவர்கள் என தில்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இல்லாத ஒன்றைச் ஊதி பெரிதாக்கி, தனக்கு சாதகமான ஊடகங்கள் மூலம் பூதாகரப்படுத்தி, மத்தியில் ஆட்சியைப் பிடித்த பா.ச.க மோடி அரசு, பதவியேற்ற நாள் முதல் பண மதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, நீட், என்று மக்களை பல்வேறு நெருக்கடிகளில் தள்ளியதோடு, தமிழகத்தின் தன்னாட்சி உரிமைகளையும் பறித்து, ஆளுனர் அதிகாரத்தின் கீழ் தமிழகத்தில் மறைமுக ஆட்சியை நடத்துகிறது. எதிர்த்து நிற்க வேண்டிய அதிமுக வோ பா ச க வுக்கு பல்லக்கு தூக்குகிறது.

சமூக நீதியின் பிறப்பிடமான பெரியார் பிறந்த தமிழக மண்ணில், அறிஞர் அண்ணா தலைவர் கலைஞரால் பின்பற்றி வளர்க்கபடும் சமூகநீதிக் கோட்பாட்டை சிதைத்து, எப்படியும் தமிழகத்தில் கால் ஊன்றி விடலாம் என்று பா.ச.க மனப்பால் குடித்தது, அதற்கு சமூக நீதியை கட்டிக் காக்கும் உண்மையான திராவிட இயக்கத்தை அழிக்க வேண்டும் என்று திமுக மீது புனையப்பட்ட பொய் வழக்கு இன்று பொடிப் பொடியாகிப் போனது.

இந்த தீர்ப்பு பார்பனிய சக்திகளுக்கும், துணை போகும் எடப்பாடி பழனிச்சாமி அரசிற்கும் பெரிய சம்மட்டி அடி, இந்த அடி தொடரும் தளபதி மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி விரைவில் மலரும், அதற்காக ஆதித்தமிழர் பேரவை எப்போதும் துணை நிற்கும்.

இரா.அதியமான்
ஆதித்தமிழர் பேரவை
21.12.17

Tuesday, 19 December 2017

நெல்லையில்... களக்காடு வருகை தந்த அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் நடந்த மக்கள் சந்திப்பு

நெல்லையில்... களக்காடு வருகை தந்த அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் நடந்த மக்கள் சந்திப்பு
18-12-17

வீடியோஆர்கேநகர் தேர்தல் பிரச்சாரம் முடிந்தது இன்று முழுவதும் தளபதியுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஆதித்தமிழர் பேரவையினர்

ஆர்கேநகர் தேர்தல் பிரச்சாரம் முடிந்தது
இன்று முழுவதும் தளபதியுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஆதித்தமிழர் பேரவையினர்ஆர்கேநகரில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்

ஆர்கேநகரில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்

19-12-2017 சென்னை.
----------------------------------------
இறுதி கட்ட பிரச்சாரம்.
-------------------------------------
நாளை மறுநாள் சென்னை இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இன்றுடன் பிரச்சாரம் முடிகிறது.

இதையொட்டி இன்று தளபதியார் அவர்ளுடன் தோழமைக் கட்சிகளோடு நமது *ஆதித்தமிழர் பேரவை* த் தோழர்கள் தண்டயார் பேட்டை வார்டு 41,பகுதி 10 நேருநகர். துர்கா நகர். EB காலனி. எழில் நகர் போன்ற பகுதிகளில் திமுக வேட்பாளர் மருது கணேசன் அவர்களை வெற்றிபெறச் செய்திட இறுதி கட்ட பிரச்சார பரப்புரையில்....

தோழர் சுச.ஆனந்தன் (தலைமை நிலைய செயலாளர்)/ தோழர் தமிழரசு (மாநில துணைப் பொதுச் செயலாளர்/ தோழர் இரா.செல்வச் சீமான் (மாநில இளைஞர் பேரவைச் செயலாளர்) / தோழர் பெரு.தலித்ராஜா (தூய்மைத் தொழிலாளர் பேரவைச் செயலாளர்) / தோழர் அர்ஜீனன் (திருப்பூர் மாவட்டச் செயலாளர்) / தோழர் காளிராஜ் (திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர்) / தோழர் சுந்தரம் (திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர்) / தோழர் கொங்கு யுவராசா (ஈரோடு தெற்கு மாவட்ட நிதிச் செயலாளர்) / தோழர் சரத்குமார் (திண்டுக்கல் மாவட்ட மாணவர் பேரவை செயலாளர்) / தோழர் கு.காமராஜ் (பள்ளிபாளையம் ஒன்றியச் செயலாளர் - நாமக்கல் மேற்க்கு மாவட்டம்) / தோழர் க.செல்லமுத்து (பள்ளிபாளையம் ஒன்றித்தலைவர் - நாமக்கல் மேற்கு மாவட்டம்) போன்றோர்கள் பிரச்சாரத்தில் தொடர்ந்து இருந்து வருகின்றனர்.
-------------- ------------------------

- தலித்ராஜா.
*ஆதித்தமிழர் பேரவை*

நெல்லை களக்காடு கிளையில் கொடியேற்றி பெயர்பலகை திறந்து வைத்தார் அய்யா அதியமான்

நெல்லை களக்காடு கிளையில் கொடியேற்றி பெயர்பலகை திறந்து வைத்தார் அய்யா அதியமான்

நெல்லையில் களக்காடு கிளையில் கொடியேற்றி பெயர்பலகை திறந்து வைத்தார் அருந்ததியர்களின் பாதுகாவலர்
அய்யா அதியமான்
நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த களக்காடு ஒன்றிய செயலாளர் ம.அன்புதோழன் அவர்களுக்கும் களக்காடு தோழர்களுக்கும் அய்யா அதியமான் அவர்கள் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்

வீடியோ

நெல்லையில் அய்யா அதியமான் அவர்களை மக்கள் போராட்டக்குழு தோழர்கள் வரவேற்றனர்

நெல்லை மாவட்டம் களக்காட்டிற்கு வருகை தந்த அய்யா அதியமான் அவர்களை மக்கள் போராட்டக்குழு ஒருங்கினைப்பாளர் அண்ணன் நெல்சன் அவர்களும் தோழர்களும் மரியாதை நிமித்தமாக பொன்னாடை போர்த்தி வரவேற்ற போது

Monday, 18 December 2017

நெல்லையில் தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார் அய்யா அதியமான்

நெல்லையில் தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார் அய்யா அதியமான்

தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு வாழும் பெரியார் அய்யா அதியமான் அவர்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்