அண்மையச்செய்திகள்

Thursday 29 November 2018

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்த மத்திய பா.ச.க அரசுக்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம் நிறுவனர் அதியமான் அறிக்கை


காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மத்திய நீர்வளத்துறை மூலம், பாசிச பா.ச.க அரசு அனுமதி அளித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் வரத்தை கர்நாடக அரசு திடீர் என குறைத்ததற்காக தமிழக விவசாயிகள் கொந்தளிப்பின் பாதிப்பை கடப்பதற்குள¸; அடுத்த கணமே மத்திய அரசு இவ்வாறு மேகதாதுவில் அணைகட்ட அனுமதி தந்திருப்பது¸ ஏற்கனவே கஜா புயலால் வாடும் தமிழக மக்களை மேலும் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகம்¸ கர்நாடகா¸ கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நீர் பங்கீடு வழக்கில் உச்சநீதி மன்றம் பிறப்பித்த உத்தரவின்படி¸ மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைத்துள்ளது. மேற்கண்ட நான்கு மாநிலத்தில் புதிய அணை கட்டுவதாக இருந்தால்¸ அதை பரிசீலித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மட்டுமே உள்ளது என தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையெல்லாம் மீறி கர்நாடக அரசு நம் தமிழக எல்லை மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை அசுர வேத்தில் செய்வதற்கான உள்நோக்கமாக¸ 400 மெகாவாட் நீர்மின் நிலையம் அமைத்து கார்ப்பரேட்டுகளுக்கு மின்சாரம் தாரை வார்க்கவே என கருதப்படுகிறது.
வெறுமனே கரப்சன் கலெக்சன் என செயல்படும் தமிழக அரசு மத்திய அரசுக்கு புறா விடு தூது போல கண்துடைப்புக்காக கடிதம் எழுதி காலம் கடத்துகிறது. ஆனால் கர்நாடக அரசோ தனது மாநில எம்.பிக்களை அழைத்து சென்று பிரதமரை சந்தித்து அனுமதி பெற்றுள்ளது. நமது மாநில எம்.பிக்களை அழைத்து தமிழகம் மத்திய அரசுக்கு அழுத்தம் தராதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. தமிழகம் இந்தாண்டும் உடலுறுப்பு தானத்தில் நாட்டிலேயே முதலிடம் பிடித்தது சாதனைதான். அதேசமயம் மாநிலத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைப்பதிலும் முதலிடமாக இருப்பது வேதனையே.
இறுதியாக¸ தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்வது போல தமிழக அரசு உடனடியாக உச்சநீதி மன்றத்தை நாடவேண்டிய தருணம் இது. மேலும் இது போன்ற இரு மாநில பிரச்சனைகளில் மத்திய அரசு மிகுந்த கவனத்தோடு கையாள வேண்டும். இப்படிப்பட்ட செயல்கள் இரு மாநில மக்களிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கிவிடும். இத்திட்டத்தை அனுமதித்த மத்திய பா.ச.க அரசை ஆதித்தமிழர் பேரவை மிக வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இத்திட்டத்தின் அனுமதியை உடனடியாக திரும்பப் பெறுமாறு ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.
இவண்
இரா.அதியமான்
நிறுவனர்/தலைவர்
ஆதித்தமிழர் பேரவை .
கோவை, 28.11.2018

No comments:

Post a Comment