அண்மையச்செய்திகள்

Wednesday 29 April 2020

மே 4 ம் தேதி தூய்மை தொழிலாளர் பேரவை நடத்தும் தமிழகம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் !

விழிப்பாய் இரு"
"நெருப்பாய் எழு"
தூய்மை தொழிலாளர் தோழர்களே!
(4/5/2020) வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பீர்.!
வெற்றி பெற செய்வீர்.!!
வணக்கம்.
தூய்மை தொழிலாளர் தோழர்களே.
கொரோனா பெரும் தொற்றுக்கு எதிராக மக்களை காக்கின்ற மாபெரும் பணியை சிறப்பாக செய்து வருகிறோம்.
கடந்த காலங்களில் "சுனாமி", "வார்தா", "ஒக்கி புயல்" போன்ற பேரிடர் காலங்களிலும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி மிகச் சிறப்பாகவே நாம் பணிபுரிந்து இருக்கின்றோம்.
குறிப்பாக "சுனாமி"யில் இறந்த மனித உடல்களை தொடுவதற்கு அஞ்சிய போது தூய்மை தொழிலாளர்கள் அஞ்சாமல் அந்த உடல்களை மனிதநேயத்தோடு நல்லடக்கம் செய்தோம்.
இந்த செயலை அகிலமே பாராட்டியது.
ஆனால் "கொரோனா" அவ்வாறு இல்லை ஏனென்று சொன்னால் இந்த நோய் மனிதர்கள் தொடுவது "இருமல்", எச்சிலின் மூலமாக பரவுகிறது.
தூய்மை தொழிலாளர்கள் ஆகிய நாம் வழக்கம் போல எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி செய்துவருவது மிகுந்த ஆபத்தானது.
சூரியன் அஸ்தமிக்காத நாடு என்ற மமதை கொண்டவர்களும்
உலக வல்லரசு என்று கொக்கரித்த நாடுகளும் இன்றைக்கு எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்து போய் இருப்பதை நாம் அறிவோம்.
உலகத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்துக்கு அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர், 25க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்த நோய்க்கு எதிராக இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும்.
மக்களைக் காக்கின்ற அதே வேளையில் நம்மையும் நாம் பாதுகாக்க வேண்டும், இந்த ஆபத்தான பணியில் ஈடுபட்டு இருக்கக்கூடிய தூய்மை தொழிலாளர்களுக்கு "இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்" வழிகாட்டுதலின் படி பாதுகாப்பான உடைகள் தரமான "முககவசம்", "கையுறைகள்" "காலணிகள்", "தலைகவசம்", உள்ளிட்டவைகள் வழங்கவேண்டும்.என்று பலமுறை தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும், ஒரு சில இடங்கள் தவிர்த்து, இன்றுவரை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை, என்பது வேதனையிலும் வேதனை.
தமிழகத்தில் உள்ள தூய்மை தொழிலாளர்களில் 99 விழுக்காடு பட்டியல் இன மக்களே.
எனவே தமிழக அரசும், அரசு அதிகாரிகளும் மேற்கண்ட உபகரணங்கள் வழங்குவதில் தொழிலாளர்களை பாதுகாப்பதில் மெத்தனமாகவே செயல்பட்டு வருகிறது.
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுகவின் தலைவருமான "மாண்புமிகு தளபதி" அவர்களின் தலைமையில் காணொளி மூலம் நடைபெற்றஅனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம், நிறைவேற்றியும் கூட , இந்த அரசு செவிசாய்க்கவில்லை.
எனவே.கொரானா வில் இருந்து நம் உயிரை காக்க.
1)"இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்" வழிகாட்டுதலின் படி, குரானா பெரும் தொற்று ஒழிப்பு பணியில் ஈடுபட்டு இருக்கக்கூடிய "தூய்மை தொழிலாளர்களுக்கு" தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.
2)அனைத்து தூய்மை தொழிலாளர்களுக்கும "பி.சி.ஆர்" என்று சொல்லப்படுகிற மருத்துவ பரிசோதனை உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
கொரோனா ஒழிப்பிற்காக ஊரடங்கு துவங்கிய காலம் முதல் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும வழங்காத தமிழக அரசை கண்டித்தும்.
பெரும் தொற்று ஒழிப்பில் பணியாற்றும் முன்னணி படை வீரர்களான தூய்மை தொழிலாளர்களை பாதுகாத்திட,
வருகின்ற 4-5-2020 அன்று தமிழகம் முழுவதும் ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவையின் சார்பில் "ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்" நடைபெற உள்ளது.
இந்தப் பேரிடர் காலத்தில் வேலை நிறுத்தம் என்பது வருத்தத்திற்குரியது, தான் ஆனாலும் செயல்படாத இந்த அரசை செயல்பட வைக்க வேறு வழி இல்லை,
மேலும் இந்தப் போராட்டத்திற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரவு தருவார்கள் எனவே அச்சப்படத் தேவையில்லை.
எனவே தொழிலாளர் தோழர்களே இந்த வேலைநிறுத்தத்தில் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும், வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று உங்களை தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.!
"தூய்மை தொழிலாளர்களின் உயிரை காக்க உரிமை மீட்க"
"விழிப்பாய் இருப்போம்.!"
"நெருப்பாய் எழுவோம்.!!


தோழமையுடன்
இரா.அதியமான்.
ஆதித்தமிழர் பேரவை

No comments:

Post a Comment