அண்மையச்செய்திகள்

Tuesday, 1 August 2017

வறுமைக் கோட்டுக்கு கீழாக உள்ள மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலை கைவிட்டு பழைய முறையிலேயே ரேசன் பொருட்கள் வினியோகிக்க வேண்டும்! தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.

வறுமைக் கோட்டுக்கு கீழாக உள்ள மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலை கைவிட்டு பழைய முறையிலேயே ரேசன் பொருட்கள் வினியோகிக்க வேண்டும்!
தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.
""""""""""""''"'"'"""""""""""""
நிறுவனர், அய்யா அதியமான் அறிக்கை
""""""""""""""""""""""""""""
நியாயவிலைக் கடைகளில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு புதிய கட்டுப்பாடுகள் பலவற்றை விதித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இது ஏழை எளிய நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் செயலாகும். ஏற்கனவே விலைவாசி ஏற்றத்தால் விழி பிதுங்கி கிடக்கும் நிலையில், மேலும் மக்களை பட்டினிச்சாவுக்கு அழைத்துச் சென்று படுகுழியில் தள்ளும் நிலையை தமிழக அரசு உருவாக்கி வருகிறது, எனவே, ரேசன் வினியோகத்தில் தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடு விதிகளை உடனடியாகத் திரும்பப் பெற்று பழைய முறையையே பின்பற்ற வேண்டுமென ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.

இது ஒருபுறமிருக்க மேலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையை மாதம்தோறும் நான்கு ரூபாய் உயர்த்துவதென்றும், சிலிண்டருக்கான மானியம் ரத்து செய்யப்படுமென்றும் மத்திய அரசின் அறிவிப்பு ஆணை வெளியாகியுள்ளன. இதை உறுதிபடுத்தும் விதமாக மத்திய அமைச்சரின் விளக்கமும் அமைந்துள்ளது, அவரது அறிவிப்பின் சாரத்தை பார்த்தால் மானியத்தை படிப்படியாக குறைத்து பின் முற்றிலும் ரத்து செய்யப்படும் என்பதையே காட்டுகிறது,
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் விலை மூன்று ஆண்டுகளில் குறைந்துள்ள நிலையில் எரிவாயுவின் விலையை உயர்த்தும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப சுரண்டலுக்கே வழிவகுக்கும். மத்தியில் ஆளும் பாஜக அரசின் இந்த மக்கள் விரோத அறிவிப்பை வன்மையாக கண்டிப்பதோடு, இதற்கு தமிழக அரசு தனது எதிர்ப்பை தெரிவித்து மானியத்தை பாதுகாக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வற்புறுத்துகிறது.
இவண்
இரா.அதியமான்
நிறுவனர்,
ஆதித்தமிழர் பேரவை.
1.8.2017, கனடா

No comments:

Post a Comment