அண்மையச்செய்திகள்

Thursday 3 August 2017

கடலூர் மாவட்டம், திட்டக்குடி தருமக்குடிக்காடு அருந்ததியர் சிவக்குமார் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரையும், காவல் கண்காணிப்பாளரையும் சந்தித்து மனுவளித்த பின் செய்தியாளர்களை சந்தித்து கீழ்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி தருமக்குடிக்காடு அருந்ததியர் சிவக்குமார் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரையும், காவல் கண்காணிப்பாளரையும் சந்தித்து மனுவளித்த பின் செய்தியாளர்களை சந்தித்து கீழ்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
1) குற்றவாளி விசிக நிர்வாகி அலெக்சாண்டர் அவரது தம்பி உள்ளிட்ட அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
2) சிக்கலுக்குறிய 64 செண்ட் நிலத்தை அருந்ததியர் மக்கள் பயன்பாட்டுக்கே ஒதுக்கவேண்டும்.
3) குற்றவாளிகளுக்கு பக்கபலமாக இருக்கும் திட்டக்குடி காவல் துணை ஆய்வாளர் வேம்பு DSP பாண்டியன், மற்றும் அறநிலைத்துறை, வருவாய்துறை அலுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4) காவதுறை விசாரணை அதிகாரி வேறு ஒருவர் நியமிக்க வேண்டும்.
5) சிவக்குமாரின் குடும்பமான மனைவி இரண்டு மகள்கள், ஒரு மகனின் வாழ்வு மற்றும் கல்வி உத்திரவாதத்திற்கு இழபீடும் அரசுப் பணியும் வழங்க வேண்டும்.
6) அருந்ததியர் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும்,
7) சிவக்குமார் உடற்கூறு ஆய்வை 2 க்கு மேற்பட்ட மருத்துவக்குழு கொண்டு நடத்திட வேண்டும், ஆய்வின் போது, உறவினர் ஒருவரும் அமைப்பு தோழர் ஒருவரும் உடனிருக்க வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஆட்சியரிடமும், காவல் கண்காணிபாளரிடமும் மனுவளித்து விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.
பொதுச்செயலாளர், உடன்
கடலூர் மாவட்ட செயலாளர் பக்கிரி, ஜெயராமன், முருகன்,
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வீரமுருகன், தலைவர் ராசாத்தி, தமிழரசி,
திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் அர்ஜுணன்,
திருப்பூர் வடக்கு மாவட்டம் அமைப்பு செயாலார் வீரகுமார், முருகன்,
மதுரை மாவட்ட துணைத்தலைவர் தலித்.ராஜா,
சேலம் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் மாதேசு, உள்ளிட்ட நிர்வாகிகள் பங்க்கேற்றனர்.
____________________
செய்தி.
பொதுச்செயலாளர்
3.8.2017




No comments:

Post a Comment