அண்மையச்செய்திகள்

Monday, 7 March 2016

தொடங்கட்டும் மீண்டும் ஒரு வரலாறு மீட்பு போர். - ச.சு.ஆனந்தன்.

தொடங்கட்டும் மீண்டும் ஒரு வரலாறு மீட்பு போர்.
"""""""""""""""""""""""""""""""""
ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் பண்பாட்டையும் வரலாற்றையும் அழித்தால் போதும்.
...................
சாக்கிய இனத்தின் வழித்தோன்றல்களான மண்ணின் மைந்தர்கள் பார்பனியத்தை ஏற்க மறுத்து புத்திஸ்ட்டுகளாக இருந்ததால், சக்கிலியர் என்றும், மாதாரி என்றும், பகடைகள் என்றும் பல்வேறு கூறுகளாக சிதறடிக்கப்பட்டனர்.
கிராமப்புறங்களில் பண்ணை அடிமைகளாக நகர்ப் புறங்களில் மலம் அள்ளும் தோட்டிகளாக ஆக்கப்பட்டனர். மாறக பார்பனியத்திற்கு பயன்பட்டவர்கள் சூத்திரர்கள் ஆக்கப்பட்டு அதிகாரம் செலுத்தும் ஆளும் வர்க்கமாக மாறி அதை அப்படியே இன்றளவும் தக்கவைத்து வருகின்றது.
அரசனே ஆனாலும் அறம் தவறி மக்களுக்கு எதிராக நின்ற போது மக்கள் பக்கம் நின்ற மதுரைவீரனை மாறுகால் மாறுகையை வெட்டி வரலாற்றை திரித்து சூழ்ச்சி வலை பின்னிய பார்பினியத்தின் எதிர் குறியீடாக களத்தில் நின்று போராடிய "வீரனை" கடவுளாக மாற்றி கருவறைக்குள் அடைத்தனர்.
வரலாற்றில் இனையில்லா மாவீரனின் படுகொலைக்கு நீதி கேட்டு வீதிக்கு வந்து எதிர் வினையாற்ற வேண்டிய சமூகத்தின் தன்னெழுச்சியை தடுத்து நிறுத்தி இழி சாதியாக்க பார்பனியம் செய்த சூழ்ச்சிதான் மதுரைவீரன் கடவுளாக மாற்றப்பட்டதன் அடிப்படைக் காரணம்.
சாதி ஆதிக்கத்தின் எதிர்க் குறியீடாக
சமூகநீதியின் அடித்தளமாக பார்க்க வேண்டிய மதுரைவீரனை, மதுரை மீனாட்சி கோயிலுக்கு வெளியே கம்பிக்குள்ளே அடைத்து காவல் தெய்வமாக நிறுத்தி வைத்து சாதிய படி நிலையை நிறுவி வெற்றியும் கண்டுள்ளனர்.
அதே அணுகு முறையைத்தான் இப்போது மாமன்னன் ஒண்டிவீரனுக்கும் நம் கண் முன்னே ஏற்படுத்தி இருக்கிறது பார்பினியத்தை உள் வாங்கியுள்ள தமிழக அரசு
தமிழக நிலப்பரப்பில் அந்நியனுக்கு அடிபணிந்து மண்ணுக்காவும், பொண்ணுக்காகவும் தமிழ் மன்னர்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டு வெற்றி கண்டவன் மன்னன் என்றும் இராஜராஜன் என்றும் தனக்கு தானே பட்டத்தை சூட்டிக்கொண்டு தனக்கு தானே பட்டாபிசேகம் செய்து மகிழ்ந்தவனுக்கு வானுயர சிலை அமைத்து. மணிமண்டபமும் கட்டிக்கொடுக்கும் அரசுகள்.
மண்ணை மீட்கும் போரில் ஒரு மணி நெல்லைக் கூட அந்நியனுக்கு வரியாக தர மறுத்து, பரங்கியர்களின் தலையை ஒண்டியாக சென்று பந்தாடிய மாமன்னர் ஒண்டிவீரனுக்கு, மணிமண்டபம் கட்ட மறுத்த போது ஆதித்தமிழர்களின் தலைமகன் அதியமான் தலைமையிலான ஆதித்தமிழர் பேரவை அடுத்தடுத்த தொடர் போராட்டத்தின் வெற்றியாக நெல்லையில் எழுந்தது மாமன்னர் ஒண்டிவீரன் மணிபண்டபம்.
ஆனால் அதையும் அரசியல் காரணங்களுக்காக காலம் தாழ்த்தி திறக்காமல் அடம் பிடித்தது ஆளும் அ.தி.மு.க அரசு. அதன் காரணமாக ஆதித்தமிழர் பேரவையின் நீலச்சட்டை பட்டாளம் நடத்திய சட்டமன்ற முற்றுகையால், கதிகலங்கிப்போய் சமீபத்தில் கலைக்டர் மூலம் சிலை ஒன்றை நிறுவி திறந்து வைத்தது.
மணிமண்டபம் திறக்கப்பட்டதற்கான வெற்றி எண்ணுடையதுதான் என்று அமைப்புக்குள் பலப்பரிச்சை பார்க்கும் நிலையில், அது உண்மையாகவே வெற்றியா? வெள்ளையர்களை எதிர்த்து தாய் மண்னை காத்த முதல் மன்னனாக விடுதலை போராட்டத்தின் எதிர்ப்பு குறியீடாக நிலை நிறுத்தி மாதரிகளும் பகடைகளும் சக்கிலியர்களும் இவ்மண்னை ஆண்ட மண்ணின் மைந்தர்கள் தான் என்ற வரலாற்றை மறைக்க வேண்டியே ஒண்டிவீரனை சிலையாக்கி
பார்பன சூழ்ச்சியால் கருவறைக்குள் அடைக்கப்பட்டு கடவுளின் சிலை போல மணிபண்டபத்தின் உள்ளே வைத்து அடைத்து வெற்றி கண்டுள்ளது. பார்பன அரசு
இப்போது ஒண்டிவீரன் பூஜை செய்யும் கடவுளாகிப் போனார். இனி அவரின் வரலாறு மழுங்கடிக்கப்படும், வரும் தலைமுறைக்கு ஒண்டி வீரன் மாமன்னன் அல்ல மயிரை காணிக்கையாக கேட்கும் கடவுளாக கற்பிக்கப்படும்.
மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுக்கும் பணியில் இருக்கும் நம் கண் முன்பாகவே வரலாறு பறிபோவதை அறியாமல் அறியாமால் இன்னும் மவுனமாக இருக்க காரணம் என்ன?நாம் இன்னும் முமுமையாக வரலாற்றை படிக்க வில்லையா? என்ற சந்தேகம்தான் மனதில் எழுகிறது.
இப்படி வரலாறு முழுமைக்கும் வரலாற்றை இழந்த நாம், வரலாற்றை மீட்க போராடிக்கொண்டு இருக்கும் வேளையில், ஒரு பகடைக்கு குதிரையில் அமர்ந்த படி சிலை வைப்பதா? அவன் மன்னனாக இருந்தலும் சக்கிலியன் தானே! என்கின்ற சாதிய ஆதிக்கத்தின் காரணமாக மணி மண்டபத்தின் வெளியே நின்று வீர வரலாற்றை சொல்ல வேண்டிய சிலை. மணிமண்டபத்திற்குள் அடைக்கப்பட்டு இருப்பது. வரலாற்றை மறைக்க முயற்சிக்கும் சதி. அரசின் இச் சதிச் செயலை நாமும் அங்கீகரித்தால், சமூகத்திற்கு நாமும் சேர்ந்தே செய்யும் துரோகம் ஆகிவிடும்.
இதுவரை திறக்கப்பட்ட பிற மண்னர்களின் மணி மண்டபங்களில் உள்ள சிலைகள் அனைத்தும் வெளியே கம்பீரமாக இருக்கும் போது நமது மாமன்னர் ஒண்டி வீரனின் சிலை மட்டும் மணிமண்டபத்தின் உள்ளே வைத்து அவமானப்படுத்துவதை தலைவர் அதியமானின் தலைமையிலான ஆதித்தமிழர் பேரவையாகிய நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது
மணிமண்டபம் திறக்கப்பட்டதை வெறும் செய்தியாக பார்பவன் கொண்டாடலாம்! உள்ளே அடைபட்டு கிடக்கும் ஒண்டிவீரனை மாமன்னராக பார்பவன் கொண்டாட முடியுமா?
தொடங்கட்டும் மீண்டும் ஒரு வரலாறு மீட்பு போர்.
என்றும் அய்யாவின் வழியில் ச.சு.ஆனந்தன்.



Sunday, 6 March 2016

ஆதித்தமிழர் பேரவை நடத்திய அம்பேத்கரிய - பெரியாரிய பயிலரங்கம் குறித்து தோழர் வே மதிமாறன் அவர்கள் தங்கள் முகநூல் பக்கத்தில் பதிந்த பதிவுகள்

ஆதித்தமிழர் பேரவை நடத்திய அம்பேத்கரிய - பெரியாரிய பயிலரங்கம் குறித்து தோழர் வே மதிமாறன் அவர்கள் தங்கள் முகநூல் பக்கத்தில் பதிந்த பதிவுகள்



Friday, 4 March 2016

மார்ச்.8 உலக மகளிர் நாளில்.. "பெண்களை மலமள்ளும்" அவலத்தில் இருந்து மீட்க.. மதுரையில்..

மார்ச்.8
உலக மகளிர் நாளில்..
"பெண்களை மலமள்ளும்" அவலத்தில் இருந்து மீட்க.. மதுரையில்..
________________
இழிவொழிப்பு
மகளிர் மாநாடு
"""""""""""""""""""""""


மலமள்ளும் இழிவினை ஒழிக்க ஆதித்தமிழர் பேரவையின் பங்களிப்பு - pdf கோப்பு - லிங்க்:

கீற்று செய்தி :


தாய் நாடு..
தாய்த் திருநாடு எனப் பெண்களை பெரிய அளவில் போற்றிப் புகழும் இம் மண்ணில்..

பெண்களின் தலையில் "மனிதன் கழித்த மலத்தை" சுமக்க வைப்பது தாய்நாட்டிற்கே அவமானம்" இல்லையா?

மலமள்ளி இழிவைச் சுமக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 80.சதத்திற்கும் மேலானவர்கள் பெண்கள்தான் என்பது கேவலத்திலும் கேவலம் இல்லையா?

சகப் பெண்கள் இழிவைச் சுமக்க சகித்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பது,  பெண்ணியவாதிகளுக்கு பெருமையாக இருக்கின்றதா?

'பீப்' பாடலுக்கு எதிராக பீரிட்டுக் கிளம்பிய பெண்ணியவாதிகளின் குரல்கள் "பீயை" சுமக்கும் பெண்களைப் பற்றி பேசாமல் மவுனம் காப்பது பேரிழுக்கு இல்லையா?

இழிவென்று தெரிந்தும் இதை ஏன்? செய்கிறார்கள் என்று, பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டு நழுவிக்கொள்வதுதான்  முற்போக்காளர்களின் முற்போக்கான சிந்தனையா?

இதுவெல்லாம் ஒரு பிரச்சினையா?
என அலச்சியத்தோடு அணுகும் அதிகாரிகளும், காவல்துறையும்.. கள்ளச்சாரயம் காய்ச்சுவதையும், கஞ்சா விற்பதையும், குழந்தைத்தொழில் முறையையும் "விரும்பி செய்தால்" விட்டுவைக்குமா?

தமிழ் ஈழமும், காவிரி முல்லைப் பெரியாறும், அணுஉலையும்,மீத்தேனும், பொதுப் பிரச்சினைகள் என்றால் இதுமட்டும் தனிப்பிரச்சினையா?

இவர்கள் செய்யவில்லை என்றால், இதை நாம்தானே  செய்யவேண்டும் என்ற சுயநல சாதிய உள் நோக்கமா?

தூய்மை இந்தியா, மேக் இந்தியா என படம் போடும் மோடி அரசு, எந்திரங்களை வாங்கி இந்த இழிநிலையை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வராதது ஏன்?

உச்சநீதி மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் துளி கூட இல்லாமல், சென்னை பெரு மழை வெள்ளத்திற்கும், கும்பகோண மகாமகத்திற்கும், கோவில் விழாக்களுக்கும், இவர்களை விலங்குகளை விட கேவலமாக இழுத்து செல்வதுதான் "அம்மா" பட்டத்தை சுமக்கும் தமிழக அரசின் தாய்மை குணமா?

இது கேள்விகள் அல்ல..
ஆயிரமாயிரம் தலைமுறைகளாக.. தீண்டாமைக் வன்கொடுமைகளோடு இழிவையும் சேர்த்தே சுமக்கும் கடைக்கோடி மனிதனின் மன வலி,

இதில் நியாயம் இருந்தால், இது ஒழிக்கப்பட வேண்டும்  என கருதினால்.. நாங்கள் எடுக்கும் தொடர் முயற்சிக்கு கரம் கோருங்கள்..

இழிவைச் சுமக்கும் இவர்கள் மட்டும் விடுதலையானால் போதாது!
இனி எந்த மனிதனும் இதை செய்ய அனுமதிக்கவே  கூடாது!!
என்பதே எமது இலக்கு.

மார்ச் 8, உலக உழைக்கும் பெண்கள் நாளில்..
"பெண்களை மலமள்ளும்" அவலத்திலிருந்து மீட்டெடுக்க சூளுரைப்போம்!
____________________
மாற்றத்தைக் காண மக்களை உசுப்புவோம்!
நாற்றத்தை சுமத்திய மனுநீதியை பொசுக்குவோம்!!
"""""""""""""""""""""""""""".
பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை



மார்ச் 8 உலக உழைக்கும் மகளிர் நாளன்று மதுரையில் ஆதித்தமிழர் பேரவை நடத்தும் "பெண்களை மலமள்ளும் இழிவிலிருந்து மீட்டெடுக்க சூளுரைக்கும் - இழிவொழிப்பு மகளிர் மாநாடு"
____________________________
இழிவை துடைக்க எழுவோம்!
கழிவை அகற்ற மறுப்போம்!!

இழிவொழிப்புப் பணியில் கரம் கோர்க்க அனைவரும் வாரீர்!!

இடம்: சோகோ அறக்கட்டளை மஹால், கே கே நகர், அப்போலோ மருத்துவமனை அருகில், மதுரை                          

நேரம்: பிற்பகல் 3 மணி

தலைமை
தோழர் கெளரி, செயலாளர், மாவட்ட மகளிர் பேரவை

துவக்கவுரை
தோழர். வழக்கறிஞர்,ரஜினி, ஒருங்கிணைப்பாளர், தென்மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு.

மாநாட்டு பேருரை
இழிவொளிப்பு போராளி அய்யா அதியமான், நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை

நெறியாளர்
ஆ.நாகராசன், பொதுச்செயலாளர், ஆதித்தமிழர் பேரவை

மலமள்ளும் இழிவை பதிவு செய்யவிருக்கும் மலமள்ளும் மதுரை மாநகராட்சி பெண் தொழிலாளர் முத்துமாரி அவர்கள்

கருத்துரை:

தோழர். பால்.பிரபாகரன், பரப்புரை செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்,

தோழர். அ.வேங்கைமாறன், தலைமப் பேச்சாளர், திராவிடர் கழகம்,

தோழர். வே.மதிமாறன், எழுத்தாளர்

தோழர். இலெ.மெய்யபன், மாவட்ட செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை

தோழர். திவ்யா, தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்,

செய்தி:

"தாய் நாடு தாய்த் திருநாடு" எனப் பெண்களை உயர்த்திப்பிடித்து தம்பட்டமடிக்கும் இம்மண்ணில் தான் பெண்கள் தங்களின் தலையில் "மனிதன் கழிக்கும் மலத்தை" சுமந்து "தேசிய அவமானமாகவும்" வலம்வருகிறார்கள்.இந்திய நாட்டின் ஒட்டுமொத்த மலமள்ளும் தொழிலாளர்களில் 80 சதத்திற்கும் அதிகமானோர் பெண்கள்தான். இக்கொடுமையை சகித்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பதுதான்  மனித இனத்திற்கு "பேரவமானம்". சக பெண்கள் இழிவைச் சுமக்க சகித்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பது பெண்ணியவாதிகளுக்கு பெருமையாக இருக்கின்றதா? 'பீப்' பாடலுக்கு எதிராக பீரிட்டுக் கிளம்பிய பெண்ணியவாதிகளின் குரல்கள் "பீயை" சுமக்கும் பெண்களைப் பற்றி பேசாமல் மவுனம் காப்பது பேரிழுக்கு இல்லையா? இழிவென்று தெரிந்தும் இதை ஏன் செய்கிறார்கள் என்று பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டு நழுவிக்கொள்வதுதான் முற்போக்காளர்களின் முற்போக்கான சிந்தனையா? இதுவெல்லாம் ஒரு பிரச்சினையா? என அலச்சியத்தோடு அணுகும் அதிகாரிகளும், காவல்துறையும் கள்ளச்சாரயம் காய்ச்சுவதையும், கஞ்சா விற்பதையும், குழந்தைத்தொழில் முறையையும் "விரும்பி செய்தால்" விட்டுவைக்குமா? தமிழ் ஈழமும், காவிரி முல்லைப் பெரியாறும், அணுஉலையும், மீத்தேனும் பொதுப் பிரச்சினைகள் என்றால் இதுமட்டும் தனிப்பிரச்சினையா? இவர்கள் செய்யவில்லை என்றால் இதை நாம்தானே செய்யவேண்டும் என்ற சுயநல சாதிய உள் நோக்கமா? தூய்மை இந்தியா, மேக் இந்தியா என படம் போடும் மோடி அரசு, எந்திரங்களை வாங்கி இந்த இழிநிலையை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வராதது ஏன்? உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் துளி கூட இல்லாமல் சென்னை பெருமழை வெள்ளத்திற்கும், கும்பகோண மகாமகத்திற்கும், கோவில் விழாக்களுக்கும் தூய்மை தொழிலாளர்களை விலங்குகளை விடக்  கேவலமாக இழுத்து செல்வதுதான் "அம்மா" பட்டத்தை சுமக்கும் தமிழக அரசின் தாய்மை குணமா? இவை கேள்விகள் அல்ல.. ஆயிரமாயிரம் தலைமுறைகளாக தீண்டாமைக் வன்கொடுமைகளோடு இழிவையும் சேர்த்தே சுமக்கும் கடைக்கோடி மனிதனின் மனவலி, இதில் நியாயம் இருந்தால், இது ஒழிக்கப்பட வேண்டும் என கருதினால்.. நாங்கள் எடுக்கும் தொடர் முயற்சிக்கு கரம் கோருங்கள். இழிவைச் சுமக்கும் இவர்கள் மட்டும் விடுதலையானால் போதாது! இனி எந்த மனிதனும் இதை செய்ய அனுமதிக்கவே கூடாது என்பதே எமது இலக்கு!!

மார்ச் 8, உலக உழைக்கும் பெண்கள் நாளில்
"பெண்களை மலமள்ளும் அவலத்திலிருந்து மீட்டெடுக்க சூளுரைப்போம்!!"
மாற்றத்தைக் காண மக்களை உசுப்புவோம்!
நாற்றத்தை சுமத்திய மனுநீதியை பொசுக்குவோம்!!




Wednesday, 2 March 2016

இரண்டாம் நாள் தோழர் வே.மதிமாறன் அவர்களின் பயிற்சியில் "அம்பேத்கர்-பெரியாரிய பயிலரங்கம்" தொடங்கியது அய்யா அதியமான் அவர்கள் தலைமையில்


இரண்டாம் நாள்....

மதுரையில்

தோழர் வே.மதிமாறன் அவர்களின் பயிற்சியில் "அம்பேத்கர்-பெரியாரிய பயிலரங்கம்" தொடங்கியது

தலைமை உரை ஆதித்தமிழர் பேரவை நிறுவநர் அய்யா அதியமான் அவர்கள்

வாழ்த்துரை பணி.பால்மைக்.இயக்குநர்.அய்டியாஸ் மையம் மதுரை

தொடக்க உரை ஆ.நகராசான் பொது செயலாளர்





Tuesday, 1 March 2016

தோழர் வே.மதிமாறன் அவர்களின் பயிற்சியில் "அம்பேத்கர்-பெரியாரிய பயிலரங்கம்" தொடங்கியது அய்யா அதியமான் அவர்கள் தலைமையில்

மதுரையில்

தோழர் வே.மதிமாறன் அவர்களின் பயிற்சியில் "அம்பேத்கர்-பெரியாரிய பயிலரங்கம்" தொடங்கியது

தலைமை உரை ஆதித்தமிழர் பேரவை நிறுவநர் அய்யா அதியமான் அவர்கள்

வாழ்த்துரை பணி.பால்மைக்.இயக்குநர்.அய்டியாஸ் மையம் மதுரை

தொடக்க உரை ஆ.நகராசான் பொது செயலாளர்





தளபதியார் அவர்களுக்கு ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி

தளபதியார் அவர்களுக்கு ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான்  பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி
.......................................
அறுபத்து நான்காவது அகவையில் இன்று அடியெடுத்து வைக்கும் மக்கள் "தளபதி" மு.க.ஸ்டாலின் அவர்கள், சாதனைகள் பல புரிந்து தமிழகத்தை தலைநிமிர்திட வேண்டும் என தோழமையுடன் வாழ்த்துகிறது ஆதித்தமிழர் பேரவை
"""''''''"
இன்று 64 வது பிறந்த நாள் காணும் "மக்கள் தளபதி" மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து சாதனைகள் பல படைத்து சரித்திரத்தில் இடம்பிடிக்க, உடன் இருந்து உழைப்பதே அவருக்கு நாம் சொல்லும் பிறந்த நாள் வாழ்த்து செய்தி.

தமிழக அரசியல் வரலாற்றில் சமூகநீதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக உழைத்துக்கொண்டிருக்கும் இயக்கங்களில் முன்வரிசையில் நிற்பது திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே, அந்த மகத்தான இயக்கத்தின் பொருளாளரும், தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமும் ஆன தளபதியார் அவர்கள், நூறு ஆண்டுகளில் பெற வேண்டிய அரசியல் அனுபவத்தை 40 ஆண்டுகளிலேயே பெற்று, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இயல்பானவராக, இளைஞர்களின் எழுச்சி நாயகராக, தமிழகத் தலைவராக உழைப்பால் உயர்ந்திருக்கின்றார்.

தளபதியார் அவர்கள் மேற்கொண்ட "நமக்கு நாமே" பயணம், யாரும் செய்திடாத சாதனை, பல்லாயிரம் மைல்கள் கடந்து, பல லட்சம் பிரச்சனை சார்ந்த மனுக்களைப் பெற்று, பலகோடி மக்களை நேரில் சந்தித்து, குறைகளை கேட்டறிந்து தமிழக மக்கள் அனைவருடைய நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கின்றார்.

ஓய்வின்றி ஒவ்வொறு நாளும் உழைத்துக்கொண்டிருக்கும் தளபதியார் அவர்கள் மேற்கொண்ட
நமக்கு நாமே பயணத்தின் இறுதி நாளில் சென்னையில் அருந்ததியர் சமூக சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து உரையாடி குறைகளைக் கேட்டறிந்துள்ளார்.

ஏற்கனவே கலைஞர் தலைமையிலான அரசு இருந்தபோது முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் இருந்த தலைவர் கலைஞர் அவர்களின் சார்பாக அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டு மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பெருமை படைத்தார்.

சென்னையில் கொட்டித்தீர்த்த பேய்மழை பெருவெள்ளத்தால் சிரழிந்துபோன சென்னையை, சீர்படுத்திய துப்புரவுப் பணியாளர்களின் தியாகங்களை பாராட்டக்கூட மனமில்லாத தற்போதைய ஆட்சியாளர்கள் செயலற்றுக் கிடக்கும் நிலையில், தளபதியார் ஒருவர் மட்டும்தான்! துப்புரவுப் பணியாளர்களின் அவலங்களைக் களைவதற்கு அவர்களை நேரில் சந்தித்து உரையாடினார்,

தளபதியார் அவர்கள் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது சென்னை மாநகராட்சியில் "மனிதக் கழிவை" மனிதன் அகற்றும் நிலையை மாற்றிட நவீனக் கருவிகளை வாங்கி மாற்றத்தைக் கொண்டுவர முயற்சிகள் பல மேற்கொண்டார், இப்படி அருந்ததியர் முதல் அனைத்துதரப்பு மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவை அனைத்தையும் நிறைவேற்றும் மனம் கொண்ட தளபதியார் அவர்களின் எண்ணம் நிறைவேற ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும்.

தலைவர் கலைஞர் அவர்களின் முத்த மழையில் நனைந்திட்ட தளபதியார் அவர்களை, வெற்றி மழையில் நனைத்து "வெற்றித் திலகமிட" தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர், அதற்கு வலுசேர்க்கும் வகையில், திரும்பவும் திமுக ஆட்சி அமைய கலைஞர் அவர்களும், தளபதியார் அவர்களும் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் உறுதுணையாய் இருந்து உழைப்பது ஒன்றே தளபதியார் அவர்களுக்கு நாம் சொல்லும் பிறந்த நாள் செய்தி. என நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தளபதியார் அவர்களுக்கு ஆதித்தமிழர் பேரவை தெரிவித்துக் கொள்கிறது.

இவண்
இரா.அதியமான்
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.

Monday, 29 February 2016

"மலக்குழியில் மனிதனை இறக்கி மாண்பையும், உயிரையும் காவுகொடுக்கு" அரச வன்கொடுமை எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

#‎ஆதித்தமிழர்_தூய்மைத்_தொழிலாளர்_பேரவை‬ சார்பில்..
21.2.2016 காலை.11 மணிக்கு ஈரோடு K.S.ராஜா குப்புசாமி திருமண மண்டபத்தில்
"மலக்குழியில் மனிதனை இறக்கி
மாண்பையும், உயிரையும் காவுகொடுக்கு"
அரச வன்கொடுமை எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது.
இதில் ‪#‎ஆதித்தமிழர்_பேரவையின்‬ நிறுவனத் தலைவர் ‪#‎அய்யா_அதியமான்‬ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
"""""'"'''''''''''''''''''''''''
தீர்மானம் 1
மனித மலத்தை மனிதன் அகற்றும் இழிநிலையில் இருந்து இம் மக்களை முழுமையாக விடுவித்து அவர்களுக்கும், அவர்களது குடும்பத்ததாருக்கும் மாற்றுத் தொழில் வழங்கி மறுவாழ்வை ஏற்படுத்திட வேண்டும் என மத்திய மாநில அரசுகளை இம் மாநாடு வலியுருத்துகிறது.
தீர்மானம் 2
மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகத்தின் சார்பில் 2014.ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த கணக்கெடுப்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, சிற்றூராட்களில் நியமிக்கப்பட்டு பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களிடம் மட்டுமே கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, இதை விரிவு படுத்தி தனியார் வசம் உள்ள அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களிடமும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என இந்த மாநாடு வலியுருத்துகிறது.
தீர்மானம் 3
தனியார் வசம் உள்ள கழுவகற்றும் வாகனங்கள், தனியார் விடுதிகள், உணவகங்கள், மருத்துவ மனைகள், பள்ளிகள், கல்லூரிகள், போன்ற அனைத்து வகைப்பட்ட தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களை முழுமையாக கணக்கெடுத்து, இவர்கள் அனைவரும் கையால் மலமல்லும் தொழிலாளர்கள்தான் என அறிவிப்பு செய்திட வேண்டும் என இம் மாநாடு வலியுறுகிறது.
தீர்மானம் 4
மனிதக் கழிவை மனிதன் அகற்றுவதற்கான தடைச்சட்டம் 2013 மற்றும் அதன் விதிகளை முழுமையாக நடைமுறைப் படுத்திட வேண்டும் என இம் மாநாடு வலியுருத்துகிறது.
தீர்மானம் 5
தனியார் ஒப்பந்த முறையிலும், மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர் அனவரையும் கையால் மலம் அள்ளும் தொழிலாளர் என அறிவித்திட வேண்டும் என இம் மாநாடு வலியுருத்துகிறது.
தீர்மானம் 6
இத் தொழிலில் இருந்து விடுவிக்கப்படும் மற்றும் ஒய்வு பெற்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசு ஊழியருக்கு வழங்குவற்கு இணையான ஓய்வூதியம் வழங்கிடு, நகரத்தின் மய்யப் பகுதியில் சொந்தக் குடியிருப்புகள் கட்டிக்கொடு, துப்புரவுத் தொழிலாளிகளின் குழந்தைகளுக்கு உயர் கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரையில் கட்டணமில்லா இலவசக் கல்வி வழங்கிட வேண்டும் என இம் மாநாடு வலியுருத்துகிறது.
தீர்மானம் 7
நிரந்தர அல்லது தற்காலிக நவீன கழிப்பிடங்களை உருவாக்காமல் கோயில், மற்றும் விழாக் காலங்களில் உதாரணமாக கும்பகோண மகாமகம், திருச்செந்தூர், சிரீரங்கம் போன்ற கோயில்களில் கட்டாயாப் படுத்தி கழிவகற்றும் பணிகளை செய்வதற்கு பிற மாவட்டங்களில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக கொத்தடிமைகள் போல் துப்புரவு பணியாளர்களை அழைத்து செல்லுகின்ற வழக்கத்தை கைவிட வேண்டும் என இம்மாநாடு வலியுருத்துகிறது.
தீர்மானம் 8
சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகத்தின் மூலம் நடத்தப்படும் மறு கணக்கெடுப்பு முறை வெறும் கண்துடைப்பாகவே நடத்தப் படுகிறது காரணம் இப்டிபடுப்பட்ட தொழிலாளர்களை நியமிப்பதே அந்தந்த மாநகராட்சி, நகராட்சி ஆணயாளர்கள்தான் என்பது வெட்ட வெளிச்சமாக இருக்கும் போது கைப் புண்ணுக்கு கண்ணாடி எதற்கு எந்து போல் நாடகமாடும் அரசுகளை இம் மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
தீர்மானம் 9
உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் 1993 முதல் நச்சுவாயு தாக்கி இறந்தவர்களை கணக்கெடுத்து அனைவருக்கும் பத்து லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும், அந்த தீர்ப்பில் வழங்கியுள்ள அனைத்துப் பரிந்துரைகளையும் நடைமுறைப் படுத்திட வேண்டும் என இம் மாநாடு வலியுருத்துகிறது.
தீர்மானம் 10
மனித மலத்தை மனிதன் அகற்றும் நிலை முற்றிலும் ஒழிப்பதற்கு இத் தொழிலை முற்றிலும் இயந்திரமயமாக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை இம் மாநாடு வலியுருத்துகிறது.
இம் மாநாட்டில் ஈரோடு மாவட்ட தூய்மைத்தொழிலாளர் பேரவை செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார், ஆதித்தமிழர் பேரவையின் மாநில பொதுச்செயலாளர் ஆ.நாகராசன், நிதிச்செயலாளர் ப.பெருமாவளவன், தலைமை நிலைய செயலாளர் வீரவேந்தன், துணைப் பொதுச்செயலாளர், வழக்கறிஞர் ஆனந்தன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, தூய்மைத் தொழிலாளர் அணி மாநில நிர்வாகி சித்துராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். முடிவில் சோ.குமார் நன்றி கூறினார்.

மாநாட்டில் அய்யா அவர்களின் உரையை காண இங்கு சொடுக்கவும்