அண்மையச்செய்திகள்

Monday, 29 February 2016

"மலக்குழியில் மனிதனை இறக்கி மாண்பையும், உயிரையும் காவுகொடுக்கு" அரச வன்கொடுமை எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

#‎ஆதித்தமிழர்_தூய்மைத்_தொழிலாளர்_பேரவை‬ சார்பில்..
21.2.2016 காலை.11 மணிக்கு ஈரோடு K.S.ராஜா குப்புசாமி திருமண மண்டபத்தில்
"மலக்குழியில் மனிதனை இறக்கி
மாண்பையும், உயிரையும் காவுகொடுக்கு"
அரச வன்கொடுமை எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது.
இதில் ‪#‎ஆதித்தமிழர்_பேரவையின்‬ நிறுவனத் தலைவர் ‪#‎அய்யா_அதியமான்‬ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
"""""'"'''''''''''''''''''''''''
தீர்மானம் 1
மனித மலத்தை மனிதன் அகற்றும் இழிநிலையில் இருந்து இம் மக்களை முழுமையாக விடுவித்து அவர்களுக்கும், அவர்களது குடும்பத்ததாருக்கும் மாற்றுத் தொழில் வழங்கி மறுவாழ்வை ஏற்படுத்திட வேண்டும் என மத்திய மாநில அரசுகளை இம் மாநாடு வலியுருத்துகிறது.
தீர்மானம் 2
மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகத்தின் சார்பில் 2014.ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த கணக்கெடுப்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, சிற்றூராட்களில் நியமிக்கப்பட்டு பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களிடம் மட்டுமே கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, இதை விரிவு படுத்தி தனியார் வசம் உள்ள அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களிடமும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என இந்த மாநாடு வலியுருத்துகிறது.
தீர்மானம் 3
தனியார் வசம் உள்ள கழுவகற்றும் வாகனங்கள், தனியார் விடுதிகள், உணவகங்கள், மருத்துவ மனைகள், பள்ளிகள், கல்லூரிகள், போன்ற அனைத்து வகைப்பட்ட தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களை முழுமையாக கணக்கெடுத்து, இவர்கள் அனைவரும் கையால் மலமல்லும் தொழிலாளர்கள்தான் என அறிவிப்பு செய்திட வேண்டும் என இம் மாநாடு வலியுறுகிறது.
தீர்மானம் 4
மனிதக் கழிவை மனிதன் அகற்றுவதற்கான தடைச்சட்டம் 2013 மற்றும் அதன் விதிகளை முழுமையாக நடைமுறைப் படுத்திட வேண்டும் என இம் மாநாடு வலியுருத்துகிறது.
தீர்மானம் 5
தனியார் ஒப்பந்த முறையிலும், மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர் அனவரையும் கையால் மலம் அள்ளும் தொழிலாளர் என அறிவித்திட வேண்டும் என இம் மாநாடு வலியுருத்துகிறது.
தீர்மானம் 6
இத் தொழிலில் இருந்து விடுவிக்கப்படும் மற்றும் ஒய்வு பெற்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசு ஊழியருக்கு வழங்குவற்கு இணையான ஓய்வூதியம் வழங்கிடு, நகரத்தின் மய்யப் பகுதியில் சொந்தக் குடியிருப்புகள் கட்டிக்கொடு, துப்புரவுத் தொழிலாளிகளின் குழந்தைகளுக்கு உயர் கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரையில் கட்டணமில்லா இலவசக் கல்வி வழங்கிட வேண்டும் என இம் மாநாடு வலியுருத்துகிறது.
தீர்மானம் 7
நிரந்தர அல்லது தற்காலிக நவீன கழிப்பிடங்களை உருவாக்காமல் கோயில், மற்றும் விழாக் காலங்களில் உதாரணமாக கும்பகோண மகாமகம், திருச்செந்தூர், சிரீரங்கம் போன்ற கோயில்களில் கட்டாயாப் படுத்தி கழிவகற்றும் பணிகளை செய்வதற்கு பிற மாவட்டங்களில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக கொத்தடிமைகள் போல் துப்புரவு பணியாளர்களை அழைத்து செல்லுகின்ற வழக்கத்தை கைவிட வேண்டும் என இம்மாநாடு வலியுருத்துகிறது.
தீர்மானம் 8
சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகத்தின் மூலம் நடத்தப்படும் மறு கணக்கெடுப்பு முறை வெறும் கண்துடைப்பாகவே நடத்தப் படுகிறது காரணம் இப்டிபடுப்பட்ட தொழிலாளர்களை நியமிப்பதே அந்தந்த மாநகராட்சி, நகராட்சி ஆணயாளர்கள்தான் என்பது வெட்ட வெளிச்சமாக இருக்கும் போது கைப் புண்ணுக்கு கண்ணாடி எதற்கு எந்து போல் நாடகமாடும் அரசுகளை இம் மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
தீர்மானம் 9
உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் 1993 முதல் நச்சுவாயு தாக்கி இறந்தவர்களை கணக்கெடுத்து அனைவருக்கும் பத்து லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும், அந்த தீர்ப்பில் வழங்கியுள்ள அனைத்துப் பரிந்துரைகளையும் நடைமுறைப் படுத்திட வேண்டும் என இம் மாநாடு வலியுருத்துகிறது.
தீர்மானம் 10
மனித மலத்தை மனிதன் அகற்றும் நிலை முற்றிலும் ஒழிப்பதற்கு இத் தொழிலை முற்றிலும் இயந்திரமயமாக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை இம் மாநாடு வலியுருத்துகிறது.
இம் மாநாட்டில் ஈரோடு மாவட்ட தூய்மைத்தொழிலாளர் பேரவை செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார், ஆதித்தமிழர் பேரவையின் மாநில பொதுச்செயலாளர் ஆ.நாகராசன், நிதிச்செயலாளர் ப.பெருமாவளவன், தலைமை நிலைய செயலாளர் வீரவேந்தன், துணைப் பொதுச்செயலாளர், வழக்கறிஞர் ஆனந்தன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, தூய்மைத் தொழிலாளர் அணி மாநில நிர்வாகி சித்துராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். முடிவில் சோ.குமார் நன்றி கூறினார்.

மாநாட்டில் அய்யா அவர்களின் உரையை காண இங்கு சொடுக்கவும்No comments:

Post a Comment