அண்மையச்செய்திகள்

Tuesday, 1 March 2016

தளபதியார் அவர்களுக்கு ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி

தளபதியார் அவர்களுக்கு ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான்  பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி
.......................................
அறுபத்து நான்காவது அகவையில் இன்று அடியெடுத்து வைக்கும் மக்கள் "தளபதி" மு.க.ஸ்டாலின் அவர்கள், சாதனைகள் பல புரிந்து தமிழகத்தை தலைநிமிர்திட வேண்டும் என தோழமையுடன் வாழ்த்துகிறது ஆதித்தமிழர் பேரவை
"""''''''"
இன்று 64 வது பிறந்த நாள் காணும் "மக்கள் தளபதி" மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து சாதனைகள் பல படைத்து சரித்திரத்தில் இடம்பிடிக்க, உடன் இருந்து உழைப்பதே அவருக்கு நாம் சொல்லும் பிறந்த நாள் வாழ்த்து செய்தி.

தமிழக அரசியல் வரலாற்றில் சமூகநீதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக உழைத்துக்கொண்டிருக்கும் இயக்கங்களில் முன்வரிசையில் நிற்பது திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே, அந்த மகத்தான இயக்கத்தின் பொருளாளரும், தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமும் ஆன தளபதியார் அவர்கள், நூறு ஆண்டுகளில் பெற வேண்டிய அரசியல் அனுபவத்தை 40 ஆண்டுகளிலேயே பெற்று, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இயல்பானவராக, இளைஞர்களின் எழுச்சி நாயகராக, தமிழகத் தலைவராக உழைப்பால் உயர்ந்திருக்கின்றார்.

தளபதியார் அவர்கள் மேற்கொண்ட "நமக்கு நாமே" பயணம், யாரும் செய்திடாத சாதனை, பல்லாயிரம் மைல்கள் கடந்து, பல லட்சம் பிரச்சனை சார்ந்த மனுக்களைப் பெற்று, பலகோடி மக்களை நேரில் சந்தித்து, குறைகளை கேட்டறிந்து தமிழக மக்கள் அனைவருடைய நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கின்றார்.

ஓய்வின்றி ஒவ்வொறு நாளும் உழைத்துக்கொண்டிருக்கும் தளபதியார் அவர்கள் மேற்கொண்ட
நமக்கு நாமே பயணத்தின் இறுதி நாளில் சென்னையில் அருந்ததியர் சமூக சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து உரையாடி குறைகளைக் கேட்டறிந்துள்ளார்.

ஏற்கனவே கலைஞர் தலைமையிலான அரசு இருந்தபோது முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் இருந்த தலைவர் கலைஞர் அவர்களின் சார்பாக அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டு மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பெருமை படைத்தார்.

சென்னையில் கொட்டித்தீர்த்த பேய்மழை பெருவெள்ளத்தால் சிரழிந்துபோன சென்னையை, சீர்படுத்திய துப்புரவுப் பணியாளர்களின் தியாகங்களை பாராட்டக்கூட மனமில்லாத தற்போதைய ஆட்சியாளர்கள் செயலற்றுக் கிடக்கும் நிலையில், தளபதியார் ஒருவர் மட்டும்தான்! துப்புரவுப் பணியாளர்களின் அவலங்களைக் களைவதற்கு அவர்களை நேரில் சந்தித்து உரையாடினார்,

தளபதியார் அவர்கள் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது சென்னை மாநகராட்சியில் "மனிதக் கழிவை" மனிதன் அகற்றும் நிலையை மாற்றிட நவீனக் கருவிகளை வாங்கி மாற்றத்தைக் கொண்டுவர முயற்சிகள் பல மேற்கொண்டார், இப்படி அருந்ததியர் முதல் அனைத்துதரப்பு மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவை அனைத்தையும் நிறைவேற்றும் மனம் கொண்ட தளபதியார் அவர்களின் எண்ணம் நிறைவேற ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும்.

தலைவர் கலைஞர் அவர்களின் முத்த மழையில் நனைந்திட்ட தளபதியார் அவர்களை, வெற்றி மழையில் நனைத்து "வெற்றித் திலகமிட" தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர், அதற்கு வலுசேர்க்கும் வகையில், திரும்பவும் திமுக ஆட்சி அமைய கலைஞர் அவர்களும், தளபதியார் அவர்களும் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் உறுதுணையாய் இருந்து உழைப்பது ஒன்றே தளபதியார் அவர்களுக்கு நாம் சொல்லும் பிறந்த நாள் செய்தி. என நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தளபதியார் அவர்களுக்கு ஆதித்தமிழர் பேரவை தெரிவித்துக் கொள்கிறது.

இவண்
இரா.அதியமான்
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.

No comments:

Post a Comment