அண்மையச்செய்திகள்
Monday, 29 February 2016
ரிக் வண்டி மரணங்கள்
#ரிக்_வண்டி_மரணங்கள்
#நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள #கல்குட்டு கிராமம் #அருந்ததியர் பகுதியில்
#ஆந்திராவில் உள்ள #அசோக்ரெட்டி போர்வெல் கம்பெனிக்கு புரோக்கர் முலம் முன்பணம் 10,000 ரூபாய் பெற்றுக் கொண்டு மனோஜ் (20)பாண்டியன், சக்திவேல், உட்பட நான்கு பேரும் அசோகா போர்வெல் கம்பெனிக்கு ஆந்திர மாநிலம் #கடப்பா பகுதிக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு சென்றவர்கள்..

கடந்த ஓராண்டில் எந்தவித விடுமுறையும் இல்லாமல் கொத்தடிமையாக வைத்து உள்ளார்கள்
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரில் கல்குட்டு #அருந்ததியர் பகுதியில் உள்ள மனோஜ் அவர்களின் பாட்டி #இறப்பிற்க்கும் ஈமச்சடங்கு செய்வதற்கு கூட போர்வெல் நிர்வாகம் விடுமுறையில் செல்ல அனுமதி வழங்கவில்லை.
இதற்கிடையில் #பாண்டியன் தன் தாத்தாவிற்க்கு ஆந்திராவில் சரியான உணவு,தங்குவதற்கு இடம் இல்லாமல் இருக்கின்றோம் எங்களை மீட்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.. அதன் அடிப்படையில் பாண்டியன் தாத்தா அவர்கள் #நாமகிரிப்பேட்டை #காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை..
10/2/2016 அன்று ஆந்திரா அசோக போர்வெல் அலுவலகத்தில் இருந்து மனோஜ் அவர்களின் பெற்றோர்க்கு உங்கள் மகனுக்கு உடல்நிலை சரியில்லை ஆந்திராவில் இருந்து ராசிபுரத்தில் வந்து கொண்டு இருக்கிறார் என்று தகவல் சொல்லியுள்ளார்கள்..அதன் அடிப்படையில் மனோஜை அழைத்து வர 10/2/2016 அன்று இரவு பெரியப்பா மகன் சென்று உள்ளார்..
பெரியப்பா மகன் அவர்கள் மனோஜை பார்க்கும் போது மனோஜிற்க்கு அப்பா அம்மா யார் என்று தெரியாமல் போகும் அளவிற்கு #சுய_நினைவு இல்லாமல் கண்கள் வீங்கியும் கை கால்கள் வீங்கியும் பேருந்தில் வந்துள்ளார்.
மனோஜ் அவர்களை #இராசிபுரம் மருத்துவமனையில் இரண்டு நாள் சிகிச்சை அளித்து உள்ளார்கள்..13/2/2016 அன்று மேல் சிகிச்சைக்கு #சேலம்_அரசு_மருத்துவமனைக்கு சேர்த்து உள்ளார்கள்.. மூன்று நாள் 17/2/2016 காலையில் மனோஜ் அவர்கள் சிகிச்சை பலன் இல்லாமல் உயிர் இழந்தார்..
சேலம் மருத்துவமனையில் மனோஜ் உடலை உடற்கூறு ஆய்வு செய்யாமல் சீக்கிரம் எடுத்து செல்லுங்கள் என்று அவசரநிலையில் உடலை மருத்துவமனையில் இருந்து அனுப்பியுள்ளார்கள்..
பேரவை தோழர்கள் அசோகா போர்வெல் கம்பெனிக்கு தொடர்பு கொண்டு கேட்க்கும்போது இவர்களின் பராமரிப்பு செலவு அதிகமாக உள்ளது.இவர்கள் தர வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு மற்றவர்களை அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார்கள்..
மனோஜ் சாவிற்க்கு காரணமான அசோகா போர்வெல் அதிபரை கைது செய்யவேண்டும்.. கம்பெனியில் கொத்தடிமையாக இருப்பவர்களை மீட்க வேண்டும்..
என #ஆதித்தமிழர்_பேரவை சார்பில் மனோஜ் உடலை புதைக்கமால் போராட்டம் நடைபெற்று வருகிறது
கல்குட்டு பகுதி முழுவதும் #காவல்துறை குவிக்கப்பட்டு அசோகா போர்வெல் அதிபரை கைது செய்யாமல் பேச்சுவார்த்தை நடத்துகிறது

கோலாகல குதூகலத்தில் "கும்பகோண மகாமகம்" கொடுமையின் உச்சத்தில் துப்புரப் பணியாளர்களின் பேரவலம்!
கோலாகல குதூகலத்தில்
"கும்பகோண மகாமகம்"
கொடுமையின் உச்சத்தில் துப்புரப் பணியாளர்களின் பேரவலம்!
"""""""""""""""""""""
மற்றவர்கள் மாற்றமும் ஏற்றமும் பெற்றிட..
துப்புரவுத் தொழிலாளர்கள் நாற்றத்தைச் சுமந்து சாக வேண்டுமா?

தமிழக அரசே!
"""""""""""""""""""""
கும்பகோண மகாமக விழாவில் குவியும், குப்பைக் கழிவுகளுடன் கூடிய மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு துப்புரவுத் தொழிலாளர்களை வற்புறுத்தி ஊர் ஊராய் அழைத்துச் வந்து கொடுமைப் படுத்துவதை உடனே நிறுத்து!
உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை காலதாமதமின்றி முழமையாக நடைமுறைப் படுத்து! சட்டத்தை தீவிரமாக்கு,
உண்ண உணவும், தங்குவதற்கு இடவசதியும், பாதுகாப்பு உபகணமும் இன்றி துப்புரவுத் தொழிலாளர்களை விலங்குகளை விட கேவலமாகக நடத்தி அவர்களின் உயிர்களைக் காவு கொடுக்காதே!
குப்பைக் கழிவுகளை அகற்ற மேலை நாடுகளைப் போல் மனிதர்களை பயன்படுத்தாமல் எந்திரங்களை பயன்படுத்து!
பொதுமக்களே!
"""""""""""""""""""""""
சக மனிதர்கள் குப்பைக் கழிவுகளை அகற்றுவதை சகித்துக் கொண்டு வேடிக்கை பார்க்காதே! இவர்களையும் சக மனிதர்களாக பார்த்திடு! இவர்களின் மறுவாழ்விற்கு குரல்கொடுத்திடு!
முற்போக்காளர்களே!
"""""""""""""""""""""""""
காவிரி, முல்லைப் பெரியாறு தமிழ் ஈழம், மீத்தேன், அத்திக்கடவு, அணுஉலை, இதுவெல்லாம் பொதுப் பிரச்சினை என்றால் "இது" பொதுப் பிரச்சினை இல்லையா?
இழிவென்று தெரிந்தும் இதை ஏன்? செய்வேண்டும்
"""""""""""""""""""
சட்டத்தால் ஒழிக்கப்பட்ட இழிதொழிலை இவர்கள் செய்வது எதனால்?
தடுத்து நிறுத்தவேண்டிய தமிழக அரசு விரும்பி செய்தாலும் விடலாமா?
சட்டத்தால் ஒழிக்கப்பட்ட குழந்தைத்தொழில், கள்ளச்சாரயம், கஞ்சா விற்பனை போன்றவற்றை விரும்பி செய்தால் விடுமா?
கேள்விகள் ஆயிரம் கேவலப்படுகிறது தமிழினம்!
________________
மனித மலத்தை மனிதன் சுமப்பது தேசிய அவமானம்!
இதிலென்ன தூய்மை இந்தியா, மேக் இந்தியா பகுமானம்!!
_________________
பிப்ரவரி..21
அணிதிரள்வோம்!
கும்பகோணத்திற்கு!!
அழைக்கிறது..
ஆதித்தமிழர் பேரவை.
""""""""""""""""""""''''"''

Tuesday, 16 February 2016
விளம்பரங்களால் விலைபோகும் ஊடக தருமம். - ஆனந்தன் - ஆதித்தமிழர் பேரவை
விளம்பரங்களால் விலைபோகும் ஊடக தருமம்.
"""""""""""""""""""""""""""""""""""
ஊடக தர்மம், ஊடக நீதி, ஜனநாயகத்தின் ஜந்தாவது தூண் என்று பேசும் ஊடகங்களும் பத்திக்கைகளும், இப்போது உண்மையான ஊடக அறத்தின் படி செயல் படுகிறதா என்றால்! இல்லை என்பதே ஏதார்த்த உண்மையாக உள்ளது.
சமூகத்தில் சாதியாலும் மதத்தாலும் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு அடித்தட்டு மக்களின் குரல்வளை நெறிக்கப்படும் போது ஒடுக்கப்பட்டவனின் குரலாக ஒலிக்க வேண்டிய பத்திரிக்கைகள்!
விளம்பரம் மூலம் கிடைக்கும் வருவாய்க்கான செய்திகளை முதல் பக்கத்தில் வெளியிட்டு வியாபர நோக்கிற்கான செய்திகளையே பிரதான செய்திகளாக மாற்றுகின்றன.
அரசியல் கட்சிகளின் செய்திகளை "வார இதழ்கள்" அனைத்தும்! கடைசி பக்க விளம்பரமா? அல்லது நடுப்பக்க விளம்பரமா? அந்த கட்சி கொடுக்கும் விளம்பரத்தை பொறுத்தே முக்கியத்துவம் பெறுகின்றது.
மாணவர்களின் உரிமைக்கான நியாயமான போராட்டமா! அல்லது மலத்தை அள்ளி சாக்கடையிலேயே சமாதியாகும் சாபக்கேடா? இப்படி எதுவானாலும் அவர்கள் தரப்பு நியாயங்கள் எதுவும் பத்திரிக்கைகளில் துண்டு செய்தியாகக் கூட அரங்கேறுவதில்லை, அதையும் மீறி ஒரு ஓரத்திலாவது செய்தியாக வேண்டுமானால், அதற்கு அவர்களின் உயிர்கள் ஈடாக்கப்பட வேண்டும்.
மது ஒழிப்பு போராட்டமானலும் சரி, மக்கள் நலன் காக்கும் போராட்டமானலும் சரி, எந்த செய்திகளும் ஊடகங்கத் திரைகளில் ஒலிபரப்பு செய்யப்படாது, காரணம், ஊடக நிறுவனங்களுக்கு அதனால் எந்த பலனும் கிடையாது.
ஆட்சியாளர்களின் அலங்கோல நிர்வாகத்தை மறைப்பதற்கு அரசு கொடுக்கும் விளம்பரம் அதற்கான நிதியின் அளவைப் பொறுத்து, அந்த செய்தி அலங்கரிக்கப்பட்டு ஆகா ஒகோ என்று முக்கியத்துவம் பெறுகிறது.
முதல் நாள் இரண்டு கடைசிப்பக்க விளப்பரம் கொடுக்கப்படும், அந்த விளம்பர செய்தியே, அடுத்தநாள் தலைப்பு செய்தியாகி, அரசின் சாதனைகள் என்ற பெயரில் அடிக்கல் நாட்டும் விழா முதல் காணொலிக் காட்சியில் நடக்கும் திறப்பு விழா வரை அனைத்தும் நான்கைந்து முறை செய்தியாக்கப்படும்.
தமிழகத்தில் வெளிவரும் தினசரி பத்திரிக்கைகளில் சனி ஞாயிறு தவிற்து மற்ற நாட்களில் கடைசி இரண்டு பக்க விளம்பரத்திற்கு தினசரி பத்திரிக்கைகள் வாங்கும் ஒரு நாள் விளம்பரத் தொகை குறைந்த பட்சம் 75.லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை,
ஒரு நாளைக்கு ஒவ்வொரு துறையும் அந்தந்த துறை சார்பாக மூன்று பத்திரிக்கையில் விளம்பரம் கொடுக்கப்பட்டால் ஆகும் செலவு 3×75= 2.கோடியே 25.லட்சம், சராசரியாக அரசு துறைகளின் சார்பாக ஆளும் அரசின் புகழ்பாட மக்களின் வரிப்பணம் வாரி வாரி இறைக்கப்படுகின்றது.
TNPC கட்டிட திறப்பு விழா முதல் தமிழகத்தின் கடை கோடி கிராம கக்கூஸ் திறப்பு விழா வரை ஆளும் அம்மையாரின் விளம்பரம் மக்கள் வரிப்பணத்தில் கொடுக்கப்படுகிறது, அதுவே அடுத்த நாள் செய்தியாக முக்கியம் பெறுகிறது.
ஒரு நாளைக்கு அரசால் பத்திரிக்கைகளுக்கு கிடைக்கும் வருமானம் இரண்டு கோடியே 25.இலட்சம் என்றால் ஒரு ஆண்டில் அரசு விளம்பரங்களால் பத்திரிகைகள் அடையும் வருவாய் எவ்வளவு என்று, எண்ணிப்பார்க்க வேண்டும்,
ஊடக தருமம் மக்கள் உரிமைகளுக்கு குரல் கொடுக்குமா? அல்லது அரசு கொடுக்கும் விளம்பர வருவாய்க்கு வாய்பிளக்குமா?
வறுமையின் காரணமாக வயிற்றுப் பிழைப்புக்காக விலைபோகும் விலைமாதர்கள் கூட அன்றாடம் மன அழுத்தத்திற்கு ஆளாகும் போது, அந்த மன அழுத்தம் இவர்களுக்கு வருமா என்று எதிர்பார்ப்பது நமது முட்டாள்த்தனத்தையே காட்டும்.
இவர்களால்..
விலை போவது ஊடக தருமம் மட்டுமல்ல!
ஊடகத்தின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும்தான்!!
என்றும்..
அய்யாவின் வழியில் ஆனந்தன்.

Sunday, 14 February 2016
மதுரை ராஜாஜி பூங்காவில் காதலர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர் ஆதித்தமிழர் பேரவையினர்.
காதலர் தின வாழ்த்துக்கள்
14.2.16 மதுரை ராஜாஜி பூங்காவில் காதலர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர் ஆதித்தமிழர் பேரவையினர்.
துண்டறிக்கையையும் காதலர்களுக்கு கொடுத்து வாழ்த்துக்கள் கூறினர்.

Subscribe to:
Posts (Atom)