அண்மையச்செய்திகள்

Wednesday, 11 October 2017

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் மன்கறடு செல்வம் நகர் பகுதியில் ஆதிக்க சாதியினர் அட்டூலியம் காலத்தில் ஆதித்தமிழர் பேரவை

5-10-17 ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் மன்கறடு செல்வம் நகர் பகுதியில் ஆதிக்க சாதியினர் அட்டூலியம் காலத்தில் ஆதித்தமிழர் பேரவை

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் மன்கறடு செல்வம் நகர் பகுதியில் ஒரே.குடும்பத்தை சேர்ந்த அருந்ததியர்ள் சாதி வெறிபிடித்த ஆதிக்க சாதி கவுண்டர்களால் தாக்கப்பட்டனர்,
சம்பந்தப்பட்டவர்களை சநதித்து காவல் நிலைய்தில் புகார் கொடுத்து FIR போடப்பட்டது

_
களத்தில் மாவட்டச்செயலாளர் வீரகோபால் ,இளைஞரணிச்செயலாளர் சீனிவாசன் வீரபாபு,ஒன்றியச்செயலிளர் சன்முகம்,தலைவர் பிரியா மற்றும் கோவிந்தன் உள்ளிட்ட ஆதித்தமிழர் பேரவை தோழர்கள்






Sunday, 8 October 2017

தேனியில் பேரவை நிகழ்ச்சிகளை முடித்து விட்டு மதுரை செல்லும் வழியில் மக்கள் எழுச்சியுடன் வரவேற்றனர்

தேனியில் பேரவை நிகழ்ச்சிகளை முடித்து விட்டு மதுரை செல்லும் வழியில் மக்கள் எழுச்சியுடன் வரவேற்றனர்

ஏழை எளிய மக்களின் பாதுகாவலர் ஆதித்தமிழர்களின் தலைமகன் அய்யா அதியமான் அவர்கள்
நேற்று தேனியில் பேரவை நிகழ்ச்சிகளை முடித்து விட்டு இன்று மதுரை செல்லும் போது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியம் செட்டியபட்டி கிளை பொதுமக்கள் அனைவரும்
மரியாதை நிமித்தமாக அய்யா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
மகிழ்ச்சி






கம்பம் ஒன்டிவீரன் நகரில் "ஆதித்தமிழன் அறிவாலயம்" #நூலகம் திறக்கப்பட்டது

கம்பம் ஒன்டிவீரன் நகரில் "ஆதித்தமிழன் அறிவாலயம்" #நூலகம் திறக்கப்பட்டது
*********
அறிவாயுதம் ஏந்துவோம் விடுதலையாவோம் என்ற கொள்கை முழக்கத்தோடு இன்று தேனி கம்பம் ஒன்டிவீரன் நகரில் ஆதித்தமிழர் பேரவையின் நீலச்செங்கொடி ஏற்றப்பட்டு
#ஆதித்தமிழன்_அறிவாலயம் #நூலகம் திறக்கப்பட்டது
கம்பம் பகுதி தோழர்களுக்கு வாழ்த்துக்கள்


ஆதித்தமிழர் பேரவை மாநில செயற்குழு கூட்டம் 8.10.2017 சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றது

ஆதித்தமிழர் பேரவை மாநில செயற்குழு கூட்டம் 8.10.2017 சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றது

ஆதித்தமிழர் பேரவை மாநில செயற்குழு கூட்டம் 8.10.2017 காலை 11 மணிக்கு தேனியில் கூடியது. கூட்டத்திற்கு பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் தலைமை தாங்கினார், பொதுச்செயலாளர் நாகராசன் வரவேற்புரை ஆற்றினார். அனைத்து மாநில மாவட்ட நிர்வாகிகளும், மாநில செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை விரிவாக பகிர்ந்து கொண்டனர். கூட்ட முடிவில் நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் இன்றைய தமிழக அரசியல் நிலை குறித்தும் பேரவை முன்னெடுக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் அரசியல் வழிகாட்டுதல் விளக்க உரையாற்றினார்.

மாலை 7 மணி வரை நடைபெற்ற
கூட்ட முடிவில் தேனி மாவட்ட செயலாளர் இளந்தமிழன் நன்றி கூறினார்.

மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
**************************
1) வீரவணக்க தீர்மானம்
""""""""""""""""""""""""""""""""""""
மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் மத்திய அரசினால் திணிக்கப்பட்ட 'நீட்' என்னும் தேர்வு முறையால் பாதிப்புக்கு உள்ளாகி தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட மாணவி அரியலூர் மாவட்ட குழுமூர் அனிதாவுக்கும், மதவெறியர்களின் வெறுப்பு அரசியலை எதிர்த்துக் கருத்துப் போர் நடத்தி களமாடிய காரணத்தால்
படுகொலைக்கு உள்ளான ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் அவர்களுக்கும், சாதிய - மதவாத கும்பலின் வெறியாட்டத்தால் அண்மையில் படுகொலையான தோழர் கோவை ஃபாருக், அரியலூர் நந்தினி, திட்டக்குடி சிவக்குமார், ஆகியோருக்கும் ஆதித்தமிழர் பேரவை மாநில செயற்குழு தனது வீரவணக்கத்தை செலுத்துகிறது.

2). நீட் தேர்வில் இருந்து முழு விலக்களிக்க கோரும் தீர்மானம்!
"""""""""""""""""""""""""""""""""""""""
'கல்வி' மாநில அதிகாரத்தின் கீழ் இல்லாமல் பொதுப் பட்டியலில் இருப்பதால் மத்திய அரசு தற்போது 'நீட்' என்னும் 'தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை நம் மீது திணித்துள்ளது.

இதன் காரணமாகவே நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரிய தமிழக அரசின் இரண்டு மசோதாக்களும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்காமலேயே கிடப்பில் போனது.

ஒப்பீட்டளவில் கல்வி வளர்ச்சியிலும், கல்விக்கான கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கியிருப்பதிலும் பிற மாநிலங்களைவிட தமிழ்நாடு மேம்பட்டுள்ளது. குறிப்பாக, மருத்துவக் கல்வியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
தமிழகத்தில் திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்டம்தோறும் அரசு மருத்துவக் கல்லூரி என்னும் திட்டத்தைப் போன்று வேறு எந்த மாநிலமும் கொண்டு வரவில்லை.

இவ்வாறு மருத்துவக் கல்வியில் மிகவும் சிறப்பான நிலையில் வளர்ச்சியடைந்திருக்கும் தமிழகத்தில், நீட் நுழைவுத் தேர்வைத் திணிப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
மாநில அரசின் கல்வி அதிகாரத்தை முற்றிலும் பறித்து, அவற்றை மத்தியில் குவிக்க முனையும் பா.ச.க அரசின் சதிச்செயல் தமிழக மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை தற்போது அனைத்துத் தரப்பினராலும் முன்வைக்கப்படுகிறது.

எனவே, நீட் நுழைவுத் தேர்வை இந்திய அளவில் முற்றாக ரத்து செய்வதோடு கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

3). இந்தி மற்றும் சமத்கிருதத் திணிப்பு எதிர்ப்பு தீர்மானம்.
""""'""""""""""""""""""""""""""""""""""""
1968-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது தீக்குளித்து தமது இன்னுயிரை ஈகம் செய்த மொழிப்போர்த் தியாகிகளைக்கொண்ட பெருமைக்குரிய மாநிலம் தமிழ்நாடு. எனினும், தமிழ் மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் மீண்டும் மீண்டும் இந்தியைத் திணிப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

சாலையோர மயில் கற்கள், இரயில் நிலையங்கள், வங்கி போன்ற மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் பலவற்றின் மூலமாகவும், தற்போது இந்தியைப் பயிற்று மொழியாகக்கொண்ட நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் திறக்கவேண்டும் என்கிற மத்திய அரசின் திட்டத்தை, மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் மூலம் வலிந்து திணித்து, சமத்கிருதத்தையும், இந்தியையும், தமிழகத்தின் மீதும் இந்தி பேசாத பிற மாநில மக்களின் மீதும் திணிப்பதற்கு மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சி இந்திய அளவில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே மத்திய அரசால் வலிந்து திணிக்கப்படும், இந்தி சமத்கிருத திணிப்பை இந்த செயற்குழு எதிர்க்கிறது.

மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் மத்தியில் ஆட்சி மொழியாக்கவேண்டும், என இந்த செற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

4). மாநில சுயாட்சி தீர்மானம்.
""''''''''''''""""""""""""""""""""""""""""""'''
இந்தியா என்பது பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் என நமது அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் அவற்றுக்கென வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைச் செயல்படுத்தலாம். அன்னிய படையெடுப்பு போன்ற ஆபத்தான காலங்களில் மட்டும் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசே கையாளலாம். மற்ற நேரங்களில் மாநிலங்கள் தமது அதிகாரங்களைச் சுதந்திரமாகப் பயன்படுத்தலாம். இதுதான் நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் விளக்கம். ஆனால் கடந்த எழுபதாண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றைப் பார்த்தால், மாநிலங்களின் அதிகாரங்கள் மெள்ள மெள்ள பறிக்கப்பட்டு பெருவாரியாக மத்தியில் குவிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

சமூகநீதியின் அடைப்படையில் கிடைக்க வேண்டிய கல்வி, வேலை வாய்ப்பு போன்றவையும், ஜி.எஸ்.டி. மூலமாக மாநிலங்களுக்கான வரி வசூல் செய்யும் உரிமைகள் பறிப்பு போன்றவைகளும், மாநில வளர்ச்சிகளுக்கான நலத்திட்டங்களை முடிவெடுத்து நடைமுறைப் படுத்த மத்திய அரசையே நம்பிக் கிடக்கும் அவலங்கள் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டிருப்பதால், மாநிலங்களுக்கான உரிமைகளை மாநிலங்களே தீர்மானிக்க மாநில முன்னேற்றத்தை தீர்மானிக்கும் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும், அதற்கு மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற தி.மு.க கொண்டு வந்த சட்டமன்ற தீர்மான மசோதாவை மத்திய அரசு ஏற்று மாநிலங்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை இச் செயற்குழு வலியுறுத்துகிறது.

5). தமிழக அரசு பதவி விலக வேண்டி தீர்மானம்.
"""""""""""""""""""""""""""""""""""""”""
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து கொண்டு மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கும் தமிழக அ.இ.அதிமுக எடப்பாடி அரசு மக்களின் நன் மதிப்பை இழந்ததோடு, தனது ஆட்சிக்கான முழு பலத்தையும் இழந்து நிற்கிறது, எனவே மத்திய அரசிற்கு பயந்து மாநில உரிமைகளை பறிகொடுத்து மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே முழு கவனத்தை செலுத்திவரும் தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.

6). நீலவேந்தன் ராணி மற்றும் மகேசுவரனை சமூகநீதிப் போராளிகள் என்று அறிவிக்க வேண்டி தீர்மானம்
"""""""""""""""""""""""""""""""""""""""""
சமூகநீதியின் அடிப்படையில் கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட மூன்று விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டின் பலனால் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அருந்தததியர்கள் ஓரளவிற்கு முன்னேற்றம் கண்டு வருகின்றனர், இந் நிலையில், அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்ற அடிப்படையில் அருந்ததியர் மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப ஆறு விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை தொடர்ந்து போராடி வருகிறது, இந்த கோரிக்கையை கலைஞர் ஆட்சிக்கு பின்னால் வந்த அ.இ.அதிமுக அரசு ஏற்காமல் மெத்தனம் காட்டி வந்ததனால் கடந்த 2013 செப்டம்பர் 26 ஆம் நாள் திருப்பூரில் பேரவையின் அப்போதைய நிதிச்செயலாளர் வழக்கறிஞர் தோழர் நீலவேந்தன் அவர்களும், 2013 நவம்பர் 26 ஆம் நாள் திருச்சியில் அப்போதைய மாநில மகளிர் அணி செயலாளர் தோழர் இராணி அவர்களும், 2017 ஏப்ரல் 11 ஆம் நாள் திருப்பூரில் அப்போதைய திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் வாவிபாளையம் மகேசுவரன் அவர்களும் தீக்குளித்து தன்னைத் தானே எரித்துக் கொண்டு உயிர் ஈகம் செய்து கொண்டனர்.

சமூகநீதி தழைத்தோங்கிய தமிழக மண்ணில் சமூகநீதியின் மீட்சிக்கும், நீட்சிக்கும் தன்னைதானே எரித்துக் கொண்டு உயிர் ஈகம் செய்து கொண்ட மூவரின் தியாகத்திற்கு மதிப்பளித்து, மூவரையும் சமூகநீதி போராளிகள் என அறிவித்து, திருப்பூரிலும், திருச்சியிலும் அவர்களது நினைவாக மணிமண்டபம் எழுப்ப வேண்டும் என்று இந்த செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

7) மனிதக் கழிவுகளை மனிதனே அகற்ற தடை கோரும் தீர்மானம்!
""""""""""""""""""""""""""""""""""""
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் இழிவை தடை செய்து, இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டும், அதை மையமாகக் கொண்டு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல் தீர்ப்பை நடைமுறைப் படுத்தாமலும், கண்காணிப்புக் குழுக்களை அமைக்காமலும், காலம் தாழ்த்தும் தற்போதைய மத்திய மாநில அரசுகளின் அலட்சியப் போக்கால் கடந்த ஆண்டு 2016 .ல் 50 க்கு மேற்பட்ட தூய்மைப் பணி புரியும் தொழிலாளர்கள் மலக்குழியில் இறங்கி மரணமடைந்துள்ளனர், இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, தனிக்கவனம் செலுத்தி நிரந்தர தீர்வு காணவேண்டும் என மத்திய மாநில அரசுகளை இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.

8) மாமன்னர் ஒண்டிவீரன், வீரத்தாய் குயிலி, மதுரைவீரன் ஆகிய வரலாற்றுத் தலைவர்களுக்கு மதிப்பளிக்கக் கோரும் தீர்மானம்!
""""""""""""""""""""""""""""""""""""
முதல் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாமன்னர் ஒண்டிவீரருக்கு கலைஞர் ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மணிமண்டப் பணிகளை முழுமை படுத்துவதோடு, மணிமண்டபத்திற்கு பாத்தியப்பட்ட இடம் அனைத்தையும், முழு பயன்பாட்டிற்கு எடுத்து, அதில் ஒண்டிவீரனாரின் வரலாற்றுத் தகவல்களையும், சுற்றுலா தளத்திற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்கி தருவதோடு, மணிமண்டபத்திற்கு உள்ளே நிறுவப்பட்டுள்ள ஒண்டிவீரனாரின் சிலையை மணி மண்டபத்திற்கு வெளியே பெரிய பீடம் அமைத்து பொதுமக்கள் பார்வையில் படும்படி நிறுவ வேண்டும்,

இதே போன்று முதல் இந்திய விடுதலைப் போராட்ட தற்கொலைப் போராளி வீரத்தாய் குயிலியின் நினைவு சின்னம் தற்போது வீரமங்கை வேலுநாச்சியார் மணிமண்டபத்திற்குள் நிறுவப்பட்டுள்ளது, இதனால் அருந்ததியர் மக்கள் இயல்பாகச் சென்று வீரவணக்கம் செலுத்த முடியாத வகையில் பல்வேறு நெருக்கடிகள் இருந்து வருவதால், அந்த நினைவுச் சின்னத்தை வேறொரு இடத்திற்கு மாற்றி வீரத்தாய் குயிலியின் வீரம் செறிந்த தியாகத்தை பறை சாற்றும் வகையில் மணிமண்டபமாக கட்டி எழுப்ப வேண்டும், அதில் குயிலியின் வரலாற்றுத் தகவல்களை பதிவிட்டு வரு தலைமுறைக்கு நாட்டுப்பற்றை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் முதல் சாதிஒழிப்பு சமூகநீதிப் போராளி மதுரைவீரனுக்கு அவர் வாழ்ந்த தற்போதைய பெரம்பலூர் மாவட்டம், பொம்மனப்பாடியில் மணிமண்டபம் எழுப்ப வேண்டும், இது போன்ற வரலாற்றுத் தலைவர்களின் தியாகத்திற்கு உரிய மரியாதை செய்து மேற்கண்ட பரிந்துரைகளை ஏற்று நடைமுறைப் படுத்திட வேண்டும் என இந்த செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

9) அருந்ததியர்களுக்கு ஆறு விழுக்காடு உள் ஒதுக்கீடும், கிராமப்புற தலித் மக்களுக்கு உழவு நிலமும் கோரும் தீர்மானம்!
""""""""""""""""""""""""""""""""""""""""
தமிழகத்தில் வாழக்கூடிய பட்டியலின மக்களில் மூன்றில் ஒரு பங்காக வாழக்கூடிய அருந்ததியர் மக்களின் வாழ்வியலையும், மக்கள் தொகையையும் கணக்கில் கொண்டு ஏற்கனவே வழங்கப்படிருக்கும் 3 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை 6 விழுக்காடாக உயர்த்தி வழங்கிட வேண்டும்,

இதே போன்று கிராமப்புறத்தில் வாழக்கூடிய விவசாயக் கூலிகளான ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இரண்டு ஏக்கர் உழவு நிலமும், அதனுடன் கூடிய மனையிடமும் வழங்க வேண்டும்,

மேலும் தழ்த்தப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்டு தற்போது வேறு நபர்களால் சட்ட முரணாக கையகப்படுத்தியுள்ள பஞ்சமி நிலம், உச்சவரம்பு நிலம், பூமிதான நிலம் போன்றவற்றை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசை இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவண்
இரா.அதியமான்
நிறுவனர்/தலைவர்
ஆதித்தமிழர் பேரவை
8.10.2017






























Thursday, 5 October 2017

மக்கள் வசிக்கும் பகுதிகளில் கொட்டப்படும் கழிவு நீர் குட்டைகளையும் மருத்துவக்கழிவுகளையும் அகற்றி சுகாதாரத்தை காக்க வலியுறுத்தி கம்பம் தலைமை அரசு மருத்துவரிடம் ஆதித்தமிழர் பேரவையின் நேரில் சந்தித்து கோரிக்கை மனு

மத்திய மாநில அரசுகள் சுகாதாரம் , நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வரும் இந்த கால கட்டத்தில் அனைத்து நோய்களாலும் பாதிக்கப்பட்ட ஏழை எளியோர்க்கு சிகிச்சை அளிக்க வேண்டிய கம்பம் அரசு மருத்துவமனையே அணைத்து நோய்களையும் உண்டாக்கும் டெங்கு கொசுக்களையும் ,வைரஸ்களையும் ,பாக்ட்டீரியாக்களையும் உற்பத்தி செய்யும் வகையில் கழிவுநீர்களை குட்டையில் தேக்கியும் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமலும் நோய்களை பரப்பி வருகின்றனர், இதனால் மருத்துவமனையில் வேலை செய்பவர்கள், சிகிச்சை பெரும் உள் , வெளி நோயாளிகள், மருத்துவமனை வளாகத்தை சுற்றி உள்ள பொது மக்கள், குறிப்பாக கழிவு நீர் குட்டைகள் அருகாமையில் வசிக்கும் ஒண்டிவீரன் நகர் வாழ் பகுதி மக்கள் பெரிதும் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் , எனவே இனியும் நோய் பரவாமல் இருக்க கழிவுநீர் குட்டைகளையும் மருத்துவக்கழிவுகளையும் அகற்றி சுகாதாரத்தை காக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது
மோ .இரணியன்
நகர மாணவரணிச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை
கம்பம்
5-10-2017



Wednesday, 4 October 2017

அமெரிக்காவில் Ambedkar king study circle சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அய்யா அதியமான் அவர்கள் வழங்கிய இரண்டு மணி நேர செவ்வி

அமெரிக்காவில் Ambetkar king study circle புதிய இணையதளத்தை
www.akscusa.org தொடங்கி வைத்து ஆதித்தமிழர் பேரவை கடந்து வந்த பாதை என்ற தலைப்பல் conference call மூலம் அய்யா அதியமான் அவர்கள் ஆற்றிய செவ்வி கீழ
(நம் வரலாற்று முழுதகவல்களையும் விரிவாக விவரித்துள்ளார்)

******
செவ்வி mp3 - https://drive.google.com/file/d/0B-Dkvyw7NXuYX2VFaU9SVGRvMWc/view?usp=drivesdk
-
Youtube link - https://youtu.be/YBqAPowaLhE

அமெரிக்காவில் Ambedkar king study circle சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அய்யா அதியமான் அவர்கள் வழங்கிய இரண்டு மணி நேர செவ்வி
***********

அமெரிக்காவில் Ambedkar king study circle சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அய்யா அதியமான் அவர்கள் வளங்கிய முழு செவ்வி ( ஒரு மணி நேரம் முடிவு செய்யப்பட்டு தொடங்கிய செவ்வி இரண்டு மணி நீடித்தது ) இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் ஆதித்தமிழர்களின் வரலாறு புத்தகங்கள்,ஆதித்தமிழர் பேரவையின் செயல்பாடுகள் போன்றவற்றை ஆதித்தமிழர் பேரவை இணையம் மூலம் படித்து அந்த தகவல்கள் மிகச்சிறப்பாக இருந்தததையும் மேலும் தங்களுக்கான வரலாற்று தெளிவுகளை கேட்டு பெற்று அய்யா அதியமான் அவர்களுக்கும் ஆதித்தமிழர் பேரவையின் சமரசமற்ற நீலச்சட்டை போராளிகளும் கருத்தரங்கத்தில் கலந்து கொண்டவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

செவ்வி mp3 - https://drive.google.com/file/d/0B-Dkvyw7NXuYX2VFaU9SVGRvMWc/view?usp=drivesdk
-
Youtube link - https://youtu.be/YBqAPowaLhE

அமெரிக்காவில் san francisco மாகாணத்தின் California வில் உள்ள Ambedkar king study circle சார்பில் நடைபெற்ற உலக கருத்தரங்கில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் கலந்துக் கொண்டு "இந்திய சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காய் போராடிவரும் ஆதித்தமிழர் பேரவை கடந்து வந்த பாதைகள் " என்ற தலைப்பில் Conference CALL மூலம் கருத்துரையாற்றினார் ,
அதனை தொடர்ந்து கருத்தரங்கத்தில் கலந்து கொண்டர்வர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்தார்

நேரம்

India
September 30 - 2017
Time 7am to 8 am

USA
September 29 - 2017

PST (USA)
6.30pm to 7.30pm

CST (USA)
8.30pm to 9.30pm

EST (USA)
9.30pm to 10.30pm

Tuesday, 3 October 2017

அமெரிக்காவில் Ambedkar king study circle சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அய்யா அதியமான் அவர்கள் வழங்கிய இரண்டு மணி நேர செவ்வி



அமெரிக்காவில்  Ambedkar king study circle சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அய்யா அதியமான் அவர்கள் வளங்கிய முழு செவ்வி ( ஒரு மணி நேரம் முடிவு செய்யப்பட்டு தொடங்கிய செவ்வி இரண்டு மணி நீடித்தது ) இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் ஆதித்தமிழர்களின் வரலாறு புத்தகங்கள்,ஆதித்தமிழர் பேரவையின் செயல்பாடுகள் போன்றவற்றை ஆதித்தமிழர் பேரவை இணையம் மூலம் படித்து அந்த தகவல்கள் மிகச்சிறப்பாக இருந்தததையும் மேலும் தங்களுக்கான வரலாற்று தெளிவுகளை கேட்டு பெற்று  அய்யா அதியமான் அவர்களுக்கும் ஆதித்தமிழர் பேரவையின் சமரசமற்ற நீலச்சட்டை போராளிகளும் கருத்தரங்கத்தில் கலந்து கொண்டவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

செவ்வி -  இங்கே சொடுக்கவும்

அமெரிக்காவில் san francisco மாகாணத்தின் California வில் உள்ள Ambedkar king study circle சார்பில் நடைபெற்ற உலக கருத்தரங்கில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் கலந்துக் கொண்டு "இந்திய சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காய் போராடிவரும் ஆதித்தமிழர் பேரவை கடந்து வந்த பாதைகள் " என்ற தலைப்பில் Conference CALL மூலம் கருத்துரையாற்றினார் ,
அதனை தொடர்ந்து கருத்தரங்கத்தில் கலந்து கொண்டர்வர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்தார்

நேரம்

India
September 30 - 2017
Time 7am to 8 am

USA
September 29 - 2017

PST (USA)
6.30pm to 7.30pm

CST (USA)
8.30pm to 9.30pm

EST (USA)
9.30pm to 10.30pm