அண்மையச்செய்திகள்

Tuesday, 23 August 2016

காவேரி ஆற்றில் சாய கழிவுகளையும் குப்பை கொட்டுவதையும் தடுக்க கோரி ஆதித்தமிழர் பேரவையினர் மனு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களை பேரவையின் மாவட்ட செயலாளர் வீரகோபால் தலைமையில் சந்தித்து காவேரி ஆற்றில் சாய கழிவுகளையும் குப்பை கொட்டுவதையும் தடுக்க கோரி மனு அளித்த போது

பெறுநர் : உயர்திரு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள். ஈரோடு மாவட்டம்..

பொருள் : கடந்த 17/8/2016 அன்று தேதியிட்ட ஜூனியர் விகடன் வர இதழில் " கேன்சர் திகிலில் ஈரோடு " என்கிற தலைப்பில் நமது மாநகரத்தில் உள்ள இரு ஒடைகளில் நீர் மாசுவினாலும், மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரினால் பொது மக்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதாக ஆய்வு அறிக்கையை படிக்க நேர்ந்தது.. எனவே நமது பொது மக்களின் நன்மை கருதி அச்சத்தை போக்கும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் சார்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்வது தொடர்பாக...

அய்யா வணக்கம்.. நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக ,ஆதித்தமிழர் நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் தலைமையில் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு ஆதரவாகவும் அவர்களின் நலனில் அக்கறையுடனும் செயல்பட்டு வருகின்றோம்..

இந்நிலையில் கடந்த 17/8/2016 அன்று வெளிவந்த ஜூனியர் விகடன் வர இதழில் " கேன்சர் திகிலில் ஈரோடு " என்கிற தலைப்பில் ஈரோட்டில் உள்ள தோல் ,சாய தொழிற்சாலைகளில் வரும் கழிவு நீர் காவிரி ஆற்றில் கலந்தும் , நீரேற்றும் நிலையத்தின் அருகில் கொட்டப்படும் குப்பைகளாலும் , ஈரோட்டின் மத்தியில் செல்லும் செல்லும் இரு ஒடைகளில் செல்லும் கழிவு நீரினால் பொது மக்கள் அருந்தும் குடிநீர் மாசு அடைந்து உள்ளது என்றும் ,அதன் அடிப்படையில் ஈரோடை என்கிற அமைப்பு ஆய்வு மேற்கொண்டு பல பொது மக்களுக்கு புற்றுநோய் அறிகுறி ஏற்பட்டு உள்ளது என்று அயிவின் அறிக்கை கூறுகிறது..

எனவே சமுகம் அவர்கள் ஈரோடு வாழ் பொது மக்களின் அச்சத்தை தீர்க்கும் வகையிலும் மக்களின் சுகாதாரமான நீர் கிடைக்க வேண்டும் என்கிற அடிப்படையில் மாவட்டத்தின் சார்பாக வெள்ளை அறிக்கை வெளியீட்டு மக்களின் துயர் துடைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

( மலேரியா, டெங்கு போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களை முற்றிலும் ஒழிக்க போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை கேட்டுகொள்கிறேன்...

உடுமலையில் திவிக தலைமையில் நடைபெற்ற நம்புங்க அறிவியலை ,நம்பாதீங்க சாமியார்களை பரப்புரை பயணத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்துகொண்டு பரப்புரையில் ஈடுபட்டனர்

உடுமலையில் திவிக தலைமையில் நடைபெற்ற நம்புங்க அறிவியலை ,நம்பாதீங்க சாமியார்களை பரப்புரை பயணத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்துகொண்டு பரப்புரையில் ஈடுபட்டனர்
******************************
உடுமலையில் இன்று நடைபெற்ற
👉👉👉👉
"நம்புங்க அறிவியலை;
நம்பாதீங்க சாமியார்களை..."
👍👍👍👍👍
-பரப்புரைப் பயணத்தில்

ஆதித்தமிழர் பேரவையினர் துணை பொதுச்செயலாளர் தோழ்ர் ஈழவேந்தன் அவர்கள் தலைமையில் கலந்து கொண்டு பரப்புரை செய்தனர்



மலக்குழியில் மனிதர்ககள் இறக்கும் விஷயத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு பொது நிதியிலிருந்து இழப்பீடுத் தொகை வழங்கிட மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு



அனுப்புநர்:
பெரு.தலித்ராஜா
ஆதித்தமிழர் பேரவை.
மதுரை தெற்கு மாவட்டம்.
பெறுநர்: உயர்திரு,
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள். மதுரை மாவட்டம்.
ஐயா,வணக்கம்,
பொருள்: உச்சநீதி மன்ற தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு பொது நிதியிலிருந்து இழப்பீடுத் தொகை வழங்கிட வேண்டுதல்- தொடர்பாக.
-------
மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த துப்பரவு பணியாளரான சோலைநாதன் (24),என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன் மதுரை மேலக்கால் ரோடு கோச்சசடை பகுதியிலுள்ள சாந்திசதன் அடுக்குமாடி குடியிருப்பு வளகத்தில் பாதாளச்சாக்கடை கழிவு நீரை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளார். மனிதக்கழிவினை மனிதனே அகற்றுவது மனித உரிமை மீறல் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ள நிலையில்,இவ்வாறு மனிதர்களை ஈடுபடுத்தி உயிரிழக்கும் போது இழப்பீட்டுத் தொகையான ரூ 10 இலட்சத்தை அரசு நிதியிலிருந்து வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.இதை மீறுகின்ற வகையில் சோலைநாதன் இறப்பிற்க்கு சாந்திசதன் குடியிருப்போர் நலச்சங்கம் மூலமாக முதல்கட்ட நிதி ரூ 2 இலட்சத்தை RDO தலைமையில் வழங்கியிருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மீறப்பட்டுள்ளது. மேலும், பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுநீர் அடைப்பை சுத்தம் செய்வதற்க்கு சார்பு ஒப்பந்தகாரர்கள் மூலம் சட்ட விரோதமாக ஆசைவார்த்தை கூறி இப்பணியினை செய்யச் சொல்லி கூறிவருகிறார்கள். இதில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்தி சட்ட விரோதமாக செயல்படும் சார்பு ஒப்பந்தகாரர்களை இனம் கண்டு இந்நிலையை ஒழிக்க வேண்டுமெனவும்,
உச்சநீதிமன்ற தீர்ப்பினை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்திரு,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை மிகவும் தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றேன்.
தேதி:08-08-2016.
இடம்:மதுரை.
இப்படிக்கு,
பெரு.தலித்ராஜா

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாமன்னர் ஒண்டிவீரன் வீரவணக்க நினைவு நாள் ஆலோசணை கூட்டம்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 08.08.16 மாமன்னர் ஒண்டிவீரன் வீரவணக்க நினைவு நாள் ஆலோசணை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில்் கலந்து கொண்டதோழர்கள் கபீர் நகர் கார்திக் ஆதித்தமிழன்,கலிவருணன், நாஞ்சில் வளவன், அசோக், மாரிபகடை, முகிலன் செண்பகராஜ், மற்றும் நெல்லை கிழக்கு. மேற்கு மாவட்ட தோழர்கள கலந்து கொண்டனர்



தேனியில் சாதிய வன்கொடுமை. காவல்துறையினர் அலட்சியம் ஆதித்தமிழர் பேரவையின் கண்டண சுவரொட்டி

தேனியில் சாதிய வன்கொடுமை. காவல்துறையினர் அலட்சியம்
ஆதித்தமிழர் பேரவையின் கண்டண சுவரொட்டி

---நீசிவா ஆதித்தமிழர் பேரவை தேனி

மதுரையில் மலக்குழியில் இறந்த சோலைநாதன் குடும்பத்திற்கு நீதி கிடைக்க சாலை மறியல் போராட்டம் மதுரை மாவட்ட ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் களத்தில்

மதுரையில் மலக்குழியில் இறந்த சோலைநாதன் குடும்பத்திற்கு நீதி கிடைக்க சாலை மறியல் போராட்டம் மதுரை மாவட்ட ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் களத்தில்








மாற்றுத்திறனாளிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாநில மகளிர் அணி செயலாளர் தோழர் ஜானகி அம்மாள் அவர்கள் பங்கேற்றார்கள

5-8-2016 மதுரையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாநில மகளிர் அணி செயலாளர் தோழர் ஜானகி அம்மாள் அவர்கள் பங்கேற்றார்கள