அண்மையச்செய்திகள்

Tuesday, 23 August 2016

காவேரி ஆற்றில் சாய கழிவுகளையும் குப்பை கொட்டுவதையும் தடுக்க கோரி ஆதித்தமிழர் பேரவையினர் மனு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களை பேரவையின் மாவட்ட செயலாளர் வீரகோபால் தலைமையில் சந்தித்து காவேரி ஆற்றில் சாய கழிவுகளையும் குப்பை கொட்டுவதையும் தடுக்க கோரி மனு அளித்த போது

பெறுநர் : உயர்திரு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள். ஈரோடு மாவட்டம்..

பொருள் : கடந்த 17/8/2016 அன்று தேதியிட்ட ஜூனியர் விகடன் வர இதழில் " கேன்சர் திகிலில் ஈரோடு " என்கிற தலைப்பில் நமது மாநகரத்தில் உள்ள இரு ஒடைகளில் நீர் மாசுவினாலும், மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரினால் பொது மக்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதாக ஆய்வு அறிக்கையை படிக்க நேர்ந்தது.. எனவே நமது பொது மக்களின் நன்மை கருதி அச்சத்தை போக்கும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் சார்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்வது தொடர்பாக...

அய்யா வணக்கம்.. நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக ,ஆதித்தமிழர் நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் தலைமையில் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு ஆதரவாகவும் அவர்களின் நலனில் அக்கறையுடனும் செயல்பட்டு வருகின்றோம்..

இந்நிலையில் கடந்த 17/8/2016 அன்று வெளிவந்த ஜூனியர் விகடன் வர இதழில் " கேன்சர் திகிலில் ஈரோடு " என்கிற தலைப்பில் ஈரோட்டில் உள்ள தோல் ,சாய தொழிற்சாலைகளில் வரும் கழிவு நீர் காவிரி ஆற்றில் கலந்தும் , நீரேற்றும் நிலையத்தின் அருகில் கொட்டப்படும் குப்பைகளாலும் , ஈரோட்டின் மத்தியில் செல்லும் செல்லும் இரு ஒடைகளில் செல்லும் கழிவு நீரினால் பொது மக்கள் அருந்தும் குடிநீர் மாசு அடைந்து உள்ளது என்றும் ,அதன் அடிப்படையில் ஈரோடை என்கிற அமைப்பு ஆய்வு மேற்கொண்டு பல பொது மக்களுக்கு புற்றுநோய் அறிகுறி ஏற்பட்டு உள்ளது என்று அயிவின் அறிக்கை கூறுகிறது..

எனவே சமுகம் அவர்கள் ஈரோடு வாழ் பொது மக்களின் அச்சத்தை தீர்க்கும் வகையிலும் மக்களின் சுகாதாரமான நீர் கிடைக்க வேண்டும் என்கிற அடிப்படையில் மாவட்டத்தின் சார்பாக வெள்ளை அறிக்கை வெளியீட்டு மக்களின் துயர் துடைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

( மலேரியா, டெங்கு போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களை முற்றிலும் ஒழிக்க போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை கேட்டுகொள்கிறேன்...

No comments:

Post a Comment