அண்மையச்செய்திகள்

Tuesday, 23 August 2016

மலக்குழியில் மனிதர்ககள் இறக்கும் விஷயத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு பொது நிதியிலிருந்து இழப்பீடுத் தொகை வழங்கிட மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனுஅனுப்புநர்:
பெரு.தலித்ராஜா
ஆதித்தமிழர் பேரவை.
மதுரை தெற்கு மாவட்டம்.
பெறுநர்: உயர்திரு,
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள். மதுரை மாவட்டம்.
ஐயா,வணக்கம்,
பொருள்: உச்சநீதி மன்ற தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு பொது நிதியிலிருந்து இழப்பீடுத் தொகை வழங்கிட வேண்டுதல்- தொடர்பாக.
-------
மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த துப்பரவு பணியாளரான சோலைநாதன் (24),என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன் மதுரை மேலக்கால் ரோடு கோச்சசடை பகுதியிலுள்ள சாந்திசதன் அடுக்குமாடி குடியிருப்பு வளகத்தில் பாதாளச்சாக்கடை கழிவு நீரை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளார். மனிதக்கழிவினை மனிதனே அகற்றுவது மனித உரிமை மீறல் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ள நிலையில்,இவ்வாறு மனிதர்களை ஈடுபடுத்தி உயிரிழக்கும் போது இழப்பீட்டுத் தொகையான ரூ 10 இலட்சத்தை அரசு நிதியிலிருந்து வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.இதை மீறுகின்ற வகையில் சோலைநாதன் இறப்பிற்க்கு சாந்திசதன் குடியிருப்போர் நலச்சங்கம் மூலமாக முதல்கட்ட நிதி ரூ 2 இலட்சத்தை RDO தலைமையில் வழங்கியிருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மீறப்பட்டுள்ளது. மேலும், பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுநீர் அடைப்பை சுத்தம் செய்வதற்க்கு சார்பு ஒப்பந்தகாரர்கள் மூலம் சட்ட விரோதமாக ஆசைவார்த்தை கூறி இப்பணியினை செய்யச் சொல்லி கூறிவருகிறார்கள். இதில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்தி சட்ட விரோதமாக செயல்படும் சார்பு ஒப்பந்தகாரர்களை இனம் கண்டு இந்நிலையை ஒழிக்க வேண்டுமெனவும்,
உச்சநீதிமன்ற தீர்ப்பினை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்திரு,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை மிகவும் தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றேன்.
தேதி:08-08-2016.
இடம்:மதுரை.
இப்படிக்கு,
பெரு.தலித்ராஜா

No comments:

Post a comment