அண்மையச்செய்திகள்

Monday, 25 July 2016

செல்வி மாயாவதியை இழிவுபடுத்திய பா.ஜ.க துணைத் தலைவர் தயாசங்கர் சிங்கை வன்கொடுமை தடுப்ச் சட்டத்தில் கைது செய்யவேண்டும் ,குஜராத் தலித்துகள் நடத்தும் தலித் போராட்டத்தை போல் தமிழகத்தில் நடத்துவோம் ----நிறுவனர் அதியமான் அறிக்கை

நிறுவனர் 'அய்யா' அதியமான் அறிக்கை
"""""""""""""""""
உபி.யின் முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான செல்வி மாயாவதியை இழிவுபடுத்திய பா.ஜ.க துணைத் தலைவர் தயாசங்கர் சிங்கின் சாதிவெறி, இந்துத்துவ வெறியாட்டத்தைக் ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.
"""""""""""""""""""""
செத்தமாடு ஒன்றின் தோலை அகற்றியதாகச் சொல்லி குஜராத் மாநில பசு பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த இந்து மதவெறியர்கள், நான்கு தலித்துகளை உணா என்ற இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்,
இதன் காரணமாக குஜராத் மாநிலம் முழுவதும் தலித் மக்கள் ஒன்று திரண்டு போராடி வருகின்றனர் அப் போராட்டத்தின் போது தலித்துகள் பலர் தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியும் செய்துள்ளனர், இதில் ஒருவர் உயிரிழந்தும் உள்ளார். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதையொட்டி குஜராத் மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப் பிரச்சனையை நாடாளுமன்றத்திலும் மாநிலங்களவையிலும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்,
இத் தாக்குதலைக் கண்டித்து மாநிலங்களவையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் செல்வி மாயாவதி தீவிரப்படுத்தி போராடி வருகிறார். இப் போராட்டங்களின் விளைவாக தலித்துகளைத் தாக்கிய ஒரு சிலரைக் கைது செய்தும், பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு இழப்பீட்டுத் தொகையை அறிவித்தும் குஜராத் மாநில பா.ஜ.க. அரசு கண்துடைப்பு நாடகம் நடத்திவருகிறது.
குஜராத்தில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைக் கண்டித்ததற்காக செல்வி மாயாவதி அவர்களை உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் தயாசங்கர் சிங் சாதிவெறியோடு சொல்ல நாக்கூசும் வார்த்தைகளால் இழிவுபடுத்தி பேசியிருப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது, இப்படி அவர் நடந்து கொண்ட ஈனச்செயலுக்கு வெறும் கட்சி பதவி நீக்கம் என்ற கண்துடைப்பு நாடகத்தை மட்டும் நடத்தாமல், தயாசங்கர் சிங்கை உடனடியாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு,
குஜராத் தலித் மக்களை கொடூரமாகத் தாக்கிய பசு பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட இந்து மதவெறி அமைப்புகளை தடை செய்து தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய பா.ஜ.க அரசை ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.
தலித் மக்களை பொதுஇடத்தில் வைத்து தக்கியவர்களை அதே இடத்தில் வைத்து அதேபோன்று தண்டிக்க வேண்டும், செத்த மாடுகளை அப்புறப்படுத்தும் வேலைகளை இனி பசு பாதுகாப்பு அமைப்பே செய்து கொள்ளட்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து குஜராத்தில் தலித் மக்கள் நடத்திவரும் போராட்டம், இந்தியா முழுவதும் வலுப்பெற்று விரிவடைந்து வருகிறது, இப்போராட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவை தனது முழு ஆதரவை தெரிவிப்பதோடு, தமிழகத்திலும் இதே போராட்டத்தை ஆதித்தமிழர் பேரவை முன்னெடுக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
இவண்
இரா.அதியமான்,
நிறுவனர்,
ஆதித்தமிழர் பேரவை.
No comments:

Post a comment