அண்மையச்செய்திகள்

Monday, 25 July 2016

திருச்செங்கோட்டில் நடந்த தூய்மைத் தொழிலாளர்களின் துணிவுமிக்க போராட்டத்தால். அடி பணிந்தது 'அதிமுக' அதிகார வர்க்கம்!

திருச்செங்கோட்டில் நடந்த தூய்மைத் தொழிலாளர்களின் துணிவுமிக்க போராட்டத்தால்.
அடி பணிந்தது 'அதிமுக' அதிகார வர்க்கம்!
"""""""""""""""""""""""""
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நாகராட்சி 14.வது வார்டு 'அதிமுக' நகர்மன்ற உறுப்பினர் திலகவதியின் கணவர் வைரவேல் என்பவர் தனது வீட்டு சொந்த வேலைகளை செய்யச்சொல்லி துப்புரவு பணியாளர்களை வற்புறுத்தி மிரட்டியுள்ளார், அவரது மிரட்டலுக்கு பணிய மறுத்த துப்புரவுத் தொழிலாளர்கள்! பொதுவேலை எதுவாக இருந்தாலும் கொடுங்கள் செய்கிறோம், தங்களது தனிப்பட்ட வீட்டு வேலைகளை செய்ய எங்களால் முடியாது என்று மறுக்கவே, ஆத்திரம் கொண்ட வைரவேல், துப்புரவு தொழிலாளர்களை மிரட்டி, தகாத வார்த்தைகள் பேசி, தக்குதலுக்கு முற்பட்டுள்ளார், இந்த தகவலை அறிந்த ஆதித்தமிழர் தூய்மைத் தொழிலாளர் பேரவையின் திருச்செங்கோடு தலைவர் தோழர் பாண்டியன் தலைமையில் திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தி முழக்கமிட்டதால்..
அந்த தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி அவர்கள் விரைந்து வந்து சமாதானம் பேசியும் உடன்படாத தொழிலாளர்கள், வைரவேல் பகிரங்க மன்னிப்பு கேட்கவே போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு சென்றுள்ளனர்,
இந்த போராட்டத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 130 பேர் உட்பட ஆதித்தமிழர் பேரவை நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் தோழர், தமிழரசு, மாவட்ட தலைவர் தோழர், கந்தசாமி உள்ளிட்ட பேரவை பொறுப்பாளர்களும் திரளாக பங்கேற்றனர்.
திருச்செங்கோடு நகராட்சியின் வரலாற்றில் இதுபோன்ற துணிச்சல்மிக்க துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம் இதுவே முதன் முதல்! இதற்கு காரணம் 'அய்யா' அதியமானின் அறிவார்ந்த வழிகாட்டுதலே...
தொழிலாளிகள் ஒற்றுமை ஓங்கட்டும்! அதிகாரவர்க்கத்தின் கொட்டம் அடங்கட்டும்!!.
13.7.2016
தகவல்..
தமிழரசு,
நாமக்கல், மேற்கு மாவட்ட செயலாளர்.
 ஆதிததமிழர் பேரவை
 

No comments:

Post a comment