அண்மையச்செய்திகள்

Monday, 4 January 2016

கரூர் மாவட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு சாலை மறியல் செய்யப்பட்டதின் விளைவாக அரசு உடனடியாக இயந்திரத்தை கொண்டு வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி குடிநீர் வசதி செய்தி தந்தார்கள்

 கரூர் மாவட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு கடவூர் ஒன்றியம், பூலாம்பட்டி அருந்ததியர் பகுதியில் குடிநீர் பிரச்சினைமற்றும் அடிப்படை வசதிகள் செய்துதர கோரி சாலை மறியல் செய்யப்பட்டது
அதன் விளைவாக அதிகாரிகள் இந்த பகுதிக்கு வந்து இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி குடிநீர் வசதி செய்து தந்தார்கள் ,
பேரவை தோழர்களுக்கு வாழ்த்துக்கள்

1/1/2016 அன்று கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பேரவையின் கொள்கைகளை மக்களிடையே விளக்கி ஒடுக்கப்பட்ட அருந்ததியர் மக்கள் அமைப்பாக வேண்டியதின் அவசியத்தை எடுத்து கூறினர் கரூர் மாவட்ட பேரவை தோழர்கள்

1/1/2016 அன்று  கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், சேவாப்பூர், இடையப்பட்டி, காமராசர் நகர், ரெட்டியாபட்டி , சுக்காம்பட்டி ஆகிய பகுதிகளில் சென்று
ஆதித்தமிழர் பேரவையின் கொள்கைகளை மக்களிடையே விளக்கி ஒடுக்கப்பட்ட அருந்ததியர் மக்கள் அமைப்பாக வேண்டியதின் அவசியத்தை எடுத்து கூறினார் தோழர் முல்லையரசு மற்றும் பேரவை தோழர்கள்


04.1.16 அன்று நெல்லை மாவட்ட தன்னூத்து கிராம சுடுகாடு ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தன்னூத்து அருந்ததியர் கிராம மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி பாடை கட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பிணத்தை புதைக்கும் போராட்டம் நடைபெற்றது

 சுடுகாடு ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தன்னூத்து அருந்ததியர் கிராம மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி பாடை கட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பிணத்தை புதைக்கும் போராட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட தன்னூத்து கிராம மக்களுக்கு பாத்தியப்பட்ட  சுடுகாடு நில ஆக்கிரமிப்பை மீட்டு தன்னூத்து அருந்ததியர் கிராம மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி பாடை கட்டி நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக வளாகத்தில் பிணத்தை புதைக்கும் போராட்டம் .நடைபெற்றது
இதில்


 தலைமை
தோழர் நெல்லை மாயா (மாநில துணை பொதுச்செயலாளர்)
தோழர் அருந்ததி அரசு (மாநில இளைஞர் அணிச்செயலாளர் )

முன்னிலை
தோழர் ஆதித்தமிழன் மாவட்ட செயலாளர் (கிழக்கு)
தோழர் ஆடுகாளிமுருகன் மாவட்ட தலைவர் (கிழக்கு)
தோழர் கலிவர்ணன் மாவட்ட செயலாளர் (மேற்கு)
தோழர் நாங்கில் வளவன் மாவட்ட தலைவர் (மேற்கு )
தோழர் தமிழ்வேந்தன் ,தோழர் மானூர் ராஜா ,தோழர் மு.அம்பேத்கர் ,தோழர் தன்நூத்து வீரத்தமிழன் ,தோழர் நெல்லை சுந்தர் ,தோழர் காந்திநகர் ரங்கசாமி தென் திருவள்ளுவன் ,தோழர் அம்பேத்கர் நகர் ,வள்ளியூர் செல்வகுமார் ,தோழர் சங்கை சங்கர் ,தோழர் களக்காடு அன்பு ,மற்றும் திரளான பேரவை தொண்டர்கள் மற்றும் தன்நூத்து  ஊர் பொதுமக்கள் திரளானவர்கள் கலந்து கொண்டனர் 

























Sunday, 3 January 2016

இரயில்வே மந்திரி குறித்த அய்யா அதியமான் அவர்களின் வேண்டுகோள் செய்தி அறிக்கையை திவிக வலைத்தளம் வெளியீடு!

இரயில்வே மந்திரி குறித்த அய்யா அதியமான் அவர்களின் வேண்டுகோள் செய்தி அறிக்கையை திவிக வலைத்தளம் வெளியீடு!
திராவிடர் விடுதலை கழகத்திற்கு நன்றிகள்

திராவிடர் விடுதலை கழகத்தின் இணையதளத்தின் அய்யா அதியமான் அவர்களின் செய்தியை பார்க்க இங்கு சொடுக்கவும்  

அடிமை தொழிலிருந்து விடுபட்டு சுய தொழில் செய்து வரும் அருந்ததியருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ரௌடிகளை உடனே கைது செய் ஆதித்தமிழர் பேரவை எச்சரிக்கை

அடிமை தொழிலிருந்து விடுபட்டு சுய தொழில் செய்து வரும் அருந்ததியருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ரௌடிகளை உடனே கைது செய் ஆதித்தமிழர் பேரவை தெ.கல்லுபட்டி ஒன்றியம் மதுரை தெற்கு மாவட்டத்தின் எச்சரிக்கை



(1-1-2016) அன்று மாவீரன் கஞ்சிமலையின் ஒன்பதாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு திருப்பூர் மாவட்ட செயலாளர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது

(1-1-2016) அன்று மாவீரன் கஞ்சிமலையின் ஒன்பதாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு திருப்பூர் மாவட்ட செயலாளர் தங்கவேல் தலைமையில் வீரக்குமார் வெள்ளிமலை முருகன் வீரன் பூக்கடை இராமன் பல்லடம் அண்ணாத்துரை ச.சு.ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டர்




(1-1-2016) அன்று திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஆதித்தமிழர் பேரவையின் ஆட்டோ ஒட்டுனர் சங்க கிளை திறப்புவிழா திறக்கப்பட்டது

(1-1-2016) அன்று திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஆதித்தமிழர் பேரவையின் ஆட்டோ ஒட்டுனர் சங்க கிளை திறப்புவிழா நகர செயலாளர் வெள்ளிமலை தலைமையில் மாவட்ட செயலாளர் தங்கவேல் பல்லடம் அண்ணாத்துரை ஈழவேந்தன் ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்