அண்மையச்செய்திகள்

Tuesday, 19 January 2016

சென்னையில் கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி நால்வர் மரணம்.. சட்டத்தை வழுவாக்கி உயிரிழப்புகளை தடுக்க முன்வராத தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.

சென்னையில் கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி நால்வர் மரணம்..
சட்டத்தை வழுவாக்கி உயிரிழப்புகளை தடுக்க முன்வராத தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.
""""""""""""""""""""""
சென்னை காஞ்சிபுரம் மாவட்டம் துரைப்பாக்கத்தை அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள தனியார் உணவகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி குமார், சரவணன், வேல்முருகன், ஆகிய மூன்று துப்புரவு தொழிலாளர்களும் உணவக உரிமையாளர் ராஜேஸ் உட்பட நான்கு பேரும் உயிரிழந்தனர்.

இப்படிப்பட்ட மலக்குழி மரணங்கள், விஷவாயு மரணங்கள் போன்றவை நாளும் அதிகரித்து வருவதும், அதற்கு நீதி கேட்டு மக்கள் போராடுவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்ட சூழலில் சட்டத்தை வழுவாக்கி இப்பணியில் ஈடுபடுபவர்களை தடுத்து நிறுத்த வேண்டிய தமிழகஅரசு, துப்புரவு தொழிலாளர்களை தீண்டாமை உணர்வோடு பார்ப்பது தொடர்கதையாகி வருகிறது.

சென்னையில் மரணம் அடைந்தவர்களுக்காக போராட்டம் நடந்து கொண்டிருக்கும் இதே நேரத்தில் தமிழகத்தின் இன்னொறு இடத்தில் மலக்குழியில் மனிதன் இறங்கும் நிலைதான் நீடிக்கிறது, ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து போராடும் கட்சிகளும் பொதுமக்களும் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இத்தொழிலில் ஈடுபடும் சக மனிதர்களை சகித்துக்கொண்டு வேடிக்கை பார்க்கும் வெக்கக்கேடும் நடக்கத்தான் செய்கிறது.

கெல்மெட் அணிவதை கட்டாயமாக்கிய நீதிமன்ற தீர்ப்பை நடைமுறை படுத்த தீவிரம் காட்டும் அரசு, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கத் தயாராக இல்லை,

உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி 1993 முதல் விஷ வாயு தாக்கி மரணமடைந்த தூய்மைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து அவர்களது குடும்பத்தின் மறுவாழ்விற்கு வழங்க வேண்டிய 10 லட்சம் நிவாரணங்களை வழங்காமலும்,

உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள அனைத்து பரிந்துரைகளையும் நடைமுறைப் படுத்த முயற்சி ஏதும் எடுக்காமலும் தமிழக அரசு வேடிக்கை பார்த்து சட்டத்திற்கு புறம்பாவே நடந்து கொள்கிறது.

பாதாள சாக்கடையில் இறங்கி கழிவுகளை அகற்றுவது, மலக்குழியில் (septic tank) இறங்கி மனித கழிவுகளை அகற்றுவது போன்ற தொழிலில் ஈடுபடுபவர்கள் மட்டும்தான்! கையால் மலமல்லும் தொழிலாளர்கள் என வரம்பு விதித்து தட்டிக்கழிக்கப் பார்க்கிறது.

எனவே தூய்மைப் பணியில் ஈடுபடுபடும் அனைவருமே கையால் மலமல்லும் தொழிலாளர்கள்தான்! என அரசு அறிவிப்பு செய்து அவர்களது குடும்பத்தின் மறுவாழ்விற்கு வழிவகை செய்திட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,

மாநகராட்சி, நகராட்சி, சிற்றூராட்சி மற்றும் அரசு மருத்துவமனை, காவல்நிலையம், தனியார் ஹோட்டல்கள், விடுதிகள், தனியார் மருத்துவமனைகள் போன்றவற்றில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவரையும் கையால் மலமல்லும் தொழிலாளர் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும்,

ஒப்பந்த முறையில் உழைப்பை சுரண்டும் தனியார் முறையை முற்றிலும் ரத்து செய்து அனைவரையும் நிரந்தர பணியாளர்களாக அறிவிப்பு செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு,

நாட்டில் உள்ள எந்த மனிதனும் இன்னொரு மனிதனின் மலத்தை அள்ளுவது அவமானத்துக்குறியது. என்ற எண்ணத்தோடு இந்த தொழிலை மேலை நாடுகளில் உள்ளது போல நவீன எந்திரங்கள் கொண்டு அகற்றுவதற்கு ஏற்றவாறு, நவீனப்படுத்த வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

சென்னையில் விஷ வாயு தாக்கி மரணமடைந்தவர்களின் குடுப்பத்தாருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும், இதைப்போன்ற மரணங்களை தடுத்திட தமிழக அரசு சட்டத்தை கூர்மைப் படுத்தி போர்கால நடவைக்கையில் இறங்கிட வேண்டும் என வலியுறுத்துகிறது.

இவண்..
இரா.அதியமான்,
நிறுவனர்
ஆதித்தமிழர் பேரவை.
19.1.2016

இரங்கல் செய்தி 19.1.2016 --திண்டுக்கல் மேற்கு மாவட்ட பேரவையின் முன்னால் செயலாளர் தோழர் விடுதலை அவர்களின் 70.வயது நிறைந்த தாயார் வெள்ளையம்மாள் அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று மாலை காலமானார்ஆதித்தமிழர் பேரவை தலைமைக்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

இரங்கல் செய்தி
            19.1.2016
"""""""""""""""""""""""""
திண்டுக்கல் மேற்கு மாவட்ட பேரவையின் முன்னால் செயலாளர் தோழர் விடுதலை அவர்களின் 70.வயது நிறைந்த தாயார் வெள்ளையம்மாள் அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று மாலை காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்,

அவரது உடல் ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை அருகில் உள்ள அவரது சொந்த ஊரான கொசவப்பட்டியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நல்லடக்கம் நாளை நடைபெறும்.

அன்புத்தாயாரை இழந்து வாடும் விடுதலையின் குடுப்பத்தாருக்கும், அவரது உறவினர்களுக்கும் ஆதித்தமிழர் பேரவை தலைமைக்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
___________________
பேரவை தலைமை

திண்டுக்கல் மாவட்டத்திற்க்கு வந்தடைந்த பீம் யாத்திரர்களை திண்டுக்கல் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் வரவேற்றனர்

"மலக்குழியில் மனிதனை இறக்காதே"
ஆளும் அதிகார வர்க்கங்கள் துப்பரவு தொழிலாளிகளிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும் என இந்தியா முழுவதும் பீம் யாத்திரா பயணத்தை தமிழகத்தில் கடந்த 13.1.16 அன்று அய்யா அதியமான் அவர்கள் தொடங்கிவைத்தார்.

யாத்திரை 19.1.16 அன்று திண்டுக்கல் மாவட்டத்திற்க்கு வருகைபுரிந்தது யாத்திரர்களை திண்டுக்கல்மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் வரவேற்றனர்




சென்னை - காஞ்சிபுரம் ஓட்டல் மலக்குழியில் இறங்கிய நான்கு துப்பரவு பணியாளர்கள் விசவாயு தாக்கி உயிர் இழந்தனர்,நாமக்கல்‬ மேற்கு மாவட்ட ‪ ‎ஆதித்தமிழர் பேரவையினர்‬ ‪‎திருச்செங்கோட்டில்‬ சாலை மறியல்.

சென்னை - காஞ்சிபுரம் ஓட்டல் மலக்குழியில் இறங்கிய நான்கு துப்பரவு பணியாளர்கள் விசவாயு தாக்கி உயிர் இழந்தனர்..
ஒட்டல் உரிமையாளர்களை கைது செய்யக்கோரியும்
உயிர் இழப்புகளை தடுக்க கோரியும்
‪நாமக்கல்‬ மேற்கு மாவட்ட ‪ ‎ஆதித்தமிழர் பேரவையினர்‬ ‪‎திருச்செங்கோட்டில்‬ சாலை மறியல் செய்து கைது செய்யபட்டு காவல் நிலையத்தில் உள்ளனர்

நாட்டின் மிகப்பெரிய அறிவியல் ஆராய்ச்சி "எழுத்தாளராக" வரவேண்டும் என எண்ணிய தலித் மாணவர் ரோகித் வெமுலா-வின் தற்கொலைக்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஆந்திர அரசை வலியுறுத்துவதோடு, ரோகித் வெமுலாவிற்கு நேர்ந்த இந்த கொடூரத்தை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.--அய்யா அதியமான் கண்டன அறிக்கை

நாட்டின் மிகப்பெரிய அறிவியல் ஆராய்ச்சி "எழுத்தாளராக" வரவேண்டும் என எண்ணிய தலித் மாணவர் ரோகித் வெமுலா-வின் தற்கொலைக்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஆந்திர அரசை வலியுறுத்துவதோடு, ரோகித் வெமுலாவிற்கு நேர்ந்த இந்த கொடூரத்தை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.--அய்யா அதியமான் கண்டன அறிக்கை
"""""""""""""""""""""""""
ஆந்திர மாநில ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில், அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சமூகவியல் துறையில், பி.ஹெச்.டி. இரண்டாம் ஆண்டு படித்து வந்த தலித் மாணவரான ரோகித் வெமுலா, ஆந்திராவின் குண்டூர் பகுதியில் மிகவும் ஏழ்மையான தலித் குடும்பத்தில் பிறந்தவர்.

பல்கலைக்கழக ஆராய்ச்சிக் கல்வியை பயின்று வந்த இவர், மிகப்பெரிய அறிவியல் ஆராய்ச்சி எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக அம்பேத்கர் மாணவர்கள் கூட்டமைப்பின் (ASA) தலைவராகவும் இருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அநீதிகளை எதிர்த்து பல்வேறு போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்தியும் கொண்டவர்.

யாக்கூப் மேமனை தூக்கிலிட்டு கொலை செய்ததை கண்டித்து போராட்டம் நடத்திய காரணத்தினால், பி.ஜே.பி.யின் மத்திய இணைஅமைச்சர் பங்காரு தத்தாத்ரேயா.வின் அதிகார வற்புறுத்தலின் பேரில் இவருடன் சேர்த்து ஆறு மாணவர்களை பல்கலைக்கழகம் இடை நீக்கம் செய்து அறிவித்தது மட்டுமல்லாது, தங்கியிருந்த விடுதியை விட்டு வெளியேற்றி இவர்களுக்கு வந்து கொண்டிருந்த கல்வி உதவித்தொகைகள் அனைத்தையும் நிறுத்தியுள்ளது.

இதனால் மிகுந்த வேதனைக்கு உள்ளான ஆறு மாணவர்களும் பல்கலைக்கழக கட்டிடத்தின் எதிரில் தற்காலிக கூடாரம் அமைத்து தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நியாயம் கேட்டு ஜனநாய வழியில் போராட்டம் நடத்தி வந்துள்ளனர், இவர்களின் போராட்டத்தை கொச்சைப் படுத்தியும், குழப்பங்களை ஏற்படுத்தியும் பி.ஜே.பி.யின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யைச் சேர்ந்தவர்கள் மிகவும் நெருக்கடி கொடுத்து எதிர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளான ரோகித் வெமுலா
கடந்த 15.1.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது நண்பர் தங்கியிருந்த விடுதி அறையில் தற்கொலைக்கான காரணம் அடங்கிய கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், அவர் எழுதிய கடித வரிகளில் "எனது பிறப்புதான்! எனக்கு நேர்ந்த விபத்து" என்று வேதனை கொப்பளிக்கும் காவிய நடையில் எழுதிய எழுத்து நமது நெஞ்சங்களில் குருதியை கொப்பளிக்க வைக்கிறது.

மாணவன் தற்கொலை தொடர்பான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு மத்திய இணைஅமைச்சர் பங்காரு தத்தாத்ரேயா, பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பாராவ், ஆந்திர மேலவை உறுப்பினர் ராமச்சந்திரராவ், மாணவர்கள் சதீஷ் குமார், ராமகிருஷ்ணா ஆகியோர் மீது, தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர் ரோகித் வெமுலா தற்கொலைக்கு காரணமான மத்திய இணை அமைச்சர் பங்காரு தத்தாத்ரேயா உள்ளிட்ட குற்றவாளிகளை, உடனடியாக கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என ஆந்திர அரசை ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்துமத வெறியர்களால் பயங்கர நிகழ்த்தப்படும் இது போன்ற எண்ணற்ற அநீதிகளுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என வலியுருத்துவதோடு, இந்த கோர சம்பவத்தை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.

இவண்
இரா.அதியமான்
நிறுவனர்,
ஆதித்தமிழர் பேரவை.
19.1.2016

சென்னையில் 4 துப்புரவு பலியானதை இறந்ததை கண்டித்து ஆதித்தமிழர் பேரவையினர் மதுரையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

சென்னையில் 4 துப்புரவு பணியாளர்கள் பலியானதை
கண்டித்து தற்போது
மதுரையில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
ஆதித்தமிழர் பேரவை மதுரை மாவட்டம்
கார்த்திக்
ஆதவன்
கெளரி
அலெக்ஸ்
சாமிகண்னு
அறிவழகன்
செல்லபாண்டி
சாக்கிஅரசு
மற்றும் பலர் கலந்து கொண்டனர்




துப்புரவுத் தொழிலாளர்களின் அவல நிலை….
மனிதரின் அன்றாட வாழ்வில் இயந்திரங்கள் இன்றியமையாததாகிவிட்ட நிலையில், இன்றளவும் கழிவுகளை சுத்தம் செய்யும் போது துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடந்து நடைபெற்று வருகிறது. எந்தத்தவறும் செய்யாமல் தங்கள் இன்னுயிரை இழக்கும் இந்த துப்புரவுத்தொழிலாளர்களின் அவல நிலையை இப்போது பார்ப்போம்.
துப்புரவுத்தொழிலாளர்கள் பணியின் போது உயிரிழக்க நேர்ந்தால் இழப்பீடாக பத்துலட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்கிறது உச்சநீதிமன்ற உத்தரவு.

இதுவரை பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் இந்த உத்தரவின்படி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறிதான்.இதுமட்டுமல்லாமல் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பணியின் போது உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்,அடுத்த கட்டமாக அவர்களுக்கு மாற்றுப்பணிகள் வழங்க வேண்டும் என்பன போன்ற உத்தரவுகளெல்லாம் அரசாணையில் எழுத்துகளாக மட்டுமே இருப்பதாகவும் நடைமுறையில் அவை காற்றில் பறக்கவிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
1993 ஆம் ஆண்டு மனிதக்கழிவுகளை மனிதர்களே அள்ளத் தடை விதித்தது மத்திய அரசு. தொழிலாளர்களை இப்பணியில் ஈடுபடுத்துவோருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் 20ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. இப்படி எத்தனை சட்டங்கள் உத்தரவுகள் இருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

எனவே தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளத் தடை மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வு என்ற பெயரில் சட்ட மசோதா 2013 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் குறித்து தொழிலாளர்கள் அறிந்து கொள்ளும் படி பரப்புரை செய்ய வேண்டும் என சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் கழிவுகளைச் சுத்தம் செய்யும் போது 800 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இவர்களில் 50 பேருக்கு மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பு நடந்திருப்பதாகவும் அவர்களில் 32 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்த வழக்கொன்றில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது குறித்துத் நகராட்சித்துறைச் செயலாளர் நேரில் விளக்கமளிக்க மேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பொதுவாகவே கழிவுகளை அகற்றுவது போன்ற பணிகளில் நிரந்தரத் தொழிலாளர்களைக் காட்டிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களே அதிக அளவில் ஈடுபடுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.பணியில் இவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் தங்களுக்கு அரசு நிரந்தர வேலையாவது வழங்கவேண்டும் என்று கண்ணீரோடு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மதுரை வந்தடைந்த பீம் யாத்ரா குழுவிற்கு மதுரை மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பாக சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது

"மலக்குழியில் மனிதனை இறக்காதே" ஆளும் அதிகார வர்க்கங்கள் துப்பரவு தொழிலாளிகளிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும் என இந்தியா முழுவதும் பீம் யாத்திரா பயண குழு மதுரைக்கு வந்தடைந்தது இதனை ஆதித்தமிழர் பேரவை சார்பில் மதுரை கார்த்திக் தோழர் துவங்கி வைத்தார் .ஆதவன் தோழர் உரை நிகழ்த்தினார்