அண்மையச்செய்திகள்

Tuesday, 19 January 2016

சென்னையில் 4 துப்புரவு பலியானதை இறந்ததை கண்டித்து ஆதித்தமிழர் பேரவையினர் மதுரையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

சென்னையில் 4 துப்புரவு பணியாளர்கள் பலியானதை
கண்டித்து தற்போது
மதுரையில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
ஆதித்தமிழர் பேரவை மதுரை மாவட்டம்
கார்த்திக்
ஆதவன்
கெளரி
அலெக்ஸ்
சாமிகண்னு
அறிவழகன்
செல்லபாண்டி
சாக்கிஅரசு
மற்றும் பலர் கலந்து கொண்டனர்
துப்புரவுத் தொழிலாளர்களின் அவல நிலை….
மனிதரின் அன்றாட வாழ்வில் இயந்திரங்கள் இன்றியமையாததாகிவிட்ட நிலையில், இன்றளவும் கழிவுகளை சுத்தம் செய்யும் போது துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடந்து நடைபெற்று வருகிறது. எந்தத்தவறும் செய்யாமல் தங்கள் இன்னுயிரை இழக்கும் இந்த துப்புரவுத்தொழிலாளர்களின் அவல நிலையை இப்போது பார்ப்போம்.
துப்புரவுத்தொழிலாளர்கள் பணியின் போது உயிரிழக்க நேர்ந்தால் இழப்பீடாக பத்துலட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்கிறது உச்சநீதிமன்ற உத்தரவு.

இதுவரை பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் இந்த உத்தரவின்படி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறிதான்.இதுமட்டுமல்லாமல் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பணியின் போது உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்,அடுத்த கட்டமாக அவர்களுக்கு மாற்றுப்பணிகள் வழங்க வேண்டும் என்பன போன்ற உத்தரவுகளெல்லாம் அரசாணையில் எழுத்துகளாக மட்டுமே இருப்பதாகவும் நடைமுறையில் அவை காற்றில் பறக்கவிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
1993 ஆம் ஆண்டு மனிதக்கழிவுகளை மனிதர்களே அள்ளத் தடை விதித்தது மத்திய அரசு. தொழிலாளர்களை இப்பணியில் ஈடுபடுத்துவோருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் 20ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. இப்படி எத்தனை சட்டங்கள் உத்தரவுகள் இருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

எனவே தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளத் தடை மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வு என்ற பெயரில் சட்ட மசோதா 2013 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் குறித்து தொழிலாளர்கள் அறிந்து கொள்ளும் படி பரப்புரை செய்ய வேண்டும் என சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் கழிவுகளைச் சுத்தம் செய்யும் போது 800 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இவர்களில் 50 பேருக்கு மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பு நடந்திருப்பதாகவும் அவர்களில் 32 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்த வழக்கொன்றில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது குறித்துத் நகராட்சித்துறைச் செயலாளர் நேரில் விளக்கமளிக்க மேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பொதுவாகவே கழிவுகளை அகற்றுவது போன்ற பணிகளில் நிரந்தரத் தொழிலாளர்களைக் காட்டிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களே அதிக அளவில் ஈடுபடுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.பணியில் இவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் தங்களுக்கு அரசு நிரந்தர வேலையாவது வழங்கவேண்டும் என்று கண்ணீரோடு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

No comments:

Post a Comment