அண்மையச்செய்திகள்

Monday, 25 September 2017

நாமக்கல் கிழக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை நெருப்புத் தமிழனுக்கு நீலவேந்தனுக்கு வீரவணக்கம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை நெருப்புத் தமிழனுக்கு நீலவேந்தனுக்கு வீரவணக்கம்
***********************
செப்டம்பர்-26
நாமக்கல் கிழக்கு மாவட்டம் இராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் நெருப்புத்தமிழன் நீலவேந்தன் அவர்களுக்கு 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்கள் உடன் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.







நெல்லையில் ஆதித்தமிழர் பேரவை சார்பாக அவசர ஊர்தி விரைவில்

நெல்லையில் ஆதித்தமிழர் பேரவை சார்பாக அவசர ஊர்தி விரைவில்

ஆதித்தமிழர் பேரவையின்
நீண்ட நாள் கனவான அவசர ஊர்தி சேவை பணியை (ஆம்புலன்ஸ்)
நெல்லையில் தொடங்க
இன்று நடந்த மாவட்ட செயற்குழுவில் அனைத்து நிர்வாகிகளின் ஒப்புதலோடு தீர்மானம் நிறைவேற்றம்,,,
அதற்கான பணியை இன்று முதல் தொடங்குகிறோம்
அனைவரும் ஆதரவு தரவும்...
போது சேவை தொடர பொதுமக்கள் ஆதரவை எதிர்பார்க்கும்
கு.கி. கலைகண்ணன்
ஆதித்தமிழர் பேரவை
நெல்லை கிழக்கு மாவட்டம்
மகிழ்ச்சி





Thursday, 21 September 2017

மாணவர் மரணம் - மறியல் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை என அய்ந்து நாட்கள் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது

மாணவர் மரணம் - மறியல் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை என நாட்கள் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது
"""""""""""""""""""""""'''"""""'"""""
நாமக்கல் மாவட்டம் விட்டம்பாளையம் ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி படித்து வந்த விக்னேஸ்வரன், உடல் இன்று ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவர் குழுவின் மூலம் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
வன்கொடுமை சட்டப்படி வரவேண்டிய தீர்வைத் தொகையை சம்மந்தப்பட்ட மாணவனின் தாயார் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
கொலையாளி ஆசிரியர் குப்புசாமி பணி நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
ஆகவே அய்ந்து நாட்களாக நடைபெற்ற ஆதித்தமிழர் பேரவையின் சமரசமில்லா போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது.
போராட்டம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை உணவை மறுத்து உறக்கத்தை இழந்து போராட்டக்களத்தில் நின்ற அய்யா அதியமான் அவர்களின் உணர்வுள்ள நீலப்படைப் போராளிகள் அனைவருக்கும் தலைமக்குழு தனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வ்ததோடு,
கொலை சம்பவத்தை நாடறிய செய்து மாணவன் குடும்பத்தாருக்கு உரிய நீதியை பெற்றுத்தர ஒத்துழைப்பு நல்கிய பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் ஆதித்தமிழர் பேரவை தனது மனப்பூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
_______________
களத்தில் இருந்து
பொதுச்செயலாளர்.
21.9.2017

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவகத்திற்கு முன்பு பொதுச்செயலாளரின் செய்தளர்களுக்கு அளித்த பேட்டி







Wednesday, 20 September 2017

சேலத்தில் அருந்ததியர் மாணவர் கொலை களத்தில் ஆதித்தமிழர் பேரவை

நாமக்கல் மாவட்டத்தை சோ்ந்த மாணவர் விஷ்வேஸ்குமார்   சேலம் பனைமரத்துப்பட்டி பள்ளியில் 7ஆம் வகுப்பு எஸ்.சி  விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்தார். ஆசிரியர் அந்த மாணவனை தாக்கி விட்டு மாணவர்கள் கிரிகெட்  விளையாடி கொண்டிருந்தார்கள்.நான் ஆசையாக அவர்களுடன் 4 பால் போட சொல்லிகேட்டேன் அதில் நான்காவது பால் அடிக்கும் போது பேட் பிடுங்கி கொண்டு விஸ்வேஸ்சின் தலையில் அடித்து விட்டது என்று கூறுகிறார்.ஆனால் அந்த மாணவரின் காலில் தரக்கிய காயங்கள் உள்ளது.

தொடா்ந்து இரண்டு நாளாக மருத்துவ மனையில் வைத்துக் கொண்டு காவல்துறை மற்றும் மருத்துவா்கள் சாதி வெறியா்களுக்கு துணையாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது, அடித்து கொலை செய்யப்பட்டதை மாற்றி கிாிக்கெட் விளையாடும் போது மட்டை கையில் இருந்து நழுவிக் கொண்டு தலையில் அடி பட்டாதாக காவல் துறை இ.த.ச 338 கீழ் வழக்கு பதிவு செய்து மு.த.அ மாணவரின்
தாயிடம் கொடுக்க முயன்றனர். ஆனால் ஆதித்தமிழர் பேரவை கொலை வழக்காக இ.த.ச 302 மற்றும் sc/st வழக்கில் பதிவு செய்யவேண்டும் பேரவை தோழர்களும்,மாணவரின் தாய்,தந்தை மற்றும் ஊர் மக்கள் போராடுகின்றனர்.
மருத்துவ மனை நிர்வாகம் சிகிச்சை அளிப்பது போல் நாடகமாடி காவல்துறையின் பேச்சைக் கேட்டு மக்களை ஏமாற்றி வருகிறது.

சம்பவ பின்னணி
""""""""""""""""""""""""""
தமிழக அரசு கொண்டாடி வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு கொண்டாட்டத்திற்கு நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களை கட்டாயப்படுத்தி விழாவில் பங்கேற்க வைத்துள்ளனர், அதில் அருந்ததியர் மாணவனை அழைத்துச்சென்ற ஆசிரியருக்கும் சம்மந்தப்பட்ட மாணவருக்கும் இடையில் ஏதோ நடந்துள்ளது, அது என்னவென்று அந்த கொலைகாரன் ஆசிரியரை உரிய முறையில் விசாரித்தால் தெரியவரும். அதை செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

களத்தில்.. அதித்தமிழர் பேரவை நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சரவணக்குமார், கார்த்திகை முருகன், இளைஞரணி செயலாளர் தமிழரசு, துணைச்செயலாளர் வீரசிவா,மாநில மாணவர் அணி செயலாளர் வழக்கறிஞர் மாதேசு, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் இராதாகிருஷ்ணன், கிழக்கு மாவட்ட செயலாளர் பெருந்தமிழன்   சேலம் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கலைவேந்தன் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.⁠⁠⁠⁠



Tuesday, 19 September 2017

*சுதந்திர போராட்ட தியாகி வீரத்தாய் குயிலியின் 237 வது நினைவு நாளில் (செப்டம்பர் 30) சிவகங்கையில் அமைந்துள்ள வீரத்தாயின் நினைவிடத்திற்கு வீரவணக்கம் செலுத்த குடும்பம் குடும்பமாக அணிதிரள்வோம் வாரீர். -- அழைக்கிறது ஆதித்தமிழர் பேரவை சிவகங்கை மாவட்டம்*

தமிழக அரசே...! சிவகங்கை வீரத்தாய் வேலுநாச்சியார் மணிமண்டபத்தில் அமைந்துள்ள வீரமங்கை குயிலி அவர்களின் நினைவாக வைத்துள்ள நினைவுத்தூணை அகற்றி அதே இடத்தில் வீரமங்கை குயிலியின் முழு உருவ வெங்கலச்சிலை அமைத்திடு என்கிற கோரிக்கை முழக்கத்தோடு

*சுதந்திர போராட்ட தியாகி வீரத்தாய் குயிலியின் 237 வது நினைவு நாளில் (செப்டம்பர் 30) சிவகங்கையில் அமைந்துள்ள வீரத்தாயின் நினைவிடத்திற்கு வீரவணக்கம் செலுத்த குடும்பம் குடும்பமாக அணிதிரள்வோம் வாரீர். -- அழைக்கிறது ஆதித்தமிழர் பேரவை சிவகங்கை மாவட்டம்*
**********************
ஆங்கிலயேர்களை எதிர்த்து தமிழ் மண்ணில் நடைபெற்ற அந்நிய எதிர்ப்பு போராட்டத்தில் ஒண்டிவீரன்,பூலித்தேவன்,சுந்தரலிங்கம்,வீரபாண்டிய கட்டபொம்மன் ,போன்ற தியாகிகள் பட்டியலில் சிவகங்கை சீமையின் இராணி வேலுநாச்சியார் ,மருது பாண்டியர்கள் ,வீரத்தாய் குயிலி போன்றவர்களின் வீரம் செறிந்த வரலாறுகள் தமிழக மண்ணில் அழிக்க முடியாதது.

ஜெர்மனிக்கும் ஜப்பானுக்கும் நீர்மூழ்கி கப்பலில் நடைபெற்ற யுத்தத்தில் ஜப்பானிய வீரர்களின் தியாகமே தற்கொலை போராட்டத்தின் துவக்கமாக கருதப்படுகிறது. ஆனால் இரண்டாம் உலக போர் நடைபெறுவதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரே பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து தமிழ்மண்ணில் நடைபெற்ற போர்களத்தில் தான் முதன் முதலாக "தற்கொலை போராளி" உருவானார்கள் என்பது நாம் அறியாதது.

அந்த ஈகைக்கு உரிய வீரமங்கையின் பெயர் "குயிலி" அவள் பெண் என்பதால் மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட அருந்ததியர் என்பதுவும் வரலாற்றை பக்கங்களில் அவள் வஞ்சிக்க பட்டிருக்கிறாள் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

1780ம் ஆண்டு வேலுநாச்சியார் எட்டு ஆண்டுகளுக்குப்பிறகு திப்புசுல்தான் உதவியுடன் ஆங்கிலேயரிடம் கையிலிருந்த சிவகங்கையை மீட்டதற்காக மதுரையில் இருந்து தனது போர்படையுடன் வெற்றிவாகை சூடி வந்தார். விஜயதசமி திருவிழா சிவகங்கையில் உள்ள இராஜராஜேஸ்வரி கோவிலில் பெண்கள் மட்டும் வழிபாட்டிற்காக அனுமதிக்கப்படுவர்.இதை சாதகமாக பயன்படுத்தி இராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்குள் நுழைந்தார்கள் வேலுநாச்சியார் ,குயிலி தலைமையிலான உடையாள் படையினர் கைகளில் ஆயுதங்களோடு உள்ளே நுழைந்தனர்.போர் மூண்டது அரண்மனை வெளியில் மருது சகோதரர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.வேலுநாச்சியார்,குயிலி தாக்குதல்களை சற்றும் எதிர்பாராத ஆங்கில தளபதி பாஞ்சோர் என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாமல் விழி பிதுங்கி நின்றான். ஆனால் இந்த போர் இது வரை நடந்த தாக்குதல்களிலிருந்து மாறுபட்டிருந்தது. ஆங்கிலேயர்களின் நவீன ஆயுதங்களுக்கு முன்பு வேலுநாச்சியார் படை தாக்கு பிடிக்க முடியவில்லை. தமிழர் பக்கம் அழிவு அதிகமாகி கொண்டிருந்தது. அரண்மனையிலிருந்து , ஆயுத கிடங்குகளிலிருந்தும் மேலும் மேலும் ஆயுதங்கள் ஆங்கில படைக்குச் சென்று கொண்டிருந்தது. என்ன செய்வதென சிந்திக்க கூட முடியாத சூழலில் ஓர் உருவம் எரி நெய்யை ஊற்றி கொண்டு அரண்மனை ஆயத கிட்டங்கியில் குதித்தது.
மறுநிமிடமே ஆயுத கிட்டங்கி வெடித்து சிதறியது உடல்கள் அங்கம் அங்கமாக சிதறியது. அவ்வுருவம் சுக்கு நூறாகி போனது. ஆயுத கிட்டங்கியில் அழிப்பு வேலுநாச்சியாரின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.ஆயிரக்கணக்கானோர் மண்ணில் மடிந்தார்கள். ஆங்கில தளபதி பாஞ்சோர் வேலுநாச்சியாரிடம் மன்னிப்பு கேட்டு புறமுதுகு காட்டி ஓடினான்.வேலுநாச்சியார் வெற்றி பெற்றதாக அறிவிக்க பட்டார்.வெற்றியை கொண்டாட தன் தளபதிகளெல்லாம் நெருங்கி கொண்டிருந்த பொழுது குயிலியை தேடினார் வேலுநாச்சியார். குயிலியை கண்டறியாத முடியாத அளவிற்கு உருத்தெரியாமல் மண்ணோடு மண்ணாகிப் போயிருந்தாள் குயிலி.
சிவகங்கை மண்ணை அந்நிய ஆதிக்கத்திலிருந்து விரட்டிட இராணி வேலுநாச்சியாரின் சபதம் நிறைவேற்றிட தன்னையே ஈந்து தற்கொலைப் போராளியாய் அழிந்து போன வீரமங்கை குயிலியின் வீரம் இந்த தலைமுறைக்கு எடுத்து சொல்லப்பட வேண்டும். உலகில் தற்கொலை போராளிகளுக்கான விதை தமிழ் மண்ணில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் குயிலியால் விதைக்கப்பட்டுள்ளது.ஈழத்தில் கரும்புலிகளின் ஈடு இணையற்ற தியாகம் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தியாக உணர்வை மென்மேலும் உயாத்தியது என்றால் மிகையாகாது.அதுபோல் வீரத்தாய் குயிலியின் ஈகமும் தமிழர்களின் தியாக உணர்வை பறை சாற்றுகிறது

தென்மாவட்டத்தின் தியாகி இம்மானுவேல் சேகரனின் படுகொலைக்கு பின்னர் தேவேந்திர மக்கள் எழுச்சியுற்றனர்.
ஆனால் தன் சமூகம் இழிவிலிருந்து விடுதலை பெற வேண்டும் என எந்த சமூகத்திலும் நடைபெறாத உயிர் தியாகம் அருந்ததியர் சமூகத்தில் அதுவும் ஆதித்தமிழர் பேரவையின் மாநில பொருளாளர் பழ.நீலவேந்தன் (வழக்கறிஞர்) அவர்களும் மாநில மகளிரணிச் செயலாளர் திருச்சி ஆ.இராணி மற்றும் திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் மகேசுவரன் அவர்களும் அருந்ததிய மக்களின் விடுதலைக்கு அடித்தளமாக இருக்கும் அருந்ததியர் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என தங்களையே தீக்கிரையாக்கி உயிர் நீத்த பின்பும் கூட இன்னும் எம்மக்கள் விழிப்படையாமல் இருப்பது நமது களப்பணியை இன்னும் வீரியத்துடன் செய்லபட வேண்டுமென்பதை உணர்த்தி நிற்கிறது.
மேலும் இச்சமூகத்தில் எல்.சி.குருசாமி அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 1923இல் தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது வறுமையின் காரணமாக கல்வி கற்க முடியாத நிலையில் இருந்த குழந்தைகள் கல்வி கற்பதற்காக பல இரவு பாட சாலைகளை நிறுவினார்.மேலும் இக்குழந்தைகள் கல்வி கற்பதற்காக மத்திய உணவு திட்டத்திற்கும்,ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்க வேண்டும் முதன் முதலில் சட்டசபையில் கோரிக்கை வைத்தவர் எல்.சி.குருசாமி. அவர்கள்.

அவ்வழி தோன்றல் தான் ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அய்யா அதியமான் அவர்கள் 1994-ல் தொடங்கப்பட்ட ஆதித்தமிழர் பேரவை பல போராட்டங்களும் ,மாநாடுகளும் நடத்தியதின் அடிப்படையில் தான் 2009-ம் ஆண்டு அருந்ததியர்களுக்கான 3% இட ஒதுக்கீட்டை வாங்கி கொடுத்தது.இவ்வாறு அருந்ததியர் வாழ்வில் உயர் நிலை வெளிச்சத்தை ஏற்படுத்தியவர் அய்யா அதியமான் அவர்கள் வழியில் நமது உரிமைகளை வெல்வோம். வென்றெடுப்போம்.

ஆதித்தமிழர்களே!!! ஆதித்தமிழச்சிகள்!! வீரத்தாய் குயிலி நினைவு நாளில் குடும்பம் குடும்பமாக ஒன்றுபடுவோம்!!! வாரீர்.... வாரீர்

புரட்சியாளர் அம்பேத்கார் வழியில் புரட்சி செய்வோம் !!!

தந்தை பெரியார் வழியில் கலகக்காரர்களாவோம் !!!

பேராசான் மார்க்ஸ் போல் தத்துவங்கள் படைப்போம் !!
மேதகு பிரபாகரன் போல் போர்க்குணம் கொண்ட போராளியாவோம் !!

ஆதித்தமிழர்களின் விடுதலை முகவரி தலைவர் அய்யா அதியமான் அவர்கள் வழியில் அமைப்பாவோம்
"ஆதித்தமிழர்பேரவை வலுப்படுத்துவோம்,ஆதித்தமிழர்களின் விடுதலையை விரைவாக்குவோம்"
_______
ஆதித்தமிழர் பேரவை சிவகங்கை மாவட்டம்

Monday, 18 September 2017

கோவையில் அனைத்துக் கட்சி போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் கைது!

கோவையில் அனைத்துக் கட்சி போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் கைது!
""""""""""""""""""""""""""""""""""""""""
கோவை மாநகராட்சி நிர்வாக முறைகேடுகளைக் கண்டித்து கோவை மாவட்ட திமுக சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டத்தில், அய்யா அதியமான் அறிவுறுத்தலின் பேரில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் பொதுச்செயலாளர் நாகராசன், கோவை மாவட்ட நிதிச்செயலாளர் வானுகன், அமைப்புச் செயலாளர் தாமரைவீரன், மாவட்ட துணைத்தலைவர் தேவராஜன், இளைஞரணி செயலாளர் புகழேந்தி, ஆர்.பழனிச்சாமி, என்.பழனிச்சாமி, திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சோழன், அமைப்புச் செயலாளர் துரயரசன் ஆகியோர் பங்கேற்று அனைத்துக் கட்சிகளுடன் கைது செய்யப்பட்டு கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள புரந்தரதாஸ் கல்யாண மண்டபத்தில் அடைக்கப்பட்டு, மாலை 6.30 க்கு விடுதலை செய்தது எடப்பாடி காவல்துறை.
_____________________
செய்தி சுருக்கம்
பொதுச்செயலாளர்.
18.9.2017 கோவை







ஆதித்தமிழர் பேரவையில் தன்னை இணைத்துக்கொண்ட #முனைவர் #சிலம்பரசன் அவர்களின் சமூக பணி சிறக்க வாழ்த்துவோம்

ஆதித்தமிழர் பேரவையில் தன்னை இணைத்துக்கொண்ட #முனைவர் #சிலம்பரசன் அவர்களின் சமூக பணி சிறக்க வாழ்த்துவோம்
***************
அடக்குமுறைக்கு எதிரான சாதி ஒழிப்பு சமூக நீதி களத்தில் இணைந்து போராட நேற்று தந்தை பெரியார் பிறந்த தினத்தில் அய்யா அதியமான் அவர்களை சந்தித்து ஆதித்தமிழர் பேரவையுடன் கைகோர்த்த #பேராசிரியர் #சிலம்பரசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்