அண்மையச்செய்திகள்

Wednesday, 20 September 2017

சேலத்தில் அருந்ததியர் மாணவர் கொலை களத்தில் ஆதித்தமிழர் பேரவை

நாமக்கல் மாவட்டத்தை சோ்ந்த மாணவர் விஷ்வேஸ்குமார்   சேலம் பனைமரத்துப்பட்டி பள்ளியில் 7ஆம் வகுப்பு எஸ்.சி  விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்தார். ஆசிரியர் அந்த மாணவனை தாக்கி விட்டு மாணவர்கள் கிரிகெட்  விளையாடி கொண்டிருந்தார்கள்.நான் ஆசையாக அவர்களுடன் 4 பால் போட சொல்லிகேட்டேன் அதில் நான்காவது பால் அடிக்கும் போது பேட் பிடுங்கி கொண்டு விஸ்வேஸ்சின் தலையில் அடித்து விட்டது என்று கூறுகிறார்.ஆனால் அந்த மாணவரின் காலில் தரக்கிய காயங்கள் உள்ளது.

தொடா்ந்து இரண்டு நாளாக மருத்துவ மனையில் வைத்துக் கொண்டு காவல்துறை மற்றும் மருத்துவா்கள் சாதி வெறியா்களுக்கு துணையாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது, அடித்து கொலை செய்யப்பட்டதை மாற்றி கிாிக்கெட் விளையாடும் போது மட்டை கையில் இருந்து நழுவிக் கொண்டு தலையில் அடி பட்டாதாக காவல் துறை இ.த.ச 338 கீழ் வழக்கு பதிவு செய்து மு.த.அ மாணவரின்
தாயிடம் கொடுக்க முயன்றனர். ஆனால் ஆதித்தமிழர் பேரவை கொலை வழக்காக இ.த.ச 302 மற்றும் sc/st வழக்கில் பதிவு செய்யவேண்டும் பேரவை தோழர்களும்,மாணவரின் தாய்,தந்தை மற்றும் ஊர் மக்கள் போராடுகின்றனர்.
மருத்துவ மனை நிர்வாகம் சிகிச்சை அளிப்பது போல் நாடகமாடி காவல்துறையின் பேச்சைக் கேட்டு மக்களை ஏமாற்றி வருகிறது.

சம்பவ பின்னணி
""""""""""""""""""""""""""
தமிழக அரசு கொண்டாடி வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு கொண்டாட்டத்திற்கு நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களை கட்டாயப்படுத்தி விழாவில் பங்கேற்க வைத்துள்ளனர், அதில் அருந்ததியர் மாணவனை அழைத்துச்சென்ற ஆசிரியருக்கும் சம்மந்தப்பட்ட மாணவருக்கும் இடையில் ஏதோ நடந்துள்ளது, அது என்னவென்று அந்த கொலைகாரன் ஆசிரியரை உரிய முறையில் விசாரித்தால் தெரியவரும். அதை செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

களத்தில்.. அதித்தமிழர் பேரவை நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சரவணக்குமார், கார்த்திகை முருகன், இளைஞரணி செயலாளர் தமிழரசு, துணைச்செயலாளர் வீரசிவா,மாநில மாணவர் அணி செயலாளர் வழக்கறிஞர் மாதேசு, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் இராதாகிருஷ்ணன், கிழக்கு மாவட்ட செயலாளர் பெருந்தமிழன்   சேலம் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கலைவேந்தன் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.⁠⁠⁠⁠No comments:

Post a comment