அண்மையச்செய்திகள்

Friday, 9 September 2016

திருச்செங்கோட்டில் DSP விஷ்ணுபிரியா நினைவு நாளில் ஆதித் தமிழர்பேரவை நடத்தும் "சமூக நீதி கோட்பாட்டில் பெண்கள் மீதான பாகுபாடும் சாதிய ஆணவ வெளிப்பாடும்" தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம்

திருச்செங்கோட்டில் DSP விஷ்ணுபிரியா நினைவு நாளில் ஆதித் தமிழர்பேரவை நடத்தும் "சமூக நீதி கோட்பாட்டில் பெண்கள் மீதான பாகுபாடும் சாதிய ஆணவ வெளிப்பாடும்" தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம்.

கருத்துரை வழங்குகிறார்  "சமூகநீதி போராளி" அய்யா அதியமான்

நாள் -18.9.2016 ஞாயிற்று கிழமை
நேரம் -மாலை 3.00 மணி
இடம் -  நாடார் திருமண மண்டபம் - திருச்செங்கோடு

ஆதித்தமிழர் பேரவை நாமக்கல் மேற்கு மாவட்டம்


Thursday, 8 September 2016

DSP விஷ்ணுபிரியா அவர்களின் தந்தையுடன் ஆதித்தமிழர் பேரவையினர் சந்திப்பு

DSP விஷ்ணுபிரியா அவர்களின் தந்தையுடன் ஆதித்தமிழர் பேரவையினர் சந்தித்தனர் .அப்போது டிஸ்க் விஷ்ணு பிரிய அவர்களின் பெற்றோ பேரவையினரிடம் தனது மகள் மரணத்திற்கு சரியான விசாரனை இல்லை : கிடைக்க வேண்டிய அரசின் சலுகைகள் இது நாள் வரை கிடைக்கவில்லை என கூறி மிகவும் வருத்தமுற்றனர்.

அவரது இல்லத்திலிருந்து நாமக்கல் மாவட்ட செயலாளர் தமிழரசு மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு ஆதித்தமிழர்பேரவை கடலூர் மாவட்ட தோழர்கள்



புல்லாபட்டி கிளைசெயலாளா். தோழா். வேல்முருகன் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆதித்தமிழர் பேரவையினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

வெம்பக்கோட்டை ஒன்றியம்
புல்லாபட்டி கிளைசெயலாளா்.
தோழா். வேல்முருகன்
திருமண நிகழ்ச்சியில்.
கலந்துகொண்டு மணமக்களை ஆதித்தமிழர் பேரவையினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்



தந்தை பெரியார் பிறந்த தினத்தில் மதுரையில் ஆதித்தமிழர் பேரவை நடத்தும் "மனுநீதி சூழ்ச்சியும் - சமூக நீதி மீட்சியும்" விளக்க கருத்தரங்கம்



செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த தினத்தில் மதுரையில்
மனுநீதி சூழ்ச்சியும் - சமூக நீதி மீட்சியும்
விளக்க கருத்தரங்கம்

அழைக்கிறார் அய்யா அதியமான் .


நிகழிச்சியில் கலந்து கொள்ளும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு நேரில் சந்தித்து அழைப்பு கொடுக்கும் மதுரை தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் 

இடம் - குருஜி வித்யா மஹால் து.கிருஷ்ணாபுரம்
நேரம் மாலை 5 மணி

சேடப்பட்டி ஒன்றியம்
மதுரை தெற்கு மாவட்டம்   






மாவீரர் இம்மானுவேல் சேகரனுக்கு ஆதித்தமிழர்களின் வீரவணக்கம்!





செப்டம்பர்.11..
****************
மாவீரர்
இம்மானுவேல் சேகரனுக்கு
ஆதித்தமிழர்களின் வீரவணக்கம்!
"""""""""""""""""""""""""""""""""""""""""
தீட்டிய வாளோடும்..
திணவெடுத்த தோளோடும்..
காட்டுத்தனமாக அலைந்த
கயவர் கூட்டத்தை
கதிகலங்க வைத்த கலகக்காரரே!

காலமெல்லாம்..
கைகட்டி, வாய்பொத்தி
கண்ணீர் வடித்த மக்களை
கனென்றெழ வைத்த...
களமுனை போராளியே!!

உண்மையான உணர்வுடன்
நீ...ஆற்றிய களப்பணி
உணர்வுள்ள வாலிபர்களை
உணர்ச்சி பிழம்பாய் மாற்றிட

பொறுத்து கொள்ள முடியாத
சாதிவெறி கோழைகளும்,
சதிகார துரோகிகளும்,
சதித்திட்டம் தீட்டியே!

உன்னை வெல்ல முடியாது
என்றெண்ணிய காரணத்தால்
நேருக்கு நேர் நிற்காமல்
ஒளிந்திருந்த கொன்றனரே!!

போர்க்குணத்தாலே
சாவை வென்றாய்!
ஒடுக்கப்பட்டோர் நெஞ்சில்
ஒய்யாரமாய் குடிகொண்டாய்!!

மாவீரரே, மகத்தான தலைவரே!
"""""""""""""""""""""""""""""""""""""""
சுயசாதி நலனில் சுகம்தேடும்
தலைகளின் நடுவில்..

சுயசாதி உணர்வை தூக்கி எறிந்தாய்
துன்பப்பட்டவர்களின் பின்னால் நின்றாய்

உனது வாழ்வு வழிகாட்டட்டும்!
உழைக்கின்ற சாதி ஒன்றாகட்டும்!!

சபதமேற்போம்!
நின் நினைவு நாளில்..
சரித்திரமாவோம் பொதுவாழ்வில்!!
______________
ஆ.நாகராசன்
பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை



ஆதித் தமிழர் பேரவை நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பில் அடிக்கப்பட்ட பதாகை


மதுரை மாவட்டம் சமயநல்லூரில் அருந்ததிய மக்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி ஆதித்தமிழர் பேரவையினர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் .

செப்டம்பர் 7 மதுரை மாவட்டமே சமயநல்லூர் அருகே உள்ளது அம்பலத்தடி கிராமம் இங்குள்ள அருந்ததியான மக்களை வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் தாக்கினார்.
இவரைகளை உடனடியாக கைது செய்ய கோரி ஆதித் தமிழர் பேரவையினர் மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர் ,சாலையின் இருபுறமும் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக  பெரிதும் பாதிக்கப்பட்டது .

சமயநல்லூர் டி எஸ் பி வேல்முருகன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என்று உறுதி அளித்ததில் பேரில் போராட்டம் தர்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டது







Thursday, 1 September 2016

அரசு அலுவலகங்களில் சாமி சிலைகள் வைக்க எதிர்ப்பு ஆதித் தமிழர் பேரவை திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கரூர் ஆட்சியரிடம் மனு

31/8/2016

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வளாகத்தில்
சில அதிகாரிகள்
விநாயகர் சிலைவைத்து வழிபடுகிறார்கள் இதை கண்டித்தும், சிலையை அகற்ற
கோரியும்
திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை சார்பில்

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.......