அண்மையச்செய்திகள்

Thursday, 8 September 2016

மாவீரர் இம்மானுவேல் சேகரனுக்கு ஆதித்தமிழர்களின் வீரவணக்கம்!

செப்டம்பர்.11..
****************
மாவீரர்
இம்மானுவேல் சேகரனுக்கு
ஆதித்தமிழர்களின் வீரவணக்கம்!
"""""""""""""""""""""""""""""""""""""""""
தீட்டிய வாளோடும்..
திணவெடுத்த தோளோடும்..
காட்டுத்தனமாக அலைந்த
கயவர் கூட்டத்தை
கதிகலங்க வைத்த கலகக்காரரே!

காலமெல்லாம்..
கைகட்டி, வாய்பொத்தி
கண்ணீர் வடித்த மக்களை
கனென்றெழ வைத்த...
களமுனை போராளியே!!

உண்மையான உணர்வுடன்
நீ...ஆற்றிய களப்பணி
உணர்வுள்ள வாலிபர்களை
உணர்ச்சி பிழம்பாய் மாற்றிட

பொறுத்து கொள்ள முடியாத
சாதிவெறி கோழைகளும்,
சதிகார துரோகிகளும்,
சதித்திட்டம் தீட்டியே!

உன்னை வெல்ல முடியாது
என்றெண்ணிய காரணத்தால்
நேருக்கு நேர் நிற்காமல்
ஒளிந்திருந்த கொன்றனரே!!

போர்க்குணத்தாலே
சாவை வென்றாய்!
ஒடுக்கப்பட்டோர் நெஞ்சில்
ஒய்யாரமாய் குடிகொண்டாய்!!

மாவீரரே, மகத்தான தலைவரே!
"""""""""""""""""""""""""""""""""""""""
சுயசாதி நலனில் சுகம்தேடும்
தலைகளின் நடுவில்..

சுயசாதி உணர்வை தூக்கி எறிந்தாய்
துன்பப்பட்டவர்களின் பின்னால் நின்றாய்

உனது வாழ்வு வழிகாட்டட்டும்!
உழைக்கின்ற சாதி ஒன்றாகட்டும்!!

சபதமேற்போம்!
நின் நினைவு நாளில்..
சரித்திரமாவோம் பொதுவாழ்வில்!!
______________
ஆ.நாகராசன்
பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவைஆதித் தமிழர் பேரவை நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பில் அடிக்கப்பட்ட பதாகை


No comments:

Post a comment