அண்மையச்செய்திகள்

Tuesday, 13 June 2017

நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் தூக்கு கயிறு மாட்டி போராட்டம்






நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மாணவ மாணவியர் சேர்க்கைகளில் அருந்ததியர் மாணவ மாணவியர்களுக்கு உரிய இடம் வழங்கப்படாமல் புறக்கனிக்கப்படுகின்றனர்..
அருந்ததியர் உள்இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசாணை 50 ஐ நடைமுறை படுத்தாத கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அருந்ததியர் மாணவ மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசாணை 50 ஐ அனைத்து கல்லூரிகலும் நடைமுறைபடுத்த வலியுறுத்தியும் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட மாணவரணி தலைவர் தளபதி விஜய் தலைமையில் தூக்கு கயிறு மாட்டி போராட்டம்

உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்..

கு.கி.கலைகண்ணன்

மாவட்ட செயலாளர்

ஆதித்தமிழர் பேரவை

நெல்லை கிழக்கு மாவட்டம்

Saturday, 10 June 2017

அருந்ததிய மாணவி அன்புத்தங்கை *காளீஸ்வரி* தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கைக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேரவையினர்


திண்டுக்கல் மேற்கு மாவட்டம்... *ஆதித்தமிழர் பேரவை*
18-4-2017 அன்று ஒட்டன்சத்திரம் CSI பள்ளி அருந்ததிய மாணவி அன்புத்தங்கை *காளீஸ்வரி* பள்ளி ஆசிரியை அம்மு ( எ ) ஹேமமாலினி என்பவர் அக்குழந்தை கண் குறைபாட்டை கொச்சை படுத்தி திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது.. தற்கொலைக்கு காரணமான பள்ளி ஆசிரியை மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் , தாளர் , ஒட்டன்சத்திரம் தொடக்க கல்வி அலுவலர் , மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களை தற்கொலை வழக்கில் சேர்க்க வேண்டும்... இவ்வழக்கை எஸ்.,எஸ்டி.., வழக்காக மாறறியமைக்க வேண்டும் என தலித் மற்றும் சிறுபாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கோரிக்கை ஆர்பாட்டத்தில் *ஆதித்தமிழர் பேரவை* மாவட்ட செயலாளர் *விடுதலை* மாவட்ட அமைப்புச்செயலாளர் *சத்திரப்பட்டி க.முருகன்* ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் *ப.ஈஸ்வரன்* கலந்து கொண்டனர்..



திருச்செங்கோடு வந்திருந்த நிறுவனர் அவர்களை இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றிவரும் இளம் இயக்குனர் பாஸ்கரன் அவர்கள் சந்தித்தார்

திருச்செங்கோடு வந்திருந்த நிறுவனர் அவர்களை இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றிவரும் இளம் இயக்குனர் பாஸ்கரன் அவர்கள் சந்தித்தார்

மாட்டிறைச்சியில் மதவாத அரசியல் மத்திய மோடி அரசை கண்டித்து பாளையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்



மாட்டிறைச்சியில் மதவாத அரசியல்
மத்திய மோடி அரசை கண்டித்து பாளையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்
ஆதித்தமிழர் பேரவை சார்பில்  நெல்லை கிழக்கு மாவட்டச்செயலாளர்  கலைக்கண்ணன் கண்டன உரை ஆற்றினார் . தோழர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்




Thursday, 8 June 2017

கரூர் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு



கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், வீரியா பாளையம் ஊராட்சி
கண்ணமுத்தாம்பட்டி அருந்ததியர் காலனியில்
ஆதித்தமிழர் பேரவை கிளை அறிமுக கூட்டம்
எனது தலைமையில் நடைபெற்றது
இதில் அடிப்படை வசதிகள் மற்றும்
பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாவட்டதலைவர் சண்முகம்,
மாவட்ட துணை செயலர் சுப்பிரமணி கலந்து கொண்டனர்

இரா முல்லையரசு
8-6-17



மதுரைவீரன் உண்மை வரலாறு நூலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. 6 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

மதுரைவீரன் உண்மை வரலாறு நூலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
6 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
""""""""""""""""""""""""""""""

ஆதித்தமிழர் பேரவை முயற்சியில் ஆசிரியர் குழந்தை ராயப்பன் மூலம் எழுத்தப்பட்ட "மதுரைவீரன் உண்மை வரலாறு" நூலை கடந்த 2014 ஆம் ஆண்டு ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவை வெளியிட்டது. இந்த நூலுக்கு 2015 ஆகத்து 19 ஆம் தேதியன்று அப்போதைய அ.தி.மு.க முதல்வர்  ஜெயலலிதா அரசு தடைவிதித்து உத்தரவிட்டது.

இரண்டாயிரம் பிரதிகள் மட்டுமே வெளியிடப்பட்ட அந்த சிறிய நூலில் மதுரைவீரனை பற்றிய மறைக்கப்பட்ட பல உண்மைத் தகவல்கள் ஆதாரத்தோடு  அடங்கியுள்ளதால் மதுரைவீரனின் பெயரால் அருந்ததியர் மக்களை  வசப்பப்படுத்தி வைத்திருந்த அ.தி.மு.க விற்கு நெருக்கடி ஏற்பட்டதால், ஆத்திரம் கொண்டு இந்த நூலுக்கு தடை விதித்து தனது அதிகாரத்தைக் காட்டியது.

நூலுக்கான தடையை நீக்கவேண்டும் என்று பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் ஆசிரியர் குழந்தை ராயப்பனின் பெயரால் வழக்கறிஞர் திருமூர்த்தி மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆதித்தமிழர் பேரவை, கடந்த 2016 ல் வழக்கு தொடுத்தது,

வழக்கிற்கு வசதியாக அந்த நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தரவேண்டும் என்று நீதிபதி வேண்டுகோள் விடுத்ததன் அடிப்பபடையில் தமிழில் உள்ள அந்த நூலை 2015 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து கொடுத்ததன் அடிப்படையில் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

COURT NO.23:MDJ
40.WP.13992/2017
WMP.15204/2017 
6.6.2017 நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணக்கு எடுக்கப்பட்ட இந்த வழக்கிற்கான பதிலை 6 வாரத்திற்குள் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு மாண்புமிகு நீதிபதி துரைச்சாமி அவர்கள் உத்தரவிட்டு தமிழக உள்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வரலாறு மீட்பு போராளி அய்யா அதியமான் அவர்கள் முயற்சிகள் தோற்றதில்லை!
நூலுக்கான தடை உடைபடும் நாளும் தொலைவிலில்லை!!

வரலாறு இழந்த சமூகம்!
வரலாறு படைக்க முடியாது!!
_____________________
நாகராசன்
பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை
7.6.2017

சிபிஎம் பொதுசெயலாளர் சீத்தாராம் யெச்சூரி மீதான தாக்குதலை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது -- நிறுவனர் அய்யா அதியமான் கண்டனம்

சிபிஎம் பொதுசெயலாளர் சீத்தாராம் யெச்சூரி மீதான தாக்குதலை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.
"""""""""”"""""""""""""""""""""""""""""""""""""""""""""""

மார்க்சிய பொதுவுடமை கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் சீத்தாரம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்த முற்பட்ட ஆர்.எஸ்.எஸ் பாசிச மதவெறியர்களை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.
மார்க்சிய பொதுவுடமை கட்சியின் மத்தியக்குழு அலுவலத்தின் இரண்டாம் தளத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது செய்தியாளர்கள் போர்வையில் ஊடுருவிய பார்ப்பனிய பாசிச ஆர்.எஸ்.எஸ் கும்பலை சேர்ந்தவர்கள் திடீரென தோழர் யெச்சூரியை தாக்குவதற்கு முற்பட்டுள்ளது, மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,
பசுவை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் பலரை தாக்கி கொலைவெறி செயலில் ஈடுபட்ட பாசிச கும்பல்தான் பகுத்தறிவு கருத்தை பரப்புரை செய்த தோழர்கள் கல்புர்கி, கோவிந் பன்சாரே, நரேந்திர தபோல்கர் ஆகியோரையும் படுகொலை செய்து தனது பார்ப்பனிய வெறியை காட்டியுள்ளது,
பார்ப்பனியதிற்கு எதிரான கருத்துக் கொண்டவர்களை தர்க்க ரீதியாக எதிர்கொள்ள துணிவில்லாமல் தாக்குதல் நடத்துவதும், படுகொலைகளை அரங்கேற்றுவதும் போன்ற மனிதத்தன்மையற்ற வன்செயலில் ஈடுபட்டு வருவது மிகவும் அபாயகரமான செயலாகும்.
இந்திய அளவில் செயலாற்றிவரும் ஒரு தேசிய கட்சியின் முன்னணிப் பொறுப்பாளரை அவரது அலுவலகத்தில் வைத்தே தாக்குவதற்கு முற்பட்டிருக்கும் பாசிச கும்பல் தங்களுக்கு எதிரான கருத்தைக் கொண்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எவ்வித தாக்குதலையும் செய்ய துணிவார்கள் என்பதையே இது காட்டுகிறது.
இந்திய நாட்டை பார்ப்பன நாடாக மாற்றும் முற்சியில் ஈடுபட்டு வரும் மத்திய மோடி அரசின் தொடர் செயலுக்கு இது மிகப்பெரிய சான்றாக அமைந்துள்ளது. பார்பன வெறியை தூண்டி நாட்டின் அமைதிக்கும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் மதசார்பற்ற கொள்கைக்கும் எதிராக செயல்படும் பார்பன பாசிச ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து மக்களை மதத்தின் பேரால் துண்டாட நினைக்கும் மத்திய மோடி அரசின் செயல்களை மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை ஆதித்தமிழர் பேரவை எச்சரிக்கை விடுத்து தனது கண்டனத்தை பதிவு செய்கிறது.
தோழர் சீத்தாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்த முற்பட்ட பாசிச கும்பலை சேர்ந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரிய கொள்கையுடைய பகுத்தறிவுவாதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைப்பை ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.
இவண்
இரா.அதியமான்
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.
தலைமையகம், கோவை.
7.6.2017